- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 103
நிகழ்காலம்
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது துர்சம்பவம் நடந்தேறி.
டி.சி. முடித்த கீத்து விடுமுறையில் வீட்டிலிருந்தாள். வேலைக்கு போக எத்தனித்தவளை கர்ணா ஸ்ட்ரிக்டாக தடுத்து விட்டான்.
டாக்டர் வழக்கம் போல் வேலை வீடு என்றிருந்தான். குஞ்சரியின் நண்பர்கள் பட்டாளத்தில் யாராவது ஒருத்தர் ஒருநாளுக்கு ஒரு ஜோடி என்ற கணக்கில் ரீசன் மனைக்கு வந்து கதையடித்து போயினர்.
சுஜியும் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வந்து விட்டாள் மருமகளுக்கு சேவகம் செய்ய.
கிருத்திகாவை எல்லோரும் கையில் வைத்து தாங்குவதை ஆசையாக பார்த்தான் ஔகத் ஓரமாய் நின்று. உள்ளுக்குள் ஏங்கினான் என்றுக்கூட சொல்லிடலாம்.
ஆனால், அன்றைய மருத்துவமனை சண்டைக்கு பிறகு தம்பதிகள் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை.
மூத்தவர்கள் இதை கவனிக்காமல் இல்லை. இருந்தும், யாரையும் அப்போதைய நிலையில் அறிவுரை என்ற பெயரில் சங்கடப்படுத்திட விரும்பவில்லை. ஆகவே, ஜோடிகளே தானாய் சரியாகிடுவார்கள் என்று வாய் மூடிக்கொண்டார்கள்.
அதுவும் காதல் திருமணம் செய்தவர்களுக்குள் இந்த வாய்க்கா தகராறெல்லாம் ரொம்ப நாளைக்கு வீராப்பு கொள்ளாது என்றறிவர் லவ் மேரேஜ் செய்த பெத்தவர்கள்.
கீத்துக்கு சேவை செய்ய வந்த சுஜியோ, உருண்டு பிரண்டு கவனித்ததெல்லாம் அவள் மகனைத்தான். அம்மா மகன் அன்யோன்யத்தை கண்ட பொஞ்சாதிக்கோ புருஷன் மீது பொறாமை வந்ததுதான் மிச்சம்.
சுஜி, சின்ன கேடிக்கு சோறூட்டுவதை பார்த்த ரீசன் மகளுக்கோ, டேடி ஞாபகம் வர, கண்ணை கசக்காது வேடிக்கை பார்த்த மருமகளையும் இழுத்தமர்த்தி ஊட்டி விட்டாள் மாமியார் அவள்.
முதல் மூன்று நாட்களுக்கு குஞ்சரியோடு படுத்தவள், பின் ஓடிவிட்டாள் பேடையின் படுக்கையறைக்கே திரும்பவும், டாக்டர் இல்லா அருகாமை வெறுப்பாய் இருக்க.
பேசிட மட்டும்தான் தம்பதிகளுக்கு வாய் வலித்தது. மற்றப்படி தூக்கத்தில் ஔகத்தின் கைக்குள்தான் அடக்கமாயிருந்தாள் அந்திகையவள். ஆணவனுமே, லேசு பட்டவன் இல்லை, துயிலில் கை நழுவி ஓரம் போகிறவளை இழுத்து மார்போடு சேர்த்துக் கொண்டான்.
இப்படியே நாட்கள் கழிய, அன்றைக்கு என்னவோ குடும்பத்தாரின் கலகல பேச்சில் மனம் லயிக்கவில்லை அகம்பாவ கள்ளிக்கு. அவளறை பால்கனியில் வந்து நின்றாள் கீத்து, கையில் காஃபி கப்போடு.
இதமான காற்று காரிகையின் முகத்தில் படர்ந்தோட, கண்களை மூடிக் கொண்டவளோ, மருத்துவமனையில் பார்த்த கணவனின் முகத்தை நினைத்துப் பார்த்தாள்.
ஔகத் சர்வேஷ் குமாரின் முகம், கோபத்தில் சிவந்து பார்த்திருக்கும் வல்லபியவள், இதுவரைக்கும் அன்றைய நாளில் கண்ட அகோரத்தை அவனிடத்தில் கண்டதில்லை.
புருஷனின் முகத்திலிருந்த அத்தனை நரம்புகளும் மொத்தமாய் புடைத்து கொள்ள, பார்க்கவே பயங்கரமானவனாய் காட்சியளித்தான் ஔகத்.
பச்சை சிவப்பென்று, எப்படி கையில் வெட்ட வெளிச்சமாய் நரம்புகள் தெரியுமோ, அதைப்போலவே, டாக்டரின் முகத்தோல் முற்றிலும் மறைக்கப்பட்டது, நரம்புகள் முழுதாய் அழகனின் வதனத்தை குத்தகைக்கு எடுத்திருக்க.
படாஸ் சொல்லி இருக்கிறான் இதைப்பற்றி கீத்துவிடம் ஒருமுறை. அதாவது, அவனுக்கு கோபமே வராதா என்று காதலியவள் கேட்க, வந்தால் இப்படியாகுமென்று.
ரேவ்வின் பதிலை கேட்டு அன்றைக்கு சிரித்த அரக்கியோ, அதையே ஔகத்தின் வழி கண்ணால் காண வாயடைத்து போனாள் அதிர்ந்து.
