What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 106

நிகழ்காலம்


காலம் குடுகுடுவென ஓடி, முழுதாய் மூன்று மாதங்கள் கடந்திருந்தது.

தம்பதிகளோ குழந்தை இல்லா குறையை கூட மறந்து ஆனந்தமாய் டின்னர் சாப்பிட்டு வாழ்க்கையை தொடர்ந்திருந்தனர்.

எல்லாம் அன்றைய இரவு வரும் வரை மட்டுமே.

வழக்கம் போல் ஜோடிகளின் டின்னர் முடிய, ஔகத்தோ குப்பிறப்படுத்து தூங்கிப் போனான். அவனைக் கட்டிக் கொண்டு உறங்கிய கீத்துவோ விடியற்காலையில் எழுந்தாள் சுச்சு போக.

கணவனின் டி - ஷர்டை ஆடையாக்கி கொண்ட கோமகளோ, வாஷ்ரூம் சென்று வந்து மீண்டும் மஞ்சத்தில் ஏற, கண்ணை பறித்தது டாக்டரின் முதுகிலிருந்து டாட்டூ. அதை மென்மையாய் வருடி இதழொத்தினாள் காரிகையவள்.

''இப்படி கண்டதையும் கண்ட இடத்துலே ஒளிச்சு வெச்சிருக்கறதுனாலதான், படாஸோட நடமாடும் ஆதாரமா இந்த கிருத்திகா, நான் மட்டும் இருக்கேன்!''

என்றவள், காதலனான கணவனின் தோளை வலிக்காது உறுஞ்சி வைத்தாள் லவ் பைட் ஒன்றை.

சிணுங்கியவன் நகர, ஆணவன் தலையணைக்கு அடியிலிருந்த அலைபேசியோ வெளியில் எட்டிப் பார்த்து சிரித்தது கீத்துவை.

அதை கையிலெடுத்தவளோ தொடுதிரையில் அவளின் முகங்கண்டு நாணி பூரித்து போனாள். ஆனால், அடுத்த நொடியே அச்சிரிப்பு காணாமல் போனது பெதும்பையின் முகத்திலிருந்து.

அது படாஸின் கைவண்ணம். எப்படி ஒருவனை கொன்று கோதையவளை செத்தவனின் சதைக்கொண்டு புனைந்திருந்தானோ ரேவ், அதே படம் இப்போது ஓவியமாய் காட்சியளித்தது ஔகத்தின் கைப்பேசி திரையில்.

கள்ளியவள் உசுரை கொடுத்து காதலித்த ரேவ்தான், இப்போது கட்டியிருக்கும் டாக்டரென்று பெண்ணவள் நம்பிக் கொண்டிருக்கையில், அடிக்கடி அவன் சரியாகத்தான் இருக்கிறானா என்ற சந்தேகம் வேறு வஞ்சியவள் மூளையைக் குடைந்தது.

கொடூரமான கொலைகளை கலைநயத்தோடு செய்திடும் அவன் எப்படி இப்படி ஒன்றுமே நடவாதது போலிருக்க முடியும் என்று பலமுறை யோசித்திருக்கிறாள் சுரிகுழலவள்.

அதே வேளையில், இவர்களின் கல்யாணத்துக்கு பின்னாடி ஔகத் அவளை தனியே விட்டு பிரிந்ததும் இல்லை. அப்படியிருக்க, இதுவெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்று சிந்திக்க தொடங்க, சில சமயங்களில் சேயிழையின் சிந்தையோ, புருஷன் அடிக்கடி ஒப்புவிக்கும் கூற்றை மேல்மாடியில் ஏற்றி குழம்பிக் கொண்டது, அவன் படாஸ் இல்லையென்று.

லட்டு போல் டாக்டரின் கைப்பேசி கையிலிருக்க, திருட்டு வேலை செய்ய சொல்லி போலீஸ் மூளை கீ கொடுத்தது காவல்காரிக்கு. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த புருஷனின் நடுவிரல் கொண்டு போன் லாக்கை திறந்தாள் தெரிவையவள்.

