What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
WhatsApp Image 2024-12-13 at 2.41.40 PM.jpeg

தாழ் திறவாய் ததுளனே! : 3

விடியற்காலை ஒரு மணிக்கு ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியிருந்தாள் சங்க்யா. லேட் நைட்டில் பசித்த வயிறுக்கு ஒரு கப் பாலை மட்டும் தாரம் வார்த்தாள் வதனியவள்.

படுக்க போகும் முன் பல் துலக்கி, முகம் கழுவிய நங்கையோ, படுக்கையறை ஜன்னலோரம் நின்று டவலால் வதனம் ஒத்தியெடுத்தாள் இயற்கை காற்று வாங்கி.

அக்கணம் காரிகையின் கண்ணிலோ சிக்கியது சாலையோரம், மாளிகையின் எதிர்புறம் நின்றிருந்த கார் ஒன்று.

நைட் டியூட்டி பார்க்கும் கார்ட்டுக்கோ உடனே போனை போட்டாள் புண்ணியவதியவள், வாடகை வீட்டில் பணி காரணமாய் தனியொருத்தியாய் இருக்க, பாதுகாப்பை முன்னிறுத்தும் வண்ணம்.

''சொல்லுங்க மேடம்?!''

''யாரோட கார் அது?! நான் வரும் போதும் பார்த்தேன்! இப்போ வரைக்கும் கிளம்பாமே அங்கையேதான் இருக்கு!''

''ஐயோ, மேடம்! சோரி மேடம்! சொல்ல மறந்துட்டேன்! அவர் உங்களே பார்க்கத்தான் ஈவனீங்லருந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு! நான் அப்பவே சொன்னேன் மேடம், நீங்க வர ரொம்ப லேட் ஆகும், நாளைக்கு வாங்கன்னு! ஆனா, அவர் பரவாலே, வெயிட் பண்றேன்னு இங்கையே இருந்திட்டாரு மேடம்!''

கடகடவென ஒப்புவித்தார் புது கார்ட்.

''யார் அது?! பேர் ஏதும் சொன்னாரா?!''

சாதாரணமாகவே கேட்டாள் கோதையவள்.

''இல்லே மேடம்! எதுவும் சொல்லலே! உங்களை பார்க்கணும்னு மட்டும்தான் சொன்னாரு! அப்பாயிண்ட்மெண்ட் கூட இல்லே மேடம்! நான் செக் பண்ணிட்டேன்!''

விசிட்டர்ஸ் புஸ்தகத்தை ஒருமுறை மீண்டும் சரிபார்த்துக் கொண்டார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெருசு.

''சரி விடுங்க! தூங்கறாரு போலே!''

கொட்டாவி விட்டு ஜன்னலை இழுத்து சாத்திட போன பாவையின் அம்பகங்களோ கார் ஜன்னலுக்கு வெளியில் தொங்கிய வாட்ச் கட்டிய கையை பார்த்த மாத்திரத்திலேயே, காத்திருப்பவன் இளைஞன் என்பதை புரிந்து சொன்னது, கரமோ அசையாதிருக்க.

''சரிங்க மேடம்!''

''நாளைக்கு காலையிலே ஸ்டில் (still) இங்கையே இருந்தாருன்னா சொல்லுங்க! நான் ஷூட்டிங்குக்கு கிளம்பறதுக்கு முன்னாடி டைம் இருந்தா பார்த்திட்டு போறேன்!''

''சரிங்க மேடம்!''

கால் கடுக்காது காத்திருந்தாலும், நேரத்தை கண்மணி அவளுக்காக செலவழித்தவனை முட்டாள் என்று நினைக்க வைத்திட அவள் விரும்பவில்லை.

காரணம், டாப் மாடல் அவளை காண அவனின் மெனக்கெடலான டெடிகேஷனே.

ஆகவே, வந்தவனை நாளை சந்திப்பதற்கான வழியொன்றை அவளாகவே உருவாக்கி கார்ட் அங்கிளிடம் சொல்லி வைத்தாள் நாசூக்காய் பேடையவள்.

''சரிங்க மேடம்!''

தொடர்ந்து சரிங்க மேடம், என்றுரைத்த செக்கியூரிட்டியோ இறுதியாய் போனை வைத்தார்.

அம்மணியோ டவலை காயப்போட்டு கைப்பேசியை கையில் எடுக்க, அலறியது அவள் அறை லேண்ட் லைன் மீண்டும்.

