- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 117
தர்ம கணக்கைக் கொண்டு கர்மக் கணக்கை எழுதும் சனியிடமிருந்து யாராலும் தப்பித்திடவே முடியாது.
பார்வதி புருஷனையே விட்டு வைத்திடாதவன், சாதாரண மனிதர்களுக்கு மட்டும் இறக்கங்காட்டிடுவானா என்னே.
நேரங்காலம் பார்த்து நிகழ்த்த வேண்டிய லீலைகளை செவ்வென நடத்திடுவான் சூரிய புத்திரன்.
தம்பியை குணப்படுத்திய ஆனந்தத்தில் மீண்டும் நிறுத்திய தொழிலையும், விட்ட படிப்பையும் தொடர்ந்தான் ஔகத், அவனின் இருபத்தி ஆறாவது வயதில்.
அதே வருடத்தில், ஆண்டுகளாய் காணாது போயிருந்த மமாடியோ, திரும்பி வந்திருந்தான் பிரிந்து போன நண்பன் ஔகத்தை தேடி.
கதங்கொண்டாலும், அதுவெல்லாம் நொடியில் பறந்து போனது பழைய நண்பர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொள்ள.
ஒன்று சேர்ந்திருந்த இருவரில் ஔகத்தே ஆரம்பித்தான் தோழனின் அன்றைய ஓட்டத்திற்கான காரணத்தை கேட்டு அவர்களின் முதல் சண்டையை.
ரகசியம் என்ற மமாடியிடத்தில் உரிமையாகவே கோபங்கொண்டான் டாக்டர் அதீத அன்பு கொண்டதால்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அன்பில் ஆரம்பித்த வாய்ச்சண்டை இருவரின் நம்பிக்கையின் அளவீட்டில் கேள்விக் கொண்டு நின்றது.
புனிதமான அவர்களின் நட்பையே மமாடி போலியென்று பறைசாற்ற, உண்மையை போட்டுடைத்தான் ஔகத் முற்றிலும் உடைந்தவனாய்.
உடல் கொண்டிருக்கும் வியாதியை பற்றி சொன்னவன், அவனுக்கான முழு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றும் பகிங்கரப்படுத்தினான் மமாடியிடம்.
ஔகத்தின் வாயாலேயே உண்மையை வரவழைத்த மமாடியோ, திணித்தான் அவன் கையில் இன்ஜெக்ஷன் ஒன்றை.
புரியாத ஔகத்தோ நண்பனை குழப்பமாய் பார்க்க, நீட்டினான் மமாடி கோப்பொன்றை தோழனிடத்தில். அதிலோ டாக்டரின் பிளாட் ரிப்போர்ட் இருக்க, கூடவே மமாடி தாயாரித்த மருந்தின் விளக்கங்களும் இருந்தன.
கட்டியணைத்துக் கொண்டான் ஔகத், கண்ணெல்லாம் கலங்கி ஊற்ற நண்பனை கெட்டியாக.
தொலைந்திருந்தவனோ தோழனின் வியாதிக்கு மருந்து தேடித்தான் ஊர் ஊராய் அலைந்து திரிந்து இப்போது புதியதொரு திரவத்தோடு வந்துச் சேர்ந்திருந்தான் மீண்டும் ஜெர்மனிக்கே.
கறுப்பினத்தவன் கண்டுப்பிடித்த மருந்தை வழக்கம் போல் எலியைக் கொண்டு பரிச்சித்த கெய்டனோ, அத்திரவத்தின் அளவீடுகளில் மாற்றங்கள் செய்யக் கோரினான் மமாடியிடத்தில்.
அது வரைக்கும் ஔகத் அவனின் பழைய இன்ஜெக்ஷனையே மறவாது எடுத்திட வேண்டுமென்றும் கறாராய் சொல்லி விட்டான்.
தகப்பனின் பேச்சை தட்டிடா டாக்டரோ அதையே பின்பற்ற, மமாடியோ நண்பனின் டேடி சொன்ன அட்ஜஸ்ட்மெண்டுகளை செய்திட ஆரம்பித்திருந்தான் அவனின் கண்டுப்பிடிப்பில்.
ஒரு வாரங்கழித்து மீண்டுமொரு பரிசோதனையைக் கெய்டன் மூஷிகனை கொண்டு நிகழ்த்த, மமாடியின் கைவண்ணமோ எலியின் பிணியை போக்கி அதை வீறுக்கொண்டு ஓட விட்டது.
வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு அன்றைய வாரமே, ஔகத்தின் உடம்புக்குள் புதிய இன்ஜெக்ஷனை செலுத்தினர் கெய்டனும் மமாடியும்.
மூன்று நாட்களுக்கு பிறகு கண் விழித்த டாக்டரோ, புதியவனை போலுணர்ந்தான்.
கெய்டனோ மகனின் நண்பனிடம் அவனை கண்காணிக்க சொன்னான், பக்க விளைவுகள் பெரும்பாலும் லேட்டாகவே தெரிய வரும் என்பதால்.
மமாடியும் ரொம்ப கவனமாகவே இருந்தான் ஔகத்தின் ஒவ்வொரு அடியையும் நோட் செய்தவனாய்.
முதல் மூன்று மாதங்களை சுகமாய் கழித்தான் டாக்டர். வசந்தக்காலம் போய் கோடை வந்தது ஜெர்மனியில். ஔகத்தின் தலையில் இடி விழுந்தது.
சோர்வாக உணர்ந்தவன், கட்டுடல் குலைய கண்டான். உடல் எடை கூடிட, ஆண்மையோ எழுச்சியற்று போக அதிர்ந்தான். கீத்துவை நினைத்தாலே போதையேற்றும் கலவி ஆசைகள் முற்றிலும் உணர்ச்சியற்று போக, மன உளைச்சல் கொண்டான் டாக்டரவன்.
சங்கடத்தை அவனுக்குள்ளேயே மறைத்துக் கொண்டவன், அதற்கான காரணத்தை தேடிட முனைந்தான் ரகசியமாய்.
அப்படியான ஒரு நாளில் மமாடியின் இன்ஜெக்ஷனை எடுத்துக் கொள்ள தவறிய ஔகத்தோ, கண்டான் மறுநாள் காலையிலேயே உடலின் வேதியல் மாற்றங்களை தத்ரூபமாய்.
இத்தனை நாள் இல்லாத ஈரம் மொத்தமாய் பெட்ஷிட்டை நனைந்திருக்க, தேவையானதை குப்பியில் சேகரித்தவனோ விரைந்தான் ஆய்வகத்திற்கு.
பரிசோதனையின் முடிவில் எல்லாம் நோர்மல் என்று வர, அன்றைய நாளே நண்பனின் தயாரிப்பை உள்வாங்கிக் கொண்டு மறுநாள் விடியும் வரை காத்திருந்தான் டாக்டரவன்.
கதிரவன் கூச்சமற்று காளையவன் ஜன்னல் எட்டிப்பார்க்க, துயில் கலைந்த இளைஞனோ களைப்பை உணர்ந்தவனாய் சோம்பல் முறித்து கண்டான், துவண்டிருந்த அவன் உயிர் நாடியை.
கஷ்டப்பட்டு கண்ட கருமத்தையெல்லாம் கண் முன் கொண்டு வந்து கடைசியில் வேறு வழியே இல்லாது கீத்துவை நினைத்து காரியத்தை சாதித்துக் கொண்ட உத்தமனான டாக்டரோ, அளவில் சிரியதானதொரு குப்பியில் எஞ்சிய துளிகளை சேகரித்தான்.
கிடைத்த சொட்டுகளைக் கொண்டு லேப் டெஸ்டிங் செய்த ஔகத்தோ, ஆய்வக பரிசோதனையின் அறிக்கையைக் கண்டு நிம்மதி பெருமூச்சுக் கொண்டான்.
ஆனால், அதே வேளையில் இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இப்பாழாய் போன வேதனையைச் சுமந்துக் கொண்டு திரிவதென்றும் நொந்துக் கொண்டான்.
மமாடியின் மருந்தில் மீண்டும் சில மாற்றங்களை செய்திட வேண்டிய நிலை வந்தது.
இதற்கு முன் அவன் கண்டுப்பிடித்த திரவமோ வெயில் காலத்தில் ஔகத்தின் வாழ்க்கையை சூனியமாக்கும் பொம்மையாய் உருமாறியிருந்தது.
அதாவது, டாக்டரின் டெஸ்டோஸ்டிரோன் அளவு (testosterone level) வேனில் காலத்தில் மிக குறைந்தும், குளிர்காலத்தில் அதிகமாகி போனதும்தான் அவன் பிரச்சனைக்கான காரணமாகும்.
