- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 111
நிகழ்காலம்
மணி விடியற்காலை மூன்று.
இன்னும் படித்து முடித்திடவில்லை கிருத்திகா, அவள் கையில் கிடைத்திருந்த கேஸ் கோப்பை.
ஆர்வங்கொண்ட கோமகளோ, பக்கங்களைக் கூட ஸ்கிப் செய்யாது, அதன் அர்த்தங்களை உள்வாங்கிக் கொண்டு கடத்தினாள் ஏடுகளை, முடிந்தளவு சீக்கிரமாகவே.
இருநூற்று ரெண்டாவது பக்கத்தை வெற்றிகரமாக முடித்திருந்த மங்கையவள், அடுத்த பக்கத்துக்கு செல்ல டச்பேட்டை நகர்த்த, அதுவோ அசையாது அடம் பிடித்தது.
சலிப்போடு உச்சுக் கொட்டிய வல்வியோ, ஒன்றுக்கு மூன்று தரம் டச்பேட்டை மீண்டும் விரலால் உரச, அதுவோ கொலு பிள்ளையார் கணக்காகவே கிடந்தது.
எரிச்சல் கொண்ட பாவையோ, மடிக்கணினியின் டாஸ்க் மேனேஜர் (task manager) ஆப்ஷன் சென்று பார்க்கையில், எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.
சரி, என்ன கண்றாவியோ என்று கறுவிய மாயோளோ, எலியாரை (mouse) கொண்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து டாக்குமெண்ட்டை படித்திட முயற்சிக்க, எதுவுமே வேலைக்கு ஆகவில்லை.
பொறுமையை இழந்த இளம்பிடியாளோ, மடிக்கணினியை செந்தமிழால் அர்ச்சித்து அலைபேசியை கையிலெடுத்தாள்.
அதர்வா அனுப்பிய டாக்குமெண்டை போனில் படித்திட முயற்சித்தாள் முற்றிழையவள். ஆனால், பி.டி.எப். (PDF) கோப்பு அதுவோ, சிதைந்து விட்டது என்ற செய்தியை ஆங்கிலத்தில் காண்பித்து கீத்துவை மேலும் கோபப்படுத்தியது.
தாமதிக்காது, உடனே அழைத்தாள் மெல்லியாள் அவள், ஜூனியர் போலீஸ் அதர்வாவை. மீண்டும் அதே கோப்பை அனுப்பிட சொல்லி பணித்தாள் யுவதியவள், நிலையை அவனுக்கு தெரியப்படுத்தி, காண்டோடு.
அதர்வாவோ, சீனியர் அவளை ரிசீவரில் காக்க வைத்து மீண்டும் மெயிலை பெண்ணவளுக்கே போர்வேர்ட் (forward) செய்தான்.
அரிவையவளோ, புதிய மெயிலை லவுட் ஸ்பீக்கர் கொண்ட கைப்பேசியில் திறந்து பார்க்க, பழைய குருடி கதவை திறடி ரேஞ்சில், அக்கோப்பை மட்டும் தரவிறக்கம் செய்திடவே முடியவில்லை, பலமுறை முயற்சித்தும்.
காட்டு கத்து கத்தினாள் சீனியர் ராட்சசியவள், ஜூனியரின் காது செவிடாகும் வரை.
அகம்பாவ கள்ளியின் சீற்றம் தாளாது, விடிந்ததும் கோப்பை அச்சடித்தே கொண்டு வந்து சேர்ப்பதாய் வாக்களித்தான் அதர்வா.
ஆனால், மணவாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய தகவல்களை படித்த ஆயிழையோ, காக்க முடியாது, இப்போதே அச்சு கோப்பு வேண்டுமென்றால் கராறாய்.
பிடிவாதக்காரியின் குணம் கடுப்பை ஏற்படுத்தினாலும், பதவியில் பெரியவள் என்ற ஒரே காரணத்தால், சரியென்றவனோ போனை வைத்து அத்தனை மணிக்கு எங்கு அச்சு கடை கிடைக்குமென்று மண்டையை பீய்த்துக் கொள்ள தொடங்கினான்.
முஷ்டி மடக்கிய கைகள் ரெண்டும் வாய் தாடையில் தஞ்சங்கொண்டிருக்க, ஆழ்ந்த யோசனைக் கொண்டு கண்கள் மூடினாள் நேரிழையவள், சற்று முன் படித்த விடயங்களை எண்ணிப்பார்த்து, பால்கனி ஊஞ்சலில் சென்றமர்ந்து.
