- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 115
களத்தை நிகப்பிரபை (இருள்) சூழ்ந்திருக்க, அண்டங்காக்கும் அடர்ச்சடையனின் (சிவன்) ஓம் நமசிவாய என்ற நாமம் சுற்றத்தை மூழ்கடித்திருந்தது.
நிரத்திமாலியின் (சிவன்) மீதுக்கொண்ட அலாதியான பக்தியின் பரவசத்தில்,
''கரால பால பட்டிகாதகத் தகத்தக ஜ்வலா
தனஞ்சய ஹுதிக்ருத பிரச்சண்டபஞ்சசாயகே
தாரதரேந்திர நந்தினி குசாகிரசித்ரபத்ரக
பிரகல்பனைகஷில்பினி த்ரிலோசனே ரதீர்மமா!''
(முக்கண் உடையவனும், சக்திவாய்ந்த காமதேவனை அக்னிக்கு இறையாக்கியவனும், தகத் தகத், எனும் சப்தத்திற்கேற்ப அதீத சக்திகொண்ட அவன் நெற்றியில் அக்னி தகிக்க, பர்வதராஜனின் மகளான பார்வதி தேவியின் மீது அழகழகாக அலங்காரக் கோடுகள் வரையக்கூடிய ஒரே ஓவியனுமான, எம்பெருமான் சிவனில் மட்டுமே நான் ஈடுபாடு கொண்டுள்ளேன்!)
என்ற குரலோ ஆக்ரோஷமாய் ஒலித்து, ஓங்கி அடித்தது, கண் முன்னிருந்த ராட்சத அளவிலான உடுக்கையை, ஒவ்வொரு வரிக்கும் சேர்த்து மொத்தமாய் எட்டு முறை.
மஹிஹி கூட வந்து நின்றான், கண்ணாடியிலான சாளரத்தின் முன் ஓசையெழுப்பி ஆர்கலி சிலிர்க்க பக்தி கொண்டு, தலைவனின் உக்ரத்தில் பங்கு கொண்டவனாய்.
காரிருள் கானகமாய் வீற்றிருந்த அவ்விடம், விபோதனின் சிவ ஸ்தோத்திரத்தில் உயிர்கொண்டது.
வில்வ மரங்களை பீடித்திருந்த பனியோ, கொஞ்சங் கொஞ்சமாய் உறைய ஆரம்பித்தன, புடமெங்கும் (இடம்) ஜீவித்திருந்த நமச்சிவாய என்ற வரிகளில்.
திடமான நீர்க்கட்டிகள் திரவமாக, தரையோ கங்கையாகியது.
கடலுக்கு அடியிலான கோட்டையோ, ரங்கோலியாய் மின்னி மிளிர்ந்திட ஆரம்பித்தது, ஈரமாகிய நிலத்தில் தாழம்பூக்கள் பூத்து குலுங்க.
விட்டம் ஏறெடுத்தவனின் தேகமோ அனலாய் கொதிக்க, எக்காளமிடும் பேரிரைச்சலோடு உயிர்தெழுந்தது வெள்ளை நிறத்திலான சங்கக்குழையானின் (சிவன்), மஹா நந்தி, நீசகத்தரையை (நீர்த்தரை) பிளந்துக் கொண்டு.
கைலாச நந்தி தொடங்கி அவதார நந்தி, அதிகார நந்தி, சாதாரண நந்தி இறுதியாய் பெரிய நந்தி என்றழைக்கப்படும் ஐவகை நந்திகளின் கூட்டாய் எழுந்து நின்றிருந்தான் விஸ்வரூப நந்தியவன் நிடலத்தில் திருநீறு பட்டைக்கொண்டு, படாஸின் முகம் பார்த்து.
குளிர்ந்த நீரோடையாய் தரையெங்கும் தறிக்கெட்டு ஓடிய ஜலத்திலிருந்து உருப்பெற்றிருந்த காளையின் திட்டிகளோ, மயில் நீலத்தில் மிளிர, இழைந்தோடும் புன்னகை கொண்டான் ரேவ் இதழோரம்.
வியர்வை முதுகில் மாரித்துளியாய் மொட்டிட்டு வழிந்திறங்க, புத்திமானின் உள்ளங்கைகளோ உடுக்கையை பதம் பார்த்தன.
ரேவ்வின் சத்தத்தில் நந்தியோ வாலாட்டி தலையாட்டினான், நெடுநாட்களுக்கு பிறகு விடுதலை பெற்று கவிகேட்கும் நிலையை சுகித்த ஆனந்தத்தில்.
தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருக்கிய தங்கம் மற்றும் நவரத்தின பச்சையிலான வர்ணங்களோ அவ்விடத்தை கோலாகலமாக்க, அறிவாளியின் கழுத்தோர பச்சை நரம்புகளோ புடைத்து நின்றன அவன் பக்தியில் திளைத்து.
''விதனத்தின் (மனவேதனை) விபவம் (வரம்) என் கிருத்தி!''
என்ற படாஸோ உதடு மடக்கிய தோரணையோடு, மீண்டும் ஓங்கி அடி அடியென்று அடித்தான் உடுக்கையை, கிடங்கர் (கடல்) கோட்டை குலுங்க.
நந்தியும், மஹிஹியும் வேறு சும்மா இருக்க முடியாது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கணக்காய் படாஸின் சினத்திற்கு மேலும் ஜிங்கிச்சா அடித்தனர், ஆரவாரம் கொண்டு.
''சஞ்சாரனின் (உயிர்) அபிடங்கம் ( சாபம்) என் கிருத்தி!''
என்ற விகடகவியவன் மார்பில் கம்பீரமாய் கொலு கொண்டிருந்த ருத்ராட்ச மாலையோ, அங்கும் இங்கும் அலைமோதியது, மருள் வந்தவன் போல் ரேவ் அவனுடல் அசைக்க.
''யாக்கை (உடல்) தின்று
யுபம் (புத்தி) பருகி
மூர்த்தி (தலைவன்) வென்றிடுவேன்!''
என்ற படாஸோ அடக்க முடியா கதத்தில் அலறி, உடுக்கையை அடித்தோய்ந்த கரங்களை அகல விரிக்க, வந்து விழுந்தது சூரனவன் உள்ளங்கையில் பால் வண்ணம் மாறா பாஞ்ச சன்னியம் சங்கு.
அரிதாக கிடைக்கக்கூடிய வலம்புரி சங்கின் வகையை சேர்ந்த இச்சங்கோ அதைவிட அபூர்வமானதாகும். அதையே, கொண்டு வந்து சேர்ந்திருந்தான் ரேவ், தரணி ஆளும் தில்லைநாதனுக்காய் (சிவன்).