மமாடியின் இன்ஜெக்ஷனோ உடற்சூட்டை ஏத்தும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க, குளிர்காலத்தில் அடக்கி வாசித்த கேடி மகனின் தேகமோ, சூரிய காலத்தில் தலைவிரித்து ஆடியது முயங்கலுக்கான விடயங்களில் சிவப்பு கொடித்தூக்கி.
இதைப்பற்றி நண்பனிடம் கலந்தாலோசித்த டாக்டரோ, அவனோடு சேர்ந்து சில பல ஏற்ற இறக்கங்களை செய்தான் மருந்தில், கெய்டன் அறியாமலேயே.
ஆனால், 150 முறைக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியின் பலனோ தோல்வியையே தழுவியது.
ஒவ்வொரு முறையும் டாக்டர் பரிசோதித்த மருந்தை நேரடியாய் அவனுக்குள் இன்ஜெக் செய்துக்கொள்ள, தோலில் படர் தாமரையைக் கொண்டான் ஔகத்.
ஆணுறுப்பை சுற்றியோ நீர் கோர்த்த கொப்பளங்கள் செங்குத்தாய் பூத்து அவனை நரகத்தில் தள்ளின. உள்ளுக்குள்ளோ அரிப்பெடுத்து அவனை பாடாய் படுத்தின அங்கங்கள்.
தலைமுடியோ உதிர்ந்துக் கொட்டியது. விழிகளோ பிதுங்கி வீங்கி கிடந்தன. எலும்புகளோ வெளியில் எட்டிப்பார்த்தன சதையொட்டிய உடலில்.
காதிலோ சீல் வடிந்தது. கால் நகங்களோ பேத்து நின்றன. பற்களோ ஆட்டங்கொண்டன. குரலோ கரகரத்து போனது. முகப்பருக்களோ முகத்தை கோரமாக்கின.
சரிவர நடக்கக்கூட முடியாதவனாய் தள்ளாடினான் ஔகத். படபடப்பும் பரிதவிப்பு அவன் வாழ்க்கையாய் மாறிப்போனது.
டாக்டருக்கே அவனைக் காண சகிக்கவில்லை கண்ணாடியில். தவிர்த்தான் பணிக்கு செல்வதை.
வாரம் ஒரு முறை ஜெர்மனி வரும் தம்பியையோ வராதே என்றான். காரணம், கேட்டவனிடம் சாக்கு போக்கு சொன்னான்.
சுரஜேஷின் அலைப்பேசி அழைப்பை மறுத்தான். குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் தொடர்புக்கு மட்டுமே வழி வகுத்தான்.
சுஜியோ மகனைக் கண்டு அஞ்சினாள். பயந்தோடி ஒளிந்தாள். சாப்பிடாது அழுகைக் கொண்டாள். தூங்காது பினாத்தினாள். மகனோ சோகத்தை அவனுக்குள் பதுக்கி, தாயைக் கவனிக்க கேர் டேக்கரை ஏற்பாடு செய்தான்.
சேட்டைக்காரியோ வந்தவளின் கையைக் கடித்தாள். சத்தம் போட்ட பெண்ணின் முடியை கொத்தாய் பிச்சி எடுத்தாள். மகன் கோபங்கொள்ள, டால்டா வேண்டுமென்றாள்.
செய்வதறியாது தவித்தவனோ, கெய்டனிடம் போய் நிற்க தயங்கினான். யாருக்கும் சிரமம் கொடுக்க ஆணவன் விரும்பவில்லை. அதுவும், கயல் சாமானியத்தில் சமாளிக்க கூடிய பைத்தியமல்ல என்பதையும் மகன் அறிவான்.
சில வேளைகளில் அவளின் குறும்புகள் எல்லை மீறும். மகன் பொறுத்து, ஒழுக்கம் காப்பான். ஆகவே, யாரை உதவிக்கு அழைத்தாலும் அது முறையாக இருக்காது என்றெண்ணினான் மகனவன்.
ஔகத் தலையெடுக்கும் முன் அவளை என்னதான் மீகன் பார்த்துக் கொண்டாலும், முழு நேரமும் சுஜியை அவன் கவனித்துக் கொள்ளவும் இல்லை. அங்கேயும் அண்ணனின் மாஜி மனைவிக்குத் துணையாய் பெண் தாதியே நியமிக்கப்பட்டிருந்தாள்.