யோசித்து கூட பார்க்க முடியா கொடூரங்கள் அத்தனையும் தலைவிரித்தாடியிருந்தது அறிவியல் என்ற பெயரில், மானிட பிறப்பின் மீது.
''புறக்கண்ணால் பார்க்காதடி கிருத்தி! மனக்கண்ணால் பாருடி!''
என்று செவி நிறைத்த குரலால், பட்டென விழிப்பு தட்டியவளாய் எழுந்தமர்ந்தாள் டாக்டர் பொஞ்சாதி பஞ்சணையில், கோப்பு கைக்கு வரும் முன்.
ஏசி காற்று முகத்தில் ஜிலுஜிலுவென்று படர்ந்தாலும், குப்பென்ற வியர்வையில் அம்மணியின் முதுகோ நசநசத்து கிடந்தது.
உடம்பு என்னவோ செய்ய, அடிவயிற்றை இறுக்கிக் கொண்டவளோ மீண்டும் பின்னோக்கி சரிந்தாள் மஞ்சத்தில். உள்ளமோ சபலம் கொண்டு நாயகனை ஏங்க, திணவெடுத்த தேகமோ பசலையில் உழன்றது.
பீரியட்ஸ் வரப்போவதன் அறிகுறியாய் எல்லாம் அமைய, ஈகோவை விட்டு போனை கையிலெடுத்தாள் கோதையவள்.
காமம் வெட்கமறியாது. பல வேளைகளில் சுய மரியாதையே கிடையாது. காதலான கலவியில் முத்தெடுத்தவர்கள் மட்டுமே அறிந்திடுவர் அதன் ருசியை.
காதல் கணவனை பிரிந்திருக்கும் இளம் மனைவியோ, உடல் அனத்தால் தாங்காது,
''when are you planning to come back Gaji Manna?''
(எப்போ திரும்ப வர்றதா உத்தேசம் காஜி மன்னா?''
என்று டைப் செய்தாள், வாட்ஸ் ஆப்பில்.
ஆனால், மானினியவள் புருஷனுக்கு அதை அனுப்பிடும் முன்னரே, அழைத்தான் அதர்வா, நந்தி கணக்காய்.
''என்ன அதர்வா, இத்தனை மணிக்கு கோல்?''
''மேடம், தட்சன் பத்தின ஒரு முக்கியமான விஷயத்தை, ஸ்மார்ட் கேர்ள் ஜிமெயிலுக்கு, மெயில் அனுப்பிருக்கேன். என் டிடெக்டவ் பிரெண்ட் மூலமா இந்த நியூஸ் எனக்கு கிடைச்சது. பார்த்துட்டு கூப்புடுங்க.''
என்றவனோ கோட் வெர்டில் (code word) பக்கவாய் சொல்ல வேண்டியதை சொல்லி, அழைப்பை துண்டிக்க, நாயகியே அவளின் போலியான முகநூல் கணக்கின் இன்பாக்ஸை திறந்தாள்.
அதிலிருந்த பி.டி.எப். போர்மட்டில்லான (PDF format) டாக்குமெண்டை தரவிறக்கம் செய்த சீமாட்டியோ, மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்தப்படி மடிக்கணினியை தூக்கி மடியில் வைத்தாள்.
முன்னூற்றி எழுபத்தி ஏழு பக்கங்கள் கொண்ட ஆவண கோப்பின் தலைப்பாய், கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது தமிழில் பின் ஆங்கிலத்தில், 'வியாழம்' என்று.
அப்படி என்றால் என்னவென்றே போலீஸ்காரி அவளுக்கு சத்தியமாய் தெரியவில்லை. பக்கமில்லா படாஸை ரொம்பவே மிஸ் செய்து வருத்தங்கொண்டாள் வஞ்சியவள். காரணம், அவளுக்குத் தெரியும் தமிழை கரைத்து குடித்த வித்தகன் அவனென்று.
வியாழன் தெரியும். ஆனால், இது என்ன, புதிதாய் வியாழம் என்று மண்டையை ஐந்து நிமிடங்களுக்கு மேற்பட்டு உருட்டியவள், பின், தட்டி விட்டாள் மெசேஜ் ஒன்றை திரிலோவிற்கு, அக்குறிப்பிட்ட வார்த்தையின் விளக்கம் கேட்டு.
பட்டென வந்தது பதில், நாவலாசிரியரிடமிருந்து வாய்ஸ் நோட்டில்.
