What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 17

நேரம் கடகடவென ஓடியது.

சுகவீன பட்டுக்கிடந்தவளின் தொண்டைக்குழிக்குள் கஷாயத்தை ஊற்றிட முனைந்தான் வைத்தியன்.

ஓரமாய் நின்றிருந்த வஞ்சகனோ இப்போது வைத்திய நண்பனுக்கு உதவும் சாக்கில் மீண்டும் நெருங்கினான் பெண்ணவளை.

வர்மாவோ அவர்களை கண்காணித்தவனாய் வாலாட்டி அங்கேயேதான் சுற்றி கொண்டிருந்தான். வைத்தியன் என்னவோ வேண்ட, தகாத எண்ணம் கொண்ட கயவனோ நாயகியின் முகத்தை தொட போனான்.

ஆனால், அதற்குள்ளோ குகை ஆட; உறும்பி அவன் கரத்தை முன்னங்கை கொண்டு தடுத்தான் வர்மா.

காட்டுவாசிகளோ ஒன்றும் புரியாது அதிர்ந்தவர்களாய் வர்மாவின் முகம் வெறித்தனர்.

புருவங்களை சுருக்கியவனோ உறும்பினான் மீண்டும். வைத்தியனோ உணர்ந்துக் கொண்டான்.

உதவிடும் சாக்கில் ஏந்திழையை போக பொருளாய் பார்க்கும் கயவனை அவனுக்கு பிடிக்கவில்லை என்பதனை புரிந்துக் கொண்டான்.

நண்பனானவன் இனியும் அடங்காது மேற்கொண்டு வர்மாவின் சுந்தரியின்பால் தவறான பார்வைகள் கொண்டு வாலாட்டினால் சர்வ நிச்சயமாய் அவன் கதி அதோகதிதான் என்று நினைத்தான்.

ஆகவே, நிலையை கட்டுக்குள் கொண்டு வர முனைந்த வைத்தியனோ வயமாவிடம் சமாதான தொனி கொண்டு அவன் பாஷையில் என்னவோ சொல்லி தலை வணங்கினான்.

கூடவே, நண்பனின் கரத்தை வர்மாவின் எக்ஸ் போட்டிருந்த கரத்தின் கீழிருந்து பிரித்தெடுத்தான்.

வெறும் தொட்டு நிறுத்தியிருந்தான் வர்மா தீயவன் அவன் கரத்தை. புலிபையாக்கு என்ன புரிந்ததோ. ஆனால், உணர்ந்தான் காட்டுவாசியின் மனநிலையை.

கூலானான் வர்மா. ஆதலால், கள்வனின் கை தப்பித்தது. இல்லை, ஆளே தப்பித்திருந்தான் எனலாம். அதுவும் வைத்தியன் கோரிக்கை வைத்ததால்.

கடைசி வார்னிங் கொடுத்த வர்மாவிற்கு கோபம் தலைக்கேறினால் விபரீதமே. அதுவரை பாதுகாப்பே.

வர்மா இப்போது மிருவின் ஸ்பெஷல் வைத்தியன் ஆகியிருந்தான். வஞ்சியின் அருகே காட்டுவாசி வைத்தியனை தவிர வேறு யாருக்கும் இடமில்லை.

ஆகவே, ஏற்கனவே அவளின் தலையை பின்னோக்கி சாய்த்து பிடித்தது போலவே இப்போதும் வயமா அவனே பேடையவளை தாங்கியிருந்தான் அவன் முன்னங்கைகள் கொண்டு.

கஷாயத்தை இலையினில் ஊற்றி வைத்தியனிடத்தில் காட்டுவாசியின் நண்பன் கொடுக்க, வைத்தியனோ பகினியின் வாயை குவித்து திறந்து அதை மங்கையின் தொண்டைக்குழி இறங்கிட ஊற்றினான்.

உதைத்தான் வஞ்சினியை எழுப்பும் சாக்கில் வர்மா. பொறுக்க முடியவில்லை ஐயாவிற்கு.

முற்றிழைவள் இப்போது கண் திறந்தாகணும் அவனுக்கு. நேரிழையவள் எழாது இருக்க உறும்பினான் ஹீரோ. காட்டுவாசியோ சிரித்து அவன் பாஷையில் சொன்னான் வர்மாவின் தலையை தடவிக் கொடுத்து.

அதாவது குகைக்கு வெளியில் கையை நீட்டி நேரத்தை குறிக்காட்டி காத்திருக்கணும் என்ற பாணியில். வர்மாவோ சிரசை சிலிர்ப்பி
புரிந்தவனாட்டம் வாயை பிளந்தான் வாலை ஆட்டி.

பிறகு, வாஞ்சையாக வைத்தியன் மற்றும் மூலிகை பறித்து வந்த நண்பன் இருவரின் கைகளையும் நக்கி வைத்தான் வர்மா.

அது என்னவோ காட்டுவாசி ஆண்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாச அளவு கைகள் மட்டும்தான் போல.

