- Joined
- Jul 10, 2024
- Messages
- 413
அத்தியாயம் 75
காதலிக்கப்படுவதால்தான் காதலிக்கவே கற்றுக்கொள்கிறோம்.
பொதுநலமான அறம் அவரவர் தேவைகளின் போது சுய அறமாகிடும்.
படித்த டாக்டர் கூட ஒரே நேரத்தில் இரு வயதான பெண்மணிகளை அட்மிட் செய்தால், அதிலொன்று அவரின் தாயென்றால் முதல் கவனிப்பு அவருக்கே.
தார்மீகம் இப்படியான நேரங்களில் தாறுமாறாய் அறம் மீறும். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதே நமக்கு நல்லது.
விரன் மற்றும் நதானியேல் இருவரின் உறவும் கூட அப்படித்தான். சமூக கடப்பாடுகளுக்கான அத்து மீறல்களே. ஆனால், தனிப்பட்ட சுய அறத்தில் அவர்களின் செயல் சரியானதே.
நிழலிகா வந்து சேர்ந்திருந்தாள் தி மெடிக்கல் சிட்டி எர்மிட்டா எனும் தனியார் மருத்துவமனைக்கு.
நதானியேல் ஏற்கனவே யாரை எங்கு சந்தித்திட வேண்டுமென்ற அத்தனை தகவல்களையும் நிழலிகாவிடம் தெரிவித்திருந்தான்.
அதன்படி நதானியேலின் மனைவி ஜஸ்மின் இருக்கும் அறை நோக்கி விரைந்தாள் நிழலிகா.
சினிமாக்காரன் அதுவும் தாய்லாந்தின் தளபதியின் மணவாட்டியவள் அட்மிட் என்றால் ரசிகர்கள் மருத்துவமனையை முற்றுகை இட்டிடுவார்கள்.
மீடியாவிற்கு ஜஸ்மின் விஷம் உண்ட சங்கதி தெரிந்தால் அவ்வளவுதான் நதானியேலின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு பெரிய கும்பிடுதான்.
ஆகவே, மருத்துவமனையின் உரிமையாளரிடம் பேசி எல்லாவற்றையும் ரகசியமாகவே வைத்துக்கொள்ள சொல்லியிருந்தான் நதானியேல்.
பெட்டிகள் கூட சிலது கைமாறியது. ஜஸ்மின் மருத்துவமனையின் சிறப்பு நோயாளிக்கான தனியறையில் தாதியர்கள் இருவரோடு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாள்.
நிழலிகா வர தாதியர்கள் அவர்களை தனியே விட்டு அறையிலிருந்து வெளியேறினர்.
சூப் குடித்து முடித்த ஜஸ்மினோ வாயை திசுவால் ஒத்தியெடுக்க,
''ஹாய் ஜஸ்மின். இப்போ எப்படி இருக்கிங்க?''
என்ற நிழலிகாவோ திரைசீலைக்கு அப்பால் பாதி உடல் மட்டுமே தெரிய வினவி நின்றாள் சிரித்த முகமாய்.
''இப்போ பரவாலே. கொஞ்சம் ஓகே. ஆனா, நீங்க யாரு?''
''வாவ்! ரொம்ப அழகா தமிழ் பேசறிங்க!''
என்ற சின்ன டிக்கியோ ஜஸ்மினின் புலமையை கண்டு வியந்தாள்.
''It's does' not matter! Who are you?''
(அது முக்கியமில்லே! யார் நீங்க?)
என்ற ஜஸ்மினோ சாய்வு மெத்தையை கொஞ்சமாய் மேலேத்திக் கொண்டாள் அரை செங்குத்தாய்.
''நிழலிகா. நிழலிகா அவிரன் சிங்.''
என்ற சின்ன டிக்கியோ தோளில் மாட்டியிருந்த கைப்பையின் கயிறை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் அச்சத்தின் நடுக்கத்தை மறைத்திட.
விரனின் பெயரை கேட்ட மாத்திரத்தில் பேயாய் அலறினாள் ஜஸ்மின்.
''நர்ஸ்! நர்ஸ்! வெளியே போக சொல்லுங்க இந்த லேடியே! வெளியே போக சொல்லுங்க! போடி வெளியே! போ! என் கண்ணு முன்னுக்கு நிக்காதே! போ!''
என்றவளோ பைத்தியக்காரியை போல் தலையணை தொடங்கி மருந்து மாத்திரைகள் அத்தனையையும் தூக்கி விசிறினாள் தூரமிருந்த சின்ன டிக்கியை நோக்கி.
அவசர அழைப்பை சொடுக்க அதன் சரடோ தவறி கீழே விழுந்து ஒலிக்கு லீவு விட்டது.
''ஜஸ்மின், பிளீஸ் ஜஸ்மின்! பிளீஸ்! நான் சொல்றதே ஒரு ஐஞ்சு நிமிஷம் கேளுங்க!''
என்ற சின்ன டிக்கியோ ஏற்கனவே இப்படியான தாக்குதலை எதிர்பார்த்திருக்க, தள்ளி நின்றே கோரிக்கை வைத்தாள் தற்கொலைக்காரியிடம்.
''முடியாது! முடியாது! முடியாது! ஆர்ர்ர்ர்ர்ர்ர்! போ! போய் தொலை!''
என்ற ஜஸ்மினோ கிறுக்கு முத்தி போனவள் போல் அலறினாள் குழலை கசக்கி பீய்த்தெறிந்து.
''ஐயோ, ஜஸ்மின் பிளீஸ்! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! நான் சொல்றதே கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க! அப்பறம் என்ன வேணும்னாலும் பேசுங்க! ஆனா, முதல்லே கேளுங்க! கெஞ்சி கேட்கறேன்! பிளீஸ்!''