''நவகிரங்கள், ஆசான், வைடூரியம், அரசன், யாளி, கடவுள், பாம்பு, சந்திரன், பிரம்மன், உயிர். இது எல்லாமே நீ கேட்ட அந்த ஒத்தை வார்த்தைக்கான அர்த்தம், கீத்து. உனக்கு எது சூட் (suit) ஆகுமோ, அதை நீ தேவைக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணிக்கலாம். மணி ஒன்னாகுது, இன்னும் தூங்காமே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? சீக்கிரம் தூங்கு. குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்.''
என்ற ஸ்ட்ரெஸ் கிங்கின் துணைவியோ, நீண்டதொரு பட்டியலை கொஞ்சம் கரிசனத்தோடு சொல்லி, அருணியவளை மேலும் குழப்பினாள்.
''எப்படியும் மொத்தமா படிச்சாத்தான் எந்த பொருள் கொண்ட வார்த்தை இந்த ரிப்போர்ட்க்கு ஏத்த 'வியாழம்னு' தெரிஞ்சிக்க முடியும் போலே! நல்லா வருவடா அதர்வா! நான் உனக்கு வேலே கொடுத்தா, நீ எனக்கே விபூதி அடிச்சிருக்கே! இருடி படிச்சிட்டு வந்து உன்னே வெச்சுக்கறேன்!''
என்றவளோ அக்கோப்பை படித்தறிந்துக் கொண்டாள், போக்கா வாரான் என்ற ஆராய்ச்சி மாஃபியாவை பற்றிய குறிப்புகளையும் அவன் உருமாற்றிய ஹைபிரிட் உயிரினத்தை பற்றியும்.
பக்கென்றது பெதும்பைக்கு சில இடங்களில் ரிப்போர்ட்டை படிக்கையில்.
கட்டி குடும்பம் நடத்தும் டாக்டர்தான் படாஸ் என்று அவள் கதற, இல்லையென்று தொண்டை தண்ணி வற்ற ஒவ்வொரு முறையும் முட்டுக் கொடுக்கும் புருஷன், நிஜமாகவே சுந்தரியின் மனம் கவர்ந்த கள்வன் இல்லையா என்று பதைத்தது உள்ளம் பைந்தொடிக்கு.
நேத்திரங்களோ அங்கும் இங்கும் நில்லாது பரதம் கொண்டன, அன்றைய அடவி காதலனின் ஆக்க்ஷன் சீக்குவன்சுகளையும், அந்திரன் அவன் அதரங்கள் அந்திகையின் இதழ் கோர்த்த சம்பவங்களையும் நினைவுப்படுத்தி.
ஒண்டொடியின் உடலோ பதற்றம் கொண்டு கிடுகிடுத்தது, மானினியின் கணிப்பில் தவறேதும் நிகழ்ந்து விட்டாது, என்று புரியாது.
கோற்றொடியின் மனமோ கிடந்து அடித்துக் கொண்டது, ஒருக்கால் ஔகத் இதுநாள் வரை உயிரை கொடுத்து பறைசாற்றிடும் கூற்று மெய்யாகி போனால், ஒளியிழையின் நம்பிக்கை பொய்தானா என்று.
மொய்குழல் அவள் மனசாட்சியே, கீத்துவை ஏதேதோ கேள்விகள் கேட்டு படுத்தி எடுக்க, குழப்பத்தில் துவண்டவளோ எழுந்தோடி போய் இறுக்கினாள் பால்கனி கம்பிகளை விரல்களால்.
பாதி படித்த கோப்பை முழுதும் படித்திட முடியவில்லை கீத்துவால். அதனால், எழுந்த குழப்பங்களுக்கு இப்போதைக்கு விடையும் இல்லை.
தட்சனின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோப்பென்று நினைத்த ஆவணம், இப்போது, மடந்தையின் வாழ்க்கையை விவாதிக்கும் சம்பவம் ஆகிப்போனது என்னவோ விதியின் விளையாட்டே.
வெட்கத்தில் ஒவ்வொரு முறையும் சிவந்து, கலவி பெருமூச்சில் அரை வியர்த்த சரித்திரங்கள் ஞாபகத்திற்கு வர, டாக்டர் எங்கே படாஸ் இல்லையோ, என்று ஆயந்தியின் மனமோ கலவரத்தில் சிக்கி தவிக்க,
''நோ!''
என்றலறிய மாதங்கியோ, பால்கனி கம்பிகளை இறுக்கமாய் பற்றியப்படியே தரை அமர்ந்தாள்.
