What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
483
WhatsApp Image 2025-01-03 at 2.38.36 AM.jpeg

தாழ் திறவாய் ததுளனே! : 10

''யார் என்னன்னு ஏதாவது தெரிஞ்சதா?!''

ராகன்தான் அலறினான் வழக்கம் போல்.

''ரூம் சிசிடிவிலே எதுவும் தெரியலே சார்! மெயின் எண்ட்ரன்ஸ், அப்பறம் ஆபிஸ்குள்ள இருக்கறே மத்த எல்லா கேமரா ஃபுட்டேஜையும் இன்னைகே எடுக்க சொல்லிருக்கேன்! ஈவனீங்குள்ள ரெடியாகிடும் சார்! அப்படியே லேட்டானா கூட, நானே கொண்டு வந்து கொடுத்திடறேன் சார், பென் ட்ரைவை நீங்க இருக்கற இடத்துலே!''

கடகடவென ஒப்புவித்தான் பி.ஏ.சுரேஷ்.

''சொல்லாதே! செய்! எனக்கு தெரிஞ்சாகணும்! எவன், அவன், இவ்ளோ தைரியமா என் ரூமுக்குள்ளையே நுழைஞ்சு என் பணத்தையே ஆட்டையே போட்டு, எனக்கே விபூதி அடிச்சவன்னு!''

பல்லை கடித்தவன் களவு போகா மீதி பணம் கொண்ட சூட்கேஸை நீட்டினான் சுரேஷை நோக்கி.

''கண்டிப்பா கண்டுப்புடிச்சிடலாம் சார்! எனக்கு தெரிஞ்சு நிச்சயமா அவன் நம்ப ஆபிஸ் ஆளா இருக்க வாய்ப்பே இல்லே!''

''இதெல்லாம் வக்கணையா பேசு! ஆனா, நான் இல்லாத நேரத்துலே யார் என் ரூமுக்குள்ள வர்றது, போறதுன்னு மட்டும் பார்த்திடாதே!''

செமத்தையாய் வாங்கிக் கட்டிக்கொண்டவனோ,

''நான் போய் கேஷ் டிப்போசிட் பண்ணிட்டு வந்துடறேன் சார்!''

''இதையாவது உருப்படியா பண்ணிட்டு வா! எங்கையாவது, எதையாவது பிராக் பார்த்துக்கிட்டு, எவன்கிட்டையாவது இதையும் பறிகொடுத்திட்டு வராதே!''

என்ற விராகனோ சூடு தணியா எரிமலையாய் பொங்க, சரியென்று தலையை ஆட்டிய சுரேஷோ குனிந்த சிரம் மேல் தூக்காதே முதலாளியின் அறையிலிருந்து வெளியேறினான்.

நேற்றைக்கு வங்கியில் போட வேண்டிய சில பணக்கட்டுகளை கணக்கிட்டு கொண்டிருந்த நாயகனுக்கோ, மிக முக்கியமான வெளிநாட்டு அழைப்பொன்றை வந்தது.

அலைப்பேசியை எடுத்து காதில் வைத்தவன், மறுமுனை ஆளை குசலம் விசாரிக்கும் வரையில் ஒத்துழைத்த கவரேஜ், இருவரும் தொழில் சங்கதி பேச ஆரம்பிக்க வேலையை காண்பிக்க தொடங்கியது.

பலமுறை அழைப்பை துண்டித்து மீண்டும் இணைத்து பேசிட முனைந்த டென்ஷன் பார்ட்டியோ, வேறு வழியில்லாது அவன் ஆபிஸ் அறையிலிருந்து வெளியேறி ரூப் டாப்பிற்கு நடையைக் கட்டினான்.

ஆனால், கிளம்பிடும் முன் பாஸ்வர்ட் கொண்ட சூட்கேஸை மூடியவன், மேஜை மீது கோப்புகளுக்கு இடையில் இருந்த சில நோட்டு கட்டுகளை மீண்டும் பணப்பெட்டிக்குள் எடுத்து வைத்திட மறந்திருந்தான்.

கைப்பேசி கவரேஜ் செய்த சதியில் சினமேறி போய் கிடந்தவன், வெளியேறிய அவசரத்தில் அவன் அலுவலக அறை கதவையும் பூட்டிடாமலே அங்கிருந்து நகர்ந்தான்.

ஒரு மணி நேரத்திற்கு பின்னாடி திரும்பி வந்தவன், சூட்கேஸை தூக்கி அங்கிருந்த சேஃப்டி லாக்கருக்குள் வைத்து பூட்டினான்.

பின், முந்தைய நாள் கொண்ட சண்டையை சமாதானம் செய்திடும் பொருட்டு ஆரோன் அழைக்க, வேண்டா வெறுப்பாய் அண்ணனோடு லஞ்ச் உண்டிட கிளம்பினான்.

நேற்றைய பொழுதோ அப்படியே கழிந்தது விராகன் திரும்பி ஆபிஸ் வராமலே போக.

ஆனால், மறுநாளான இன்றைக்கு, அலுவலகம் வந்த நாயனோ, கோப்புகளை ஓரந்தள்ளி மேஜையை அலச, பணக்கட்டுகளை காணாது அதிர்ச்சிக் கொண்டான்.

எதற்கும் சூட்கேஸை ஒருமுறை திறந்து பார்த்திடலாம் என்றெண்ணியவன், அதற்குள் பணம் இல்லாதிருக்க கண்டு அதிர்ந்து போனான்.

