- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் 8
அமேசான் காடு
விடிந்தே போயிருந்தது மிரு கண் விழிக்க.
வாந்தியின் பக்கத்திலேயே படுத்துக் கிடக்க, விழிகள் திறந்தவளுக்கு பிரகாசமான காட்சிகளே. வாந்தியை சுற்றி ஈக்கள் பூச்சுகள் வட்டமடிக்க குமட்டிக் கொண்டு வந்தது காலி வயிறுக்காரிக்கு.
ஏதோ ஒரு ஞாபகத்தில் மேடம் ஓடிடலாம் என்று எழ பார்த்திட அப்போதுதான் மூளை சொன்னது கால் கடிப்பட்டு கிடக்கிறது என்று.
முக்கி முனகி எழுந்தவள் மரங்களை பிடித்து தோதாய் நடக்க ஆரம்பித்தாள். அங்கே சுற்றி இங்கே சுற்றி சுந்தரியவளை வயமா அவன் இழுத்து வந்திருந்த இடம் என்னவோ அவர்கள் ஷூட் செய்த பக்கமே.
தூரத்தில் சிதைந்து கிடக்கின்ற முகாம்கள் பேடையின் விழிகளில் தெரிந்தது. ஒருவழியாய் எப்படியோ காட்டு மரங்களின் உதவியோடு நயனங்கள் கண்ட இடம் வந்து சேர்ந்தாள் பெண்ணவள்.
சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியானது. இது அவர்களின் முகாம்கள்தான் என்று. ஆனால், எல்லாம் தும்சமாகி கிடந்தது. மிரு காலில் ஏதோ தட்டுப்பட கீழே பார்க்க அலறி விட்டாள் பாவையவள்.
சீனத்தி அடையாளம் தெரியா அளவில் முகம் சிதைப்பட்டு கிடந்தாள். வாய் மூடி பயந்த மங்கையோ தரையில் விழுந்து பின்னோக்கினாள். கதறினாள் கண்கள் பார்த்த காட்சியில்.
முகத்தை மூடி கொண்டவள் அழுது அலுத்து விழிகள் திறக்க இனி இப்படியே ஒப்பாரி வைத்தால் ஆகாது என்ற முடிவுக்கு வந்தாள்.
சதை பிண்டங்களுக்கு நடுவினில் அலசினாள் மலரவள் என்னவெல்லாம் கிடைக்கிறதென்று.
உண்ண உணவேதும் மிச்சம் உள்ளதா என்று தேடிட, கையில் சிக்கியது சுதாவின் அலைப்பேசி. சிக்னல் இருக்கிறதா என்று வஞ்சியவள் பார்க்க இருந்தது டவர்.
புத்திசாலித்தனமாக ரேஞ்சர்ஸை அழைத்திட அந்திகை அவள் முனைந்திட, ஆசை நிராசையானது. சிக்னல் விளையாட்டு காட்டியது. கொஞ்ச நேரம் வருவதும் பின் போவதுமாய். கடுப்பாகினாள் நிராயுதபாணியனவள்.
வேறு வழியில்லை மானினி அவளுக்கு. எடுத்து சொருகிக் கொண்டாள் போனை பாக்கெட்டுக்குள். தின்ன தேடிய கிடைத்த டின் உணவுகளை அதக்கினாள் பசியில் வாயுக்குள் மடந்தையவள்.
கை கழுவெல்லாம் அவளுக்கு நேரமில்லை. இப்போதுதான் ஞாபகமே வந்தது அவளுக்கு நேற்று புலியவன் அவளின் முகத்தில் நாவால் எச்சில் முத்தம் வைத்தது.
நினைத்து பார்த்து குமட்டிக் கொண்டாள் மாயோள் அவள். அது எப்போதோ காய்ந்து விட்டது. இருந்தும் கண்டெடுத்து குடித்து பின் கழுவிக் கொண்டாள் முகத்தை மினரல் வாட்டர் போத்தல் தண்ணீரால் சுத்தக்கார அம்மணி.