தலையிலே அடித்துக் கொண்டாள் நாயகியவள் காஜி மன்னனை நினைத்து, சிரித்து. எல்லோரும் ஏதேதோ விரலை வைப்பார்கள். ஆனால், ஔகத்தோ வித்தியாசமாகவும் காஜியாகவும் நடுவிரலை பூட்டுக்கு சாவியாக வைத்திருந்தான்.

டாக்டரின் வாட்ஸ் ஆப் தொடங்கி சோஷியல் ஆப்ஸ் வரைக்கும் ஒன்று விடாது அத்தனையையும் ஆராய்ந்த கோற்றொடியோ, கடைசியாய் கண்ணில் சிக்கிய டபுள் என் என்ற செயலியை கண்டாள்.

இதுவரை அப்படியான பெயரை கூட கேட்டிடா சனிகையோ, அதை எப்படி ஆப்ரேஷன் செய்வதென்று தெரியாது விழித்தாள். ஔகத்தின் விரல் ரேகைகள் எதுவுமே செட்டாகவில்லை, அச்செயலியை திறக்க.

அவர்களின் பிறந்த தேதி முதல் அவர்கள் முதல் முதலில் கிஸ்ஸடித்த திகதி வரை போட்டு பார்த்தாயிற்று, ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

கடுப்பாகியவள், பேட்டன்ஸ் வரைந்தாள். அதிலும் தோல்வியே, கடைசியாய் படாஸ் சொல்வது போல், விழிகள் மூடி சிந்தித்தவள் படக்கென கண்ணை திறந்தாள்.

படாஸ் என்று அருணியவள் டைப் செய்ய, திறந்துக்கொண்டது செயலி அது. வதனியின் வதனமோ, தவுசண்ட் வால்ட்ஸ் பல்பாட்டம் பிரகாசிக்க, இன்முகம் மாறா யுவதியோ புருஷனின் சேட்டிங் டேப்பை (Chatting tab) திறந்தாள்.

படிக்ககூட விடயங்களை படித்த பேடையோ, நீந்திருந்த ராத்திரியை ஏமாற்றத்தில் துரோகம் கொண்ட ரணத்தில் உழன்று, கழித்தாள்.

எட்டு மணிக்கு எழுந்த டாக்டரோ பொஞ்சாதியை அறை முழுதும் ஏலம் போட, மாமியாரோ, மகள் முன்னரே கிளம்பி போயாயிற்று என்று தகவல் சொன்னாள்.

வாட்ஸ் ஆப்பில் பொண்டாட்டிக்கு டவலோடு நின்றவாக்கில் படம் அனுப்பிய ஔகத்தோ, கர்ணாவின் பெயரை காலையிலேயே அலைபேசி தொடுதிரையில் காண நெற்றி சுருக்கினான், என்னவோ சரியில்லை என்றுணர்ந்து.

கைப்பேசியை காதில் வைத்தவன், பத்தே நிமிடங்களில் கிளம்பி மனையிலிருந்து வெளியேறினான் காலை சிற்றுண்டியைக் கூட உண்ணாது, பெரியவன் சொன்ன செய்தியைக் கேட்ட பதற்றத்தில்.

கீத்துவோ, ஸ்டேஷனில் அவளுக்கான தனியறை கேபினெட்டிலிருந்த புத்தகங்கள் தொடங்கி அழகு பொருட்கள் வரை எல்லாவற்றையும் எடுத்து பெட்டியொன்றுக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

''என்னாச்சு கீத்து உனக்கு?!''

என்ற கேள்வியோடு டாக்டரோ, காவல்கார மேடமின் அறைக்குள் நுழைய,

''என்னாகனும்?!''

என்ற மாயோளோ மிகச்சாதாரணமாகவே எதிர்கேள்வியெழுப்பி அவளின் வேலையைத் தொடர்ந்தாள்.

''எதுக்காக இப்போ வேலையே விடறே?!''

என்றவனின் தொனியிலேயே தெரிந்தது மயூர கன்ணனுக்கு சுந்தரியின் முடிவு பிடிக்கவில்லையென்று.

''ஓஹ்! அதுக்குள்ளே தகவல் தெரிஞ்சிடுச்சா?!''

என்றவளின் சலிப்பான தோள் குலுங்களில், டாக்டரின் உள்ளமோ குமுறியது நிலவரம் புரியாது.

''என் கேள்விக்கு பதில் இதில்லே கீத்து!''