உச்சி முதல் பாதம் வரை தணலாய் கொதிக்க, சரீர ரோமங்கள் படிப்படியாய் அடர்த்தியாக, நெஞ்சம் நிமிர நின்றிருந்த படாஸோ, முதுகு வளைய கூனி போனான் சட்டென தாமம் (உடல்) கருங்கல் வர்ணங்கொள்ள.
தரையில் கூரிய நகங்கள் நான்கு கிரீச்சென்று சத்தமெழுப்ப, நந்தி தேவனோ உருமாறி நின்றவனுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தினான்.
உறும்பல் கொண்டு தலை தூக்கிய அஃறிணையோ, காலபைரவனின் (சிவன்) வாகனத்தை நாசி கொண்ட மூச்சிரைப்போடு வெறித்தான்.
புரிந்தவனாய் அடிகளை பின்னோக்கி வைத்த காளையோ, மின்னல் ஓட்டம் கொண்டான் திரும்பிய வேகத்தில் அவனின் ஒவ்வொரு தடத்திலும் அவ்விடம் மேலும் வெளிச்சங்கொள்ள.
பிரணவ மந்திரம் எட்டுத்திக்கும் ஒலிக்க, கடுக்கண் செவிகளோடு, முன்னங்காலை சர்பமாய் வளைத்திருந்த ஸ்படிக மாலையோடு துரத்தி ஓடினான் ரேவ், அவனுக்கு முன்னால் வேகமெடுத்த நந்தி தேவனை பின்னே விரட்டி.
கோலமிடற்றனின் (சிவன்) வாகனமோ நிறுத்த வேண்டிய இடம் வருவதை உணர்ந்தவனாய், முன்னங்கால்கள் ரெண்டையும் தண்ணீர் கொண்ட பளிங்கு தரையில் அழுத்திட, அதுவோ வழுக்கிக் கொண்டே முன்னோக்கி போனது, நிலைகொள்ளாது தடுமாறி.
கர்ஜனையோடு ஓடி வந்த சிறுத்தையின் முகங்கொண்ட பெந்தரோ (panther), ஒரே பாய்ச்சலில் எகிறி செங்குத்தாய் நின்றது நந்தியின் உயர்ந்த திமிலின் மேல்.
''ஹர ஹர மகாதேவ்! சிவசிவ மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்!''
என்ற கோஷத்தோடு கூடிய எலுமிச்சை நறுமணம் மொத்த இடத்தையும் பவித்ரமாக்க, மகராலயத்தின் (கடல்) அப்பிரம் (ஆகாயம்) ரெண்டாய் பிளந்தது.
சறுக்கிக்கொண்டு போன எருமையோ, சலசலத்திருந்த தரையில், உயர்திணையான விலங்கின் அழுத்தத்தில் அவ்விடத்திலேயே நிலைக்குத்தி நின்றது.
வாரிதியின் (கடல்) நடுவிலோ, கூர்மாண்டர் (சிவன்) லிங்க வடிவம் கொள்ள, அதற்கு பின்னால் காப்பாளனாய், நடராஜரின் உருவமோ ருத்ராட்ச மாலையில் உருவாகி நின்றது, ஒலிவட்டமொன்றின் நடுவினில் பிரகாசித்து.
ஒற்றைத்தலை மிரதமோ (பாம்பு), செங்குத்தாய் வீற்றிருந்த ராட்சத லிங்கத்தை ஒருமுறை சுற்றி மேலேறியது. அதன் வியமோ (உடல்) லிங்கத்தின் மேல் உரசிய நொடி, கருப்பு வர்ண லிங்கதின் மீதோ திருநீறு கீற்று வந்து ஒட்டிக்கொண்டது.
காகோதரமோ (பாம்பு) லிங்கத்தின் உச்சி நோக்கி கக்கியது மாணிக்க கற்களை வாய் திறந்து. அவைகளோ கடல் சரலகத்தில் (நீர்) கும்பாபிஷேகம் கொண்டிருந்த லிங்கத்தின் மீது மலர்களாய் உருமாறி சயம்புவை (சிவன்) அர்ச்சித்தன.
வலக்கரங்கொண்ட வெண்சங்கை கையில் இறுக்கிய சாதுர்ய விருகனோ, மேல்நோக்கியவாறு ஊதிட ஆரம்பித்தான், பிரபஞ்சம் கண்டிடா அச்சங்கின் உயிர்நாதம் வெற்றிடம் நிரப்ப.
கடல் நீரில் கொலு கொண்ட சிவலிங்கமோ, கொஞ்சங் கொஞ்சமாய் பற்றி எரிய ஆரம்பித்தது. கூத்தனின் உருவங்கொண்டிருந்த ருத்ராட்ச மாலையோ உருக்குலைந்த நரலையில் (கடல்) கலந்தது.
இலிங்கம் மொத்தமாய் தீப்பிடித்து எரிய, திருநீறில் பட்டைக்கொண்டிருந்த முக்கோடுகளோ, மரகத பச்சையிலான பிரேட்சணத்தை விழி விரித்து காட்டியது. கறுப்பிலான லிங்கமோ சாம்பலாகி அம்புதியின் (கடல்) சரிலத்தில் (நீர்) கலந்தது.
எட்டுத்திக்கும் கேட்ட சங்கு சத்தமும் சிவ நாமத்தின் வீரியமும், சிந்தையை ஆட்கொள்ள, தாங்க மாட்டாதவளாய் தலையை அங்கும் இங்கும் தவிப்போடு ஆட்டிய கீத்துவோ, ஒருவழியாய் பட்டென அம்பகங்கள் திறந்தாள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, நெஞ்சில் கரம் பதித்து சுற்றத்தை கண்டவளோ எதுவும் மாறாது அப்படியே இருக்கக் கண்டாள்.
மக்களோ கூட்டங்கூட்டமாய் குதிரை சவாரி, உப்பு மூட்டை சவாரி என கேதார்நாத் தேவநகரை (கோவில்) நோக்கி மலை மேல் பயணித்த வண்ணம் இருந்தனர். நடந்தே வந்த மனிடர்களோ ஆங்காங்கே நின்று தேநீர் பருகிக் கொண்டிருந்தனர்.
ஐஸ் கட்டி மழையில் குளித்திருந்த சாலையோ ஏகத்துக்கு அமோகமாய் இருந்தது. சேரும் சகதியுமான மலைப்பாதையைக் கண்ட காந்தாரிக்கோ குமட்டியது, மண் வாசனை வாடையாகி போக.
