- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் 16
சீனர்களின் கலாசாரப்படி வர்மாவின் நெற்றி எழுத்தானது ''ராஜா'' என்று பொருள் படும். எனவே, சீன மக்கள் புலியை இயற்கையாகவே பிறப்பால் அரசனாக பார்க்கின்றனர்.
காட்டுவாசிகளோ பூரித்து நெகிழ்ந்தனர் வர்மாவின் பாசத்தையும் அவனின் செயலையும் மெச்சி. அவர்களை கண்டுக்கொள்ளாத வர்மாவோ உறும்பி வைத்தியனை வேலை பார்த்திட துரிதப்படுத்தினான்.
வைத்தியனும் மிருவின் தொண்டைக்குழியை மேலோட்டமாய் தடவி பார்த்தான்.
பின் கொஞ்சம் அழுத்தமாய் தடவி பார்த்தான். தொண்டைக்குழிக்குள் ஏதோனும் சிக்கி கிடக்கிறதா என்று. அதுவும் வர்மாவிடம் பர்மிஷன் கேட்டு காட்டுவாசி பாஷையில்.
தொண்டைக்குழியில் எதுவுமில்லை என்றறிருந்த காட்டுவாசி வர்மாவின் கையை மெதுவாய் கீழிறக்க, புரிந்துக் கொண்டான் வர்மாவே இப்போது நாயகியவளை கீழே படுக்க வைத்திட வேண்டும் என்று.
காட்டுவாசி நண்பனோ மங்கையவள் நாடியை பிடித்து பார்த்து தலையை ஆட்டினான். அவளின் நாடி துடிப்பு இறங்கிக் கொண்டே போனது. அதுவும் காய்ச்சல் வேறு.
சூட்டை வந்த உடனே உணர்ந்துக் கொண்டான் வைத்தியன். குகையே அனல் அடித்தது. வஞ்சினியின் நோய்வாய்பட்ட தேகத்தின் தாக்கம் அப்படி.
காட்டுவாசி அவனின் நண்பனிடத்தில் பணித்தான் அவன் பாஷையில் சில கோரிக்கைகளை. தலையை ஆட்டி கேட்டு கொண்டவனோ வனத்துக்குள் ஓடினான், நண்பன் வேண்டிய மூலிகை இலைகளை கொண்டு வந்திட.
ஏற்கனவே, கொண்டு வந்திருந்த சில இலைதழைகளை வைத்தியன் இடித்து பொடியாக்கி பாவையவளுக்கு மருந்தாக்கி இருந்தான். அவளின் நெற்றியில் அதைக் கொண்டுதான் பத்து போட்டிருந்தான் காய்ச்சல் குறைய.
உடல் சூடு தனிய காரிகையின் இருப்பக்க தோள்களிலும் பச்சிலையை தடவினான் வைத்தியன். அதேப்போல், நங்கையவள் அடிப்பாதங்களிலும் தடவிட போக, அப்போதுதான் கவனித்தான் அவளின் காலில் குச்சி ஒன்று குத்தி கிழித்து உள்காயம் கொண்டிருப்பதை.
வேகமாய் கைக்கு எட்டிய ஏந்திழையின் நெஞ்சில் கிடந்த சால்வையை எக்கி எடுத்தான் வைத்தியன். வர்மாவோ உறும்பி கவ்வினான் அதை முழுதாய் எடுக்க விடாது. காட்டுவாசிக்கோ புரிந்தது வர்மா அவனை தடுக்கிறான் என்று.
காட்டுவாசியோ அவன் பாஷையில் வர்மாவிற்கு புரிய வைத்தான் பேசி. அவனின் கை அசைவுகள் தொடங்கி வைத்தியனின் விழிகளில் நல்லெண்ணம் மட்டுமே வெளிப்பட வாயில் கவ்வியிருந்த சால்வையை மெதுவாய் வாய் திறந்து கொஞ்சங் கொஞ்சமாய் விட்டு கொடுத்தான் வர்மா.
வர்மாவின் பச்சை விழிகள் ரெண்டோ வைத்தியனின் உதவும் ஆர்வத்தை மட்டும் கண்டிடவில்லை, மாறாய் வைத்தியனின் நேத்திரங்களின் வழி கண்டுக்கொண்டான் மீதமிருந்த மற்றொரு காட்டுவாசியின் பார்வையோ வர்மாவின் டாவின் மீது தவறாக மேய்வதை.
வர்மாவின் சினங்கொண்ட கண்கள் ரெண்டும் சிவக்க, புருவங்களை சுருக்கினான் வர்மா. அடித்தொண்டையிலிருந்து உறும்பினான்.
சால்வை மொத்தமாய் வர்மாவின் எச்சில் வாயிலிருந்து வைத்தியனின் கைச்சேர, அதே வேகத்தோடு திரும்பியவன் சுந்தரி அவளை தவறான நோக்கத்தோடு பார்த்த காட்டுவாசியின் காது ஜவ்வு கிழிந்து செவிடாகும் வரையில் உறும்பி அவனை அதிரட வைத்தான்.
ஆடிப்போன கயவனோ பயந்து பின்னோக்கி சரிந்தான் நிலத்தில். அவனை தூரத்திலிருந்தே எச்சரித்தான் வர்மா. வாலை தாழ்த்தி ஆட்டி. வைத்தியனோ புரிந்துக் கொண்டான். நண்பனை கடிந்து வைத்தான்.
