- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் 10
அமேசான் காடு
மிரு நினைக்கவே இல்லை அவள் இப்பேர்ப்பட்ட வனத்தில் அதுவும் மிருகங்கள் சூழ இன்னமும் உயிரோடு இருப்பாள் என்று.
ஒரே ஒரு ஆறுதல் பேடை அவளுக்கு, முன்னாளில் கடிக்க வந்த வர்மா இப்போது அவளுக்கு பாதகமாய் இல்லாமல் சாதகமாய் இருப்பதுதான்.
பழங்கள், கனிகள் என்று எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தவள் வயிறார உண்டு அக மகிழ்ந்தாள். ஏப்பம் வந்து நித்திரை கண்ணை எட்டி பார்த்திட அங்கேயே குட்டி தூக்கம் ஒன்றையும் போட்டு விட்டாள் மங்கையவள்.
நேரங்கடக்க குறட்டை சத்தம்தான் மேலோங்கி இருந்தது அம்மணியிடமிருந்து. வர்மாவோ நாயகியின் மூங்கில் கயிற்று கட்டிலின் பக்கமாகவே தரையில் தலைசாய்த்து படுத்துக் கொண்டான்.
நன்றாய் தூங்கி எழுந்த தாரகையோ நெட்டி முறித்து கட்டிலிலிருந்து காலை தரைக்கு இறக்கினாள். கொட்டாவி விட்டு வாயை புறங்கையால் மூடி பிரித்தவள் பாதம் வர்மாவின் தேகத்தில் உரசிட பயந்தவள் கால்களை மேலே தூக்கிக் கொண்டாள்.
இளம்பிடியாளின் அடிப்பாதம் பட்டு தெளிந்தான் வர்மா அவன். அவனுக்கான நெட்டி என்னவோ வாய் பிளப்பதே. முன்னங்கால்களை முன்னோக்கி தரையில் அழுத்தியவன் பார்வைகளை சுழல விட்டான்.
காரியம் முடித்த முற்றிழையோ காப்பாற்றிய வர்மாவை கழட்டி விட முடிவெடுத்தாள். காட்டுவாசிகளோடு அங்கேயே தங்கிடலாம் என்று நினைத்தாள். அதுவே அவளுக்கு பாதுகாப்பு என்பதையும் உணர்ந்தாள்.
அதற்கு அவள் முதலில் செய்ய வேண்டியது வர்மாவை அங்கிருந்து துரத்தி விடுவது ஆகும். காலி கையை ஆட்டி விரட்டினாள் வர்மாவை அங்கிருந்து அந்திகை அவள்.
''வர்மா, ஷு! ஷு! போ! போ! இங்கிருந்து போ! ஷு! ஷு!''
அவளின் துரத்தலுக்கு கொஞ்சமும் அசராத வர்மாவோ நடையை காட்டுவாசிகளை நோக்கி கட்டினான். அவர்களோ பயந்து பின்வாங்கினார்கள்.
''ஹேய், ஹேய்! வர்மா! நோ! அங்க இல்லே! இங்க! இந்தப்பக்கம்! இப்படி!''
கத்திக் கொண்டே குச்சியோடு அவன் முன் நொண்டி சென்ற நேரிழையோ பாதை தெரியாதவனுக்கு வழி காட்டினாள். அவள்தான் அப்படி நினைத்துக் கொண்டாள்.
காடே வயமா அவன் சொந்தம். இதில் அவனுக்கு எப்படி எங்கு ட்ரவல் செய்வது என்று இவள் சொல்லித் தருகிறாளாம்.
அவள் விரட்டிடவும். வர்மா அவன் போகாது அங்கேயே சுற்றி வரவும் ஐயோ என்றானது மிருடானியின் நிலைமை.
காட்டுவாசிகளோ கையெடுத்து கும்பிட்டனர் பெண்ணவளை அங்கிருந்து போக சொல்லி. வேறு வழியில்லாதவளோ வர்மாவிடம் கெஞ்சினாள்.