பேக் பேக்குக்குள் தண்ணீர் போத்தலை எடுக்க நிந்தித்தவளோ, நெஞ்சிலிருந்த உள்ளங்கை எதையோ இறுக்கமாய் பற்றியிருப்பதை போலுணர்ந்தாள். டக்கென கையை திறந்து பார்க்க, உள்ளுக்குள்ளோ ஈரமான ருத்ராட்சம் கிருத்தியைப் பார்த்து கண்ணடித்தது.
திக்கென்றது தெரியிழைக்கு, கண்ட காட்சியில் விழிகள் அகல விரிய.
மயூகமான (அழகு) இதழொன்று, ஒரு முக ருத்ராட்சத்தில் தோன்றி, முகிழ்நகைக் கொண்டு காணாமல் போனது மின்னலை போல், சொடக்கிடும் நொடியில்.
ஒன்றாக இருக்கையில் படாஸின் ருத்திராட்சத்தை தொட்டுணர்ந்த தெரிவைக்கு நன்றாகத் தெரியும், இப்போது மடந்தையின் உள்ளங்கையை முற்றுகையிட்டிருக்கும் ருத்ராட்சமும் அதே போலான ஒன்றுதான் என்று.
ஆனால், அம்மென்புன்னகையானது மதங்கியின் மாப்பிள்ளையான ஔகத்தின் அதரங்கள் கொண்ட ஆதாரமாகும். அதுதான் கொஞ்சம் இடித்தது கீத்துவிற்கு.
மனையாள் அவள், ஒருமுறைக்கூட பார்த்ததில்லை டாக்டர் கழுத்தில் ருத்ராட்ச மாலையை. அதே வேளையில் தெய்வார்த்தமான விடயங்கள் ஏதும் அவன் பேசியதும் இல்லை, காஜியைத் தவிர்த்து.
ஆகவே, எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்று சத்தியமாய் தெரியவில்லை கீத்துவிற்கு அந்த ருத்ராட்சம். இருப்பினும், பகுத்தறிவு கொண்டவளுக்கு சாட்சியங்கள் இல்லா காட்சியில் நம்பிக்கையில்லை.
ஆகவே, உள்ளங்கை கொண்டிருந்த ருத்ராட்சம் கண்டிப்பாய், பேக்பேக்குக்குள் நேற்று வரை இருந்த சொந்தமில்லா ருத்ராட்ச மாலையிலிருந்து கழண்டியே பைக்குள் விழுந்திருக்க வேண்டுமென்று மூளையை சமாதானப்படுத்திக் கொண்டாள்.
எதுவாகினும், கண்ட கனவுக்கும், கையிலிருக்கும் ருத்ராட்சத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை ஆணித்தரமாக உணர்ந்தாள் நாயகியவள்.
பஞ்சாபி ஆண்ட்டியின் மரணத்தில் நொந்து போயிருந்த போலீஸ்காரி, கவலைக் கொண்ட மனதையும் சோர்ந்திருந்த உடம்பையும், ஒருநிலைப்படுத்த அன்றைய மதியமே முழுதொருங்குணர்ந்தோனை (சிவன்) காண திண்ணங்கொண்டாள்.
எண்ணத்தை செயல்படுத்த ட்ராவலிங் பேக்கை கூடாரத்திலேயே விட்டுவிட்டு, தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டாள் அளகவள் பேக்பேக் ஒன்றில்.
மதியம் ஒரு மணி போல, சில ரொட்டித்துண்டுகளை முழுங்கி விட்டு, மலை பயணத்தைத் தொடங்கினாள் கீத்து.
அசதியோடு அசதியாய், பாதி தூரம் நடந்த பின், குதிரை சவாரிக்காய் காத்திருந்த சமயத்தில், முரண்டு பிடித்த பரிமா (குதிரை) உடலைக் குலுக்கி மேலே அமர்ந்திருந்த ஆளை கீழே விழ வைத்த சம்பவத்தைக் கண்டாள் சின்னவள்.
பாவம், என்னதான் செய்யும் வாயில்லா ஜீவனது. ஒருநாளைக்கு எத்தனை முறைதான் ஏறி இறங்கும். அலுத்து போயிடாத என்னே, அதற்கும்.
மனிதர்கள் நடைப்போட்டு, போகமீன்றபுண்ணியனின் (சிவன்) தலம் செல்ல முடியா நிலையில், அவர்களின் பாரத்தோடு அதன் எடையையும் மொத்தமாய் சுமந்து, கால் கடுக்க மலையேறி, பால்வண்ணன் (சிவன்) இடம் கூட்டி போய் பக்தர்களை பத்திரமாய் சேர்க்கும் அவைகளுக்கு எப்போதுமே சொர்க்கம்தான்.
இருப்பினும், அடிக்கடி மயக்கம் மற்றும் வாந்தி கொண்ட கோமகளுக்கோ இச்சவாரி கண்டிப்பாய் ஒத்து வராது என்று தெரிந்து விட்டது, கீத்துவிற்கு.
ஆகவே, நடராஜா சர்வீசே நல்லதென்று தோன்ற, மண்டிலம் (குதிரை) பிளானை கிடப்பில் போட்டு பொடி நடையாகவே நடந்து அநபாயனின் (சிவன்) திருத்தலம் பயணித்தாள் கீத்து.
உயரம் அதிகரிக்க, ஆக்சிஜன் லெவலில் தடுமாற்றம் கொண்டாள் ஆட்டியவள். பிராணவாயு கம்மியாகுவதெல்லாம் இதுபோன்ற மலை பிரேதேசங்களில் சகஜமான ஒன்றாகும்.
பக்தர்களில் சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வருவது இப்போது பரவலான ஒன்றாகும். குறிப்பாய், ஆஸ்துமா நோயாளிகள்.
நிலையற்ற வானிலை மாற்றத்தில் எப்போது சாதாரண மழை வரும் அல்லது பனிக்கட்டி மழை வருமென்று தெரியாது. அதே சமயம், அது கிளப்பி விடும் குளிரும் சொல்லிலடங்காது.
ஆகவே, உடம்பு முடியா சீனியரோ, மூச்சு ஓவராய் வாங்க, ஒவ்வொரு மூன்று கிலோமீட்டருக்கும் ஒரு செக் போஸ்ட் போட்டு, டீ குடித்து, ஓய்வெடுத்த பின்னரே அவளின் பாத யாத்திரையைத் தொடர்ந்தாள்.
அப்படியான தள்ளாட்டத்திலேயே, ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக நடந்தவளால், மேற்கொண்டு அடியெடுத்து வைத்திட முடியவில்லை கேதார்நாத் ஆலயத்தை நோக்கி.
