What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
WhatsApp Image 2024-12-17 at 8.08.03 PM.jpeg

தாழ் திறவாய் ததுளனே! : 4

ராகன், விராகன்.

ஒளியவன் குரூப்ஸின் தற்போதைய ஜெனரல் மேனேஜர்.

பேர் சொல்லும், வளமிக்க பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஒளியவன் மற்றும் கனலியின் இரண்டாவது புதல்வன்.

பாட்டி தாத்தாவான, கதிரவன் மற்றும் சுடர் இருவரின் செல்லப்பேரன்.

அப்பா ஓய்வு பெற, தாத்தா ஆரம்பித்த கம்பெனியின் பொறுப்பை முறையே அண்ணனும் தம்பியும் எடுத்துக் கொண்டனர்.

சின்னவன் ராகனை பொறுத்த மட்டில் நிதானம் என்பது அவன் லிஸ்ட்டில், லீஸ்ட்டில் இருக்கும் ஒன்றாகும்.

அதே சமயம் அவசரம் என்பது நம்பர் ஒன்னையும் முந்திடும் டாப்பில் இருக்கும் விவகாரமாகும்.

மூத்தவனோ, ஆரோன் என்றழைக்கப்படும் சௌரன். பொறுமையும், சமயோஜித புத்தியும் கொண்டவன்.

அலசி ஆராயும் பக்குவம் மிக்கவன், பகை கொள்ளாது, உறவு வளர்க்க பார்க்கும் பண்பானவன்.

பெற்றோர்களின் ஆசை மகன்.

அதனால் தான், சின்னவனுக்கு ஜி.எம் போஸ்ட்டும், மூத்தவனுக்கு சி.இ.ஓ பதவியையும் பிரித்துக் கொடுத்து நிர்வாகத்தை காப்பாத்தி கொண்டார், இதை தோற்றுவித்த பெருசு.

கதிரவன் தாத்தா அவர் பொஞ்சாதியோடு தோட்ட வீட்டுக்கு ஷிஃப்ட்டாகி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது.

பேரன்களில் சின்னவன் தினமும் பொழுதை அங்கு கழித்து, உறங்க மட்டும் மாடி வீடு நோக்கி செல்லும் ரகம்.

மூத்தவனோ வார இறுதிகளில் தாத்தா, பாட்டி இருவரையும் காண வரும் ஆள்.

பெரியவர் பெத்த மகனோ, அவ்வவ்போது வந்திடுவார் அப்பா அழைக்க, மனைவி கனலியை கூட்டிக் கொண்டு பெற்றோர்களை பார்த்து போக.

அப்படியான ஒரு நாளில் பேரன்கள் இருவரும் உணவு மேஜையில் பிஸியாய் புசித்திருக்க,

''டேய், சின்னவனே பார்த்தியா இல்லையா நீ?!''

தாத்தா, முழுமையற்ற வாக்கியத்தை கேள்வியாக்கினார்.

''என்ன?!''

ஆரோன் ஆர்வமாய் கேட்க,

''வேறென்னே பொண்ணு போட்டோதான்!''

பாட்டியோ பேரன்களின் தட்டுகளை நிரப்பி பதிலளிக்க,

''இந்தா, புடி! பாரு!''

தாத்தாவோ உணவில் மூழ்கியிருந்த ராகனின் கவனத்தை கலைத்தார்.

''சாப்பாடு மேஜை வரைக்கும் கொண்டு வந்துட்டிங்களா படத்தை?!''

சலித்துக் கொண்டான் நாயகன் அவன்.

''பார்த்திடேன்!''

ஆரோன் சிரித்த வண்ணம் சொல்லி, சோற்றை பிசைய,

''ஹ்ம்ம்! இந்தா!''

என்ற சின்னவனோ அன்னத்தை வாயுக்குள் பதம் பார்த்தவனாய், தாத்தா நீட்டிய படத்தை வாங்கி அப்படியே நீட்டினான் மூத்தவனிடத்தில், அவன் பாராதே.

''எனக்கா?!''

என்று மென்குரலில் திகைத்து அதிர்ந்தவனோ, கையிலிருந்த படத்தை திருப்பி பார்த்தான்.