கையெடுத்து கும்பிட்டு பார்த்தாள்.
''புலி நீ நல்ல புலிதானே?! இங்கிருந்து போயிடேன்! பிளீஸ்! நான் இங்க, இவுங்க கூடவே தங்கிக்கறேனே! பிளீஸ்! புரிஞ்சிக்கோ! எனக்கு இதைவிட்டா வேறே வழி இல்லே! பாரு, அடி வேறே பட்டிருக்கு எனக்கு! என்னாலே இதுக்கு மேலையும் செத்து பிழைக்க முடியாது!''
வர்மா காது கேட்காதவன் போல திரும்பிக் கொண்டான். துடியிடையோ அவன் முகம் போன பக்கம் வலி கொண்ட காலோடு மண்டியிட்டு அமர்ந்து டீல் பேசினாள்.
''பிளீஸ்டா வர்மா! புரிஞ்சிக்கோ?! நீ இங்க இருந்தா நான் இங்க இருக்க முடியாது! என்னையும் போக சொல்றாங்க பாரு! நான் எங்க போவேன்?! இவ்வளவு பெரிய காட்டுலே?!''
அவள் சொல்லிக் கொண்டே இருக்க, வர்மா அவன் இனி முடியாது தன் சீனை காட்டிட வேண்டியதுதான் என்று எழுந்தான். அங்கிருப்போர் அலற உறும்பினான்.
அவனின் அதிர்வு கொண்ட நாவின் துடிப்பை கண் கொட்டிடாமல் பார்த்த மானினியோ அங்கிருந்த பிஞ்சுகளின் முகத்தில் வெளிறிய அச்சத்தினை கண்டாள்.
தலையை தொங்க போட்டாள் பெதும்பையவள். பழங்கள் சிலதை மட்டும் எடுத்து அவளின் பேக்பேக்கில் போட்டு கொண்டாள். கைகள் கூப்பி நன்றி சொல்லி விடைப்பெற்றாள் அவர்களிடமிருந்து ஒண்டொடியவள்.
மாயோள் அவள் முன்னே போக வர்மா பின்னாலேயே வந்தான். கடுப்போடு திரும்பியவள் குச்சியை எடுத்து நீட்டினாள் அவன் முன்.
''ஒழுங்கு மரியாதையா போயிடு! என் பின்னாலே வந்தே நடக்கறதே வேற! கொல காண்டுல இருக்கேன் நான் உன் மேலே!''
என்றவள் முகத்தை ஒரு வெட்டு வெட்டி திரும்பிக் கொண்டாள். வயமா அவனோ சுந்தரியின் மிரட்டலை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவளை பின் தொடர்ந்தே சென்றான்.
ஆரணியம் இருண்டது.
பல விதமான சத்தங்கள் காதில் விழுந்தது. கன்னியை பயம் கவ்விக் கொண்டது.
வர்மா அவன் ஆரணங்கவளை தாண்டி முன் சென்றான். கண்களை உருட்டியவளோ சமாதான கொடியை பறக்க விட முடிவெடுத்தாள். அதுவும் மொத்த பழியையும் தூக்கி அவன் மீது போட்டு.
''ஹலோ! ஹீரோ சார்! என்ன நீங்க பாட்டுக்கு கழட்டி விட்டுட்டு போறிங்க?! நீங்கதானே உறும்பி, உறும்பி என்ன இங்க கொண்டு வந்து நிக்க வெச்சிருக்கீங்க! அப்போ, நீங்க போற அதே இடத்துக்குத்தான் நானும் வருவேன்! ஏன்னா, எனக்கு போக வேற இடம் இல்லை!''
அவனை பின் தொடர்ந்து ஓடினாள் நொண்டி காலோடு காரிகை அவள்.
