- Joined
- Jul 10, 2024
- Messages
- 483
தாழ் திறவாய் ததுளனே! : 11
பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி.
ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார்.
கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார் மனைவியின் பிறந்தநாளை சிம்பிளாய் கொண்டாடிட எண்ணி.
வழக்கமாய் மிக நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்து கொண்டாடப்படும் அவ்விழா இம்முறை சங்க்யாவின் குடும்பத்தையும் உடன் இணைத்துக் கொண்டது.
தோட்டத்து ஏரியாவில், வரக்கூடாதவளின் வதனம் கண்ட ராகனுக்கோ பொத்துக்கொண்டு வந்தது கோபம்.
அதை தணிக்க தந்தையை தேடி பங்களாவுக்குள் நுழைந்தவனோ,
''யாரே கேட்டு அந்த பைத்தியக்காரியையும், அவே குடும்பத்தையும் இன்வைட் பண்ணீங்க?!''
என்று கொதிக்க,
''யாரே கேட்கணும்?!''
என்ற வேள்வியோடு அவனை எதிர்கொண்டார் ஒளியவன்.
''என்னப்பா நடந்ததையெல்லாம் மறந்துட்டிங்களா?!''
மேல் மாடி அறையில் பெற்றவரிடம் வினா தொடுத்தவனையோ,
''ஆமா! சின்னவங்க நீங்க பண்ண கூத்தை மறந்து, பெரியவங்க நாங்க சங்கடம் இல்லாமே பழகத்தான் இந்த சந்திப்பு போதுமா?!''
''அப்போ உங்களுக்கு என் மானம் மரியாதை பத்தியெல்லாம் கவலை இல்லே, அப்படித்தானே?!''
ஆவேசம் கொண்டான் நாயகன் அவன், டேடியோ எதிராணியாகிட.
''என்னடா பெரிய மானம் மரியாதை?! நானும் பார்த்தேன்! உங்கம்மாவும் பார்த்தா! நீ அந்த பொண்ணே பேசின பேச்சே!''
ஒளியவன் போட்ட போடில் ராகனின் முகமோ இறுகிப் போனது. அவனுக்குத் தெரியும் எப்படியும் இது பெற்றோரின் காதுக்கு போகுமென்று.
ஆனால், நேரடி காட்சியாகி அவனை இப்படி நிலைகுத்திட வைக்குமென்று ஆணவன் நினைக்கவில்லை. அதுவும் தாய் கனலி அக்காணொளியை பார்ப்பரென்று.
''அப்பவே உங்கம்மா சொன்னா, கூப்பிட்டு வெச்சு நாலு செவினி அறை கொடுக்க போறேன்னு! நான்தான், தோளுக்கு மேலே வளர்ந்த பையனே கை நீட்டறது சரியில்லன்னு, அவளே சமாதானம் பண்ணி வெச்சிருக்கேன்!''
அப்பா சொல்லத்தான் இப்போது புரிந்தது ராகனுக்கு, தாய் ஏன் சரியாய் சில நாட்கள் அவனோடு கதைக்காதிருந்தார் என்ற காரணம்.
''உங்கம்மா உன்னே இப்படியா பேச சொல்லி வளர்த்தா?! இங்கிதம் தெரியாது உனக்கு?! எப்போ பாரு அவசரம், கோபம், போட்டி, பொறாமை! எப்போதான் திருந்த போறே?!''
தகப்பனார் ஒளியவன் இதான் சாக்கென்று இதுநாள் வரை விராகனின் குணத்தின்பால் கொண்ட மொத்த காண்டையும் ஒரேடியாய் வார்த்தைகளில் வடிக்க, தலை கவிழ்ந்திருந்த மகனோ சிலையாகவே நின்றான் ஏதும் பேசாது.
''உன் முட்டாள் தனத்துக்கு, என்னாலே அவுங்க குடும்பத்தை பகைசுக்க முடியாது! அவுங்களுக்கும் நமக்கும் எப்படியான பழக்கம்னு, போய் பாட்டி தாத்தாவே கேட்டு தெரிஞ்சிக்கோ!''