வயிற்று பிரட்டலில் வாந்தி எடுத்தவள், அங்கிருந்த டீ கடைக்கு எதிரிலிருந்த பெஞ்சிலேயே அமர்ந்துவிட்டாள், மயக்கம் சனிகையவளுக்கு தலை சுற்றல் கொடுக்க.
அரை மணி நேரம் போக, கண்கள் ரெண்டும் இருட்டிப்போனது இளம்பிடியாள் அவளுக்கு. பேக்பேக்கை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவளோ, குனிந்த தலை நிமிராது மயக்கத்திலேயே துயில் கொண்டாள்.
அப்போதுதான் கண்டாள் பூமகளவள், நந்தி கொண்ட படாஸ் உருமாறும் கனவில், சிவலிங்கம் சாம்பலாய் போக, நெற்றிக்கண் பற்றி எரிய.
நித்திரைக் கலைய விழித்த கீத்துவின் கையிலோ, ருத்ராட்சமொன்று ஈரங்கொண்டிருக்க, கனவு சொல்ல வந்த விஷயம் என்னவாக இருக்குமென்று யோசிக்க ஆரம்பித்தாள் பெண்டு அவள்.
அதே வேளையில் கனவாய் வந்த காட்சிகளில் பெய்வளை கேட்ட கவியோ அவள் முன்னரே எங்கேயோ படித்தது போலிருந்தது. ஆனால், எதிலென்றுதான் தெரியவில்லை, பகினி அவளுக்கு.
பற்றி எரிந்த மரகத பச்சையிலான நெற்றிக்கண்ணோ, பனிமொழிக்கு அவளின் கணவன் ஔகத்தின் தாரைகளையே (கண்) நினைவூட்டியது.
தொடர்ந்து வாந்தி வர, இதற்கு மேல் நடை செல்லாது என்றுணர்ந்தவளோ, பல்லாக்கில் ஏறி, மலையின் செக்கர்வானிறத்தனை (சிவன்) காண சென்றாள்.
பயணிகளை மலையின் தேவதாகாரத்தில் (கோவில்) இறக்கி விட்டு வருகையில், சிலர் காலியான பல்லாக்கோடு வருவதுண்டு, அதிசயமாய்.
அப்படி ஒரு கும்பல் பேடை அவள் கண்ணில் சிக்க, சனிதம் அவள் காலந்தாழ்த்தாது, பேரம் பேசாது, உடனடியாக அவர்களோடு பயணித்திட ஆரம்பித்தாள், என்பாபரணன் (சிவன்) குடிக்கொண்ட மலைக்கோவில் நோக்கி.
கிருத்திகாவை பொறுத்த மட்டில் டாக்டர் கணவனே அவளின் காதல் கண்ணாளன்.
ஆகவே, கனவில் வந்து போனது யாரென்ற தேடலை தவிர்த்து, ஏன் அப்படியான காட்சிகள் தாங்கிய எண்ண ஓட்டங்கள் மயக்கங்கொண்ட மூளைக்குள் உலா வந்தன என்ற காரணத்தை பற்றி அலசிடவே ஆர்வங்கொண்டாள் தெரியிழை அவள்.
நந்தி மீதேறி சங்கொலிக்கும் படாஸ் சொல்ல வரும் சங்கதி என்னவென்று தீவிரமாய் கருக்கிடை (யோசனை) கொண்டவள், கூடவே லிங்கத்தை வாசுகி காத்திட, ருத்ராட்ச மாலையில் வடிவங்கொண்ட சபேசனுக்கு (நடராசர்) அங்கென்ன வேலை, என்ற பற்பல கேள்விகளுக்கு பதில் தேடி மூழ்கிப்போனாள் போலீஸ் புத்தியிலான சந்தேகத்தில்.
மணி சரியாக ஏழு.
அல்லமன்னுக்கு (சிவன்) பூஜை போட்டு முடித்தாயிற்று. தந்தியுரியோனின் (சிவன்)
பக்தர்கள் பலர் புற்றீசலாய் பரவிக் கிடந்தனர் தலத்தில்.
பல்லாக்கில் வந்திறங்கிய மடந்தையோ, அவளை பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்த நால்வருக்கும் கூடுதல் பணத்தை கொடுத்து வழியனுப்பி வைத்தாள்.
மாதங்காரி (சிவன்) லிங்கமாய் உருக்கொண்டிருக்கும் தலத்தை காண ஆர்வமாய் அடிகளை முன்னோக்கி வைத்த மானினி அவளால் தொடர்ந்து நடைக்கொள்ள முடியவில்லை.
தள்ளாடினாள் தாமரைக்கொடி போல் இளைத்து காணப்பட்ட நேரிழையவள். தலை சுற்றல் மீண்டும் பெண்ணவளின் சக்குகளை கங்குலில் நிரப்ப, குமட்டலோ நெஞ்சில் குந்திக் கொண்டு தொண்டை வரைச்சென்று வாயிக்கு வெளியில் வராது தில்லாலங்கடி காட்டியது.
கேதர்நாத் ஆலயத்தின் முன் வாசல் படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்தாள் அந்திகையவள்.
மாதொருபாகனோ (சிவன்), போலீஸ்காரியின் கைக்கு எட்டும் தூரத்திலும் கண் பார்க்கும் நெருக்கத்திலும் இருந்தான். ஆனால், அவனை அடைய முடியா துரதிஷ்டசாலியாய் எட்டியிருந்தாள் ஏந்திழையவள்.
சிவனடியார்களோ, ஹர ஹர மகாதேவ், என்ற கரகோஷத்தில் ஆலயத்துக்குள் தெய்விகமான அதிர்வலைகளை உருவாக்க, கீத்துக்கு மட்டும் செவிகள் ரெண்டும் அடைத்துக் கொண்டது போலிருந்தது.
உள்ளங்கைகளால் காதுகளை ரெண்டடி அடித்தவளுக்கோ, திடிரென்று, மூச்சு முட்டியது. பாக்ஸுக்குள் அடைப்பட்டவள் போல் திணறினாள் தெரிவையவள்.
விருட்டென தலையை திருப்பிய கீத்துவோ, பர்க்கனின் (சிவன்) கருவறையைக் காண, ரதியின் தேவதீபங்கள் (கண்) ரெண்டும் மங்கலான பார்வைகள் கொண்டன.
தீமேனியானின் (சிவன்) பக்தர்கள் கூடி அட்டனுக்காக (சிவன்) வாசித்த ஜ்யம்தா இசையோ மிகத்தூரத்திலிருந்து கேட்பதை போல் கேட்டது கீத்துவிற்கு.