ஓரமாய் போய் உட்கார்ந்திட வார்னிங் செய்தான். வைத்தியனின் அதட்டலால் வர்மா கொஞ்சம் நிம்மதி கொண்டான். ஏறினான் அங்கிருந்த பாறை மீது.
காட்டுவாசியின் நண்பனை எரித்திடும் பார்வைகளால் நோக்கி உறும்பினான் புலிப்பையா. பைனல் வார்னிங் போலத்தான் இருந்தது அது.
வர்மாவின் பார்வையும் கோபமுமே சொல்லியது இனி மிரு பக்கம் போனால் மவனே நீ காலி என்று.
வைத்தியனோ வாசுரையின் அடிப்பாதத்தை இறுக்கி கட்டினான் சால்வையால். அவளின் காலை தூக்கி வாயில் வைத்து கடித்து துப்பினான் குழுமியிருந்த சலத்தை. காட்டுவாசிகளுக்கு இதுவெல்லாம் சகஜமே.
வைத்தியன் அவன் வாயிலிருந்த சலத்தோடு கூடிய எச்சிலை ஓரமாய் திரும்பி காரி துப்பி, இடித்த பொடிகளை எடுத்து அதக்கிக் கொண்டான் அவனின் வாயுக்குள். அவனுக்கு ஏதும் ஆகிடாமல் இருக்கவே இந்த சேப்டி போர்பஸ்.
பொடியை மீண்டும் விரல்களில் அள்ளி அந்திகையின் அடிப்பட்ட ஆழமான இடத்தில் அழுத்தி இறுக்கி ஒட்டினான் வைத்தியன்.
சலம் வெளியாகிய சிறுதுளை அது நன்றாய் மூடிக்கொள்ளும் வரைக்கும் நீரில் கரைத்த பொடியை முழுமையாய் அதற்குள் வைத்து மூடினான் வைத்தியன்.
வர்மா பக்கமிருந்து சோகமாய் உறும்பினான் அக்காட்சியை கண்டு. வைத்தியனோ வர்மாவின் உடலை வாஞ்சையாக தடவி கொடுத்து அவன்
பாஷையில் ஆறுதல் சொல்லி.
கால் வைத்தியம் நடந்தேறிடவும் மூலிகை கொண்டு வர போனவனும் வந்து சேர சரியாக இருந்தது. வந்தவன் அதே வேகத்தோடு அவைகளை ஒன்றாய் போட்டு கேப்பக்கழி கிண்டிட ஆரம்பித்தான்.
மிருவின் முகத்தருகே சென்ற வைத்தியன் அவளின் பிறையில் போட்டிருந்த பச்சிலையை நீக்கிட காய்ச்சல் குறைந்திருந்தது வல்வியவளுக்கு. எல்லாம் காலில் அடிப்பட்டதால் வந்த வினையே.
இதில் போதாக் குறைக்கு ஏற்கனவே வர்மா வேறு அவளின் காலை கவ்வி கடித்திருக்க அக்காயத்திற்கும் மருந்து போட்டான் வைத்தியன்.
வர்மா பலமுறை மிரு மயக்கத்தில் கிடக்க அவளின் கால் கடிக்கு காரணமானவன் என்ற குற்ற உணர்ச்சியில் அதற்கு முன்னமே நாவல் நக்கி விட்டிருந்தான் அவளின் காயத்தினை.
அது மேலும் மிருவின் காயத்தை ஆழமாக்கியிருந்ததை வர்மா அவன் அறியவில்லை. அவனுக்கு காயமென்றால் என்ன செய்வானோ அதையே
கண்மணி அவளுக்கு செய்தான்.
அது இப்படி ஊற்றிக் கொள்ளும் என்று பாவம் ஹீரோ அவன் கண்டானா என்ன.
வர்மாவின் நாக்கானது பாப்பிலா (papillae) எனப்படும் சிறிய மற்றும் கூர்மையான அமைப்பை உள்ளடக்கிய கரடுமுரடான விடயமாகும்.
வயமா அவன் இரையிலிருந்து இறகுகள், ரோமங்கள் மற்றும் இறைச்சியை அகற்றவே இப்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது அவனின் நா கடவுளால்.
இன்னொரு சுவாரசியமான சங்கதி யாதெனில் வர்மாவின் நாவால் சுவற்றில் இருக்கும் பெயிண்டை முதற்கொண்டு பேத்தெடுக்க முடியும் என்பதே ஆகும். அவ்வளவு வலிமையானது வர்மாவின் நாக்கு.
அவன் நா தீண்டுகையில் பெரிய முட்கள் கொண்டு தேகத்தை உரசுவது போன்றதொரு உணர்வையும் வலியையும் தரும். அதன் தாக்கமே ஏற்கனவே காய்ச்சலில் கிடந்த மிருவிற்கு இன்னும் மேனி தகித்து போனது.
ஹீரோ அன்போடு செய்த நல்ல காரியம், கொஞ்சம் விட்டிருந்தாள் மிருவிற்கு கருமாதி காரியம் ஆகியிருக்கும்.
சிம்பிளாய் சொல்ல வேண்டுமென்றால் செண்ட் பேப்பர் கொண்டு தோலை தேய்க்கையில் எப்படி இருக்குமோ அப்படித்தான் காயத்தை மேலும் காயமாக்கி வைத்திருந்தது வர்மாவின் பாசமான நா கோலம்.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 16
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.