- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 9
சிந்தை முழுக்க சின்ன டிக்கியவள் நிறைந்திருக்க பைக்கை முறுக்கியவன் மனதோ டிராபிக் சிக்னலில் நின்றப்படியே தாட்டியவள் சீக்கிரமாய் வீடு திரும்பிட வேண்டியது.
கல்யாணத்துக்கு முன்னாடி முதல் முறை அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு விடியற்காலை வேளையில் கோலாலும்பூரிலிருந்து சுபாங்கிற்கு ஸ்லர்பீ (Slurpee) வாங்க கூட்டி போன அனுபவமெல்லாம் சொல்லிலடங்கா.
கண்கள் கலங்க,
''எங்கடி போனே.. ஏய் சின்ன டிக்கி.. எங்கடி போய் தொலைஞ்சே..''
என்றவனோ போனில் அவளின் வாட்ஸ் ஆப்பை திறந்து பார்த்தான் பாவையவள் ஆன்லைனில் இருக்கிறாளா இல்லையா என்று.
அவளை தேட சொல்லியது மனது. மூளையோ வேண்டாமென்றது. எங்கே இதையே அவள் காதலென்று எண்ணிக்கொண்டு பின் அவனை பிரிய மறுப்பால் என்றது.
ஆகவே, உள்ளுக்குள் சின்ன டிக்கியை காணாது மற்றவர்களை விட அதிகமாய் பதறினாலும் ஆணவனால் அதை வெளிக்காட்டிட முடியவில்லை என்ற சூழ்நிலையே மேலும் அவனை படுத்தியது.
குட்டி குஞ்சனின் சின்ன டிக்கிக்கு ஏதும் விபரீதமாய் ஆகிடாது என்ற நினைப்பு ஆணவனுக்குள் உறுதியாய் இருக்க, கோபங்கொண்டு மனையிலிருந்து வெளியேறிய வீட்டாள் அவள் எப்படியும் வீடு வந்து சேர்ந்திடுவாள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தான் குட்டி குஞ்சனவன்.
தாத்தாவிடம் கூட அவனின் சங்கடத்தை சொல்லிட பலமுறை யோசித்தவன் அதை எப்படி சொல்லிடுவான் அவனின் சின்ன டிக்கியிடத்தில். கேட்டாள் உடைந்திடாதா ஊடையவளின் சிறு இதயம். நொறுங்கிய அதை எப்படி சரி செய்திடுவான் அவிரன் சிங்கவன்.
அதற்கு ஒரே வழி பிரிவுதான் என்று தீர்மானமாய் முடிவெடுத்து விட்டான் விரன் உண்மையை உல்லியவளிடம் சொல்லிடாமல் அவனுக்குள்ளாரேயே மறைத்து. எப்படி இருந்தாலும் பிரிவுக்கென்று ஒரு காரணம் வேண்டுமல்லவா அதுதான் எதுவென்று அவனுக்கு தெரியவில்லை.
என்னதான் சொல்லித் தொலைப்பான் ஆணவன் நல்லவனாகவே இருக்க. அந்நேரத்துக்கு வாயில் என்ன வருகிறதோ அதையே சொல்லி சமாளித்திடலாம் என்றெண்ணியவனோ ஒவ்வொரு முறையும் சின்ன டிக்கியவளோடு கலவி கொண்ட பின் பெதும்பையவள் மனதை ரணமாக்கினான் வார்த்தைகளாலும் செயல்களாலும்.
என்னதான் வல்லபியவளை தண்ணீர் தெளித்து போய் தொலை என்றாலுமே ஆளனின் உள்நெஞ்சம் என்னவோ தாரமவளைத்தான் மன்றாடி நின்றது. அவளோடான தாம்பத்தியத்தில் சிங் இஸ் தெ கிங். ஆகவே, போ என்கிற அதே விரன்தான் அந்திகையவளை போக விடாது கிடைக்கும் கேப்பிலெல்லாம் போட்டு போதை கொள்கிறான்.
பைக்கை ஹரனின் வீட்டு வாசலில் பார்க் செய்த குட்டி குஞ்சனோ நேராய் நுழைந்தான் மனையின் வரவேற்பறைக்குள்.
''மச்சான்!! டேய்!!''
என்ற விரனின் அழைப்பிற்கு,
''இருடா வறேன்!!''
என்ற ஹரனின் குரலோ அடுக்களையிலிருந்து ஒலித்தது.
''கிட்சன்லே என்னடா பண்றே!! வீட்டுலே எல்லாம் எங்கே..''
என்ற விரனோ கேள்வியோடு அடுக்களை பக்கம் போக,
''எல்லாம் வெகேஷன் போயிருக்காங்கடா.. என்னே மட்டும் கழட்டி விட்டு.. இந்தா மச்சான் காஃபி..''
என்று ஹரன் நீட்டிய கப்பை வாங்கிடாது எதர்ச்சையாய் டைனிங் டேபிளின் பக்கம் திரும்பியவன் அங்கே அமர்ந்திருந்த அவனின் சின்ன டிக்கியவளை பார்த்த நொடி,
''ஏய்..''