குளிரில் கிடுகிடுத்த கரங்களை ஒன்றுக்கு தோதாய் மற்றொன்றை கொண்டு சூடாக்கிய மலரோ, தலையைக் குலுக்கி மீண்டும் பூழியானின் (சிவன்) சினகரம் (கோவில்) நோக்க, இப்போதோ அம்மணியின் மொத்த பார்வையும் குன்றிப் போயிருந்தது.
நடப்பதன் விபரம் புரியா பெதும்பையோ, வின்னு வின்னென்று வலிக்க ஆரம்பித்திருந்த சிரங்கத்தை (தலை) கைகளால் இறுக்கி பற்றிக் கொண்டாள்.
ஆடவளின் நுதலில் தொடங்கிய ரணமோ, சரடை போல் புருவங்களில் பரவி, விசுவங்கிரத்தில் (கண்) ஊடுருவி, பின்னந்தலை வரை சுற்றி வளைத்து, வஞ்சியை மிடலில் (வலி) கட்டிப்போட்டது.
நந்தியோரமாய் நின்ற யாரோ சங்கை ஒலிக்க, சுற்றாத தேவளமோ (கோவில்) தலைகீழாய் சுற்றுவது போல் காட்சிக்கொண்டு, வாந்தியெடுக்க வைத்தது வல்வியவளை.
கருவறைக்குள் மணியோசை கேட்க, புராரியின் (சிவன்) பக்தர்களோ, ஹர ஹர மகாதேவ், என்ற நாமத்தை பக்தியோடு சொல்லிட ஆரம்பித்தனர்.
பலர் படிக்கட்டினில் அமர்ந்திருந்த போலீஸ்காரியை கடந்து ஓடினர், பூசாரி காண்பித்த தீபாராதனையின் தரிசனத்தை நெருக்கத்தில் கண்டிட, தொட முடியாத போதிலும்.
அடிவயிறு வலிக்க, இதயம் சீரற்று துடிக்க, தேகம் விறைக்க, அமர்ந்திருந்த படிக்கட்டின் விளிம்பினை விரல்களால் அழுத்தி பற்றினாள் கீத்து.
தசையெல்லாம் இறுகிப்போக, வலிப்பு வந்தவள் போல் முற்றிழையின் மேனியோ வலப்பக்கம் வெட்டியிழுத்தது, அம்மணியின் பிட்டம் மேல்படியிலிருந்து கீழ்படி நழுவிட.
விக்கலில் சிக்கிக்கொண்டவள் கணக்காய் கீத்துவின் அவயவம் (உடல்) அசைவு கொள்ள, மற்றவர்கள் யாரும் அறியவில்லை, செய்யிழை அவள் கொண்ட வேதனையான சோதனையை.
வதூவின் உதரத்தில் (கருப்பை) பதுங்கியிருந்த பருக்கை அளவிலான உயிரின், மெதுவான இதயத்துடிப்போ வேகங்கொண்டது கட்டுக்கடங்காது.
அசைக்க முடியா உடலோடு நிலைக்குத்திப் போயிருந்தாள் டாக்டரின் மனைவி. காரணமற்ற பயமும் சோகமும், நறுதுதலை பிடித்துக் கொள்ள பிணியாய்.
அஞ்சி நடுங்கியவளின் உள்ளமோ கவலைக்கொண்டு கண்ணீர் சிந்திட வைத்தது ஒண்ணுதல் அவளை, புரியாத புதிராக.
குஞ்சரி தொடங்கி கட்டியவன் முகம் வரை சித்திக்குள் மின்வெட்டொளி போல் வந்துப்போக, அடுத்த நொடியே அவர்களின் உருவங்கள் அத்தனையும் மறந்து போனது கிருத்திகாவிற்கு.
நினைவுகள் மட்டும் ஞாபகத்தில் இருக்க, எவ்வளவோ முயற்சித்தும் புனைகுழல் அவளால் எண்ணத்திலிருந்து காணாமல் போன அவளின் உயிரிலும் மேலான வதனங்களை திரும்ப கொண்டு வந்திடவே முடியவில்லை.
கத்தவும் முடியாது கதறவும் முடியாது சிறைக்கொண்டாள் சொந்த மூளைக்குள்ளேயே ஒளியிழையவள்.
''ஓம், நமச்சிவாய! ஓம்! ஓம்! ஓம்! நமச்சிவாய! ஓம், நமசிவாய! ஓம்! ஓம்! ஓம்! நமச்சிவாய!''
என்ற மந்திரமோ ஓங்கி ஒலித்தது தனியாய் காந்த குரலொன்றால், ஹர ஹர மகாதேவ் என்ற பக்த கோடிகளின் கோஷத்தையும் தாண்டி.
நாயகியின் நாவோ வார்தைக்கொள்ள மறுத்தது. தொண்டையோ எச்சில் விழுங்க கசந்தது.
உருவாகியிருந்த நஞ்சுக்கொடியோ, வித்திற்கான ஆக்சிஜனை சுமந்திருப்பவளின் செம்பாலில் (ரத்தம்) தேடிட ஆரம்பித்தது.
கீத்துவின் மைவிழிகளோ மேலேறி கொள்ள, காரிகையவள் வாங்கிய மூச்சோ கீழிறங்காது நிறுத்தங்கொண்டது.
பொற்றொடியின் நெஞ்சோ காற்றடைத்த பைப் போல் உள்ளுக்குள் உப்பி போக, மூளையோ தாறுமாறாய் தடுமாறின ரத்த நாளங்களில் அசு (ஆக்சிஜன்) அடிமட்டத்திற்கு குறைந்து போக.
விவரிக்க முடியா உணர்வொன்று பைந்தொடியின் அடிப்பாதத்தில் தோன்றி உச்சி வரை சுருக்கென்று இழுத்துக் கொண்டு பரவியது.
சுற்றமோ, ஹர ஹர மகாதேவ், என்ற மந்திரத்தில் பரவசங்கொண்டிருக்க,

என்ற கணீர் குரலோ, உடுக்கையிலான சத்தத்தின் ஊடே,
''ஹர ஹர மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்! கங்காளா! கஜாரி! ஏகபாதா! சக்ரதானா! சண்டேசா! சிவசிவ மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்!
என்ற கட்டங்கனின் (சிவன்) மகேசுவர மூர்த்தங்களை ஒப்புவிக்க, அதுவோ கிருத்தியின் செவி விழுந்து, மூளையேறியது.
''ஹர ஹர மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்! சோமாஸ்கந்தரா! நடராஜா! ரிஷபாரூடரா! சந்திரசேகரா! கல்யாணசுந்தரா! சிவசிவ மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்!''