உண்மையில் சுஜி பாதி நாட்களை மயக்கத்திலேயே கழித்தாள் எனலாம். நித்தமும் கேடியை கிஞ்சித்திடும் அவளிடம் நிஜத்தை உணர்த்திட ஆளிருந்தும் அதை புரிந்துக் கொள்ளும் நிலையில் அவளில்லை என்பதுதான் வேதனையான விடயமாகும்.
ஆகவே, அவரவர் சௌகரியத்துக்கு ஏற்பவே கயலை பராமரித்து வந்தனர் இத்தனை நாளும் மற்றவர்கள்.
அதனால், கஷ்டமோ நஷ்டமோ ஔகத்தே பெற்றவளை பார்த்துக்கொள்ள முடிவெடுத்தான். ஆனால், சுஜியோ அதற்கு துளியும் வளைந்துக் கொடுக்கவில்லை. டாக்டரின் உடலும் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
பொருட்களைக் கொண்டு அவன் மீது விட்டடித்தாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். கத்தி கூச்சல் கொண்டாள். அழுத்து போன மகனோ, கடவுளின் மீது பாரத்தை போட்டு மருத்துவத்தை கையிலெடுத்தான்.
போதையைக் கொடுத்து அரை மயக்கத்திலேயே உலாவ விட்டான் தாயவளை. சுஜியோ, கொடுப்பதை உண்டு தூங்கியே பொழுதைக் கழித்தாள்.
பீரியட்ஸ் வருவதை சொல்லத் தெரிந்தவளுக்கு பேட் வைப்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள தெரியவில்லை.
முன்னாடி இது அத்தனையையும் பெண் தாதி செய்திருக்க, ஔகத்தோடு ஜப்பான் வந்த நாளிலிருந்தே மகன்தான் எல்லாவற்றையும் கவனித்து வந்தான்.
அரை மயக்கமாயினும், விகாரத்தோற்றங்கொண்ட தமையனின் நெஞ்சில் துஞ்சி கதறியவளோ ஓயாது நிமல் புராணம் பாட, அவனுக்காக இல்லாவிட்டாலும், தாயான கயலுக்காகவாவது சீக்கிரமே அவன் கொண்டிருக்கும் பிணிக்கொரு தீர்வைக் கண்டிட வேண்டுமென்று உறுதிக் கொண்டான் ஔகத்.
அப்படியான நிலையிலும் கூட கேடியிடம் போய் உதவி கேட்க வேண்டுமென்று கனவிலும் நினைக்கவில்லை மகனவன்.
கெய்டன் மற்றும் மீகனை பரிசீலித்தவனுக்கு, மன வளர்ச்சி குன்றிய தாயை அம்போவென்று தவிக்க விட்டு போன டேடியின் மீது எப்போதுமே தனியொரு கோபம் உண்டு.
ஆனால், அதை காரணமாக்கி பெற்றவனை வெறுத்தோ, ஒதுக்கியோ வைத்திடாதவனே ஔகத். தன்மானத்தை விட்டு கீழிறாங்கா போதிலும், தனக்கானதை கேடி கொடுக்க உரிமையாகவே வாங்கி வைத்துக் கொண்டான் வாரிசவன்.
வீர வசனம் பேசி, கீத்து சொன்னது போல் பிச்சைக்காரனாய் வலம் வர டாக்டர் ஒன்றும் எடுத்தோம் கவிழ்த்தோம் நிமலல்ல, நிர்மலனின் கலவைக் கொண்ட பொறுமையான புத்திசாலி.
வேண்டாம் என்ற வார்த்தையை ஔகத்தான் சொல்லிட வேண்டும் அவன் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில். அடுத்தவர்கள் யாரும் அவனுக்கானதை முடிவு செய்வதை எப்போதுமே அவன் விரும்பியதில்லை.
அதற்கு சான்றுதான் மலை குகையில் கேடியின் கட்டையும் அறுத்தெறிந்து ஓடியவன், பின், அவனாகவே தியானத்தில் ஆழ்ந்து சுரஜேஷோடு ஜப்பான் பயணித்த சம்பவமாகும்.