ஹீரோவின் ஹீரோயினுக்கு மட்டும் நுதல் தொடங்கி அதரங்கள் வரை நாக்கி பாசத்தை பொழிந்தது என்ன பீலிங்ஸோ, வர்மா மட்டுமே அறிவான்.

ஒருவழியாய் மடந்தை அவளுக்கு ட்ரீட்மெண்ட் முடிய, வந்தவர்கள் கிளம்பிட தயாராயினர்.

இப்போதுதான், வர்மாவிற்கு தண்ணீர் தாகமே எடுத்தது. வைத்தியன் குகைக்கு வெளியில் வர அவர்களை வழியனுப்பிட அவர்களுடனேயே நடந்து போனான் வர்மா.

சுணங்கிப் போயிருந்த பனிமொழியோ கண்டிப்பாய் குகைக்குள் பத்திரமாகத்தான் இருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.

ஆகவே, நம்பிக்கையோடுத்தான் அவளை அங்கேயே விட்டுவிட்டு இவர்களோடு பயணித்தான் வர்மா.

காட்டுவாசிகளை பாதி வழியில் கழட்டி விட்டு பைபை சொல்லி தடாகம் ஒதுங்குவதுதான் வர்மாவின் பிளான்.

காட்டுவாசிகளோ அவர்களின் பாஷையில் அம்மணி யாரென்று பேசிக்கொண்டே நடக்க மூவரில் ஒருவன் மறைந்திருந்தான். வேறு யாரு அக்கயவனேதான்.

அவனை காணாது மற்ற இருவர் பதற, உறும்பிய வர்மாவோ உணர்ந்தான் கேவலமான புத்தி கொண்டகொடூரன் எங்கே சென்றிருப்பான் என்று.

எடுத்தான் ஓட்டம் வயமா அவன் வெறிக்கொண்டு. பாய்ந்தோடினான் குகை நோக்கி புயலாய் உறும்பி.

வஞ்சகனோ அவனின் சல்லாபத்தை தீர்த்துக் கொள்ள சுந்தரியின் மீது படர, பாறையை தாண்டி உறும்பலோடு பாய்ந்து வந்த வர்மாவோ ஒரே கடி கெட்டவன் அவன் கழுத்தெலும்பை கூரிய பற்கள் கொண்டு.

பீச்சியடித்தது ரத்தம் எட்டுத்திக்கும். மயக்கத்தில் கிடந்த மாதங்கியோ ஆரகத்தில் குளித்தாள்.

குருதி ஆறு பெருக்கெடுக்க வினை கொண்டவனை அசால்ட்டாய் தூக்கி குகையின் ஓரம் எறிந்தான் சினங்கொண்ட வேங்கையவன்.

அலறக் கூட முடியாதவனோ உயிர் போகு வலியில் துடிதுடித்தான்.

விட்டம் பார்த்து உறும்பிய வர்மாவோ பாய்ந்து மீண்டும் பொறுக்கி அவனின் பிஞ்சி போன கழுத்து பிடியை பற்களால் உறும்பலோடு கடித்திழுத்தான் வெறிகொண்டு.

அங்கும் இங்கும் இழுத்து, அலசி அவனை நாலு சாத்து சாத்தினான்.

மண்டை மூளையெல்லாம் உள்ளே அமுங்கி போனது தீயவன் அவனுக்கு.

உயிருக்கு போராடி கண்கள் சொருகிய மனுஷனை அனல் பார்வை கொண்டு தாடை அதிரிட உறும்பினான்.

தணியவில்லை அவன் கோபம். கூரிய நகங்கள் கொண்டு கெட்டவனை பிராண்டி அவன் தேகங்கொண்ட தோலை வழுட்டியெடுத்தான் வர்மா அடங்காத ஆவேசத்தோடு.

வர்மாவின் வல்வியை சொந்தமாக்க முயற்சித்தவனோ எலும்புகள் எல்லாம் சதையிலிருந்து வெளியேறி ரத்த களரி கோலத்தில் கிடந்தான்.

ஊசலாடிய உயிரோடு இருந்தவனின் கடி வைத்த அதே பின்னங்கழுத்து முதுகெலும்புகளை மீண்டும் 'கடாக்' என்றொரு கடி கடித்து ஒரே உடையாக உடைத்தெடுத்தான் வர்மா அவன்.

வக்கிரங்கொண்டவனின் கபாலத்தையே தனியாய் பிரித்தெடுத்து விட்டான் நாயகன் அவன்.

புளிச்ச ரத்த வாடை கொண்ட தலையையோ கவ்விக் கொண்டு உறும்பினான் வர்மா பாறை மீதேறி அவன் ஆத்திரம் அடங்கும் வரை.

தீவியின் ஆரணியம்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/தீவியின்-ஆரணியம்.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 17
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sourabh

Member
Joined
Jul 16, 2024
Messages
68
NICE EPI.................................💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top