ரிசீவரை எடுத்து காதில் வைத்தவள் செவிகளிலோ,

''மேடம், சோரி! நான் எவ்வளவே சொன்னேன்! நீங்க படுத்திருப்பீங்கன்னு! ஆனா, உங்க ரூம்லே லைட் எரியறதை பார்த்திட்டு கார்லே வெயிட் பண்ணவரு இப்பவே உங்கக்கிட்ட பேசணும்னு வந்து நிக்கறாரு மேடம்!''

''சரி, போனை கொடுங்க!''

என்ற பெண்டுவோ ஜன்னல் திரையை விலக்கி பார்த்தாள் கீழிருப்பவனை.

''ஹாய், சங்க்யா! சோ சோரி! உங்களே இந்த நேரத்திலே டிஸ்டர்ப் பண்ணனும்னு நினைக்கலே! ஆனா, இன்னைக்கு ஒரு நாள் முழுக்க உங்கக்கிட்ட பேசவும், உங்களே பார்க்கவும் நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன்! உங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட வந்தேன்! ஆனா, எதுவுமே வேலைக்கு ஆகலே! அதான், நேரா உங்க வீட்டுக்கே வந்து வெயிட் பண்ணேன் உங்களே பார்க்க!''

நிறுத்தி, நிதானமாய் அவன் சொல்ல,

''சரி! சொல்லுங்க?! யார் நீங்க?! எதுக்காக என்ன பார்க்கணும்?!''

''ஆரோன்! ஒளியவன் குரூப்ஸ், சி.இ.ஓ!''

அவ்வளவுதான். இதை கேட்ட அடுத்த நொடியே ரத்தம் சூடேற,

''என்ன, உங்க தம்பி சமாதானம் பேச தூது அனுப்பி வெச்சிருக்கானா?!''

ஜன்னல் இறுக்கி நின்ற மாதங்கியோ, ஆத்திரத்தில் வெடித்தாள்.

''கூல் டவுன் சங்க்கியா! அவன் நல்லவன், வல்லவன்னு சர்டிபிகேட் கொடுக்கறதுக்காவோ, இல்லே, உங்க சண்டையே பத்தி பேசி யார் சரி தப்புன்னு பஞ்சாயத்து பண்ணவோ, நான் உங்களே மீட் பண்ண நினைக்கலே!''

கார்ட் ஹவுஸ் போன் மூலம் தன்மையாய் கதைத்தவனோ, மேல் வீட்டுக்காரிக்கு முதுகு காண்பித்து நிற்க, கதத்தில் உழன்றவளோ பேசியவனின் எண்ணம் விளங்காது அமைதி காத்தாள்.

''நீங்க கொடுத்த நியூஸ், போட்ட வீடியோஸ் எல்லாம் ஒளியவன் குரூப்ஸ் ஷேர்ஸை ரொம்ப பாதிச்சிருச்சு! தனிப்பட்ட ரெண்டு பேரோட சண்டையாலே, மெயின் கம்பெனி தொடங்கி, சப் கம்பெனிஸ் பலதுக்கும் நிறைய இழப்பு ஏற்பட்டிடுச்சு! இதனாலே, மாசக்கடைசியிலே பாதிக்கப்பட்டு நிக்க போறது என்னவோ அடிமட்ட தொழிலாளிகள்தான்!''

ஆரோன் பொறுப்பாய் கதைக்க, அங்கணைக்கோ சினம் பொத்துக்கொண்டு வந்தது.

''அப்போ, உங்க தம்பி ஒரு பொண்ணே எப்படி வேணும்னாலும் பேசுவான், அதை நீங்க கண்டிக்கவும் மாட்டிங்க, தட்டிக் கேட்கவும் மாட்டிங்க! அப்படித்தானே?!''

''பிரச்சனையை பக்குவமா ஹேண்டல் பண்ணுங்கன்னு சொல்றேன்! உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகாமல் போனதுக்கு ஏன் சம்பந்தம் இல்லாத ஆட்களை மறைமுகமா கஷ்டப்படுத்தணும்?!''

மூளைக்காரன் கேள்வியெழுப்ப,

''அப்போ, என்னை தப்பா பேசின ராகனுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேணாம் அப்படித்தானே?!''

அசிங்கப்பட்டவள் அடங்காது கொதித்தாள்.

''இதுக்கு மேலே கொடுக்க என்ன இருக்கு?! அதான், மொத்த நாடும் அவனே கிழிச்சு தொங்க விடறே மாதிரி பண்ணிட்டிங்களே!''

நக்கலாய் சொல்லி சிரித்தான் ஆரோன்.

''போலீஸ் கேஸ் போட்டு அவனே உள்ள தள்ள எனக்கு ரொம்ப நேரம் ஆகியிருக்காது! நீங்க முன்னாடி சொன்ன எல்லாத்தையும் யோசிச்சனாலதான் வெறும் சோஷியல் மீடியாவோட நிறுத்திக்கிட்டேன்!''