கண்டதும் களவு போனான் ஆரோன் அவன், சிரித்திருந்த தாரகையின் சேலை கொண்ட படத்தை பார்த்த மாத்திரத்திலேயே.

''என்ன ஓகேவா?!''

தம்பி நீர் நெட்டி, கிளாஸை கீழே வைத்து வேள்விக்கொள்ள,

''ஹான்! ஓகே! புடிச்சிருக்கு! எனக்கு!''

விழுந்தவன் இன்னும் எழாது இருந்தான் படத்திலிருந்த காரிகையிடமிருந்து. தாரமாக போகிறவளின் மென்முறுவல் கொடுத்த மயக்கம் அவனை அம்மணியின் வதனத்திலேயே ஒன்றி போக வைத்திருந்தது.

''உனக்கு புடிச்சு என்னடா பண்றது?! மாப்பிள்ளை இவனுக்கு புடிச்சிருக்கா இல்லையான்னு கேளு?!''

தாத்தா போட்ட போடில், அதிர்ச்சி கொண்டு அவரின் முகம் பார்த்தான் ஆரோன்.

''தாத்தா, எத்தனை தடவை சொல்றது?! எனக்கு இதெல்லாம் புடிக்காது, செட்டாகதுன்னு! அப்பறம் ஏன், தாத்தா திரும்ப, திரும்ப இதையே பண்ணி என்ன கடுப்பாக்கறீங்க?!''

ராகன் ஊடலான கோபம் கொள்ள, ஏமாந்த ஆரோனோ நிலையை சமன் செய்துக் கொண்டவனாய்,

''பொண்ணு நல்லாத்தானே இருக்காங்க! ஏன் வேணாங்கறே?!''

குரலில் வருத்தம் மறைத்தவனாய் ரசமில்லாது கூற,

''உனக்கு வேணும்னா நீ கட்டிக்கோ! என்னே விட்ருங்க! நான் தனியாவே நிம்மதியாதான் இருக்கேன்! எவளையாவது கட்டி கூட்டிக்கிட்டு வந்து இருக்கற சந்தோசத்தையெல்லாம் இழக்க நான் தயாரா இல்லப்பா!''

வாக்குமூலம் கொடுத்த ராகனோ, காலி தட்டோடு அடுக்களை நோக்கினான்.

''என்னடா இவன் இப்படி பண்றான்?! இதோட, பதினெட்டாவது பொண்ணாச்சு! ஒன்னே கூட பார்க்கவோ, பேசாவோ ஒத்துக்குவே மாட்டேங்கறான்!''

கவலையில் தாத்தாவின் தொனியோ சுணங்கி போனது.

''நான் பேசறேன் தாத்தா! கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பான்!''

''சீக்கிரம் பேசி அவனை ஒரு வழிக்குக் கொண்டு வர பாரு ஆரோன்! நீ எப்படியும் லவ் மேரேஜ்தான்பண்ணுவே! அது எனக்கு தெரியும்!''

காரணமாய் சொன்ன தாத்தா, தொடர்ந்தார் பேச்சை.

''ஆனா, அவன்! காதல் வேணா, கத்திரிக்கா வேணான்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சு, இப்போ ஒரேடியா, பொண்ணே வேணான்னு வந்து நிக்கறான்! இப்படியே போனா, சாமியாராத்தான் ஆகுவான் போலே!''

தாத்தா சாந்தமாய் ஆரம்பித்து, சத்தத்தில் முடித்தார்.

ஆனால், ஆரோனின் எண்ணமோ கைநழுவிய நங்கையையே சுற்றி வந்தது.

அடுக்களை கேபினெட்டின் மீதமர்ந்து, பாட்டி துண்டுப் போட்டுக் கொடுத்த ஆப்பிள்களை வாயுக்குள் தூக்கி போட்டு மென்றான் ராகன்.

''சரின்னுதான் சொல்லி, அந்த பொண்ணே போய் பார்த்திட்டு வாயேன்!''

''ஐயோ, பாட்டி! தாத்தாக்கிட்டருந்து தப்பிச்சு இங்க வந்தா! இப்போ, நீங்க ஸ்டார்ட் பண்றீங்களா?!''