சால்வை ஒன்றை எடுத்து இறுக்கமாய் கட்டிக் கொண்டாள் வயமா அவன் அச்சு போட்ட இடத்தினில் இளம்பிடியாள் அவள். அருகிலிருந்த செடிகளிலிருந்து உடைத்தெடுத்தாள் மிதமான சைஸ் மற்றும் பிடிப்பில் இருக்கும் குச்சி ஒன்றை.
நடந்தாள் கேரவன் நோக்கி பெதும்பை அவள். பத்து பதினைந்து நிமிடங்கள் கடக்க கேரவன் உருண்டு கிடப்பதை பார்த்தவளுக்கு ஐயோ என்றிருந்தது. இந்த காலோடு நசுங்கிய கேரவனுக்குள் எப்படி ஏறுவது என்று சிந்தித்தவள் யோசித்து கொண்டே வலியோடு வலியாக அதற்குள் ஏறிட பார்த்தாள்.
ஆனால், பாவம் மிருடானி. அவளால் காலை மடக்க இயலவில்லை. ஆதலால், முயற்சியை கைவிட்டாள். அங்கேயே இளைப்பாறி கிடந்தவள் முடிவுக்கு வந்தாள். கையில் கிடைத்த குச்சியை கொண்டு முதலுதவி மருந்து பெட்டியை தேடினாள்.
அதை குத்தி இதை குத்தி ஒருவழியாய் பெட்டியை கண்டுபுடித்தவள் அதை வெளியில் இழுத்து அருகில் வைத்துக் கொண்டு டாக்டராகிட தயாராகினாள். அவளின் கால் கடிக்கு அவளே தையல் போட்டுக் கொண்டாள்.
எத்தனை ஷோர்ட் ஃபிலிம்ஸ் எத்தனை கதைகள். எவ்வளவு சீன்ஸ். அதெல்லாம் என்ன சும்மாவா. அதான் இன்றைக்கு முற்றிழை அவளே களத்தில் இறங்கி விட்டாள்.
சால்வையை கழட்டி வீசி தையல் போட்டு கொண்டவள் காயம்பட்ட இடங்களில் மருந்தினை தடவிக் கொண்டாள். முதலுதவி பெட்டி ரொம்ப முக்கியம் என்பது அவளுக்கு தெரியும். ஆதலால், அதை கூடவே வைத்துக் கொள்ள முடிவெடுத்தாள் பகினி அவள்.
ஹேண்ட் பேக்கை போல சால்வையை அதில் கட்டி தோளில் மாட்டிக் கொண்டாள். ஒரே இடத்தில் குத்த வைத்து உட்கார்ந்திட இயலாது. எப்படியும் அங்கே இங்கே பயணப்பட்டால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று நன்கறிந்திருந்தாள் பனிமொழி அவள்.
உணவெல்லாம் மிதிப்பட்டு கந்தலாகி விட்டது. ஏதோ முதலில் இருந்தது கால் வயிறுக்கு கூட பத்தவில்லை அலரவளுக்கு. பசி வயிற்றை கிள்ளியது.
சரி கால் போன போக்கில் போகலாம் என்று நடைபோட நடைபாதையில் கண்டாள் பேக்பேக் ஒன்றினை நேரிழை அவள். கண்கள் அகல விரிய அவளின் முதலுதவி பெட்டியை தூக்கி எறிந்தாள் துடியிடை அவள். மொத்த மருந்துகளையும் பேக்பேக்கின் உள்ளே பதுக்கினாள்.
கையில் குச்சி ஒன்று இருக்க பிடிமானத்திற்காக பின் முதுகில் பேக்பேக் மாட்டியிருக்க டோராவை போல டூர் போகும் வளர்ந்த குழந்தையாய் ஆகியிருந்தாள் ஆரணங்கு அவள்.
எப்படி தப்பிப்பது என்ற எண்ணம் போய் எப்படி உயிரை தக்க வைப்பது என்ற நிலைக்கு வந்திருந்தாள் ஒளியிழை அவள். அதற்கு முதல் வேலையாக அவள் செய்ய வேண்டியது அவளை இருமுறை தின்ன பார்த்த வயமாவிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்வதே ஆகும்.
