What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
332
WhatsApp Image 2024-10-18 at 1.47.54 AM.jpeg

அத்தியாயம் 8

நிகழ்காலம்

காவல் நிலையம்


''சார், காலையிலிருந்து டாக்டர் துவரினி போன் ரீச் (reach) ஆகவே மாட்டுது!''

ராகேஷ் தகவல் சொல்ல,

''வெளியூர் எங்கையும் போக கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா (strict) சொல்லியும், எங்க போனாங்க அந்த டாக்டர்?!''

''சார், எதுக்கும் நான் ரெண்டு கான்ஸ்டபிலே (constable) அனுப்பி, அவுங்க வீட்டே ஒரு எட்டு பார்த்திட்டு வர சொல்லவா?!''

சப் இன்ஸ்பெக்ட்டர் கடமை உணர்ச்சிக் கொண்டு கேட்க,

''இல்லே பரவாலே ராகேஷ்! நான் அந்த டாக்டர் இருக்கறே ஏரியா பக்கமாத்தான் ஒரு வேலையா போறேன்! நானே பார்த்துடறேன்!''

என்ற அன்போ இன்ஸ்பெக்ட்டர் ட்ரஸிலிருந்து நார்மல் டி-ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு மாறியவனாய் ஸ்டேஷனிலிருந்து வெளியேறினான்.


**********************************

நிகழ்காலம்

வேதாவின் படுக்கையறை


வேதா காலை எட்டு மணிக்கே எழும் பழக்கம் கொண்டவன். அலாராமே தேவையில்லை அவனுக்கு. சுயமாகவே எழுந்திடுவான்.

மல்லாக்க படுத்து வலக்கரத்தை நெற்றியில் பதித்திருந்தவன், துயில் கலைய, இடக்கையில் பாரமொன்றை உணர்ந்தான்.

முழங்கையை அசைக்க முடியா கணத்தில், தலை திருப்பி அம்பகங்களை தாழ்த்தியவன், அவன் கையில் முகம் ஒட்டி உறங்கிக் கொண்டிருக்கும் பாவையின் காட்சிக்கு சாட்சியாகி போனான்.

அவன் கையை இறுக்கமாய் கட்டிக்கொண்டு, அதில் வதனம் புதைத்து மழலை போல் தூங்குபவளை சில நிமிடங்களுக்கு வைத்த கண் வாங்காமல் பார்த்தான் வேதா.

பேடையின் உள்ளங்கை ஒன்றோ அவன் உள்ளங்கை கோர்த்து கிடந்தது காற்று புகா வண்ணம்.

ஏசி அற்ற காற்றாடி அறையில், மெத்தையில் படுக்க சொன்ன சுந்தரியோ, எப்போது தரை இறங்கி, ஆணவன் பக்கம் வந்தாள் என்று வேதாவிற்கு தெரியவில்லை.

''என்ன தகுதி இருக்கு உனக்கு என் கையே புடிச்சு நடக்க?! வேர்த்து நாத்தமடிச்சு கிடக்கறே லோ க்ளாஸ் டெக்னீசியன் (low class technician) நீ எங்க, ஏசிலையே வாழறே வாசமான நான் எங்கே?!''

என்ற வசனமோ காதுகளில் கேட்க, பட்டென விழிகளை மூடித்திறந்து நிஜ உலகம் திரும்பினான் நாயகனவன்.

மாயோள் அவளை தட்டி எழுப்பிட அவனுக்கு தோன்றவில்லை. ஆகவே, அவன் உடலை அசைத்து நகர, டக்கென விழித்தெழுந்துக் கொண்டாள் கோமகள் அவள்.

''யார் நீங்க?! இங்க என்ன பண்றீங்க?! என் பக்கத்துலே படுத்து என்ன பண்ணீங்க? சொல்லுங்க?!''

என்று பயங்கலந்த கலவர குரல் கொள்ள, ஆளானோ முற்றிழையின் கரம் பற்றி மேலேற்றி அவளின் பெயரை சுட்டிக்காட்டி,

''அட்சரா, நான் உங்க பாய் பிரெண்ட் (boy friend)! இது என் வீடு! நீங்க என்ன பார்க்க நேத்து வந்திங்க! நேரமாச்சின்னு என் ரூம்லையே படுத்திட்டிங்க!''

''அதுக்கு?! நீ என்கூட சேர்ந்துதான் படுப்பியாடா?! ராஸ்கல்!''

என்றவன் மண்டையிலே நங்கென்று ஒன்று வைக்க, ஐயோ என்றிருந்தது வேதாவிற்கு.

வேறு கதை ஏதும் சொல்லிருக்கலாமோ என்றுக்கூட தோன்றியது அவனுக்கு. ஆனால், நொடிக்கு ஒரு தரம் புது கதைக்கு அவன் எங்கே போவான். கதை ஆசிரியனா என்ன அவன்.

ஆணவன் நடுமண்டையை தேய்த்துக் கொண்டு நிற்க,

''நான் ரொம்ப நேரம் தூங்க முயற்சி பண்ணேன் வேதா! வரலே, தூக்கம்! பயமா வேறே இருந்தது! யாரோ நாலஞ்சு பேரு, கண்ணே மூடினாலே, என்னே எங்கையோ இழுத்துட்டு போறே மாதிரி தோணுச்சு! அதான், உங்க பக்கத்துலே வந்து படுத்துக்கிட்டேன்!''

