- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 59
திருமதி நிழலிகா அவிரன் சிங்கின் குக்கிக்குள் வீற்றிருந்த சிறு உயிரை அச்சப்படுத்தும் வகையிலிருந்த கணவனின் நடத்தையை பார்வைகளால் அடக்கினாள் அந்திகையவள்.
இருவரின் நேத்திரங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு நிற்க, சப்பென்று வைத்தாள் சின்ன டிக்கியவள் விரனின் கன்னம் சிவந்து போகும் அறையொன்றை.
அம்மணியின் தடாலடியான அறையில் முகம் ஓரம் போனது விரனுக்கு. சுளீரென்று விழுந்த அறையில் மூடிய கண்களை திறந்தவனோ தலையை ஸ்லோவ் மோஷனில் சின்ன டிக்கியின் பக்கம் திருப்ப, அவ்வளவுதான்; சோலி முடிஞ்சது விரனுக்கு.
சரமாரியான அறைகள் வாங்கியவனோ வாஞ்சினியவளை தடுத்திடவும் இல்லை ஆளனின் கன்னங்களை காப்பாற்றிடவும் இல்லை.
அவளின் வலி அவனுக்கு தெரியும். இதே வேறொருத்தியாக இருந்திருந்தால் இந்நேரம் விரனின் மானம் ஊர் சிரித்திருக்கும். மொத்த குடும்பமும் பஞ்சாயத்தாகி இருக்கும். கூனிக்குறுகி போயிருப்பான் விரன் சந்தி சிரிக்க.
ஆனால், இப்படி எதையுமே செய்யாது நான்கு சுவற்றுக்குள் சினத்தை காட்டும் நிழலிகாவின் மீது எப்படி வரும் அவனுக்கு கோபம். அதனால், அமைதியாக இளம்பிடியாளவள் கொடுப்பதை வாங்கிக் கொண்டான் மறுப்பேதும் கொள்ளாது பெருந்தன்மையாக.
எத்தனை அறைகள் என்று கணக்கில்லாமல் விரனின் கன்னங்களை பதம் பார்த்த புண்ணியவதியோ உள்ளங்கைகள் எரிச்சல் கொள்ள அன்பளிப்பை நிறுத்தி அவனிடமிருந்து விலகினாள் சிறு மூச்சு வாங்கலோடு.
அது விறலியின் விசும்பலுக்கான அறிகுறி. வெளிப்பட்டிட கூடாதென்று கெத்தாய் அதை உள்ளுக்குள்ளேயே பதுக்கிக் கொண்டாள் சாமர்த்தியமாய் சின்ன டிக்கியவள்.
சம்பவம் நடந்து முடிந்து பத்து நிமிடங்கள் கடக்க, இருவருக்குள்ளும் அமைதி.
சின்ன டிக்கியோ அவளின் உள்ளங்கையை தேய்த்தாள் எரிச்சல் தாளாது இச்சு பிச்சென்ற முனகலோடு. தலை கவிழ்ந்திருந்த நல்லவனோ எக்கி இழுத்து தேய்த்தான் சின்ன டிக்கியின் உள்ளங்கைகளை உரிமையோடு.
சடீரென்று நடந்த சம்பவத்தில் கடுப்பாகிய நிழலிகாவோ கையை அவள் நோக்கி இழுக்க, விரனோ சிவந்து போன அம்மணியின் உள்ளங்கையில் டக்கென்று பதித்தான் இதழ் ஒத்தடங்களை.
விலோசனங்கள் குளமாக கையை இழுத்தாள் பலங்கொண்டு நிழலிகா கணவனிடத்திலிருந்து. விரனோ அழுத்தமாய் பற்றிக் கொண்டான் வஞ்சியின் கரத்தை.
அம்பகங்களை இறுக்கமாய் மூடிக்கொண்ட சின்ன டிக்கியோ உதடுகளை மடக்கியப்படி மௌன அழுகை ஒன்றை கொண்டாள்.
யுவதியின் விசும்பலில் ஏறெடுத்து பார்த்த விரனோ தளர்த்தினான் வதனியின் கைபிடிகளை. நாயகியின் கை முழுவதுமாய் விரனிடமிருந்து நழுவும் முன் எக்கி அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் நிழலிகா.
கதறினாள் ஒரு வார்த்தை கூட பேசிடாது அலரவள். விரனும் எதுவும் பேசிடாமல் வெறுமனே அமர்ந்திருந்தான் அவளை அணைத்திட கூட தயங்கி எங்கே விலகிடுவாளோ என்ற கரிதத்தில்.