என்றவனோ வல்லபியின் மேஜையை அடிக்க, பேரழகனின் கரத்தையும் அவன் முகத்தையும் ஓரக்கண்ணால் பார்த்த அலரோ,

''படாஸே என்னாலே புடிக்க முடியலே! தோத்து போயிட்டேன்! அதான், ரிசாய்ன் பண்றேன்!''

என்றுச் சொல்லி கேபினெட்டிலிருந்த ரீசனின் படத்தையே இமைக்காது பார்த்து நின்றாள் கிருத்திகா, நம்பிக் கெட்டவளாய்.

நேற்றிரவு புருஷனின் அலைபேசியில் டபுள் என், என்ற செயலியை திருட்டுதனமாய் செக்கிங் செய்த சீமாட்டியோ, தோராயமாய் மற்றவர்களுடன் டாக்டர் கொண்ட பேச்சு வார்த்தைகளை ஸ்க்ரோல் செய்து பார்த்தாள், ஏடாகூடமாய் ஏதும் சிக்குகிறது என்று.

மேலோட்டமாய் போன சேட்டிங்கில், மீடியாக்காரியின் ஹார்ட் எமோஜி, பத்தினியை ரிவர்ஸ் கேர் போட வைத்தது. நிறுத்தி நிதானமாய், ஒவ்வொன்றாய் படித்திடும் சூழ்நிலையை உருவாக்கியது ஞாழலின் அச்சின்னஞ்சிறு இதயம்.

யாராகினும், எவராகினும் கீத்துவிற்கு பிடிக்காது, ஔகத்திற்கு வேறு பெண்கள் இப்படி ஹார்ட் விடுவதெல்லாம்.

ஆகவே, மீடியாக்காரியின் பெயரைத் தட்டி அவர்களின் முந்தைய கதைகளை படித்திட ஆரம்பித்தாள் டாக்டரின் மனைவி.

தெரிந்துக் கொண்டாள் மெல்லியாளவள், உயிர் பிழைத்த சிஜனை அம்மணியின் சிநேகிதியோடு சேர்த்து வைத்த மாமா பையனே ஔகத்தானென்று.

இப்போதைய வெளிநாட்டு தம்பதிகளான அவர்களைத் தொடர்ந்து, நேரிழையின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, கர்ணா வரைக்குமான பேச்சு வார்த்தைகளை கண்ட காந்தாரிக்கோ மூச்சு நின்று போனது.

சொந்தமென கருதிய உயிரெல்லாம், முன்னேற துடிக்கும் ஜீவனை முடக்க பார்க்கும் அவலத்தில், கண்ணீர் வற்றிப் போனது ஏமாந்து போனவளுக்கு.

மடந்தையவள் ஜெர்மன் வரப்போகும் விஷயத்தை அவளுக்கு முன்னதாகவே கர்ணா சொல்லியிருந்தான், டாக்டரிடம். காரணம்தான் புரியவில்லை இளிச்சவாய் அவளுக்கு.

இப்படி அவர்கள் இருவரும் படாஸ் மற்றும் கீத்துவின் கேஸ் சம்பந்தப்பட்ட நிறைய விடயங்களை கலந்தாலோசித்திருக்க, முற்றிழை அவளுக்கோ கண்ணாடியை பார்த்து வல்வியவள் முகத்திலேயே துப்பிக்கொள்ள தோன்றியது.

தற்குறியாய் இருந்திருக்கலாமோ என்றுக்கூட மனசு கதறியது, கர்ணா மொத்தமாய் மாதங்கியின் தலையில் கல்லை போட்டிருக்க.

யாரை பார்த்து மிடுக்கான போலீஸ்காரியாக வேண்டுமென தெரியிழையவள் விடாப்பிடியாய் காவல்துறையில் காலடி எடுத்து வைத்தாளோ, அப்படியான கர்ணன் ராதேயனே இன்றைக்கு இளம்பிடியாளின் நம்பிக்கைக்கு இழுக்கானவனாக மாறிடுவான் என்று ஒண்டொடியவள் கனவிலும் நினைக்கவில்லை.

ஔகத்தின் போனையே ஆதாரமாக்கிட கிருத்திகாவால் முடியும். ஆனால், கர்ணா மீது அவள் கொண்ட மரியாதையும் பாசமும் தடுத்தது துடியிடையை அப்படியான முடிவொன்றை எடுத்திட வைக்காது.

