What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 12

வர்மாவோ மீதமிருந்த கோட்டினை அவன் ஒற்றை முன்னங்கால் கொண்டு அழித்துக் கொண்டிருந்தான் ஸ்டைலாய் நின்று.

''ஏய்! காலே உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்! ஒழுங்கு மரியாதையா ஓரம் போயிடு! எதுக்கு இப்போ கோட்டை அழிச்சே நீ?! குச்சிய வேற புடிங்கி போட்டுட்டே! என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன் மனசுலே?! புலின்னா உனக்கென்னே ரெண்டு கொம்பா இருக்கு?! ஓவராத்தான் பண்றே?!''

பைந்தொடி அமர்ந்தவாக்கிலே காச்சு மூச்சென்று கத்திட, வர்மாவோ அவனுக்கே உரிய பணியோடு இமைக்காது கண்மணி அவளை பார்வைகளால் அளந்த வண்ணம் முன்னோக்கி அடிகள் வைத்தான்.

''என்ன?! எதுக்கு இப்போ கிட்ட வரே?! நான்தான் சொன்னேன்லே, நீ இங்க வரக்கூடாது நான் அங்க வர மாட்டேன்னு!''

வர்மாவோ உட்கார்ந்தப்படியே கைகளால் பின்னோக்கி போன சேயிழையை நெருங்கினான்.

குமட்டிக்கொண்டு வந்தது வதூ அவளுக்கு.

''கடவுளே! வர்மா பிளீஸ்! பின்னாலே போ! என்னாலே முடியலே! நிஜமா உன் முஞ்சிலையே கக்கிடுவேன் சொல்லிட்டேன்!''

கண்களை மூடி கெஞ்சியவளின் முன்நெற்றியை லேசாய் முட்டினான் வர்மா.

''என்னடா?!''

தாரகை அவளோ சலிப்போடு விழிகள் விரித்து முன்னிருப்பவன் முகரையை பார்த்து,

''இந்த ரொமண்டிக் லுக்குக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல! நீயெல்லாம் குளிக்கவே மாட்டியா?! என்னைக்காவது பல்லு தேய்ச்சிருக்கியா நீ?! கருமம் புடுச்சவனே!!''

என்றவள் அவனை ஓரம் தள்ளி, தவழ்ந்து எக்கி எடுத்தாள் அவளின் பேக்பேக்கை.

''இங்கப்பாரு வர்மா, இனி நீ என் பக்கத்துல வரணும்னா வாசமாத்தான் இருக்கணும்!''

சொல்லியவள் சடீரென்று பேக்கின் உள்ளிருந்து வெளியில் எடுத்த வேகத்திற்கு அடித்தாள் வரைமுறையின்றி கால்வின் க்ளெய்ன் பிராண்ட் பர்ஃபியூமை (Calvin Klein perfume) வேங்கை அவன் மீது.

''டர்ஷன் ரொம்ப நன்றிடா! நீ விட்டுட்டு போனதுலையே உருப்படியான ஒரே ஒரு விஷயம் இந்த மஸ்கி ஸ்மெல் பர்ஃபியூதான் (musky smell perfume)!!''

வாசனை திரவியத்தில் குளித்த வர்மாவோ தலையை சிலிர்ப்பு கொண்டான் பலமுறை அங்கும் இங்கும் நடந்து.

''உன் தலையெழுத்த யாராலையும் மாத்த முடியாது அருள்மொழி வர்மா! நீயா தேடிக்கிட்டது! நான் ஒழுங்கா அந்த காட்டுவாசிங்க கூடவே இருந்திருப்பேன்! எல்லாத்தையும் கெடுத்து விட்டது தானே! அனுபவி!''

என்றவள் மீண்டும் வாசனை திரவிய போத்தலை கொண்டு கோடு போட்டாள்.

பாவம் படித்த பேடை அவள் அறியவில்லை. புலிகளுக்கு வாசனை திரவியம் மிக பிடிக்கும் என்று. அதுவும் இப்போது மிரு அடித்து தாக்கிய ஆண்கள் வாசனை திரவியம் வர்மாவிற்கு ரொம்பவே பிடித்து போய் விட்டது.

ஒருவழியாய் உடல் குளிரெடுக்க பஞ்சு மெத்தையான சால்வையில் சரிந்தாள் அலரவள். பசி வயிற்றை கிள்ளியது. மாங்கனி ஒன்றை பேக்பேக்கிலிருந்து துழாவி எடுத்து வைத்தாள் கடியை, நறுக்கென்று தோல் சீவிடாத பழத்தில்.

பழத்தை சுவைத்தப்படி வல்வி அவள் இருக்க டக்கென்று பாய்ந்து அவளை அவனுக்குள் அடக்கி நின்றான் வர்மா.

பக்கென்றது பனிமொழி அவளுக்கு. துடியிடை அவளை கீழிருந்து மேல் நோக்கி நுகர்ந்தான் வர்மா.

இளம்பிடியாள் அவளோ இம்முறை புத்திசாலித்தனமாக மாங்காயை தூக்கி வாய் பக்கம் வைத்துக் கொண்டாள். எங்கே மீண்டும் நா அதிர உறும்பிடுவானோ வர்மா என்ற பயமே அவளுக்குள் ஓங்கி இருந்தது.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் வர்மாவின் க்ரீன் ஐஸ் தெரியிழை அவளை கொள்ளையடித்திடாமல் இல்லை.