என்று, முன்னாடியே அவன் அறிந்த கதையை பெருசுகளிடம் கேட்க சொன்ன ஒளியவனோ அங்கிருந்து நகர்ந்தார்.
அதுவரை ஊமையாட்டம் இருந்த நாயகனோ, அப்பா கிளம்பிய அடுத்த நொடி, அறையை தும்சம் செய்தான், ஆங்கில வார்த்தைகளை துபகல், ஆவேசமாய் கத்தி.
கீழ் தளத்தின் வரவேற்பறை சோபாவிலோ,
''மனசுலே எதுவும் வெச்சுக்காதே சங்க்யா! அவன் அப்படித்தான்! பட்டுபட்டுன்னு பேசிடுவான்! என்ன, ஏதுன்னு யோசிக்கவே மாட்டான்!''
பெத்தவளின் எண்ணத்தில் கல்லை போட்டு வஞ்சியை அந்நியமாக்கியிருந்த மகனை கழுவி ஊற்றிய கனலியோ,
''அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்மா!''
என்றப்படி மங்கையின் விரல்கள் பற்றி வருத்தம் தெரிவிக்க,
''பரவாலே ஆண்ட்டி விடுங்க! நான் அதையெல்லாம் கடந்து வந்துட்டேன்! தப்பு ராகன் மேலே மட்டும் இல்லே! என் மேலையும்தான்! வீட்டுலே பார்த்த மாப்பிள்ளையா இருந்தாலும், ஒழுக்கமானவரா, இல்லே சும்மா பேச்சுக்கு மட்டும் வெளியிலே அப்படி நடந்துக்கற ஆளான்னு பார்க்கத்தான் அன்னைக்கு நானும் அப்படி நடந்துக்கிட்டேன்!''
இதுநாள் வரை மனதை அடைத்த ரகசியத்தை முதல் முறையாய் போட்டுடைத்தாள் அந்திகையவள், அன்றைய நடத்தைக்கு விளக்கம் கொடுத்தவளாய்.
''எல்லா பொண்ணுக்கும் இருக்க கூடிய சாதாரண எண்ணம்தான் உனக்கும்! இதுலே தப்பு சொல்ல என்ன இருக்கு?! அப்படியே, நீ அவனை சரிப்பார்க்க நடந்துக்கிட்ட விதம் வேணும்னா, அவனை கோபமோ இல்லே காயமோ படுத்தி இருக்கலாம்! அதுக்காக, அவன் அப்படி பேசலாமா?! தப்பில்லையா அது?!''
''எப்படி பார்த்தாலும், நான்தானே ஆண்ட்டி ஆரம்பிச்சேன்?!''
''நீ சும்மா இரு சங்க்யா! என் பையன் அப்படிங்கறதுக்காக, நான் அவனுக்கு வக்காலத்தெல்லாம் வாங்க மாட்டேன், மொத்த பழியையும் உன் மேல போட்டு!தப்புன்னா, தப்புதான்! நானே அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசினா, என் வளர்ப்பு தப்பாகிடாதா என்ன?!''
''விடுங்க ஆண்ட்டி! இனி இதை பத்தி பேச வேண்டாம்! உங்க பர்த்டேய்வே என்ஜோய் பண்ணுவோம்!''
என்று புளித்து போன கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏந்திழையோ, கனலியை எக்கி கட்டிக்கொண்டாள் மென்முறுவல் கொண்டவளாய்.
காட்சியை மாளிகையின் வெளிப்பக்க மேஜையில் அமர்ந்தாற்படி பார்த்த சுடர் பாட்டியோ,
''நீங்க ஒரு தப்பு பண்ணிட்டிங்க!''
என்று, சாப்பிட்டுக் கொண்டிருந்த தாத்தாவின் பசியில் செக் போஸ்ட் போட்டார்.
''என்ன தப்பு?!''
புரியாது வினவிய கணவரிடமோ, நேத்திரங்களால் சைகை செய்தார் மனைவியவர், காட்டிய இடம் பார்த்திட சொல்லி.
தாத்தாவோ, ஏறெடுத்து நோக்கினார் நேரெதிரே நின்றிருந்த பேரனை.