அதுவும், சிஜனின் இறப்பின் போது காலியான பெட்டியை கரண் மூலம் ஏற்பாடு செய்து, போலீஸ் மரியாதை செலுத்தி எல்லாவற்றையும் கச்சிதமாய் நடத்தி, கடைசி வரைக்கும் மரப்பெட்டிக்குள் இருந்தது, இறந்துப் போன பூதவுடல் அல்லா வெறுங்கட்டைகள் என்ற உண்மையை யாரும் அறியாது பார்த்துக் கொண்டது கரனோடு சேர்ந்து கர்ணாதான் என்ற நிஜத்தில் மேலும் நொந்து போனாள் மடவரல் அவள்.

இத்தனை நாளும் விழித்துக் கொண்டே கனவுலகில் வாழ்ந்ததை போலுணர்ந்த நறுதுதலோ, கையாலாகாதவளாய் நின்றாள் தவறு அவளுடையது என்பதால்.

அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பது போல இக்கால நம்பிக்கைக்கும் பொருந்தும்.

ஏமாந்த வலி, கேலி பேச, இதற்கு மேலும் ஆசையாய் அணிந்த ஆடைக்கு களங்கத்தை ஏற்படுத்திட விரும்பவில்லை பைந்தொடியவள்.

அவளைத தவிர அதிபுத்திசாலி யாருமில்லை என்று கெத்தாக திரிந்தவளாய் பொட்டில் அடித்தாற்போல கொலைகளில் காதல் சொல்லி, பித்து பிடிக்க வைத்த மேதாவி படாஸ் மட்டுமே.

வித்தகிக்கு விகடகவியே சரியானவன் என்று ஔகத்தை, அவள் விரும்பிய ரேவ்வென்று நினைத்து மங்கள நான் பூட்டிக்கொண்ட பூமகளோ, அவள் இதுநாள் வரைக்கும் முட்டாளாக்கப்பட்டிருக்கிறாள் என்ற உண்மையில் சுக்கு நூறாகி போனாள்.

ஏற்கனவே, மூர்த்திகன் குரூப்ஸ் சேர்மன் ஔகத்தான் என்ற உண்மையும், சுரஜேஷ் அவன் தம்பி என்பதையும் கண்டறிந்தவள், குழந்தை இறப்பில் நடந்தவைகளை மறந்து சில காலம் டாக்டரின் அன்பில் மூழ்கியிருந்தது என்னவோ அவள் தெரிந்த செய்த காரியம்தான்.

ஆறப்போட்டு பின் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள் மகிலையவள். அதற்குள் இப்படியான தர்மசங்கடம் ஒன்று உருவாகி விட்டது.

அதுவும், ஏமாற்றியவர்கள் அனைவரும் குடும்பமாய் நினைத்தவர்கள் என்கிற போதுதான் விழுந்த அடியில், திரும்ப எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டாள் ஒளியிழையவள்.

அதுவே, ஆயிழையவளை அவளின் உயிரான போலீஸ் வேலையையும் தூக்கிப்போட தயாராக்கியது.

மூன்று மாதத்திற்கான ராஜினாமா கடிதத்தை கர்ணாவிடம் சமர்ப்பித்தாள் ஆடவள் அவள். அவன் ஏனென்று கேட்க, மென்புன்னகை ஒன்றை மட்டும் பெரியவனுக்கு பதிலாக்கிய வாசூரையவள், கோபப்படக்கூட திராணியற்று அவளறைக்கு திரும்பினாள், ஓய்ந்து போனவளாய்.

''இந்தா, அரெஸ்ட் பண்ணு! என்னே அரெஸ்ட் பண்ணு கீத்து!''

என்ற ஔகத்தோ அவனின் முஷ்டி மடக்கிய கரங்களை பாரியாள் நோக்கி நீட்ட, சத்தமாய் சிரித்த சிங்காரியோ, மெதுவாய் திரும்பி நின்றாள் அலமாரியில் முதுகு சாய்த்து.

''படாஸே புடிக்க முடியலே, அதானே இப்போ உன் பிரச்சனை!''

