What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

டிக்கி நகரவே நகராது!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
டிக்கி நகரவே நகராது!

இந்த எழுத நினைக்கறதும், ஆனா, முடியாமே தவிக்கறதும் அடிவயித்துலே பட்டாம் பூச்சி பறக்கற பீலிங்ஸ்தான்!

பசிக்குது, ஆனா, சாப்பிட தோணலே!

இல்லே, சோம்பேறியா இருக்கற மாதிரியான நிலைதான்.

ஒரு விஷயத்தை திரும்பவும் பண்ண, பண்ண அது ரூட்டின் ஆகிடும். ஆனா, காலப்போக்கில் அதுவே ஒரு விதமான சலிப்பை கொடுத்திடும்.

அதுவும் இந்த இஷ்டப்பட்டு செய்யும் வேலையா இருந்தா கூட, ஒரு கட்டத்துக்கு மேலே என்னடா இது தினமும் இதே பிழைப்பா இருக்கின்னு காண்டாகும்.

ஆனா, பாருங்க அத்தியாவசிய கடமைகளான சாப்பிடறது, தூங்கறது, சூச்சு போறது ஏன் கக்க போறதுன்னு இப்படி எதையுமே நாமே நிறுத்த மாட்டோம்!

அது நம்மாலே முடியவும் முடியாது!

எப்படி, இப்படி நம்ப உடம்பு நம்ப பேச்சை கேட்காமே அதோட சிஸ்டமுக்கு ஏத்த மாதிரி பங்க்ஷன் பண்ணுதோ, நாமும் ஒரு சில சமயங்களில் கொஞ்சம் முரண்டு பிடிச்சுதான் ஆகணும்!

யாருக்கிட்டன்னு கேட்கறீங்களா?!

நம்பக்கிட்டத்தான்!

முடியலே! முடியாது! அப்படிங்கற இந்த நேர்மறை எண்ணங்களிடமிருந்து நம்ப சிந்தனையை நாமதான் காப்பாத்தணும்!

நம்ப மனசு எப்படின்னா நல்லதை விட கெட்டதுக்கு சீக்கிரமா ஈர்க்கப்பட்டிடும்!

அதனாலேயே, சொல்றது சுலபம்! ஆனா, நடைமுறை படுத்துறது கஷ்டம்! இது பரவலான வாக்கியம்!

முதல்லே இந்த மாதிரியான சோடை போக வைக்கும் ஸ்டேட்மெண்ட்களை ஓரம் ஒதுக்குங்க!

அப்பறம் முடியலன்னா புலம்ப ஒரு ஆள் வெச்சு இருப்பீங்க பாருங்க! அந்த ஆள் உங்களே மாதிரியே முடியலங்கற கோஷ்யை சேர்ந்த ஆளா இல்லாமே இருக்கணும்!

அப்படியான ஆள் தான் நம்ப பிரச்சனையை தீர்த்து வைக்கற தீர்க்கதரிசியா இருப்பாங்க!

காரணம், நீங்க சொல்ற கதையை கேட்கற ஆள், டவுனா இருக்கற உங்களுக்கு எனர்ஜி கொடுக்கணுமே தவிர, உங்ககிட்ட இருக்கற கொஞ்ச நஞ்ச பொசிட்டிவிட்டியையும் புடுங்கி விடற ரகமா இருக்கக்கூடாது!

உம் கொட்டற ஆள் கூட பரவாலே! வா, வா நீயும் என்கூட சேர்ந்துக்கோன்னு சொல்லி முடியாதுங்கற பெருமையிலே கூட்டம் சேர்த்து கும்மியடிக்கறே வட்டம்தான் வேஸ்ட்!

அங்க வெறும் காரணங்களும் பிரச்சனைகளும் மட்டுமே பேசப்படும்! அவ்விஷயங்களை களைவதற்கான வழிகள் எக்காலத்திற்கும் கண்டறியப்படாது!