மிரு நன்றாய் சிந்தித்து ஒரு திட்டம் தீட்டினாள். நிலத்தில் இருந்த கரு மண்ணை எடுத்து அவளின் உடலில் வரிக் கோடுகளாய் வரைந்துக் கொண்டாள். அரிப்புதான் என்ன செய்வது. வேறு வழியில்லையே.
ஒருவழியாய் வெற்றிகரமாய் தேகத்தை மண் கொண்டு அலங்காரம் செய்து கொண்டவள் கைகளை தட்டி எழுந்தாள். இனி வேங்கை அவன் வந்தால் எப்படி தன்னை தற்காத்து கொள்வது என்று குச்சியை கொண்டு கராத்தே சீன்ஸ் ஓட்டி பார்த்தாள் பேடை அவள்.
குச்சியோடு தையல் கால் வலிகொண்டு வாசுரை திரும்பிட எதிரே வயமா அவன் லுக்கு விட்டு நின்றிருந்தான் மிருவை. தூக்கி வாரி போட்டது அவளுக்கு.
இருந்தும் சமாளித்தாள் நறுதுதல் அவள். குச்சியை அவள் சுழட்டிட வேங்கையவனோ மார்க்கமாக அவளை சுற்றி வந்தான். மிருடானியும் விடுவதாய் தெரியவில்லை. அவளும் குச்சியோடு சுற்றிட அசிங்கமாய் போய் விட்டது குச்சி அது கீழே விழ.
இதில் இன்னும் அசிங்கமாய் போனது என்னவோ வயமன் அவன் மிருவை கேவலமாக பார்த்து கோரை பற்கள் காட்டி விட்டம் பார்த்து உடல் குலுங்க சிரிக்க.
பல்லை கடித்தாள் காரிகை அவள் அவமானத்தில் சிவந்தவளாய். புருவம் சுருக்கி புறங்கையால் உச்சி வெயிலின் நெற்றி வேர்வைகளை துடைத்தவள்,
''ஒரு புலி உனக்கு இவ்ளோ அதுப்பு இருக்க கூடாது! இரு அடக்கறேன் உன் கொட்டத்தை!''
வாங்கிய விபூதி பத்தாது போக வீர வசனம் பேசியவள் கீழே விழுந்த குச்சியை கையில் எடுத்து நீட்டினாள் புலியவனை நோக்கி குத்துவதை போல.
வேங்கை அவனோ கொஞ்சமும் அசராமல் முன்னோக்கிட பின்வாங்கியது என்னவோ மாதங்கி அவள்தான். பின்னே போனாலும் சும்மா இருக்க முடியாதவளோ கொஞ்சமாய் உடலை வளைத்து உறும்பினாள்.
வேங்கை அவனோ மறுபடியும் அவளை பார்த்து கிண்டல் கொண்டவனாய் அசட்டை செய்யாது முகத்தையே வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். பப்பி ஷேம் கொண்டவளோ அவனையே வெறித்தாள் உதடுகள் பிதுங்க.
''இது போங்காட்டம்! உனக்கு மட்டும்தான் உறும்ப வருமா என்ன?! ஏன் நான் உறும்பறதை பார்த்தா உறும்பல் மாதிரி தெரியலையா உனக்கு?! ரொம்பத்தான் பண்றே நீ?!''
கடுப்போடு அவள் மீண்டும் உறும்பிட சடீரென்று திரும்பியவனோ அவன் பங்கிற்கு உறும்பிட ஸ்தம்பித்து போனாள் சேயிழை அவள்.
கண்களை மூடிக் கொண்டு நின்றவள் வயமனின் சத்தம் அடங்க இமைகளை ஜாடையாய் திறந்தாள். அவனோ அவள் முன்னேதான் நடையாய் நடந்தான்.
அச்சத்தில் கோமகளின் கரங்கள் குச்சியை இறுக்கிட அவளை ஏறெடுத்து பார்த்தான் புலியவன்.
கொட்டாவி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஒட்டடை குச்சி கணக்காய் இருந்தவளை ஏதும் செய்திடாமல் வேங்கையவன்.
அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு கொண்டவளோ உசுரை தக்க வைத்துக் கொள்ள பயணத்திற்கு தயாராகினாள்.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியன் ஆரணியம்: 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.