என்றவனோ தொடர்ந்து ஆவேசமாய் பேச,

''ஆனா, நீங்க படாஸ் இல்லையே டாக்டர்! அப்படித்தானே வழக்கமா சொல்லுவீங்க?''

என்ற கிருத்திகாவோ நக்கல் கொள்ள வார்த்தைகளுடன் கூடிய தொனியில்,

''இப்பவும் அதைத்தான் சொல்றேன்! ஆனா, உனக்குத்தான் புரிய மாட்டுது!''

''புரிஞ்சிக்கிட்டனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கேன்!''

என்றவளோ இழுப்பறையை இழுத்து அதிலிருந்த கோப்பொன்றை எடுத்து பாக்ஸுக்குள் வைத்தாள்.

''முதல்லே இந்த கன்றாவியிலிருந்து வெளிய வா கீத்து!''

என்ற டாக்டரோ, படாஸ் என்ற பெயர் கொண்ட கோப்பை முறைத்த வண்ணம் சொல்ல,

''முகத்தை காட்டிடாதவனா இருந்தாலும், என்கிட்ட உண்மையாதான் இருந்தான் படாஸ்! ஆனா, முகத்துக்கு நேரா இதுநாள் வரைக்கும் சிரிச்சவங்க அத்தனை பேரும் என் மனசுலே குத்துனவங்கன்னு தெரியும் போதுதான் நான் எவ்ளோ பெரிய ஏமாளின்னு புரியுது!''

என்ற தலைகன தாமரையோ, குனிந்த தலை நிமிராது சொல்ல,

''கீத்து..''

என்று நெருங்க முனைந்த ஔகத்தை கைநீட்டி நிறுத்தியவளாய் தொடர்ந்தாள்.

''படாஸ் எப்போதுமே சொல்லுவான், மனக்கண்ணாலே பாருன்னு! இப்போதான் அதோட அர்த்தம் புரியுது எனக்கு!''

''என் அகம்பாவ கள்ளியே, நீ ரொம்ப குழம்பி போயிருக்கே. லீவு சொல்லிட்டு வா, வெளியே போவோம். சுத்துவோம், ஒன்னா இருப்போம், விடிய விடிய பேசுவோம். எல்லாம் சரியாயிடும்.''

என்ற டாக்டரோ விருந்தினையின் கன்னத்தை மென்மையாய் பெருவிரல் கொண்டு வருட,

''ஔகத்தோட உடம்புக்கு மட்டும்தானே இந்த கிருத்திகா தேவை?!''

என்றவளோ தெப்பக்குளமான இமைகளோடு டாக்டரை வெறிக்க,

''நான்தான் சொன்னேன்லே நீ தேவையில்லாமே பேசறன்னு! வா, கிளம்பலாம்!''

என்ற டாக்டரோ கடுகடுக்க,

''சரிப்பாதிக்கிட்டத்தான் ஒரு மனுஷன் அவனோட மறுபக்கத்தை காமிப்பான்! அடிச்சாலும், புடிச்சாலும், அந்த உறவுலே நிம்மதியான ஒரு அன்பிருக்கும்! பாதுகாப்பு, விட்டுக்கொடுக்காத பொறாமே, எரிச்சலான அக்கறே, ஏன், வெறுப்பான காமம் கூட இருக்கும்! ஆனா, போலித்தனம் இருக்காது! எனக்கு அப்படியான கொடுப்பனை இல்லே ஔகத்! நீ யார் யாருக்கிட்டையோ, உன்னோட இன்னொரு முகத்தை காமிக்கறே! ஆனா, என்கிட்டே நடிக்கறே! இல்லன்னு, சமாளிக்கறே!''

''ஐயோ, கீத்து! ஏன் இப்படி கண்டதையும் கற்பனை பண்ணி நீயே உன் நிம்மதியே கெடுத்துக்கறே?!''

என்றவன் முகம் ருத்ரமுகமாய் மாற,

''டபுள் என் சேட்டிங் மொத்தத்தையும், நான் படிச்சிட்டேன் ஔகத்!''

என்ற கீத்துவின் உயிரற்ற வார்த்தையில், டாக்டரின் முகமோ வெளிறி போனது.