உள்ளம் கொதித்தது காந்தாரியவளுக்கு.
ஆங்கார வள்ளியவள் சர்வ நிச்சயமாய் அறிவாள், அன்றைக்கு மனம் ஒத்து அவளை சொந்தமாக்கி கொண்டதும் அதே ஔகத்தான், இன்று ஊரறிய மங்கலநாண் பூட்டி அவளோடு மஞ்சம் பகிர்ந்தவனும் அவன்தான் என்று.
இருந்தும், வாசுரை அவளின் மூளைக்குள் சந்தேக தீப்பொறி புயலை கிளப்பி விட்டிருந்தது.
சுரஜேஷை பற்றி அலரவள் படித்தறிந்து விடயங்களும் பாடஸ் சார்ந்த விஷயங்களும் பத்து பொருத்தமும் கொண்டு பொருந்தி போக, கத்தி கதறுவதை விட வேறென்ன செய்திட முடியும் அபலை அவளால், படாஸ் நேரடியாய் வரும் வரை.
''நோ! நோ! நோ! நோ!''
என்று மீண்டும் உயிர் போகும் ரணங்கொண்டு கதறினாள் படாஸின் கிருத்தி, எங்கே மலரவள் பெண்மை வெவ்வேறான இரு ஆண்களால் துண்டாடப்பட்டு விட்டதா என்று புரியாது.
சேயிழையின் உள்ளமோ, வரிந்துக் கட்டிக்கொண்டு கீத்துவின் ஒழுக்கத்தை கேலி பேசியது, பகினியவள் கூத்தடித்த ஆண்கள் இருவரும் சகோதரர்கள் என்று.
ஏகத்துக்கு கண்டதையும் சிந்தித்தவளின் சிந்தனையோ, வெறும் கண்ணால் கண்ட டாக்குமெண்டின் எழுத்துகளைக் கொண்டு, கதை எழுத ஆரம்பித்தது அவளின் காதல் மற்றும் திருமணம் கண்ட தாம்பத்தியத்தை பற்றி.
உடைந்து நொறுங்கியிருந்தாள் கிருத்திகா, புறக்கண் ஏமாந்து மனக்கண் கொண்ட காதலை எண்ணி.
படாஸ் யாரென்ற தேடலில் அவளை தொலைத்து நிற்பது சதியா, விதியா, என்று புரியாது, தெய்வத்திடம் முறையிட்டு மன்றாடினாள் மடவரலவள், வதூ அவளின் அன்பை கொச்சையாக்கிட வேண்டாமென்று.
அலறியது பனிமொழியின் அலைபேசி. தரையில் அமர்ந்திருந்தவளின் குனிந்த தலையோ நிமிரவே இல்லை. அதர்வா என்று நினைத்தவளின் நயனங்களோ விரியவே இல்லை.
செவிடாகி போனது சில நொடிகளுக்கு வனிதையவள் காதுகள். அலறிய கைப்பேசியின் பாடலோ அவனுக்கே, அவனுக்கான அவர்களின் விருப்பப்பாடல் என்பதை கூட உணர முடியாத அளவில் திக்கற்ற எண்ணத்தால் சூழப்பட்டிருந்தாள் ஒளியிழையவள்.
கம்பிகளில் பிணைந்திருந்த விறலியின் விரல்களோ டப்பென தளர்ந்தன, சிந்தை மின்சார பாய்ச்சல் கொண்டு திடுக்கிட்டு முழித்துக் கொள்ள, ரிங்டோன் இசை இதயம் தொட.
ஓடினாள் பின்னங்கால் பிடரியில் பட கீத்து மஞ்சம் நோக்கி. கைபேசியின் தொடுதிரையிலோ சனிகையவள் உள்ளத்தை அள்ளிக் கொண்டு ஜெர்மன் பறந்த மணவாளனின் பெயர் மின்னி சிரித்தது.
பொலபொலத்த கண்ணீர் அடங்காது,
''ஹலோ..''
என்றவளோ அழுகையோடே பேச்சை ஆரம்பிக்க,
''என்ன பண்றே?''
என்றவனோ, கண்டம் விட்டு கண்டம் தாண்டிய நிலையில் நேராக மேட்டருக்கு வந்தான், பிரிந்திருந்த போதும் விருந்தனை அவளுக்கு என்னவோ ஏதோவென்று உள்ளம் தடுமாற.
தாரை தாரையாய் கண்ணீர் கொண்ட வல்லபியோ, விசும்பலை மறைக்க முயற்சித்தாள்.