இப்படியான விடயம் ஒன்றும் பேரதிசயமெல்லாம் இல்லை. வயதான காலத்தில் அல்லது அதீத அழுத்தத்தால் கூட இது நிகழும். இதையும் படாஸ்தான் சொல்லியிருந்தான் போலீஸ்காரியிடம்.
ஆனால், அதே வேளையில் ரேவ்வாகிய அவன் கடுங்கோபம் கொண்டால், உச்சி முதல் பாதம் வரை இருக்கின்ற அத்தனை நரம்புகளும் புடைத்து கொண்டு அவனை காண சகிக்காதவனாய் ஆக்கிடுமென்ற உண்மை அரிதிலும் அரிது என்பதை பின்னாளில் கீத்துவே ஜெனரல் டாக்டரிடம் கேட்டறிந்துக் கொண்ட தகவலாகும்.
சினங்கொண்ட சிங்கமாய் அன்றைக்கு சீறிப்பாய்ந்த ஔகத் பார்க்க அச்சு அசல் தோலற்ற நரம்பு மனிதனாகவே காட்சியளித்தான் கீத்துவின் நேத்திரங்களுக்கு.
''சோரி!''
என்ற வார்த்தையோடு கதகதப்பான அணைப்பொன்றை பரிசளித்தான் டாக்டர் போலீஸ்காரிக்கு.
சொன்னவன் அதோடு நில்லாது நங்கையின் கழுத்தோரம் புதைந்து தேடல் கொள்ள, வாரங்களாக வெறுமனே கிடந்த கோமகளின் தேகம் ஔகத்தின் தீண்டலில் தெரித்தெழுந்தது.
கூடாது, வேண்டாமென்று மூளை சொல்ல, போடி போக்கத்தவளோ என்ற உணர்வுகளோ விறலியின் சொல் பேச்சை கேளாது, ஆயந்தியவளை கணவனின் இழுப்புக்கு இசைந்திட வைத்தது.
இருப்பினும், ஏழரை சானியாட்டம் சனிகையின் வாய் சும்மா இல்லாது முடிந்த சண்டையை தொடங்க பார்த்தது.
''இந்த மன்னிப்பு போன உசுரே திரும்ப கொண்டு வந்திடுமா?!''
என்ற அம்மணியின் கையிலிருந்த காஃபி கப்போ நழுவ, மங்கையவள் காது மடலில் முத்தம் பதித்த டாக்டரோ அதை விழாது பற்றி,
''இந்த சோகத்தே மறக்கடிக்கற மாதிரியான கதை ஒன்னு சொல்லவா?!
என்றுச் சொல்லி, சுந்தரியின் செவியோர குழலை ஒதுக்கி தோளில் இதழொத்தினான்.
அவன் நெருக்கம் தந்த சூட்டில் மோகம் கபாலமேற, வெறுங்கிளாஸ் கொண்ட ஔகத்தின் விரல்களோடு வல்வியவள் விரல்களோ பின்னி பிணைந்தன, பேதையின் உடலுக்குள் வேதியல் மாற்றம் நிகழ.
''எனக்கொரு பொண்ணே தெரியும். அகம்பாவ ஆங்காரி. ஆனா, அழகி. அகங்காரிக்கு, அவே மட்டும்தான் அறிவாளின்னு நினைப்பு. ஆனா, ஒருநாள் அவளை விட புத்திசாலியான ஒருத்தனே அந்த அழகி பார்த்தா. பார்த்ததும் புடிச்சிருச்சு. ஆனா, அது காதல்னு அப்போ அந்த அழகிக்கு புரியவே இல்லே.''
என்ற ஔகத்தோ மெல்லமாய் பாரியாள் அவளை பிரிந்து பின்னோக்க, அருணியவளோ கைகளை பால்கனி கம்பிகளில் இறுக்கி, மூச்சு வாங்க, உணர்ச்சியில் கொதித்திருந்தாள் அவன் விலகலை கூட உணராது.
''அவனே பார்க்காமே அந்த அழகியாலே இருக்கவே முடியலே. இருந்தாலும், இனி அவனே பார்க்கவே கூடாதுங்கறே எண்ணத்தோட கடைசியா அவனே பார்க்க வந்தா அந்த அழகி, அவன் ரூமுக்கு.''
என்றவன் முடிக்கையில், பட்டென நயனங்களை விரித்த அரிவையோ, திரும்பி பார்க்க, ஔகத்தோ திறந்திருந்த அலமாரி கதவில் முதுகு சாய்த்து நின்றிருந்தான் நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு, சிவப்பு நிறத்திலான கோலர் கொண்ட லோங் ஸ்லீவ் டி- ஷர்ட் ஒன்றை அணிந்தப்படி.
''ஔகத்!''
என்ற திமிர்க்காரியோ அலறியப்படி அறைக்குள் அவனை நோக்கி ஓட, முடிஞ்சா என்ன புடி என்ற கணக்கில், சட்டையைக் கழட்டிய டாக்டரோ, சிரித்தப்படி ஓடினான் அவர்களின் கட்டிலை சுற்றி.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/படாஸ்.14/

Author: KD
Article Title: படாஸ்: 103
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.