''புலிப்பையா! டேய்! ஓகே! சமாதானம் ஆயிடலாம்! விட்டுட்டு போகாதே! பயமா இருக்கு! அடேய் வர்மா! கருமம் புடுச்சவனே! நில்லுடா!''
வர்மாவின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியவில்லை பைந்தொடியாள்.
''டேய் சுண்டக்கா பயலே! நில்லுடா! என்னடா நீ இந்த ஓட்டம் ஓடுறே?! பண்ணி பயலே!''
ஒரு புலிக்கான மரியாதை எதையும் வர்மாவிற்கு பனிமொழியவள் கொடுக்கவில்லை. அவளைக் கடந்து ஓடியவனோ அவ்வப்போது செக் போஸ்ட் போட்டு திரும்பி பார்த்து மிருவை ஒரு கண் வைத்துக் கொண்டான்.
ஒருவழியாய் வர்மா அவன் வந்து சேர்ந்திருந்தான் அவனின் குகைக்கு. வெளியிலேயே நின்று காத்திருந்தான் வேங்கையவன் மிரு வருவதற்கு.
வஞ்சியும் கடிப்பட்ட காலோடு வந்து சேர இருவரும் ஓன்றாய் குகைக்குள் சென்றனர்.
''ஓஹ், இதுதான் தங்களின் அரண்மனையோ?! எங்கே உள்ளது அரசே உங்களின் அந்தப்புரம்?! இளவரசி மிருடானி இளைப்பாற வேண்டும்!''
இடையில் கரங்கள் இறுக்கி கேட்டாள் நக்கலாய் மிரு. வயமா அவனோ பழக்கப்பட்ட அவனின் இடமென்பதால் அங்கிருந்த பாறை ஒன்றின் மீதேறி நின்று உறும்பினான்.
''இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல! ஆச்சு ஊச்சுன்னா நெஞ்ச நிமித்திக்கிட்டு சவுண்டு விடறது! பெரிய இவனாட்டம்!''
கடுப்போடு சொல்லியவள் திருப்பிக் கொண்டாள் முகத்தை வேறுபக்கம்.
வெளியவும் இருட்டு உள்ளேயும் இருட்டு.
என்னதான் செய்ய என்று கால்களை வசதியாய் நீட்டி அமர்ந்துக் கொண்டாள் வதனியவள் கிடைத்த இடத்தில். குகையின் அதிதீ உள்ளேயெல்லாம் செல்லவில்லை மாதங்கியவள். ஓரளவுக்கு வெளிச்சம் எட்டி பார்த்திடும் தூரமே.
வழியெங்கும் பயன்படுத்திக் கொண்டு வந்த டார்ச்சை உள்ளங்கையில் வைத்து அடித்துக் கொண்டிருந்தாள் மடந்தை அவள் புதிய பேட்டரி மாற்றிய பிறகு.
வர்மா அவனோ உறும்பினான். பக்கென்றது மிருவிற்கு. நிஜத்தில் அவனுக்கு கண் கூசியது ஏந்திழையின் கையிலிருந்த டார்ச் வெளிச்சத்தால்.
''ஏய், சும்மா இருக்க மாட்டியா நீ?! எப்போ பார்த்தாலும் இப்படி கத்தி கத்தி பிபி ஏத்தறது!''
திட்டிவிட்டாள் தெரிவை அவள் டார்ச் கைத்தவறிட வர்மாவை. அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இரவினில் இது மட்டுமே. இதுவும் பழுதாகி விட்டால் என்செய்வது. அது ஒன்று மட்டுமே அவளுக்கு கவலை.
கொசு வேறு கடித்து வைத்தது மனசாட்சியின்றி பகினி அவளை. அவைகளை அடித்து துரத்தி சாகசம் செய்தவள் கண்கள் சொருக ஆரம்பித்தன.
சரி தூங்க போகலாம் என்றெண்ணிய இளவரசி பஞ்சணை தேட வாய்த்தது என்னவோ மண் தரையே.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/தீவியின்-ஆரணியம்.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.