ஆகவே, எப்படி சந்தோசம், துக்கம் இப்படியான விடயங்களை பகிர்ந்துக்க ஒரு நல்லுள்ளத்தை நட்புறவா வெச்சுப்பீங்களோ, அதே மாதிரி தடுமாறி தவிச்சு கிடக்கற உங்க எண்ணங்களை சீர்ப்படுத்தவும் ஒரு உறவை சம்பாரிச்சு வெச்சுக்கோங்க!

ஆனா, இதுலையும் ஒரு சிக்கல் உண்டு. எல்லாரும் எல்லா டைமும் நமக்காக இருப்பாங்கன்னு சொல்ல முடியாது!

அதனாலே, பல வேளைகளில் நாமலேதான் நமக்கான தூண்டுகோலா மாறிடணும்!

24 மணி நேரமும் ஒருத்தராலே நல்லதை மட்டுமே யோசிச்சுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருக்க முடியாதுதான்!

ஆனா, அதை நடைமுறைப்படுத்துறது ஒன்னும் சாத்தியமில்லாத ஒன்றில்லை!

நமக்கு நல்லதுங்க!

நல்ல எண்ணங்களை விதைக்க பாருங்க!

எப்படின்ன கேட்கறீங்களா?!

ரொம்ப சுலபம்ங்க!

நல்லதை நினைங்க! நல்ல வார்த்தைகள் பேசுங்கள்!

அடுத்தவங்களுக்கும் அதை அப்படியே கடத்துங்க!

உங்களுக்குள்ளரா இருக்கற அதே பாசிட்டிவ் எனர்ஜி உங்கக்கூட பேசற, பழகர ஆட்களுக்கும் கிடைக்கும்!

வார்த்தைகளுக்கு உயிர் இருக்கு!

நீங்க என்ன பேசறீங்களோ, அதுவோ உங்களை உருவாக்கும்!

முடியும் அப்படிங்கற எண்ணத்தை வளர்த்துக்கிட்டாலே போதும்!

மத்தது எல்லாம் தன்னாலேயே நடக்கும்!

இந்த பிரபஞ்சம் நாமே பேசுறதை மட்டுமில்லே நினைக்கறதை கூட கவனிச்சுக்கிட்டே இருக்கும்!

முடியும் அப்படிங்கற எண்ணத்தோட முயற்சி பண்றவனுக்கு அதற்கான பாதையை அது அழகா வகுத்து கொடுக்கும்!

ஆகவே, எழுத முடியலங்கற எண்ணத்தை முதல்லே உங்க சிந்தனையிலிருந்து வெளியேற்றுங்க!


எழுத உட்காருங்க!

தோணலை அப்படினாலும் பரவாயில்லை!

சும்மாவாவது லேப்டாப், போன் இப்படி எதில் எழுதுவீங்களோ அதை திறந்து வைங்க!

எழுதணும்!

எப்படியாவது எழுதணும்!

எதையாவது எழுதணும்!

இப்படி நினைங்க!

தன்னாலே எழுதுவீங்க!


முதல் நாள் வராது!

விட்டுடாதீங்க!

ரெண்டாவது நாள் எரிச்சலூட்டும்!

பொறுத்துக்கோங்க!

மூணாவது நாள் கடுப்படிக்கும்!

கண்டுக்காதீங்க!

நாலாவது நாள் சிறுப்பொறி தட்டும்!

புடுச்சுக்கோங்க!

எழுத ஆரம்பீங்க!


முடிவா சொல்றேன்! மறுபடியும் சொல்றேன்!

முடியும்னு முதல்லே நினைங்க!

மூளை முட்டிகிட்டியாவது ஐடியாவே உருவாக்கும்!

கை எப்பாடு பட்டாவது எதையாவது கிறுக்கும்!

டிக்கி அப்பறம் உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவே நகராது!


பின்குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே ஆகும்! இதை யாரும் ஏற்றுக்கொள்ளவோ ஆமோதிக்கவோ வேண்டுமென்ற அவசியம் கிடையாது என்பதை தெளிவாய் தெரிவித்து கொள்கிறேன்!

நன்றி. வணக்கம்.
 

Author: KD
Article Title: டிக்கி நகரவே நகராது!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top