''இதுக்கு நீங்க அதையே பண்ணிருக்கலாம்! சத்தமே இல்லாமே அடி வாங்கிட்டு, களி தின்னுட்டு வந்திருப்பான்!''

கிண்டலாய் ஆரோன் சொல்ல, ஏனோ சங்க்யாவிற்கும் சிரிப்பு வந்து சிரித்தும் விட்டாள்.

''இதையெல்லாம் நேரிலே பார்த்து சொல்லி, அப்படியே ராகன் பேசினது சரியில்லங்கறதை, நான் ஏத்துக்கறேங்கறதையும் உங்களுக்கு தெரியப்படுத்தத்தான் இன்னைக்கு முழுக்க உங்களே பார்க்க அலைஞ்சேன்!''

ஆயிழையின் சிரிப்பில், சிறு நிம்மதி கொண்டான் ஆரோன், பிரச்சனை ஒரு நிறைவை நாட உள்ளதாய் எண்ணி.

''மேனஜர் சொன்னாரு, ஆள் பார்க்க கேட்கறாங்கன்னு! ஆனா, நீங்கதான்னு தெரியாது! நான் ஃபேன்ஸ்னு நினைச்சு அப்படியே கண்டுக்காமே விட்டுட்டேன்!''

''நல்லவேளை அங்க பார்த்திருந்தா அவ்ளோதான்! ராகன் மேலே இருந்த கடுப்புலே என்ன கடிச்சு துப்பிருந்தாலும் துப்பிருப்பீங்க போலே!''

ஆரோன் வேடிக்கையாய் பேச, குலுங்கி சிரித்த சுந்தரியோ,

''கண்டிப்பா சத்தம் போட்டிருப்பேன்! ஆனா, தரை குறைவா பேசி உங்களே கூனி குறுக வெச்சிருக்க மாட்டேன்! ராகன் என்ன பண்ண மாதிரி!''

நறுக்கென்று ஊசியேத்தினாள் நேரிழையவள் வார்த்தைகளின் ஊடே.

''சோரி கேட்டாலும், ராகன் பேசின வார்த்தைகளை திரும்ப பெற முடியாதுன்னு எனக்கு தெரியும்! ஏன், அப்படி பேசினாங்கறதை விட, அவன் பேசியிருக்கவே கூடாதுங்கறதுதான் சரி!''

தம்பிக்காக இல்லையென்றாலும், பிஸ்னஸ்காக இறங்கி போனான் ஆரோன்.

''நீங்க சொன்னது சரிதான்! நானும் நியூஸ்லே அப்படி சொல்லிருக்கக்கூடாது!''

ஐயா பேசிய பேச்சுக்கு கன்னி அவளோ அவனை கையாலாகாதவன் என்று முத்திரைக் குத்தியிருந்தாள் பொய்யாய்.

''மக்கள் ஆம்பளை பத்தின விஷயங்களை படிச்ச, கேட்ட, பார்த்த, அடுத்த நிமிஷமே மறந்திடுவாங்க சங்க்யா! ஆனா, லேடிஸ் பத்தின அபிப்பிராயம் எப்போதுமே மாறாது! எத்தனை காலம் மாறினாலும்! எவ்ளோ முன்னேற்றம் அடைஞ்சாலும்!''

நிதர்சனம் உரைத்தான் நாயகன் அவன்.

''ஐயோ, இங்க பாருங்க உள்ளே கூப்பிடாமே வெளியவே நிக்க வெச்சு பேசிக்கிட்டு இருக்கேன்! இருங்க, நான் கீழே வறேன்!''

''இல்லே வேண்டாம் சங்க்கியா! அதான், எல்லாம் பேசியாச்சே! நீங்க படுத்து தூங்குங்க! லக் இருந்தா, நெக்ஸ்ட் டைம் பார்ப்போம்! குட் நைட்!''

இவ்வளவு நேரம் பேசி ஆளானோ, இப்போது திரும்பி, தலைத்தூக்கி ஏறெடுத்தவனாய் முறுவலித்தான் ஜன்னலோரம் நின்றிருந்த சங்க்யாவை பார்த்து.

மெல்லிய புன்னகை ஒன்றை இதழ்களில் இழைந்தோட விட்ட ஏந்திழையோ, அவனுக்கு டாட்டா காட்ட, ஆணவனோ போனை கார்ட் கையில் கொடுத்து அங்கிருந்து காரை நோக்கினான்.

தாழ் திறந்திடுவான் ததுளன்...
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 3
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top