ஔகத்தோ ஏதும் பேசாது அமைதியாகவே இருந்தான், ரீசன் மகள் பேசட்டும் என்று பொறுமைக்கொண்டு.
''எப்போ வருவே?''
என்ற பெண்டுவோ, தழுதழுத்த குரலில் கேட்க,
''தூங்கு.''
என்றவனோ கண்களை மூடினான் கடல் தாண்டிய மெத்தையில் மல்லாக்க படுத்தப்படி, அகமுடையாளின் ஏக்கத்தை அவள் கேள்வியில் உணர்ந்து.
''கை நீட்டு!''
என்றவளோ விழியோரம் வழிந்திறங்கிய கண்ணீரோடு தலையணையில் அம்பகங்கள் மூடி தலைசாய்க்க,
''வா, வந்து படு!''
என்ற ஔகத்தோ, தேங்கிக்கிடந்த நேத்திரங்களுக்கு விடைக் கொடுத்தான் அவைகளை சிந்த விட்டு.
'ஐ மிஸ் யூ கீத்து' என்றவன் வாயோ கூப்பாடு போட துடித்தது. ஆனால், விரும்பாதவனோ இதழ்களை பிரிக்காதே இருந்தான்.
''எப்போ வருவே?''
என்றவளோ தேம்பியப்படி மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றாள் காதலான குழப்பதில் சிக்கி.
''சாவரத்துக்குள்ளே வந்திடுவேன்.''
என்றவனோ இரும்பலோடு சொல்ல,
''பைத்தியமா ஔகத் உனக்கு?! ஏன், இப்படியெல்லாம் பேசறே?! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஔகத்! பிளீஸ்! இப்படி பேசாதே!''
என்ற கீத்துவோ கால்களை குறுக்கி போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டாள் அழுகையோடு, அவனோடு சண்டை போடும் நிலையில் அவளில்லை என்பதை உணர்த்தி வார்த்தைகளில் கனிவு கொண்டு.
''நான் போயிட்டா என்னே, அதான் படாஸ் இருக்கானே!''
என்ற ஔகத்தோ நிறுத்தாது இரும்பல் கொண்டான், முகமெல்லாம் வெளிறி போக.
''எனக்கு படாஸ் நீதானே!''
என்ற கீத்துவோ மூக்குச்சளி ஒழுக அலற,
''நான் படாஸ் இல்லே கீத்து!''
என்றவனோ இரும்பல் எல்லாம் குருதி கொண்டு தெறிக்க, வாஷ் பேஷன் நோக்கி அன்ன நடைப்போட்டான் தள்ளாட்டத்தோடு.
''பொய்! பொய்! பொய்! நீ பொய் சொல்றே ஔகத்! எனக்கு தெரியும்! என் மனசுக்கு தெரியும்! என் உடம்புக்கு தெரியும் ஔகத்! நீ தொட்ட இந்த உடம்புக்கு தெரியும் ஔகத், நீதான் படாஸ்னு!''
என்றவளோ போர்வையை தூக்கி வீசி ஆவேசத்தில் கதங்கொண்டாள்.
''இல்லே கிருத்தி, நான் படாஸ் இல்லே!''
என்றவனோ குளியலறை வாஷ் பேஷனை அடையும் முன்னரே, ரத்த வாந்தியோடு தரையில் விழுந்தான் பொத்தென, போன் பேரழகனின் கையிலிருந்து நழுவி ஓரம் போக.
''நீ என்னே எப்படி வேணுன்னாலும் முட்டாளாக்கலாம் ஔகத்! ஆனா, நீ தொடும் போது நமக்குள்ளிருந்த அந்த லவ் சொல்லும்! என் லவ் சொல்லும் ஔகத்! நீதான் என் படாஸ்னு! நீதான்! நீயேதான்!''
என்றவளோ கைப்பேசியை தூக்கி மஞ்சம் வீசி, முகத்தை மூடி முட்டிக்கால்களில் புதைத்துக் கொண்டாள் கதறலோடு.
சுந்தரியவள் கொண்ட சினத்தில் ஔகத்தின் கவலைக்கிடம் மெல்லியல் அவள் உணரவில்லை.
எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால், அழுகை கடலில் குளித்தாள் ஔகத்தை இளமையிலிருந்தே காதலித்து கரம் பிடித்து கிருத்திகா.
யாரோ வீட்டு கோலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்க, முகத்தை கழுவிக் கொண்டு தடதடவென கீழ் தளம் நோக்கினாள் போலீஸ்காரியவள்.