அதேப்போலத்தான், அவன் பிறப்பை கொச்சைப்படுத்திய கீத்துவை தூக்கி எறிந்தவன், அவள் காலை பிடித்தும் மனமிறங்காது, பின்னாளில் அவனாகவே மனம் மாறி ஆயிழையவளை ஏற்றுக் கொண்டான்.
தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் அடிப்பணிவதும் சரி, தலை குனிவதும் சரி, துரியசிவன் அவன் ஒருவனுக்கே.
மமாடியோ அவனால் நண்பன் கொண்டிருக்கும் அவலத்தில் குற்ற உணர்ச்சிக் கொண்டான். ஔகத்திடம் அவன் உலகம் சுற்றும் வாலிபனாய் மாறிட வேண்டிய நிர்பந்தத்தை வெளிப்படுத்தினான்.
பிடித்தமில்லை என்றாலும் சூழ்நிலை கைதியாகி நிற்கும் ஔகத்தோ, விடைப்பெறும் முன் தோழனின் கழுத்தில் அணிவித்து விட்டான், மூர்த்திகன் குரூப்ஸின் கர்ஜிக்கும் சிங்க முத்திரைப் பதித்த லாக்கெட் கொண்ட தங்க சங்கிலி ஒன்றை.
சினேகிதனோ வாக்குறுதி கொடுத்தான் டாக்டருக்கு, திரும்பி வருகையில் ஔகத்துக்கான மருந்தோடுத்தான் வந்திடுவான் என்று.
அன்றைக்கு இமயமலை பயணித்த மமாடிதான், பின்னாளில் அங்கேயே அவனின் வேலையை சுலபமாக்க ஷைனா என்ற மலைவாசி பெண்ணை திருமணம் செய்துக் கொண்டான்.
தேடியது கிடைக்க, நண்பன் ஔகத் அவனுக்கு கொடுத்த சங்கிலியை பொஞ்சாதிக்கு பரிசளித்து அங்கிருந்து கிளம்பினான்.
மருந்து கண்டுப்பிடிக்க போனவன் திரும்பி வருவதற்குள் ஒரு வருடம் ஓடிப்போயிருந்தது. ஔகத்திற்கோ இருபத்தி ஏழு பூர்த்தியாகியிருந்தது.
மமாடியோ வெற்றியோடு திரும்பியிருந்தான், இமயமலை மூலிகைகளை கொண்டு உருவாக்கிய புதிய மருந்தோடு.
படுத்த படுக்கையாய் டாக்டர் கிடக்க, அவன் அன்னையை கண்ணில் வைத்து காத்தான் தம்பி சுரஜேஷ். ஜாடிக்கேத்த மூடியாய் அண்ணணின் பிரச்சனையை கெய்டனிடம் கூட மூச்சு விடாது பார்த்துக் கொண்டான், சின்னவனவன்.
முதலில் முரண்டு பிடித்த சுஜி, போக போக ஒட்டிக்கொண்டாள் சுரஜேஷின் சிறு சிறு விளையாட்டுகளில் கேடிக்கெல்லாம் கேடியை பிரதிபலிக்க.
ஒட்டிக்கொண்டாள் பாப்பா அவள், டால்டா போல் சேட்டைகள் புரிந்த சின்னவனிடத்தில். அதுவரையில் ஔகத்திற்கு நிம்மதியே.
மூர்த்திகன் பொறுப்புகளை சதஸ் நன்றாகவே கவனித்துக் கொண்டான். ஆனால், ஓவியாவோ முதலாளியில்லா ஒரு வருடத்துக்குள் அலுவலக தலைமை நிதியாளரை மாடர்ன் ட்ரஸ்ஸில் முடிந்து பல கோடிகளை ரகசியமாய் லவிட்டியிருந்தாள்.
மமாடியின் இரண்டாவது கண்டுப்பிடிப்பில் உருவான மருந்தை எடுத்துக் கொண்ட ஔகத்தோ, அடுத்த சில மாதங்களிலேயே பழைய நிலைக்குத் திரும்பினான்.
அத்திரவங்கொண்ட இன்ஜெக்ஷனைத்தான் இதுநாள் வரைக்கும் பயன்படுத்திக் கொண்டு வருகிறான் டாக்டர்.
உடல் தேறிய ஔகத் மீண்டும் பணிக்குத் திரும்பினான். விட்ட படிப்பையும் ஆரம்பித்தான். சுஜியையும் அவனே பார்த்துக் கொண்டான்.
