- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 57
நடந்து முடிந்த சம்பவங்களை அசைபோட்ட விரனோ மருதாணி கடையை மளிகை கடைப் போல் ஆக்கினான்.
நடந்தது நடந்தாயிற்று. அதை மாற்றிட இயலாது. அதேப்போல் அவனின் இயல்பை இனி மறைக்கவோ மறக்கவோ கூட முடியாது.
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் அரங்கேறிடும் கலவரத்திற்கு விரன் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியா சூழ்நிலை கைதியே.
பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே பறந்து கிடக்க அலறியது ஆணவனின் அலைபேசி. இது பதினைந்தாவது முறை.
தொடுதிரையிலோ ஆசை துணைவியின் பெயரும் முகமும் சிரித்தது.
அழைப்பை ஏற்றவனோ மௌன சாமியார் வேடம் கொண்டான் முதலிலிருந்தப்படியே.
''வீட்டுக்கு வாங்க!''
என்ற சின்ன டிக்கியோ விரனின் பதிலுக்காய் காத்திராது ரிசீவரை துண்டித்தாள்.
''ஆர்ர்ஹ்ஹ்!''
என்று கதங்கொண்டு அலறியவனோ அலைபேசியை பறக்க விட்டான் பொறுமையிழந்து.
''அதான், மாப்பிள்ளை பாரு மயிரே பாருன்னு சொல்லிட்டியே! அப்பறம் எதுக்குடி என்னே வா வான்னு உசுரே எடுக்கறே! புடுங்கறதுக்கா! ச்சை!''
என்றவனோ பல்லை கடித்து வசனம் பேசி சினத்தை வெளிக்கொணர, புத்தியோ சொல்லியது ரொம்ப ஆடவேண்டாமென்று அவனை, தப்பு அவன் மேலிருக்க.
மூச்சு வாங்க இடையில் இருக்கரங்களை இறுக்கியப்படி நின்றவனோ,
''ஆமா! இப்படி பொறந்தது என் தப்புதான்! என் தப்பேதான்! ஊனமா பொறந்திருந்தா கூட இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேணாம் போலே!''
என்றவனின் விழிகள் கொண்ட நீரோ நாசியில் வழிந்திறங்க தேடியெடுத்தான் விரன் முதலில் தூக்கி வீசிய அவனின் போனை.
''ச்சை! என்னா பொறப்பிது! வாழவும் முடியாமே சாகவும் முடியாமே! இந்த ஈனப்பிழைப்பு பிழைக்கறதுக்கு அப்படியே நாண்டுக்கிட்டு செத்திடலாம் போலிருக்கு!''
என்றவனோ பைக்கை ஸ்டார்ட் செய்து மனை நோக்கினான்.
சின்ன டிக்கிக்கு நல்ல வாழ்க்கையொன்றை அமைத்து கொடுக்க வேண்டுமென்று துடியாய் துடித்தது விரன்தான். ஒருக்காலும் அதை இல்லையென்றிட முடியாது.
ஆனால், எப்போதுமே மல்லுக்கட்டுபவள் இன்றைக்கென்று பார்த்து கல்யாணத்துக்கு ஓகேயென்றதும், கட்டி குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் விரனால் கற்பாள் அவளின் பதிலை ஜீரணிக்கவே முடியவில்லை.
அவள் நோ சொல்லிடுவாள் என்பதை அறிந்தவன் ஒருபோதும் எஸ் சொல்லிடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதன் தாக்கமே அவனை இப்படியெல்லாம் பேச வைத்தது.
''எப்படிடி இப்படி பொசுக்குன்னு மாப்பிள்ளே பாருன்னு சொல்லிட்டே?! அப்போ நான்?! குட்டி குஞ்சா, குட்டி குஞ்சான்னு பின்னாலையே சுத்துவியேடி! இப்போ என்னடி ஆச்சு உனக்கு?! நான் போன்னாலும் போக மாட்டியேடி! இப்போ, என்னே திடிர்னு போறேன்னு சொல்றே! என்னடி இதெல்லாம்!''
என்றவனோ அவனாகவே கேள்வி கேட்டு மனசை தேத்திக் கொண்டான்.
சின்ன டிக்கியின் மீது கொள்ளை காதல் ஆணவனுக்கு. அதுவே அவனை பிரிய வேண்டி உந்தித் தள்ளியது. காதல் வல்லபியவள் துன்பம் கொள்ள கூடாது என்பதில் ஆரம்பித்த பிரச்சனையே இது அத்தனையும்.
ஒருக்கால், விரன் அவன் பைசெக்ஸுவல் மேட்டரை சின்ன டிக்கியிடத்தில் சொல்லியிருந்தால் எல்லாம் வேறு மாதிரியாக ஆகியிருக்குமோ என்னே. யார் கண்டது.
எது எப்படியோ நிழலிகாவை பிரிந்தே ஆகவேண்டுமென்பது விரனின் உறுதியான இறுதி முடிவாகும். இருப்பினும், அது இப்படி டப்பென நடக்கத்தான் ஆடிப்போய் விட்டான் ஆணவன்.
''எல்லாம் என் தலையெழுத்து! ஏன் கண்டே மாத்திரையே சாப்பிட்டிங்கன்னு போய் எங்கம்மாவே கேட்கவா?! இல்லே, ஏன் ஆம்பளையே பார்த்த கூட வெட்கமே இல்லாமே எழுஞ்சி நிக்கறேன்னு இந்த குஞ்சே கேட்கவா?!''
என்றவனோ இன்றைக்கு ரொம்பவே சங்கடப்பட்டுக் கொண்டான் வேதனை உச்சத்தில் இருக்க.
''என்னே இழவுடா இது! பைசெக்ஸுவல் மயிறு செக்சுவல்னு! எமா! எங்கிருக்கே?! வந்து அப்படியே என்னே அள்ளிக்கிட்டு போ! எனக்கு புடிச்சே என் சின்னே டிக்கியே என்னே இனி தொடாதன்னு சொல்லாமே சொல்லிட்டா! என்னே பாசக்கயிறை போட்டு தூக்கிட்டு போ! ஏன், தெரியுமா? உன் ஈஸ்வரன் என்னே ரெண்டுங்கெட்டானா படைச்சிட்டான்! அதான், என் பொண்டாட்டி என்னே வேணான்னு சொல்லிட்டா! என் கூட ஒன்னா இருக்கே மாட்டேன்னு சொல்லிட்டா!''
என்று கிறுக்கனை போல் பினாத்தியவன் ஒரு வழியாய் வந்து சேர்ந்தான் வீட்டுக்கு.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 57
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.