என்று முன்னேறி பின் ஆர்வத்தையும் பதைப்பையும் அடக்கிக் கொண்டவனாய் அமைதி காத்தான் அவனின் பிரிவென்ற நாடகம் வெற்றி பெற்றிட.
பரபரத்த கைகளை நெஞ்சுக்கு குறுக்கே வைத்து கட்டிக்கொண்டான் விரன் விறலியவளை பார்க்க பார்க்க இழுத்தணைக்க தோன்ற. தலையை ஹரன் பக்கம் திருப்பியவன் அவன் கையிலிருந்த காஃபி கப்பை வாங்கிக் கொள்ள,
''வா மச்சான்..''
என்ற ஹரனோ நண்பனின் தோளில் கையை போட்டு அவனை முன் வரவேற்பறைக்கு கூட்டி சென்றான்.
குலியவளோ குனிந்த தலை நிமிராது காஃபி கப்பை கைகளில் இறுக்கியப்படி அமர்ந்திருந்தாள் சேலையின் முந்தானையால் முழு உடலையும் போர்த்திக் கொண்டு.
அழுது வீங்கிய யுவதியின் முகத்தை திரும்பி ஒருமுறைக்கு இருமுறை பார்த்தப்படியே ஹரனோடு வரவேற்பறைக்கு சென்றான் விரன்.
''இங்கப்பாரு மச்சான்.. உங்களுக்குள்ளே என்னே பிரச்சனைன்னு எனக்கு தெரியாது.. ஆனா.. இன்னைக்கு நான் மட்டும் சரியான நேரத்துக்கு அங்க போகலன்னா இந்நேரம் நம்ப வீட்டு பொண்ணு ஐட்டமாயிருப்பா!!''
ஹரனின் வார்த்தைகளை கேட்ட விரனுக்கு பக்கென்றது நெஞ்சம். வாயிலிருந்த காஃபி மிடறுகள் தெறிக்க அதிர்ச்சிக் கொண்டவனாய்,
''என்னடா சொல்றே!!''
என்றவனோ சீரியஸ் தொனியோடு முகத்தையும் இறுக்கமாக்க,
''ரெட் லைட் ஏரியாக்கிட்டத்தான்டா நான் நிழலிகாவே பார்த்தேன்.. அங்க வரிசையா நின்ன மத்தவங்களுக்கு நடுவுலே நம்ப வீட்டு பொண்ணு நிக்கறடா!! எப்படி இருந்திருக்கும் சொல்லு!!''
என்றவனின் வாக்கியத்தில் விரனுக்கு கோபம் தலைக்கேறி உட்கார்ந்தது. இருந்தும் பிரெண்டின் வீடென்பதால் அடக்கி வாசித்தான்.
''அது நிஜமாவே நிழலிகாவா இல்லையான்னு ஒரு பக்கம் சந்தேகம்! அப்படி அவதான்னா.. அவே ஏன் அங்க நிக்கணும்.. இப்படி நிறைய கேள்விகளோடு நேரா போய் அவே முன்னுக்கு நின்னா ஷோக் ஆயிட்டா என்னே பார்த்து.. அப்பவே புரிஞ்சிடுச்சு.. அப்பறம் என்னென்னு கேட்கறது.. அதான்.. நேரா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்..''
சொல்ல வேண்டியவைகளை சொல்லி முடித்தான் போலீஸ்காரனவன் அன்றைய ரவுண்ட்ஸ் சிவப்பு விளக்கு ஏரியா என்பதால்.
''ஏன்டா எனக்கு அப்பவே கோல் பண்ணலே!!''
ஆவேசமாய் விரன் சினங்கொள்ள,
''தோ இப்போ எகிறுறியே அதே மாதிரித்தான் அங்க வந்தும் எகிறிருப்பே!! ஒன்னு கிடக்க ஒன்னாயிட்டா!! அதெல்லாம் கண்ட நாயிங்க புலங்கறே இடம்!! வம்பே விலை கொடுத்து வாங்கறது சரியில்லே!! உன்னே பத்தி தெரிஞ்சனாலதான் பொறுமையா போன் பண்ணி வீட்டுக்கு வர சொன்னேன்..''
என்றவனின் டோஸில் காஃபியை நெட்டி தீர்த்தவன்,
''நான் கிளம்பறேண்டா.. தேங்க்ஸ் மச்சான்..''
என்றவன் ஹரனிடத்தில் கைக்குலுக்க,
''பெட்லே பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமில்லன்னு ஒரு நாவல்லே படிச்சேன்..''
என்றவனோ நாசூக்காய் சொன்னான் ஜிம் காரனிடம் எல்லாவற்றையும் மெத்தையில் ஒரு நிறைவுக்கு கொண்டு வர.
''எப்படி தீர்ப்பாங்கன்னு எழுந்திருந்துச்சா!!''
என்றவனின் நக்கலில்,
''ஹான்.. வேணும்னா ரைட்டர் திரிலோவோட நம்பர் தறேன் நீயே போன் பண்ணி கேளு!!''
என்றவனோ விரனின் கழுத்தை விளையாட்டாய் வளைத்து அவனுடன் பிரண்ஷிப் சண்டை கொண்டான்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 9
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.