சுரஜேஷ் ஜப்பான் கிளம்பினான். மூர்த்திகனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வழிகளில் பிஸியாகினான்.
தெளிந்த நீரோடையாய் போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் சாபமாய் வந்துச் சேர்ந்தான், ஔகத்தின் மருத்துவ கல்லூரி நண்பனான ஆர்செனியோ.
என்னதான் பழைய நண்பனாகினும் அவனால் ஔகத்துடன் மமாடியை போல் ஒட்டி உறவாடிட முடியவில்லை. அதுவும் சுரஜேஷோ மீண்டும் அண்ணனை எச்சரித்திருந்தான், திரும்ப வந்தவனிடத்தில் ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்லி.
ஆர்செனியோவோ ஊர் விட்டு ஊர் வந்த காரியம் எங்கே நடவாது போயிடுமோ என்று மண்டைக் காய்ந்தான்.
ஜெனரல் டாக்டராய் பணிப்புரிந்த அவன், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் சம்பந்தமான நோய்க்கு நிவாரணி கண்டுப்பிடிக்கும் ஆராய்ச்சி ஒன்றோடு கடந்த ஆறாண்டு காலமாக போராடிக் கொண்டிருந்தான்.
இதுநாள் வரைக்கும் அவனுக்கு படியளந்த கம்பெனியின் மூத்த தலைமையோ வயது முதிர்ச்சியில் போய் சேர, அடுத்த தலைமுறையோ ஆர்செனியோவிற்கு கும்பிடு போட்டு துரத்தி விட்டனர்.
நட்டநடு வீதி கணக்காய் ஆணவனின் ஆராய்ச்சி பாதியிலேயே நின்றுப்போக, எதர்ச்சையாய் ஒருநாள் கண்டான் ஆர்செனியோ, டிவியில் மூர்த்திகன் குரூப்ஸ் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட ஔகத்தை.
உடனே, அவன் மூளையோ ஏகத்துக்கு எம்பிக்குதித்து திட்டம் தீட்டியது. ஔகத் பணக்காரன் மட்டுமல்ல நல்லவன் என்றும் ஆர்செனியோவிற்கு நன்றாகவே தெரியும்.
ஆகவே, நிச்சயம் முழுமையடையா அவனின் ஆராய்ச்சிக்கு ஔகத் கைக்கொடுப்பான் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் ஜெர்மனி பறந்தான் ஆர்செனியோ.
ஆனால், அவனிடத்தில் வாய் திறக்கவோ அல்லது தனியாய் பேசிடவோ ஆணவனுக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.
மமாடி எப்போதுமே ஔகத்தை அட்டைப் போல் ஒட்டிக்கொண்டிருக்க, ஆர்செனியோவிற்கோ முட்டுக்கட்டையாக இருக்கின்றவனை எப்படியாவது டாக்டரிடமிருந்து விலக்கியே ஆகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அப்படியான துர்சம்பவம் நடந்தேறிட அதிக நாட்களெல்லாம் ஆகிடவில்லை.
சாதாரண சந்திப்பொன்றின் பிரிவில் குடிக்காத ஔகத்தோ மனை திரும்ப, சனிக்கிழமை இரவை மதுக்கூடத்தில் கழிக்க நினைத்த ஆர்செனியோவும் மமாடியும் ஒன்றாய் குடியைப் போட்டு பேச்சை வளர்த்திட ஆரம்பித்தனர்.
ஒன்று, ரெண்டென்று ஆரம்பித்த ரவுண்ட்ஸ் முழு நீள இரவையும் விழுங்கிக் கொள்ள, மமாடியின் குடியை, குடி கெடுத்தது எனலாம். மது கணக்கில்லாம் உள்ளே இறங்க, ஆணவனோ அவனுக்கான ஆசைகளைப் பற்றி மனம் திறந்தான் ஆர்செனியோவிடம்.
ஔகத் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கும் சாவன்ட் சிண்ட்ரோம் பற்றியும் உளறி வைத்தான்.
விஷயங்களை உள்வாங்கிக்கொண்ட ஆர்செனியோவோ, அன்றைய நாள் தொடங்கி தினம் இரவு மமாடிக்கு ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்தான்.
கறுப்பினத்தவனோ கொஞ்சங்கொஞ்சமாய் டாக்டரிடமிருந்து விலகிட ஆரம்பித்தான். ஔகத்தோ தோழன் ஆராய்ச்சியில் பிஸியென்று நினைத்து அவனை தொந்தரவு செய்திடாமல் அவன் வேலையைப் பார்த்தான்.