முன் வாசல் கதவை திறக்க, அதர்வாவோ பேயறைந்தவன் போல் நின்றிருந்தான், விடியற்காலை ஐந்துக்கு. நெற்றியில், கன்னத்தில், கையில் என்று ஆங்காங்கே காயங்கள் கொண்டிருந்தான் ஆணவன் செம்புனல் பல்லிளிக்க.
''என்னாச்சு அதர்வா?! ஏன் இப்படி அடிப்பட்டிருக்கு?! ரத்தம் வேறே வருது! ஹோஸ்ப்பிட்டல் போகாமே இங்க ஏன் வந்தே?!''
''மேடம், இது சாதாரண கேஸ் இல்லே! இதுலே வேறே என்னவோ பெருசா இருக்கு!''
என்றவனோ பொசுங்கி போன பென் ட்ரைவை கீத்துவின் முன் நீட்ட,
''என்னையா உளரே?! சரி, சரி, முதல்லே உள்ளே வா!''
என்ற சுரிகுழலோ வீங்கிய விழிப்படலங்களோடு, பென் ட்ரைவை அவன் கையிலிருந்து வாங்கியப்படி வரவேற்பறை நோக்கினாள்.
''மேடம், உங்களுக்கு மட்டும் இல்லே, எனக்குமே அந்த ஃபையில் டவுன்லோட் ஆகலே!''
என்றவன் கைகளில் நீர் நிரம்பிய கிளாஸை கொடுத்தாள் காவல்காரியவள்.
''நான் என்னோட போன், லேப்டப், என் தங்கச்சி போன், லேப்டப், என் அம்மா போன் வரைக்குமே ட்ரை பண்ணிட்டேன் மேடம்! ஆனா, முடியலே!''
என்றவன் நெற்றியில் மருந்தை போட்டு கீத்து ரத்தத்தை துடைக்க,
''ஸ்ஸ்ஸ்! மேடம், மெதுவா!''
''அதெல்லாம் எனக்கு தெரியும்! மேலே சொல்லு!''
என்றவளோ அதர்வாவின் கன்னங்களை பஞ்சு கொண்டு துடைத்தாள்.
''கடைக்கு கூட போய் பார்த்துட்டேன், முடியலே மேடம்! டிடெக்டவ் பிரண்டுக்கு கோல் பண்ணி விஷயத்தே சொன்னேன். அவனுமே செக் பண்ணி பார்த்திட்டு ரொம்ப ஷாக்கிங்காக திறக்க முடியலன்னு சொன்னான் மேடம்!''
''எப்படி அதர்வா? அவர்கிட்டத்தானே ஒரிஜினல் இருக்கும்?!''
''ஆமா மேடம்! ஆனா, ஏன் அந்த ஃபையில் அவ்ளோ பிரச்சனை பண்ணுச்சின்னு சத்தியமா புரியலே! உங்களுக்கு ப்ரோமிஸ் பண்ண மாதிரி டாக்குமெண்டை பிரிண்ட் போட்டு உங்க கையிலே கொடுக்க, எனக்கு அவனே நேரடியா மீட் பண்றத தவிர வேறே வழியேதும் தெரியலே!''
என்றவனோ காஃபி டேபிளின் மீதிருந்த கிளாஸ் நீரை மொத்தமாய் குடித்து முடித்து தொடர்ந்தான்.
''நான் அவன் வீட்டுக்கு போய் இந்த பென் ட்ரைவே வாங்கிட்டு வர வழியிலே, கார் ஒன்னு மோதி, தப்பிச்சு பிழைச்சு வந்திருக்கேன் மேடம்.''
''என்ன அதர்வா சொல்றே? ஆக்சிடெண்ட்டா?! முதல்லே எழுந்திரி நீ! கிளம்பு ஹோஸ்பிட்டலுக்கு!''
என்ற கீத்துவோ அவன் காயங்களில் பிளஸ்ட்டரை ஒட்டியப்படி அவனுக்கு கட்டளை பிறப்பிக்க,
''ஐயோ, மேடம்! அதெல்லாம் இருக்கட்டும்! முதல்லே நான் சொல்றதே கேளுங்க! இந்த பென் ட்ரைவ் என் பாக்கெட்லே இருந்துச்சு. ரோட்டுலே கிடந்த நான், இது எங்கையாவது தவறி விழுந்திருங்கான்னு பார்க்கும் போது, இது ரோட்டு ஓரத்துல இப்படி கிடந்துச்சு!''