''என்னடா குறைய கண்டே இப்போ அந்த பொண்ணுக்கிட்டே?! மூக்கு முழி லட்சணமா, நல்லாத்தானே இருக்கா?!''

''ஆமாவா?! நான் பார்க்கலையே!''

சிரித்தவன் தொடையிலேயே ஓரடி போட்ட பாட்டி,

''ஒழுங்கா அடுத்த வாரம் போய் அந்த பொண்ணே பார்க்கறே! ரெண்டு பேருக்கும் தாத்தா கேண்டல் லைட் டின்னர் ஏற்பாடு பண்ணிருக்காரு!''

''வாய்ப்பே இல்லே பாட்டி! வேணும்னா நீங்க ரெண்டு பேரும் போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க!''

கிண்டலடித்தான் ராகன் சிரித்தவனாய்.

''நாங்க போறதெல்லாம் இருக்கட்டும்! நீ போறே! அந்த பொண்ணே போய் நேரா பார்த்திட்டு வந்த பிறகு சொல்லு, புடிக்கலன்னு!''

''ஏன் பாட்டி போர்ஸ் பண்றீங்க?! நான்தான் வேணா, இஷ்டமில்லன்னு சொல்றேன்லே?!''

கடுகடுத்தவனின் கையிலிருந்த காலி பௌளை வாங்கி வாஷ் பேஷனில் போட்ட பாட்டியோ,

''உங்கப்பாவும் அந்த பையனும் ஸ்கூல் காலத்து பிரெண்ட்ஸ்டா! ரொம்ப நல்ல குடும்பம்! இந்த வசதி வாய்ப்பெல்லாம் வர்றதுக்கு முன்னாடி, கிராமத்துலே எல்லாம் ஒன்னாதான் இருந்தோம்! அப்பறம், காலம் மாற ஆளாளுக்கு பட்டணத்துக்கு மாறி வந்தாச்சு! அவுங்க குடும்பம் வெளிநாட்டுக்கு போயிட்டாங்க! இங்க வந்த நாமே, உங்க தாத்தா பிஸ்னஸ் ஆரம்பிச்ச பிறகு, வேறே எங்கையும் போகாமே, இங்கையே செட்டில் ஆகிட்டோம்!''

''இப்போ, எதுக்கு பாட்டி இந்த கதையெல்லாம்?!''

''புடிக்குதோ, புடிக்கலையோ! ஒரு மரியாதைக்காகவாவது அந்த பொண்ணே போய் பார்த்திட்டு வந்திடு! உங்கப்பன் வேறே, அவுங்க அப்பா, அதான் உன் தாத்தா, அவர் கையே புடிச்சு எப்படியாவது ராகனை சம்மதிக்க வைங்கன்னு ஒப்பாரி வைக்காத குறையா கெஞ்சிட்டு போயிருக்கான்! நீ பார்த்திட்டு வந்து ஏதாவது சொல்லிட்டா கூட, இது சரி வராதுன்னு அப்படியே விட்டுடலாம்! நீ போகவே மாட்டேன்னு சொல்றது, என் பையனே தலைகுனிய வைக்கறே மாதிரி ஆகிடும்லே?!''

பாட்டி அவர் மகனுக்காய் கவலைக் கொள்ள,

''அது சரி! உங்கப்பையன் மானம் மரியாதை போக கூடாதுன்னு நான் இப்போ தலையாட்டி பொம்மெ வேஷம் போடணுமா?!''

முகம் நக்கல் தோரணை கொண்டாலும், ராகனின் குரல் என்னவோ அதிருப்தியையே வெளிப்படுத்தியது.

''ஆமாடா! எனக்கு என் பையன்தான் முக்கியம்! நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, எனக்கு தெரியாது! அந்த பொண்ணே போய் பார்க்கறே, என் பையன் பேரே காப்பாத்தறே!''

பாட்டி கட்டளையிட்டு குத்தினார் ராகனின் குமட்டிலேயே செல்லமாய்.

தாழ் திறந்திடுவான் ததுளன்...
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 4
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top