கண்ணிலிட்ட மை மொத்தமாய் கரைந்து ஒழுக ஏறெடுத்து விரனின் முகம் பார்த்தவளோ என்ன நினைத்தாளோ தெரியவில்லை, கன்றி வீங்கியிருந்த விரனின் கன்னங்களுக்கு சிகிச்சை வழங்கினாள் பூமகளின் லிப்ஸ்ட்டிக் கொண்ட அதரங்களால்.
திகைத்தவன் பேந்த விழித்தான் என்னதான் யோசிக்கிறாள் சின்ன டிக்கியென்று புரியாது. இருந்தும் அவன் மனம் சொல்ல நினைக்கும் விடயங்களை சொல்லிட ஆரம்பித்தான் எங்கே இதற்கு பிறகு அதற்கான வாய்ப்பேதும் கிடைத்திடாமல் போயிடுமோ என்று அஞ்சி.
''எனக்கு உன்னே ரொம்ப பிடிக்கும்டி! என் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் நீதாண்டி! அதனாலதான் நீ என்னே அவ்ளோ அசிங்கப்படுத்தியும் உன்னே தேடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! ஒருக்கால், நான் வர்றதுக்குள்ளே உனக்கு கல்யாணமாகியிருந்த கூட கண்டிப்பா உன்னே இழுத்துக்கிட்டு வந்திருப்பேண்டி! அவ்ளோ கிரேஸ்டி எனக்கு உன் மேலே!''
என்றவன் முகத்தை, அழுது சிவந்த சக்குகளால் இமைக்காது வெறித்தாள் சின்ன டிக்கியவள்.
''எனக்குத் தெரியும் உனக்கு எவ்ளோ வலிக்குது, கஷ்டமா இருக்கின்னு! ஆனா, நான் என்னே பண்ணே?! இதுதான் நான்! அவிரன் சிங் இப்படித்தான்! என்னாலே இதுக்கு மேலையும் என் சுயத்தே மறைச்சு வாழ முடியாதுடி! அது ரொம்ப கஷ்டம்! எனக்கே எரிச்சலா இருக்கு போலியா பயந்து வாழே!''
என்றவனின் மிதமாய் கலங்கிய கண்கள் தெப்பக்குளமாய் ஆகின.
''செத்துடலாம் போலிருக்கு நிழலிகா! நிம்மதியா ஒரு வாய் சோறு வைக்க முடியலடி! இப்போ ஏதாவது ஆகிடுமோ அப்பறம் ஏதாவது ஆகிடுமோன்னு பயந்தே ஒவ்வொரும் நிமிஷமும் நகருதுடி என் வாழ்க்கையிலே!''
என்றவனோ தலையில் அடித்துக் கொள்ள, தடுத்தாள் புருஷனின் கைகளை பற்றி பிடித்தவள் வெறுமையின் உருவமாய் உயிர் கொண்டு.
''நீ கவலப்படாதே நிழலிகா, கண்டிப்பா நான் என்னே ஏத்துக்கோன்னு உன்னே கேட்க மாட்டேன்! அதுக்கான அருகதையே நான் எப்பவோ இழந்துட்டேன்னு எனக்கு தெரியும்!''
என்ற விரனோ முன் நெற்றி கேசத்தை கோதி தலைகுனிந்துக் கொண்டு பேச்சை தொடர்ந்தான்.
''உன்னே புடுச்சு வெச்சுக்கவும் எனக்கு மனசு வரலே! போன்னு சொல்லவும் முடியலே! ஏன்னா நான் உன்னே அவ்ளோ லவ் பண்றேன்டி! என்கூட இருக்கறது நரகத்துலே வாழறத்துக்கு சமம்! நீ தினம் வேதனைப்படுவே! அழுவே! என்னாலே அதையெல்லாம் பார்க்க முடியாதுடி! ரோதனையா இருக்குண்டி!''
என்ற விரனோ முதல் முறை கண்ணீர் மல்க பேசினான் செவத்த கன்னங்களில் ஈரம் வழிந்திறங்க.
கணவன் பேச பேச அம்மணியின் அம்பகங்களோ அருவியாய் கண்ணீரை வழியவிட்டன. டவல் கட்டியிருந்த விரனின் மடியில் சாய்ந்து மூக்கு சளியை சின்ன டிக்கியவள் சிந்த,
''சளி சிந்தத்தான் குனிஞ்சியா? நான் கூட வேறே எதுக்கோன்னு நினைச்சேன்!''
என்றவன் வாக்கியத்தில் அவனை முறைத்தவளாய் தலையை மேல் தூக்கிய சின்ன டிக்கியோ விரனை கரங்களால் அர்ச்சித்தாள்.