என்றவனோ காஃபி டேபிளின் மீதிருந்த பென் ட்ரைவை கை நீட்டி காண்பித்து தொடர்ந்தான்.
''ஆனா, இது இப்படி பொசுங்கி போறதுக்கான வாய்ப்பே அங்க இல்லே மேடம்! அப்படி இருந்தும் இது எப்படி நடந்துச்சுன்னே புரியலே மேடம்! ஏதோ பேய் படத்துலே ட்ரவல் பண்றே மாதிரி இருக்கு!''
என்றவன் சொல்ல, எரிந்துப்போன பென் ட்ரைவை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்ட கீத்துவோ, அதை கூரிய பார்வைகளால் உற்று நோக்கினாள்.
அதர்வாவோ, அலறிய போனோடு கதைத்து, கைப்பேசியை காதிலிருந்து கீழிறக்கினான்.
''என்னாச்சு?! யார் போன்லே?!''
என்றவளோ ஸ்மார்ட் டிவியில் அப்பென் ட்ரைவை சொருகி, ஏதாவது தேறுகிறதா என்று முயற்சிக்க.
''என் பிரெண்ட், டிடெக்டவ், செத்துட்டான் மேடம்!''
என்றவனோ பட்டென போட்டுடைத்தான்.
''என்னையா சொல்றே?!''
என்று கீத்துவோ அதிர்ச்சியோடு அதர்வாவின் முகம் வெறிக்க,
''பாத் டாப் தண்ணிக்குள்ள மூழ்கி இறந்திருக்கானாம் மேடம்!''
''கோல் பண்ணது யாரு?!''
''அந்த ஏரியா போலீஸ். என் பிரெண்டுதான். கேஸ் கொடுக்க வந்து, வீட்டுக்கு வெளிய ஒரே தண்ணியா இருக்கறதே பார்த்து டவுட்டாகி, கதவே உடைச்சு உள்ளே போய் பார்த்திருக்கான்! டிடெக்டவ் ஆண்டி கோலத்துலே, பாத் டாப்க்குள்ள இறந்து போயிருக்கான்!''
என்றவன் சொல்லி முடிக்கையில், கீத்துவோ அவளின் அலைபேசியை தேடி ஓடினாள் மாடிக்கு.
வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்திருந்தது படாஸின் காதலிக்கு, புதிய எண்ணிலிருந்து. படத்தை டவுன்லோட் செய்து பார்த்தவளுக்கோ பேரிடி.
''அதர்வா!''
என்றலறியவளின் அடிநாதம் அடங்கும் முன், ஓடோடி மாடிக்கு வந்தான் அடிப்பட்ட காலோடு.
சீனியர் சிலையாய் நிற்க அவளருகில் சென்று நோக்கினான் மேடமின் கையிலிருந்த வாட்ஸ் ஆப் படத்தை, ஜூனியர் அவன்.
''இது உன் பிரெண்டு நம்பர்தானே?!''
''ஆமா மேடம்! ஆனா, அவன் செத்து ஒரு மணி நேரத்துக்கு அப்பறமாத்தான் உங்களுக்கு மெசேஜ் வந்திருக்கு!''
''சிக்னல் பிரச்சனையா இருக்கும்!''
என்றவளோ டாப்பிக்கை மாற்றி, வந்திருந்த படங்களை உடனடியாக கூகள் ட்ரைவில் சேவ் செய்தாள், பரத்துக்கு அனுப்பி வைத்து.
''ஆனா, அவனுக்கு தமிழ் படிக்க தெரியாதே மேடம்!''
என்று எச்சில் விழுங்கியவனை, பிதுங்கிய விழிகளோடு திரும்பி பார்த்தாள் கீத்து.
''நான்தான் சொன்னேன்லே மேடம்! இது வேறே என்னவோ! என்னன்னவோ நடக்குது மேடம்! ஒன்னுமே புரியலே! கொலையா இருக்குமோ?!''
என்ற அதர்வாவோ, அவன் போலீஸ் என்பதை மறந்து சிறு நடுக்கமே கொண்டான்.
''உன் போலீஸ் பிரெண்ட் கூட டச்லையே இரு அதர்வா, இந்த கேஸ் சம்பந்தமா.''
என்ற கீத்துவோ, மீண்டும் படத்தில் எழுதியிருந்த வார்த்தைகளை ஆழ்ந்த யோசனையோடு கவனித்தாள்.