முழுநேர குடிகாரனான மமாடிக்கோ வேலை பறிப்போனது. ஆராய்ச்சிகளோ பாதியில் நின்றுப் போனது.
குடியோடு சேர்த்து குட்டியையும் அவனுக்கு அறிமுகப்படுத்தினான் ஆர்செனியோ. மது, மாது கடந்த கொண்டாட்டத்தின் முடிவில் கஞ்சாவிற்கும் அடிமையாகி போனான் மமாடி.
நண்பனின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்ட ஔகத்தோ அவனைக் கண்டிக்க, வாக்குவாதம் மூண்டது இருவருக்குள்ளும்.
அனைத்திற்கும் காரணமான ஆர்செனியோவோ வேடிக்கை மட்டுமே பார்த்தான் இரு நல்ல நண்பர்களின் நட்பை குட்டி சுவராக்கிய வன்மத்தில் திளைத்தவனாய்.
நிதானமற்ற மாமடியோ வாய்க்கு வந்தப்படி பேச, அவனின் தடுமாற்றமான நிலையை உணர்ந்த போதும் டாக்டரால் வருத்தங்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
ஆனால், நன்றாக இருந்த நண்பன் திடிரென்று இப்படி மாறிப்போனதன் காரணம் என்னவென்று கண்டறிய ஔகத் முயற்சிக்காமலும் இல்லை.
அதேவேளையில், ஆர்செனியோவோ இத்தருணத்தை பயன்படுத்திக் கொண்டு ஔகத்திடம் உறவாடிட ஆரம்பித்தான். பெரிதாக அவனிடத்தில் நட்பு பாராட்டிடா விட்டாலும், ஒன்றாக படித்தவனிடம் பாகுபாடின்றியே பழகினான் டாக்டர்.
மெல்லமாய் அவன் ஆராய்ச்சியைப் பற்றி ஔகத்திடம் பேச்செடுத்தான் ஆர்செனியோ. நல்ல காரியம் என்பதால் தாமதிக்காத டாக்டரோ அதற்கான மொத்த செலவையும் அவன் பொறுப்பிலேயே எடுத்துக் கொண்டான்.
ஆராய்ச்சி செய்திட தொழிநுட்பமிக்க நவீன ஆய்வகம் இல்லை என்று ஆர்செனியோ புலம்ப, அவனின் லேப்பையே உபயோகப்படுத்திட அனுமதி அளித்தான் ஔகத்.
முன்பெல்லாம் அங்கு குடியும் குடித்தனமுமாய் இருந்த டாக்டர் சொந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வர லேப்புக்கு வருவதை குறைத்திருந்தான்.
ஆகவே, ஆளில்லா ஆய்வகத்துக்குள் தனியொரு ஆளாய் ராஜாங்கம் கொண்ட ஆர்செனியோவோ, குடிகாரனின் உளறல்களுக்கு அத்தாட்சிகளை தேடி அலைந்திட ஆரம்பித்தான்.
கோப்புகள் எதையும் அவனால் அவ்விடத்தில் கண்டிட முடியவில்லை. கணினியும் ஔகத்தின் குரலை கடவுச் சொல்லாய் கேட்க, கடுப்பாகிய ஆர்செனியோவோ கவனத்தை குளிர்ப்பெட்டிகளை நோக்கி திருப்பினான்.
ஆனால், அதுக்குள்ளிருந்த குப்பிகளையும் அவனால் வேடிக்கை மட்டுமே பார்த்திட முடிந்தது, அதன் கதவுகள் கூட டாக்டரின் கருவிழிகளையே கடவுச் சொல்லாய் வேண்ட.
ஆனால், ஆர்செனியோவோ அறியவில்லை மமாடியால் அங்கிருக்கும் எல்லாவற்றையும் செயல்படுத்திட முடியும் எவ்வித கடவுச் சொல்லுமின்றி.
கதங்கொண்ட நயவஞ்சகனுக்கோ அப்போதுதான் புரிந்தது என்னதான் மமாடியை நண்பனை பிரித்து புதிதாய் சேர்ந்துக் கொண்டாலும் ஔகத்தின் நம்பிக்கையை பெற அவன் தவறியிருக்கிறான் என்று.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 117
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.