''ஏய்! அடிக்காதடி! ஏய்! கிள்ளாதே! சின்ன டிக்கி!''
என்றவனோ இதழ் பிரியா முகிழ்நகை கொண்ட ஆயந்தியை அப்படியே கட்டியணைத்துக் கொண்டான் இறுக்கமாய்.
''உன் மேலே எனக்கிருக்கறே லவ்வே எப்படி சொல்றதுன்னு தெரியலே நிழலிகா!ஆனா, நீ இல்லாமே என்னாலே இருக்க முடியாதுடி! அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்!''
என்றவனோ மெதுவாய் அணைப்பை தளர்த்தி தலை சாய்த்தான் பொண்டாட்டியின் மடியில்.
''அப்படியெல்லாம் நடக்க நான் விரும்பலே! ஆனா, நடக்கும் போது தடுக்கவும் முடியலே!''
என்றவனின் தலையை மெதுவாய் கோதிய தளிரின் கண்ணீரோ சொட்டுகளாய் உதிர்த்தது ஆணவன் உச்சந்தலை கேசத்தில்.
''நான் இப்படித்தான்னு தெரிஞ்சு போச்சுடி! இதுக்கு மேலே நீதான் முடிவெடுக்கணும்!''
என்றவனோ எழுந்தமர்ந்து நிழலிகாவின் முகம் பார்த்து தொடர்ந்தான்.
''ஆனா, நீ எனக்கு வேணும்! என் சின்ன டிக்கி எனக்கு வேணும்! என்னாலே உன்னே விட்டுட்டு இருக்க முடியாது! யாருக்கும் நான் உன்னே கொடுக்க மாட்டேன்!''
என்றவனோ அடம் பிடிக்கும் குழந்தை போல் அழுது கட்டிக்கொண்டான் மூச்சு முட்டும் படி பெண்டு அவளை.
''என்னே விட்டுட்டு போயிட மாட்டள்ளே?! நீ இந்த குட்டி குஞ்சனோட சின்ன டிக்கிதானே?!''
என்றவனோ விசும்பியவனாய் நிழலிகாவின் முகத்தை பற்றி பிடித்து மூக்குரசி வினவ, அவளோ திட்டிகள் மூடி கண்ணீரை மட்டும் தரையிறக்கினாள் நெஞ்சுகுழி ஈரங்கொள்ள.
''என்னடி ஒன்னுமே பேச மாட்டரே?! ஏதாவது பேசுடி! நீ இப்படி பேசாமே இருக்கறதுதான் எனக்கு ரொம்ப வலிக்குது நிழலிகா! இதுக்கு நீ என்னே செருப்பாலையே நாலடி அடிச்சிடலாம்! பிளீஸ்டி சின்ன டிக்கி! பேசுடி!''
என்றவனோ கெஞ்சியப்படி அவளை உலுக்க, விழிகள் விரித்து கணவனை பார்த்த வதூவோ அப்போதும் ஒரு வார்த்தை கூட பேசிடா ஊமையாகவே இருந்தாள்.
''எனக்கு உன்கிட்டே புடிச்சதே உன் துடுக்குத்தனமானே பேச்சுதான்டி! பேசுடி நிழலிகா! தயவு செஞ்சு பேசுடி! உன் கால்லே கூட விழறேன்டி, இப்படி பேசாமே மட்டும் இருக்காதடி சின்ன டிக்கி! நீ இப்படி இருக்கறதே பார்த்தா எனக்கு செத்..''
என்றவன் வார்த்தை முடியும் முன் அவன் வாயை உள்ளங்கை கொண்டு நிறுத்தினாள் நிழலிகா.
பதித்தாள் முத்தமொன்றை விரனின் இதழ்கள் மீது தடுப்பு சுவர் கொண்ட மங்கையின் கரத்தில்.
''என்னடி? அவ்ளோதானே? என்னே வெறுத்துட்டியா?!''
என்றவனோ உடைந்தவனாய் கேட்க, அவன் தலையை பற்றி கொஞ்சமாய் கீழிறக்கியவளோ பதித்தாள் ஆணவன் நுதலில் இயமானியின் இதழை.
''நான் இல்லல்லே! உன் மனசுலே நான் இல்லல்லே! உனக்கு என்னே புடிக்கலல்லே! உனக்கு நான் வேணாலே!''
என்றவனோ தலையணைகளை தூக்கி விசிறியடித்து குப்பிற விழுந்தான் மெத்தையில்.
வாய் பொத்திக்கொண்டவளோ குலுங்கி வைத்தாள் ஒப்பாரியை.
உயிர் துஞ்சிடுவான் விரன்...

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 59
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.