என்றுத் தொடர்ந்து கேட்ட சிவாகமங்கள், மங்கையின் நெஞ்சில் பதிந்து, அந்தசடம் (வயிறு) சூழ, துளியிலான ஜீவனின் கைகால்களின் உருவாக்க தொடக்கமோ மொட்டு விடத்தொடங்கியது தளர்ச்சியோடு.
பாசக்கயிறை வீசிய எமனோ, பிம்பமாய் கீத்துவின் கந்தரத்தை பின்னிருந்து இழுக்க, மரணத்தை உணர்ந்த படாஸின் காதலியோ, கருவிழிகள் கொள்ளா வெண் முழிகளோடு தலையை பின்னோக்கி சாய்த்தாள், ருத்ராட்சம் கொண்ட உள்ளங்கையோ ஆயிழையின் அடிவயிற்றை அழுத்த.
கும்மிருட்டு கொண்ட வானின் முகில்களை விலக்கி சந்திரன் எட்டிப்பார்க்க, அப்பாலிருந்த கைலாய மலையோ நீலாஞ்சனையை (மின்னல்) பளிச்சிட விட்டது சத்தத்தோடு.
தருமனோ கையிலிருந்த கயிறை வேகமாய் அவன் நோக்கி இழுக்க, அதுவோ துரும்பளவுக்கூட அசைக்க முடியா நிலையில் உறைந்திருந்தது.
''ஹர ஹர மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்! ஈசானா! தற்புருடா! வாமதேவா! அகோரா! சத்யோ சோதா! அதோமுகா! சிவசிவ மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்!''
என்றக் குரலோ சங்கொலியை மீறி ஒலிக்க, அதற்கு தோதாய் உடுக்கையும், சிவ ஸ்தோத்திரங்கள் கொண்ட பக்தியும் கேதார்நாத் கோவிலை உலுக்க, ருத்ராட்சம் கொண்ட வலிய கரமொன்று, கிருத்தியின் நாசியை கற்பூரத்தால் மூடி, சுந்தரியின் நுதலில் திருநீரிலான முக்கோடுகளை பதித்தது மற்றொரு கைக்கொண்டு.
ஏமராஜனின் மரண தூண்டிலோ, அறுப்பட்டு போனது வில்வ வாசம் கொண்ட கட்டழகனின் உள்ளங்கை கீத்துவின் நிடலத்தில் முற்றுகைக் கொள்ள.
சிவனிருக்க எமன் எவன் என்பது போல், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் திருமதியைக் காப்பாற்றிய சிவ பக்தனோ, அவனறியாது விரட்டி அடித்திருந்தான் ஆளை தூக்கும் ஆசாமியை.
''ஹர ஹர மகாதேவ்!''
என்றவனின் குரலில், மீண்டுமொரு மின்னல் தோன்றி மறைய ஆகாயத்தில், பரிசனமில்லாது (காற்று) சுருங்கிப்போயிருந்த கீத்துவின் இதயமே பழைய நிலைக்கு திரும்பியது.
சூடமோ, அம்மணி பறிகொடுத்திருந்த ஆக்சிஜனை மீண்டும் அருணியின் பூட்சிக்குள் (உடல்) நிரப்பிட, உறைந்து போயிருந்த காவல்காரியின் குருதி நாளங்களோ மீண்டும் உயிர்த்தெழுந்தன புத்துணர்ச்சிக் கொண்டு.
நலிந்திருந்த நஞ்சுக்கொடியோ, ஊடுருவிய ஆர்க்கத்தில் (ரத்தம்) விருட்டென வீறுக்கொண்டு பாய்ந்து, பீய்ச்சியடித்தது தோரையை (ரத்தம்) உருவாகி நிற்கும் கருவுக்கு.
மொய்குழலின் கருவிழிகள் அற்ற வெண்விழிகளோ நட்சத்திரங்கள் கொண்ட விண்ணை வெறிக்க,
''ஹர ஹர மகாதேவ்!''
என்ற ஆண் குரல் கொண்ட அதிர்விலும் வார்த்தையின் மகிமையிலும், ஒரு மாதக்கருவாய் ஜீவித்திருந்த உதிரமோ, காதுகள் மற்றும் கண்களில் வளர்ச்சிக் கொண்டு சிறு பொட்டு அளவிலான வட்டத்தில் நடராஜனின் வடிவம் கொண்டு நின்றது.
''புறக்கண்ணால் பார்க்காதடி கிருத்தி! அகக்கண்ணால் பார்!''
என்ற படாஸின் குரலில், போகவிருந்த உயிரை திரும்ப பெற்ற அதிர்ஷ்டசாலியோ, பட்டென தலையை பின்னிருந்து முன்னோக்கி சாய்த்து, தரை பார்த்து விழிகள் விரித்தாள்.

என்று மீண்டும் ரேவ்வின் குரல் தேனாய் கீத்துவின் செவிகளுக்குள் பாய, சட்டென திரும்பி தலையை ஏறெடுத்தவளின் முகத்தை திருநீறு கொண்டு மூடி மறைத்தது, மாயோள் அவளை காப்பாற்றிய கரம்.
உச்சி கூந்தல் தொடங்கி மொத்த முகமும் எலுமிச்சை வாசங்கொண்ட திருநீரில் மேலிருந்து கீழிறங்க, யமன் எடுக்க பார்த்த உசுரை பிடிங்கி கொடுத்து போகும் ஆடவனில் படாஸையே உணர்ந்தாள் கிருத்தி.
உள்ளம் பதைத்தது பெதும்பை அவளுக்கு. விபூதியிலான முகத்தைக் கூட துடைத்திடாது,
''படாஸ்!''
என்றலறிய போலீஸ்காரியோ, எழுந்த வேகத்துக்கு ஓடினாள் கேதார்நாத்தின் சன்னிதி நோக்கி காப்பாற்றியவனை தேடி.
''ஹர ஹர மகாதேவ்!''
என்றவனோ வந்த வேலை முடிய, தொலைந்தான் கூட்டத்துக்குள் நுழைந்து.
''படாஸ்!''
என்றலறி, அவனை சுற்றி முற்றி தேடிய மலரோ, கண்டாள் தூரத்தில் மேல் நோக்கிய கரமொன்று உடுக்கையை ஆட்டிட.
''ரேவ்! ரேவ் நில்லு ரேவ்! படாஸ்!''
என்ற ரீசன் மகளோ, விடாது துரத்தினாள் ஆணவனை.