திரைச்சீலை மறைக்க வதனம் மட்டும் காட்டி நிழலிகாவோ கரங்கூப்பி கெஞ்சினாள் ஜஸ்மினிடத்தில்.
''என்னே சொல்லே போறே?! ஹான், என்னே சொல்லே போறே?! என் புருஷன் நல்லவன் உன் புருஷன்தான் தப்பானவன்னா! சொல்லு?! இல்லே, அறிவே இல்லாதே என் புருஷனுக்கு உன் புருஷனே கூட்டி கொடுக்க போறியா?! சொல்லு! என்னே சொல்லே போறே?!''
என்றவளோ அறை அதிர கத்தி மெத்தை விரிப்பை நிறுத்தாது உதைத்தாள்.
நல்லவேளை அவளின் கையில் ஏகப்பட்ட சரடுகள் சொருகப்பட்டிருக்க பஞ்சணையே அவளின் அராஜகத்தை தாங்கிக்கொண்டது.
இல்லையென்றால், எழுந்தாடியிருப்பாள் கிறிஸ்ட்டின் மிக்ஸ் காளியம்மாளவள். தப்பித்திருந்தாள் நிழலிகா குழாயடி சண்டையிலிருந்து.
''நல்லாருந்தே என் குடும்பத்தே இப்படி நாசமாக்கிட்டிங்களே! இப்போ உங்களுக்கு சந்தோஷமா?! நிம்மதியா?!''
என்றவளோ முகத்தை மூடி கதறிட,
''உங்க குடும்பம் மட்டும்தான் சிதைஞ்சதா?!''
என்ற நிழலிகாவின் தழுதழுத்த குரல் கொண்ட வேள்வியில், கைகளை முகத்திலிருந்து பிரித்த ஜஸ்மினோ ஏறெடுத்து பார்த்தாள் சின்ன டிக்கியவளை.
''ஒரே ஒரு தடவே, நதானியேலே ஜஸ்மின் வீட்டுக்காரா பார்க்காமே வெறும் நதானியேலா பாருங்க. அவர் உணர்ச்சிகள் புரியும். எனக்கும் முதல்லே புரியலே. இப்போதான், கொஞ்சங்கொஞ்சமா புரிஞ்சிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.''
என்றவளை உற்று நோக்கினாள் வீங்கிய விழிப்படலங்கள் கொண்ட ஜஸ்மினவள்.
''நதானியேல் விரனே கூப்பிடலே! விரனும் நதானியேலே கூப்பிடலே! இதுநாள் வரைக்கும் மறைக்கப்பட்டிருந்த அவர்களோட உணர்ச்சிகள்தான் அவர்களை ஒன்னாக்கிருக்கு!''
என்ற நிழலிகாவோ அழுத்தமாய் சொல்லி நின்றாள்.
''என்னே சொன்னாலும் சரி! மனுஷன்னா சுய ஒழுங்கு ரொம்ப முக்கியம்! சும்மா சகட்டு மேனிக்கு காஞ்சே மாடு கம்புலே பாயிறே மாதிரியெல்லாம் ஒழுக்கங்கெட்டு திரியக்கூடாது!''
என்ற ஜஸ்மினோ வெறுப்பாய் நோக்கினாள் முன்னிருந்தவளை.
''தப்பு யாருதான் பண்ணலே?! அது மனித இயல்பு! ஆனா, தவறே திருத்திக்க நினைக்கும் போது அதற்கான வாய்ப்பே கொடுக்காமே இருக்கறதுதான் மிகப்பெரிய தப்பு!''
''எனக்கு அவ்ளோ பெரிய மனசில்லே!''
என்ற ஜஸ்மினோ முகத்தை மிடுக்காக திருப்பிக் கொண்டாள்.
''இதுக்கு மனசு இருக்கணும்னு அவசியமில்லே! சென்சிருந்தாலே (sense) போதும்! அதுவும் ஒரு தனிமனிதனோட உணர்வுகளை புரிஞ்சிக்கக்கூடிய அளவிலான பக்குவம் இருந்தாலே போதும்!''
என்ற நிழலிகாவோ அதற்கு மேலும் அங்கு நிற்பதில் பலனில்லை என்றுணர்ந்தாள் ஜஸ்மின் எதையும் கேட்டிடும் நிலையில் இல்லாமல் இருப்பது வெளிப்படையாய் தெரிய.
''அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். இங்க யாரும் தப்பு பண்ணலே! நதானியேல், விரனோட இயல்பது!''
என்ற பேதையவள் லேசாய் உடல் குலுங்க சிரித்து,
''இந்த காதல் ரொம்பவே வித்தியாசமானது இல்லே, ஏழையான நதானியேலே ஏத்துக்க முடிஞ்ச ஜஸ்மினாலே பைசெக்ஸுவல் நதானியேலே சகிச்சுக்கக் கூட முடியலலே!''
என்றவளோ வந்த வழியே அடிகளை முன்னோக்கி வைக்க,
''அதிகமா வலிக்குது! தாங்கிக்க முடியலே அதான் சாக முடிவெடுத்திட்டேன்!''
என்ற ஜஸ்மினோ விசும்பி சொல்லி கண்ணீர் துடைக்க,
''உங்க வாழ்க்கை ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சு ஓடிருச்சு. ஆனா, எனக்கு தொடங்கறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு!''
என்ற சின்ன டிக்கியோ குட்டி பையனின் மேடு கொண்ட வயிற்றை தடவிக் கொடுத்தப்படி அங்கிருந்து வெளியேறினாள்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 75
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.