''உன் ரகசியங்களை தெரிஞ்சிக்கவோ, இல்லே நீ என்கிட்ட சொல்ல மறுக்கறே ஒரு பார்ட்னராவோதான் நான் இருக்கேன்னு தெரியும் போது, பிரச்சனை என்கிட்டத்தான்னு புரியுது ஔகத்!''

என்ற தலைவியின் முகத்தை கூட பார்த்திடாதவனாய் தலை குனிந்திருந்தான் டாக்டர்.

''என்னோட டார்க் சைட் (dark side), ஐ மீன் (I mean), நானா உன்னே தேடி வந்து, நமக்குள்ளே அப்போ நடந்த விஷயங்கள் உனக்கு தெரியும்னு நீ சொன்ன போது, முதல்லே எனக்கு, ரொம்பவே அவமான இருந்தது ஔகத்! ஆனா, நீ வேறே யாரோ இல்லையே! என் ஔகத்தானே! என் ஹஸ்பண்ட்தானே! உன்கிட்ட எனக்கென்னே அசிங்கம்?! என்னையேவே முழுசா கொடுத்திட்டேன்னே! நான் இல்லே, நாம்னு நினைச்சேன்! நமக்குள்ளே ஒளிவு மறைவே இல்லன்னு நினைச்சேன்! அதுதான், இப்போ ரொம்ப வலிக்குது!''

என்றவளோ கொட்டி விட்ட கண்ணீரை பட்டென துடைத்துக் கொள்ள,

''கீத்து, இப்பவும் நமக்குள்ளே எந்த..''

என்ற டாக்டரின் வாயை பொத்தி நிறுத்தியவளோ,

''நமக்குள்ள இனி டின்னர் இல்லே ஔகத்! மத்தவங்க உன்னே பத்தி அதிகமா தெரிஞ்சி வெச்சிருக்கறது, எனக்கு எப்படி இருக்கு தெரியுமா, எனக்கே எனக்கான என் புருஷனே அவுங்க முழுசா பார்த்த மாதிரி இருக்கு!''

என்றவளின் விலோசனங்களோ கரைபுரண்டோட, அவன் முகம் தொடங்கி புஜங்கள் வரை தொட்டுத் தடவிய மேகலையோ,

''நான் மட்டுமே ரசிச்சே உன்னே, ஊரே தொட்டு பார்த்து சிலாகிச்ச மாதிரி இருக்கு ஔகத்! என்னாலே அதை ஏத்துக்கவே முடியாது ஔகத்!''

என்றவளின் கதறலில், டாக்டருக்கோ அவனை யாரோ செருப்பால் அடித்தாற்போல இருந்தது.

முன்னரே கீத்து தெரிந்திருக்க வேண்டிய விடயங்களை சொல்லியிருக்கலாமோ என்று மனம் கிடந்து தவித்தது. இப்போதுக்கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, சொல்ல வேண்டியதைச் சொல்லி, இழுத்தணைத்துக் கொள்ள தோன்றியது டாக்டருக்கு அவன் வேட்டாளை.

அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்ட நொறுங்கியிருந்த அரக்கியோ,

''என் ஔகத்தோட நம்பிக்கையை கூட சம்பாரிக்க முடியாத நான், என்னே பொண்டாட்டி?! அந்த ஸ்தானத்துக்கே நான் லாயிக்கு இல்லல்லே?!''

என்றவளோ, குற்ற உணர்ச்சியில் இடிந்து போயிருந்த டாக்டரை விலகி, அறையிலிருந்து வெளியேற எத்தனிக்க,

''நம்பிக்கை இல்லாமையா, படாஸ் உன்னே தேடி வந்தான்?! உன்கூட ஒன்னா இருந்தான்?!''

என்ற ஔகத்தோ, அவள் முகம் பாராது, ஆயந்தியின் கரமிழுத்து நிறுத்தி வேள்விக் கொண்டான், பேரழகனின் கழுத்து நரம்பெல்லாம் புடைத்து நிற்க, வதனம் கோரமாய் உருமாற.

''கிருத்திகா புருஷன், படாஸ் இல்லே! தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்!''

என்றவளோ அவன் கையை உதறி வெளியேறினாள் அறையிலிருந்து, கனத்த இதயம் மரித்த உணர்ச்சிகள் கொண்டிருக்க.

படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 106
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top