கன்னக்குழி சிரிப்பில், சிங்கப்பல் தெரிய, கடுக்கன்னும், ருத்ராட்ச மாலைகளும் கட்டான உடலை திருநீரில் குத்தகைக்கு எடுத்திருக்க, மயில் நீலக்கண்ணனின் இடமார்போ சதியின் பற்தடத்தைக் கொண்டிருந்தது.
முன் நெற்றி கேசத்தை திருநீறு கையால் ஓரம் நகர்த்திய முரடனான சாத்வீகனோ, கந்தமூல் (Kandmool) என்ற கிழங்கை, 'கடாக்' என்றொரு கடி வைத்து, சுண்டி இழுக்கும் சத்தமான சிரிப்பொன்றை கொண்டான்,
கிடைத்ததை உண்டு பசியாற்றி கொள்ளும் மஹா யோகியாகிய சிவபெருமானின் விருப்பத்துக்குரிய உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.
பார்க்க ட்ரம் போலான உருவமும் எடையும் கொண்டிருக்கும் இக்காயானது, வெளிப்புறம் சிவப்பு வர்ணத்திலும், உள்ளே வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
வேரிலான காய்கறி வகைகளைச் சேர்ந்த இக்கந்தமூல், பெரும்பாலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற நாடுகளில் கிடைத்திடும்.
''ஹர ஹர மகாதேவ்!''
என்றவனோ சங்கை கொண்டு சிரபாத்திரியின் (சிவன்) தலத்தை பக்தியில் ஆழ்த்தி காணாமல் போனான் கிருத்திகாவின் பார்வைகளிலிருந்து.
வந்தவன் போன அடுத்த நொடியே, போலீஸ்காரியின் காதுக்குள் அசரீரி கேட்டது.
''உத்ரகாஷி போ! பஞ்சமுகி பார்! கிடைத்ததை கொள்!''
கண்ணை திறந்து பார்த்தவளை சுற்றி யாரும் இல்லாத போது, அக்குரல் மட்டும் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.
அதை ஓரந்தள்ளி உயிர் காத்தவனை தேடி ஓடியவளோ, கடைசியில் அவனை தவற விட்டதை உணர்ந்தாள்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றெடுத்துக் கொண்டாள் குணமாற்றங்கொண்ட கள்ளியவள்.
உள்ளங்கை ருத்ராட்சத்தை ஒருமுறை கரம் விரித்து பார்த்தவளின் கண்மணிகளோ கலங்கி போயின.
படாஸ்தான், கணவன் என்பதில் ஐயமில்லை என்றான போதிலும், அவன் முகத்தை ஒருமுறைக்கூட படாஸாக பார்த்திட முடியவில்லையே என்ற ஆதங்கம் சீமாட்டியை ரொம்பவே வாட்டியது.
ஜெர்மன் போனவனுக்கு இங்கென்ன வேலை என்று யோசிக்க, ஒருக்கால் சதா அவன் ஞாபகத்திலேயே உழன்றிருக்க, வருவோர் போவோர் என்று யாரை பார்த்தாலும் அவனாகவே தோன்றுகிறதோ என்னவோ, என்று கொஞ்சம் தெளிவாய் குழம்பியவள், கடைசியில் அப்படியாகத்தான் இருக்கும் என்று மனசை சாந்தப்படுத்திக் கொண்டாள் அலைபாயாது.
குமட்டிய வாந்தியை கோவிலோரம் அமர்ந்து எடுத்து முடித்தவள், போத்தல் நீரை பருகி கொஞ்சம் இளைப்பாறினாள்.
மணி சரியாக இரவு எட்டு பதினைந்து.
சாமி கும்பிட என்னவோ மனம் வரவில்லை வஞ்சியவளுக்கு, இவ்வளவு தூரம் வந்தப் போதிலும்.
சற்று முன் அவளுக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது, வந்தது யார் என்ற வேள்வியெல்லாம் ஒன்று சேர்ந்து துடியிடையை சோர்வாக்கியது.
வாந்தி வருவதன் காரணம், புதிய இடம், ஒவ்வாத உணவென்று தளிரியள் அவள் நினைத்திருக்க, அவளுக்குள் புதிய உயிரொன்று வளர்வதை கோதையவள் அறியவில்லை.
அதேப்போல், கீத்துவின் தலையெழுத்துப்படி அவளுக்கு கட்டம் சரியில்லை. உயிருக்கு உத்தரவாதமில்லாத கால வரையறையிலான சூழ்நிலையில்தான் இருந்தால் குஞ்சரி மகள்.
மரணம் உறுதி என்றான கிருத்தியின் ஜாதகத்தில், தப்பிக்கும் சந்தர்ப்பம் மெல்லிய கோடாய் அபூர்வம் கொண்டிருக்க, ஆசாம்பரனின் (சிவன்) ஆசியால், அதுவே இப்போது அதீத வலிமைக் கொண்டு செழித்தோங்கி நிற்கிறது.
பறவையிலான சிந்தனையோடு அன்ன நடைக்கொண்ட நாயகியே, சருப்பகுண்டலனின் (சிவன்) கோபுரத்துக்கு முன்புறமிருந்த கரும்பாறையை கடந்து போகையில் எதிர்பாரா விதமாய் தோளை அதில் இடித்துக் கொண்டாள்.
கையை தேய்த்துக் கொண்டவளாய் பாறையை திரும்பி பார்த்தவளின் காதுக்குள்ளோ,

என்று இன்னும் அழுத்தமாய் கேட்டது அசீரிரியின் குரல்.
அந்திகையின் மனமோ அப்பாறையை தொட சொல்லி உந்தியது. கையுறையைக் கழட்டியவளோ பொற்கரங்கள் கொண்ட கரத்தால் அப்பாறையை மென்மையாய் வருட, வதனியின் அம்பகங்களோ தன்னிச்சையாய் சொருகிக் கொண்டன.
பத்தாண்டுகளுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் அவ்வூரின் வரலாற்று பிரளயமாகும்.
அடிதூற்றிய கனமழை, உருகிய பனிப்பாறைகள், நிலச்சரிவுகள் என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், அன்றைய இயற்கை சீற்றத்தை.
அப்படியான நேரத்தில் உயிர் பலிகளை தாண்டி பல உயர்ந்த கட்டிடங்களும் தரை மட்டமாகி போயின இருந்த தடம் தெரியாமல்.
ஏறூர்ந்தோனின் (சிவன்) தலம் இருக்குமோ இருக்காதோ என்று பலரும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்க, சுமார் 10 அடி உயரம், 5 அடி அகலத்தில் கரும்பாறை ஒன்றோ வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வந்து நின்றது ஆலயத்தின் முன்.