அவனைத் தவிர அவன் ஆபிஸ் ரூம் சாவி மூவரிடம் மட்டுமே உள்ளது. ஆரோன் தொடங்கி அவன் குடும்ப உறுப்பினர்கள் என்று எவரும் பணத்தை எடுத்திட வேண்டிய அவசியமும் இல்லை.

காரணம், வீட்டிலிருந்து அப்பணப்பெட்டியை ஆரோன் மூலம் சின்னவன் கைக்கு சேர்த்ததே, அவர்களின் அப்பா ஒளியவன்தான்.

ஆகவே, பேமிலியை சந்தேகத்திலிருந்து விலக்கி ஆபிஸ் ஊழியர்களை வறுத்தெடுக்க ஆரம்பித்தான் ராகன்.

நேற்று வீட்டுக்கு லேட்டாய் போனவர்கள் என்று ஆரம்பித்து அவன் அறை பக்கம் நடந்தவர்கள் என்று ஒருவரை விடாது எல்லாரையும் விசாரணை கைதி போல் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தான்.

பின், மொத்தமாய் எல்லாரையும் கூட்டம் கூட்டி, களி தின்ன வைத்திடுவான், என்று எச்சரிக்கை விடுத்தான்.

பொதுவிலோ, கட் அண்ட் ரைட்டாக கட்டளை பிறப்பித்தான், ஒரு நாள் அவகாசம் கொடுத்து, திருடியது யாராகினும் நேரடியாய் வந்து மன்னிப்பு கேட்டு தவறை திருத்திக்கொள்ள.

ஆனால், நாயகனோ அறியவில்லை நிஜத்தில் அவன் பணத்தை கையாடல் செய்தது அவன் உப்பை தின்று உடம்பு வளர்த்த உயிர்கள் அல்ல, ஒரு நாள் விருந்தாளியாய் வந்த உன்னி என்று.

அதே வேளை, தம்பி ராகன் மொத்த ஆபிஸையும் கைகட்டி நிற்க வைத்து டீச்சர் வேலை பார்த்த சங்கதியோ, பெறாத தாயை பார்க்க போயிருந்த ஆரோனின் காதில் வந்து விழுந்தது.

''நான் முதல்லே கிளம்பறேன்மா! ஆபிஸ்லே ஏதோ கேஷ் மிஸ்ஸிங்காம்! ராகன் ரொம்ப கோபமா எல்லாத்தையும் போட்டு விளாசிக்கிட்டு இருக்கானாம்! ரிஷப்ஷனிஸ்ட் கோல் பண்ணாங்க!''

அடுக்களை நுழைந்தவனாய் சமையல் செய்துக் கொண்டிருந்தவரிடம் ஆரோன் சொல்ல,

''சரி, பார்த்து போயிட்டு வா! நான் சமைச்சிட்டு ட்ரைவரை வரச்சொல்லி கொடுத்தனுப்பறேன்!''

என்ற சவிதாவோ அவன் முகம் பார்த்து தலை திருப்பி முறுவலித்தார்.

''எதுக்குமா?! வேண்டாம்! பரவாலே! நான் நைட் வந்து சாப்பிட்டுக்கறேன்!''

''மறந்துட்டியா ஆரோன்?! இன்னைக்கு உங்கம்மாக்கு பிறந்தநாள்! கண்டிப்பா உங்கப்பா தடபுடலா ஏதாவது பிளான் பண்ணிருப்பாரு!''

''நீங்க மறந்துட்டிங்களாமா?! என் அம்மாக்கு மட்டும் இல்லே, உங்களுக்கும் இன்னைக்குத்தான் பிறந்தநாள்!''

மகன் ஸ்தானம் கொண்டவன் சொல்ல, சமைத்த ஆட்டுக் குழம்பை ருசி பார்த்திட கரண்டியை தூக்கிக் கொண்டு அவன் முன் நோக்கினார் நாற்பது மதிக்கத்தக்க பெண்ணவர், குறுநகை கொண்டவராய்.

''ஹ்ம்ம்! கரைக்ட்டா இருக்கு!''

உள்ளங்கை கொண்ட குழம்பை நக்கி சுவைத்தவன் கொடுத்த சர்டிபிகேட்டை நம்பி அடுப்பை அடைத்து குழம்பை இறக்கினார், ஒளியவனின் முன்னாள் காதலி அவர்.

''மா, சோறு போடுங்க! நான் சாப்பிட்டுட்டே போறேன்!''

டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்தமர்ந்தான் ஆளான் அவன்.

''அவசரமா போகணும் சொன்னே?!''

வேள்விக் கொண்ட முதிர்கன்னியோ அவன் முன் காலி தட்டை வைக்க,

''அவனா போன் பண்ணுவான்! இப்போ, நானா போய் கேட்டா, அதுக்கு ஒரு குதி குதிப்பான்! யார் சொன்னா, எவர் சொன்னான்னு!''

''அதுவும் சரிதான்! காசு விஷயம் அப்படின்னும் போது, எப்படியும் உன்கிட்ட சொல்லித்தானே ஆகணும்!''

கருத்து சொன்ன சவிதாவோ, பெரியவனின் தட்டில் உணவை பரிமாறிட ஆரம்பித்தார்.

''ஹ்ம்ம்!''

தலையாட்டிய மூத்தவனோ, அப்பாவின் காதலி சமைத்த ஆட்டுக் குழம்பை ஒரு புடி புடித்திட ஆரம்பித்தான்.

தாழ் திறந்திடுவான் ததுளன்...
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top