புரிந்து விட்டது வேதாவிற்கு. கொட்டியவள் காணாது போய் கட்டிக்கொண்டு படுத்தவள் பிரவேசம் ஆகியிருக்கிறாள் என்று. ஆகவே, அவனும் எதுவும் நடவாதது போல் போர்வை விரிப்பை மடித்திட ஆரம்பித்தான்.

ட்ரஸிங் டேபிளின் விளிம்போரம் நின்று நங்கையவள் வேதாவின் கரம் பற்றி உறங்கியதற்கான காரணத்தை விலாவாரியாக விளக்க, அவனோ தோளில் டவலை தூக்கி போட்டு குளியல் அறை நோக்கினான்.

''நில்லுங்க!''

என்றவளின் கட்டளையிலான தொனியில், அவளை திரும்பி பார்த்தவனிடமோ,

''நான் தள்ளிதான் படுத்தேன்! சாமி சத்தியமா!''

என்றவளோ மலரவள் தலையில் கை வைத்து நயனங்களை அகல விரித்து,

''உண்மையைத்தான் சொல்றேன்! நான் எட்டிதான் படுத்தேன்! ஆனா, எப்படி..''

என்று இழுக்க சங்கடத்தில், மெலிதாய் முறுவலித்தவனோ,

''வேண்டிய ட்ரஸ் எடுத்துக்கிட்டு, பக்கத்து ரூம்லே போய் குளிச்சிடுங்க!''

என்றுக்கூறி குளியலறைக்குள் நுழைந்தான்.


**********************************

நிகழ்காலம்

டாக்டர் துவரினி இல்லம்


ஐந்து நிமிடங்களுக்கும் மேற்பட்டு டாக்டர் வீட்டு கதவை தட்டி பலனில்லாது போனது.

முதலில் கிளம்பலாம் என்று நினைத்த அன்பின் மனமோ, திடிரென்று அன்றைக்கு அம்மணி கொண்ட அச்சத்திலான அழுகையை கண் முன் கொண்டு வந்தது.

ஆகவே, இனியும் தாமதிக்க கூடாது என்ற எண்ணத்தில், பின்பக்க வாசல் நோக்கி அடிகளை துரிதப்படுத்தினான்.

நல்ல வேலையாக ஜன்னல் ஒன்று அங்கு திறந்திருக்க, அதன் வழியாய் கையை உள்ளே விட்டு லாக் செய்திருந்த கதவை திறந்தான் ஆணவன்.

இல்லமோ மயான அமைதி கொண்டிருந்தது. ஆள் இருக்கும் ஆரவாரமே இல்லை. சந்தேகம் வலுக்க ஓட்டமும் நடையுமாய் அலசல் கொண்டான் அன்பு, வீட்டுக்குள் வாசுரை அவளைத் தேடி.

மூன்று அறைகளில் ஒன்று மட்டும் சாத்தியிருக்க வேகமாய் ஓடிச்சென்று அதை திறந்தான் அன்பு.

அங்கு அவனை சற்றும் எதிர்பார்த்திடாத மருத்துவ மங்கையோ கையில் கத்தியை பற்றி பிடித்துக் கொண்டு கண்ணீரும் கம்பலையுமாய் தலைவிரிக்கோலம் கொண்டிருந்தாள்.

''துவரினி என்ன முட்டாள்தனம் பண்ண பார்க்கறீங்க நீங்க?!''

என்ற அதட்டலோடு அவள் நோக்கி அன்பு ஓட,

''வராதீங்க! போயிடுங்க! நான் சொன்னேன்தானே என் வேலையே போயிடும், ஹோஸ்ப்பிட்டலுக்கு கோல் பண்ணாதீங்கன்னு!''

என்று அலறியவளோ கத்தியோடு முன்னிருப்பவனை நோக்கி அழுகை கொள்ள,

''உங்க வேலை எங்கையும் போகாது துவரினி! அட்சரா கிடைச்சாச்சு! முதல்லே அந்த கத்தியே என்கிட்ட கொடுங்க! கொடுங்க இங்க!''

சமாளித்தான் அன்பு பொய் சொல்லி.

''இல்லே, நான் நம்ப மாட்டேன்! நீங்க என்னே ஏமாத்த பார்க்கறீங்க! நான் உங்களே நம்ப மாட்டேன்!''

என்ற தெரிவையோ சமாதானம் ஆகாது ஆவேசம் கொள்ள, அன்போ பட்டென மஞ்சத்தின் மீதிருந்த தலையணை ஒன்றை கைப்பற்றி, தூக்கி வீசினான் வஞ்சியவள் நோக்கி.

டாக்டர் அவளோ தடுமாறி தலையணையை மற்றொரு கையால் தடுக்க, விருட்டென எக்கி பாய்ந்து கத்தி கொண்ட கோற்றொடியின் விரல்களை அழுத்தி பற்றினான் அன்பு.

''விடுங்க! என்னே விடுங்க! இதுக்கு மேலே நான் ஏன் உயிரோட இருக்கணும்?! என் வாழ்க்கையே போச்சு! நான் செத்து போறேன்! விடுங்க என்னே!''

என்று ஆக்ரோஷமாய் கத்திய அந்திகையோ அன்பின் பிடியிலிருந்து விலக பார்த்தாள் திமிறி.

ஆனால், மொய்க்குழல் அவள் கரங்கொண்ட கத்தியோ, அரங்கேறிய கைகலப்பில் இன்ஸ்பெக்ட்டரின் மேனியை பதம் பார்த்தது எதிர்பாராத விதமாய்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top