''பேசற ஆளே விட்டுட்டு, அடுக்கடி எக்கி யாரை பார்க்கிறான் அந்த பக்கம்?!''
''தோ, வர அம்மணியைத்தான்!''
என்ற பாட்டியோ, மருமகளோடு சேர்ந்து வந்த யுவதியை சுட்டிக்காட்டிட,
''அவன் அம்மாவையா இவ்ளோ நேரம் எட்டி பார்த்துக்கிட்டு இருந்தான்?!''
என்ற தாத்தாவோ மீண்டும் பிரியாணியை ஒரு புடி புடிக்க ஆரம்பிக்க,
''ஏன், அவன் கனலியே இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா?!''
என்று கடிந்துக் கொண்ட பாட்டியோ,
''நான் அவளே சொல்லலே! அவளுக்கு பக்கத்துலே வர பொண்ணே சொன்னேன்?!''
''யாரு சங்க்யாவையா?!''
''ஹ்ம்ம்! அவளைத்தான்! சின்னவனுக்கு நீங்க அவளே பேசினதுக்கு பதிலா, பெரியவனுக்கு கேட்டிருக்கலாம்!''
''அது எப்படி முடியும்?! ஆரோன்தான் ஏற்கனவே சொல்லிட்டானே, லவ் மேரேஜ்தான் பண்ணுவான்னு!''
''அதுக்கும் ஒரு அரேஞ்ச்மென்ட் வேணும்லே!''
''புரியலே?!''
''ஹ்ம்ம்.. உங்க செல்ல பேரனுக்கு பதிலா, ஆரோனை அனுப்பி வெச்சிருக்கணும் சங்க்யாவே பார்க்கன்னு சொல்றேன்! இப்போ, புரியுதா?!''
என்ற பாட்டியோ நாசுக்கை விட்டு, நேரடியாய் களத்தில் குதிக்க,
''லவ் பண்றேன்னு ஏதாவது சொன்னானா என்ன?!''
என்ற தாத்தாவின் சந்தேகத்திற்கு இல்லையென்று தலையாட்டி,
''அவன் நடந்துக்கறதை பார்த்தா தெரியலையா?!''
''பார்க்கறதையெல்லாம் வெச்சு, நாமே ஒரு முடிவுக்கு வர முடியாது சுடர்! இந்த காலத்து புள்ளைங்க எல்லார்கிட்டையும் நல்ல சிரிச்சு பேசி, சகஜமா பழகுதுங்கு!''
''அவுங்களே பார்த்தா பிரெண்ட்ஸ் மாதிரியா தோணுது?!''
பாட்டியோ கண்ணுக்கு நேரெதிரே அளவளாவிய ஆரோன் மற்றும் சங்க்யாவையும் காண்பிக்க,
''ராகன் ஆரம்பிச்ச பிரச்சனையை வளர விட கூடாதுங்கிற காரணத்துக்காக கூட ஆரோன் அந்த பொண்ணுக்கிட்டே கொஞ்சம் நெருங்கி பழகலாம் சுடர்! நமக்கு நிஜம் தெரியாது! ஒருவேளை, நீ நினைக்கறே மாதிரி அப்படி ஏதாவது இருந்தா, கண்டிப்பா அவனாவே வந்து சொல்லுவான்! அதுவரைக்கும் நம்ப வேலை என்ன தெரியுமா, அவுங்க விஷயத்துலே மூக்கை நுழைக்காமே இருக்கறதுதான்!''
என்ற தாத்தாவோ உண்ட களைப்பில், ஏப்பம் விட,
''நீங்க சொல்றதும் சரிதான்! அவனாவே வந்து சொல்லட்டும்! அதுவரைக்கும் லவ் பண்ணி சுத்தட்டும்!''
''அவன் பண்றானோ இல்லையோ, நீயே பண்ண வெச்சிடுவே போலே!''
பாட்டியின் உள்ளுணர்வை வேடிக்கையாக்கிய தாத்தாவோ தோள்கள் குலுக்கி சிரிக்க, மேஜை மறைத்த அவரின் தொடையிலேயே ஒரு திருகு வைத்தார் துணைவி அவர் செல்ல ஊடலாய்.
தாழ் திறந்திடுவான் ததுளன்!
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.