பதித்த பார்வைகளை நகர்த்தாமல் புலியவனோ, ஏறெடுத்தப்படியே மங்கையவள் முகம் நோக்கி கீழே குனிந்தான்.

அவனின் அனல் மூச்சில் சிலிர்த்தாள் கன்னியவள். அலர் அவள் தேனிதழின் மீது நிறுத்தியிருந்த மாம்பழத்தை தலை சாய்த்து மெதுவாய் கவ்வினான் வர்மா.

மலரவள் இதழோரம் கொண்டிருந்த விரல்களை வர்மாவின் பற்கள் தீண்டிடவே இல்லை. மாங்கனியை அவன் வாயில் தக்க வைத்து கொண்ட வர்மா நேத்திரங்கள் சிமிட்டிடாமல் தன்னையே பார்த்திருந்த ஏந்திழையை பார்த்தப்படியே ஓரம் போட்டான் அப்பழத்தை.

பழச்சாறோ மிருடானியின் கையில் ஒழுகியிருக்க மெதுவாய் கரத்தை வாயுரசி நெஞ்சில் இறுத்திக் கொண்டாள் பாவையவள்.

இருவரின் விலோசனங்களும் விவகாரமாய் ஒருவரை மற்றொருவர் பார்க்க, இனம் புரியா மயக்கத்தில் உழன்ற நங்கையோ,

''உனக்கு வர்மான்னு பேரு வெச்சது, தப்பே இல்ல!''

சொல்லிக் கொண்டே முதல் முறை வர்மா அவனின் முகத்தை கிடுகிடுக்காத விரல்கள் கொண்டு தொட முனைந்தாள் பெதும்பையவள்.

முறுவலித்தான் வயமா அவன் இமைக்காத அம்பகங்கள் கொண்டு.

தொட்டும் விட்டாள் பொற்றொடியவள் வர்மாவை. மென்மையாய் வருடியவளின் விரல்கள் அவனின் இடப்பக்க மொத்த கன்னத்தையும் அவளின் உள்ளங்கைக்குள் அடக்கியது.

நாயகியின் மென்மையான தீண்டலில் திட்டிகள் மூடி தலையை காரிகையின் கரம் போன திசையில் அசைத்தான் வர்மா.

''நல்லாருக்கா, சூடா?!''

மில்லி அளவில் இருந்த தைரியம் இப்போது லீட்டர் அளவில் பெருகியிருந்தது மிருவிற்கு. என்ன குரல் தான் கனத்திருந்தது அம்மணிக்கு.

சக்குகள் விரித்தான் வர்மா. இயன்ற வரை ஈர்த்திருந்தாள் ஒளியிழை அவள், ஆணவனின் கண்களிலிருந்த ஈரப்பதத்தை. வார்த்தைகள் ஏதும் தேவையில்லை இருவருக்கும்.

மிழிகளே போதும் போதும் எனும் அளவிற்கு பேசியிருந்தன.

மாயோளின் உடல் காய்ந்தது. காயம் காய்ச்சலை கொடுத்திருந்தது.

கண்ணேல்லாம் லேசாய் எரிச்சல் கொண்டது தளர்ந்திருந்த தளிர் அவளுக்கு. வர்மாவின் முகத்திலிருந்த கரத்தை மெதுவாய் கீழிறக்கினாள் மிரு.

அவன் கந்தரம் தொட்ட அணங்கின் கரம் உரசி இறங்கியது வர்மாவின் இடது நெஞ்சோரம்.

சூடு தேடி கண்டவளோ, அவளின் குளிரிய புறங்கையை வர்மாவின் நெஞ்சில் பதுக்கினாள்.

சுந்தரியின் கண்கள் சொருகின. ஒரு பக்கம் தூக்கம். மறுப்பக்கம் அசதி. வலியும் உடல் கொண்ட காயங்களும் வேறு, மயக்கம் கொடுக்க மொத்தமாய் கண்களை மூடிக் கொண்டாள் மிரு.

அவளின் தலையை நகங்கள் கீறாது வாஞ்சையாக வருடினான் வர்மா. நெஞ்சு சளியில் கொரகொர என்று மூச்சு விட்டு தூங்கும் அவளையே பார்த்தான் புலியவன்.

அவளின் பக்கமாகவே படுத்துக் கொண்டான் வேங்கையவன். நிம்மதியாய் படுத்துறங்கும் பெண்டுவையே விழிகள் மூடாது பார்த்தான் அவன்.

மிருவின் மேனி கொண்ட காய்ச்சலோ அவனுக்கு கதகதப்பை கொடுத்தது.

வர்மா அவனோ வலகரங்கொண்டு மயக்கத்திலான உறக்கதில் கிடந்த வஞ்சியை ஒரு இழு அவன் நோக்கி. அவன் நெஞ்சம் வந்து சேர்ந்தாள் பூவையவள்.

அந்திகையின் தலைக்கு மேல் அவனின் தலையை வைத்துக் கொண்டான் வர்மா. குமரி அவள் மீது அவன் கரத்தை போட்டு கண்கள் மூடினான் துயில் கொள்ள வர்மாவாகிய வேங்கையவன்.

தீவியின் ஆரணியம்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம: 12
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sourabh

Member
Joined
Jul 16, 2024
Messages
68
nice.............💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top