கடல் அன்னையின் வெள்ளப் பெருக்கிலிருந்து அன்றைக்கு காளகண்டனின் (சிவன்) தலத்தை சேதாரமின்றி காப்பாற்றியது, 40 டன் எடைக்கொண்ட இப்பாறையே.
கரை புரண்டு வந்த வெள்ளாற்று நீரை திசை திருப்பி கோவிலை மட்டுமின்று அதற்குள் தஞ்சங்கொண்டிருந்த பக்தர்களை காத்ததும் இதே பாறைதான்.
ஜீனைஸ் (gneiss) எனப்படும் பாறை வகையைச் சேர்ந்த இக்கரும்பாறையை மக்கள் பீம் ஷீலா என்று அழைக்கின்றனர்.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் மற்றும் பகாலி (சிவன்) இருவரையும் முன்னிறுத்தி பல சுவாரசியமான பழங்கதைகளை இப்பாறையைக் கொண்டு மக்கள் வாய்வழி சொல்லி வருகின்றனர்.
இருப்பினும், அவர்களின் கதைகளுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் இப்பாறை, எங்கிருந்து வந்ததென்பது மட்டும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
அதனால், இன்றளவிலும் கட்டுக்கதைகள் அத்தனையும் உண்மையென்று நம்பப்படுகிறது கேதார்நாத்துக்கு வருவோரால்.
தூண், துரும்பென்று இருப்பவன் பாறையில் இருப்பதாய் நினைத்துக் கொள்வதில் நஷ்டம் ஏதுமில்லையே.
விலோசனங்களை மூடியப்படி பாறையின் பள்ளத்தில் கொட்டி குவிந்திருந்த ஐஸ் கட்டிகளை கொண்டு, உருவாக்கியிருந்தாள் கிருத்திகா, சிறிய அளவிலான பனிலிங்கம் ஒன்றை.
பாறையின் முன் பக்கம் அகோரிகள், சாமியார்கள், ஜோசியம் சொல்பவர்கள் மற்றும் குறி பார்ப்பவர்கள் என்று குந்தியிருக்க, அங்கு பூஜைகளும் நடத்தப்பட்டது நெருப்பு குண்டலத்தோடு.
மக்கள் அப்பாறைக்கும் தட்சனை கொடுத்தனர் மறவாது. சிவப்பு நிற பூக்கள் கொண்ட மாலைகளே அதிகமாய் சாத்தப்பட்டிருந்தது அப்பாறையின் மீது.
மென்மையும் பளபளப்பும் கொண்ட அப்பாறையை சிவப்பு துணியால் மூடி, குங்குமத்தால் கோடுகளும் போட்டிருந்தனர்.
ஆனால், பாறையின் பின்பக்கமோ ஆளே இல்லாது கிடந்தது, அங்குதான் கீத்து தனியொருத்தியாய் நின்று பாறையின் ஆழமான பள்ளமொன்றில் சிவலிங்கம் செதுக்கியிருந்தாள்.
சிவந்து போயிருந்தது பெண்ணவளின் உள்ளங்கைகள் ரெண்டும். குளிர்ச்சியை உணரவில்லை நேரிழையின் கரங்கள்.
''புறக்கண்ணால் பார்க்காதடி கிருத்தி! அகக்கண் கொண்டு பார்!''
என்ற படாஸின் குரலில், சிலிர்த்தது மெல்லியாளின் பின்னங்கழுத்து.
மயிர்கூச்சங் கொண்டவளோ பாறையில் கரம் அழுத்த, அங்கோ ஆரணங்கின் நேத்திரங்கள் நோக்கா பெயர்கள் ரெண்டு சத்தமின்றி சிரித்தன.
நிமலன் சர்வேஷ் குமார் என்ற பெயருக்கு கீழோ, தீரா என்று எழுதியிருக்க, தீராக்கு முன்னிருந்த எழுத்தோ தோய்ந்து மங்கி காண முடியாதப்படி இருந்தது.
விழிகள் விரித்த கிருத்திகாவோ, பாறையின் மீது கண் முன்னிருந்த லிங்கத்தை ஆச்சரியத்தோடு நோக்கினாள்.
ஏன், எதற்கு, எப்படி என்று பல குழப்பங்களுக்கு மத்தியிலும் கூட, ஏந்திழையின் இதழில் புன்னகை குறையாதே இருந்தது. அவளால் பார்வைகளை நகர்த்த முடியவில்லை அப்பனிமனி லிங்கத்திடமிருந்து.
வியப்பாய் இருந்தது கீத்துவிற்கு, காரணம் புரியாத போதிலும். போதாக்குறைக்கு, டாக்டரின் சிரித்த முகங்கூட தெரிந்தது அப்பனி லிங்கத்தில். சின்ன முறுவலோடு தலையை ஆட்டிக்கொண்டவளின் மனமோ ஏங்கியது டாக்டரை நினைத்து.
பனி லிங்கமோ கரையாது திடமாய் நிற்க, கீத்துவோ அதை கையிலெடுத்தாள்.
''உத்ரகாஷி போ! போ! போ! போ!''
என்ற குரலோ சட்டென மூளையை துன்புறுத்த, தலையை ஆடாய் ஆட்டியவள், லிங்கத்தை பாறையின் மீதே திரும்ப வைத்து சிரசை இறுக்கி பற்றினாள்.
''போ!''
என்றலறினார் அகோரி ஒருவர் ஆண்டி கோலங்கொண்டு அவளின் முன் வந்து நின்று.
புதுவித அனலை முகத்திற்கு முன்பு உணர்ந்தவளோ, இமைகள் திறக்க ஆடிப்போனாள்.
''போ! உத்ரகாஷி போ! சிவ குவ்ஃவா போ!''
என்ற அகோரியோ கையிலிருந்த குச்சிக்கொண்டு கீத்துவை தள்ள,

என்ற அசீரிரியோ மீண்டும் டாக்டர் பொண்டாட்டி மூளைக்குள் நொய் நொய் என்றது.
''போ!''
என்ற அகோரியோ திரும்பவும் அலறல் கொள்ள, ஓடினாள் கிருத்திகா அங்கிருந்து பனிலிங்கத்தை கையில் தூக்கிக் கொண்டு.
அவ்வளவு தடைகளை தாண்டி வயிற்று பிள்ளைக்காரியாய் மலையேறி வந்தவள், கருவறையிலிருந்த கைலையாளியை (சிவன்) எதர்ச்சையாய் கூட பார்த்திடவில்லை.
ரெடியாகி விட்டாள் கிருத்திகா, உடனடியாக பல்லாக்கு ஆட்களை பிடித்து மலையிலிருந்து கீழிறங்கி, உத்ரகாஷி செல்ல.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 115
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.