நோட்டொன்றில் வரிசையாய் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அனுப்பப்பட்டிருந்தது, இறந்துப்போன அதர்வாவின் நண்பனான, வேதனின் அலைபேசியிலிருந்து.
'சத்யோ ஜாதம்
வாமதேவம்
அகோரம்
தற்புருடம்
ஈசானம்'
சிவப்பு நிற பேனா கொண்டு எழுதப்பட்டிருந்த அவ்வார்த்தைகளில் வாமதேவம் மட்டும் போல்டாகவும் (bold) கொஞ்சம் சாய்வாகவும் இருந்தது.
''வாமதேவம், அப்படின்னா என்னன்னு பாரு அதர்வா!''
என்று ஜூனியரிடம் சொன்ன கீத்துவோ, அவளின் மூளைக்குள் கிளிக்கிய விஷயத்தை தெளிவுபடுத்த ஓடினாள், அவளின் ஸ்டடி அறை நோக்கி.
''கழட்டி விட்டுட்டு போகாதீங்க மேடம்! பயமா இருக்குள்ளே!''
என்ற அதர்வாவோ அவளின் பின்னாடியே ஓடினான்.
கீத்துவோ, காதலன் படாஸ் பற்றிய கோப்புகளை மேஜையின் மீது கடை பரப்பினாள்.
''மேடம், சிவபெருமானுக்கு ஐந்து முகம் இருக்கு.''
''ம்ம்.''
என்றவளோ கோப்புகளின் ஒற்றுமைகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தாள்.
''உங்களுக்கு வாட்ஸ் ஆப்லே வந்த படத்துலே, அந்த ஐஞ்சு முகங்களோட பேர்தான் எழுதிருக்கு.''
''ம்ம்.''
என்றவளோ ஔகத்தின் மேக் (Mac) கணினியில் எதையோ தேட,
''வாமதேவம், ரெண்டாவது முகம். வடக்கு திசையை பார்த்திருக்கும். நீரோட தன்மையே கொண்டிருக்கும்.
என்றவனோ டேபிளின் விளிம்போரம் நின்றப்படி சொல்ல,
''வாமதேவத்தோட வரலாறு சொல்லு?''
என்ற கீத்துவோ, நெற்றியில் சுருக்கங்கள் கொள்ள புருவங்களை குறுக்கினாள், தொடுதிரையோ முற்றிழையின் வதனத்தை மாற்றியிருக்க.
''பிரம்மாவோட தவத்துலே சந்தோஷமானே பரமேஸ்வரன், சடாமுடியிலே பாம்புகள், கைகள்லே மழுவோட, அவருக்கு காட்சி தந்திருக்காரு. அந்த லுக்கத்தான் வாமதேவம் அப்படினு சொல்றாங்க.''
''சரி, நீ கிளம்பு! ஸ்டேஷன்லே பார்க்கலாம்.''
என்ற கீத்துவோ ஜூனியரின் முகம் பார்க்காது அவனை அங்கிருந்து துரத்த,
''மேடம், நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு கிளம்பவா? முடியலே!''
என்றவனோ பாவமாய் சொல்லி நெளிய,
''கீழே சோபாலே படுத்துக்கோ. லீவு சொல்லிடு. ஒன்பது மணிக்கு மேலே டாக்டரே வரச்சொல்றேன். ரொம்ப வலியா இருந்தா, இந்த பெயின் கில்லர் ரெண்டே போட்டுட்டு படு.''
என்ற போலீஸ்காரியோ, இழுப்பறையிலிருந்த பெயின் கில்லர் பட்டையை எடுத்து மேஜையின் மீது வைத்து, மீண்டும் பார்வைகளை கணினியின் தொடுதிரையில் பதித்தாள்.
''அப்படி அந்த டாக்குமெண்ட்லே என்னதான் மேடம் இருக்கு?!''
என்ற அதர்வாவோ அறையின் கதவோரம் நின்று, புரியா புதிர் கொண்டு நோக்கினான் சீனியரின் முகத்தை.
''நாமே தெரிஞ்சிக்க நினைக்கறே அந்த ஒன்னு! நாமே தெரிஞ்சிக்கக்கூடாத ஏதோ ஒன்னு!''
என்ற கிருத்திகாவோ, கேதார்நாத்துக்கான அவளின் பழைய விமான சீட்டை கேன்சல் செய்து, புதிதாய் ஒன்றை வாங்கினாள், இன்னும் ரெண்டு நாட்களில் மகாதேவன் சன்னிதி செல்ல.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 111
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.