- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 118
பூஜித்த பாலாகினும், துளி விஷங்கொண்டால் கெட்டுத்தான் போயிடும்.
அதுபோலத்தான் ஔகத்தும். தம்பியின் பேச்சைக் கேளாது ஆர்செனியோவை கூடவே வைத்திருந்து மிகப்பெரிய தவறிழைத்து விட்டான்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பதால் சுரஜேஷ் மிக சரியாகவே கணித்து அண்ணனை எச்சரித்தான்,6j புதிதாய் வந்து ஒட்டிக்கொண்டவனிடம் ஒரு படி எட்டி நிற்கச்சொல்லி.
இருப்பினும், ஔகத் கோட்டை விட்டிடுவானென்று கனவிலும் நினைக்கவில்லை சின்னவனவன்.
மமாடியாய் கெடுத்தது போதாதென்று, ஔகத்தின் நம்பிக்கையை எப்படி சம்பாரிப்பதென்று தீவிரமாய் யோசனைக் கொண்டிருந்தான் வஞ்சகன் ஆர்செனியோ.
ஆனால், காலமோ அதற்கு ஒத்தாசிக்கவில்லை. டாக்டரின் ஆராய்ச்சிகள் கொண்ட கணினி கோப்புகளை சீக்கிரமாய் கைப்பற்றிட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தான் கயவனவன்.
வழிய போய் இனிக்க பேசி கூழை கும்பிடு போட்டு ஔகத்தின் நட்பை பெற அவனுக்கு நேரமில்லை என்பதால் வேறொரு வழியை ஆழமாய் சிந்தித்து அதை செயல்படுத்தும் முறைகளையும் மூளைக்குள் காட்சிப்படுத்தி பார்த்துக் கொண்டான் ஆர்செனியோ.
இரக்கங்குணங்கொண்ட டாக்டரின் முன், பரிதாபமான உயிராய் அவனை காட்டிக்கொண்டு அனுதாபம் பெற்று, பின் ஔகத்தின் நெஞ்சுக்குள் இடம் பிடித்திட திட்டம் தீட்டியிருந்தான் அரக்கனவன்.
அப்படியான நேரத்தில்தான் ஆர்செனியோவின் கையில் வசமாய் வந்து சிக்கினான் அவன் வீட்டு சுவரேறி குதித்த டேனியல்.
திருட்டு பாஸ்ப்போர்ட் கொண்டவனை போலீஸ் கையுங் களவுமாய் பிடிக்க, தப்பித்து ஓடி வந்தவன் எகிறி குதித்திருந்தான் ஆர்செனியோவின் வீட்டு தோட்டத்தில்.
காவல்துறையின் சைரன் சத்தம் அடங்கும் வரை தஞ்சம் கொண்டிருந்தவன், பசியெடுக்க ஆர்செனியோவின் வீட்டுக்குள் நுழைய முடிவெடுத்தான்.
வயிற்றை நிரப்ப ஏதாவது தேறுமா என்று அடுக்களையை உருட்டியவன் மாட்டிக் கொண்டான் அந்நேரம் பார்த்து கிட்சன் வந்த ஆர்செனியோவிடம்.
உண்மையைச் சொன்னவன், கெஞ்சினான் ஆர்செனியோவிடம், போலீசில் அவனை மாட்டி விட வேண்டாமென்று. அதற்கு மாறாக அவன் என்ன சொன்னாலும் கேட்பதாகவும் வாக்குறுதி அளித்தான் டேனியல்.
தானாய் வந்து மாட்டிய ஆட்டைக் கொண்டு ஏற்கனவே வகுத்திருந்த திட்டத்தை செயல்படுத்திட துணிந்தான் ஆர்செனியோ. அதுதான் டாக்டரின் ஆய்வகத்தை கொள்ளையடிக்கும் சதியாகும்.
டேனியலைக் கொண்டு லேப்பில் திருட்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றி, அதன் மூலம் அவன் காரியத்தை சாதித்துக்கொள்ள நினைத்தான் ஆர்செனியோ.
பிளானை செயல்படுத்தும் முன் ஆய்வகத்தின் செக்கியூரிட்டி சிஸ்டம்களை ஓரிரு நாட்கள் கண்காணிக்க ஆரம்பித்தான் தீயவனவன். அதேப்போல், காவலாளி உறக்கம் கொள்ளும் நேரத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டான்.
கள்ளக்குடியேறியான டேனியலுக்கு வந்த இடத்தில் சொகுசு வாழ்க்கை என்றே கூறலாம். ஆர்செனியோவோ அவனுக்கு மூணு வேலை சோறு போட்டு தோட்டக்காரனாய் பணியில் அமர்த்தியிருந்தான்.
டேனியலின் வாழ்க்கை வரலாறை தனியார் டிடெக்டிவ் ஒருவன் மூலம் அறிந்த ஆர்செனியோவிற்கோ பம்பர் லாட்டரி அடித்தது போலிருந்தது.
நேற்று வரை, நடத்த போகின்ற திருட்டு நாடகத்தில் அவனும் டேனியலோடு சேர்ந்து பங்கெடுத்திட வேண்டுமென்று ஆர்செனியோ நினைத்திருக்க, பின்னர்தான் தெரிந்தது ஆணவனுக்கு பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறியோ ஒரு பலே திருடனென்று.
இதை முதலில் மறுத்த டேனியலோ, பின் ஆர்செனியோ போலீஸ் என்ற வார்த்தையை சொன்ன நொடி, ஒப்புக்கொண்டான் அவனொரு கைத்தேர்ந்த கள்ளனென்றே.
அதற்கு பிறகான நாட்களில், ஆர்செனியோவின் கைக்கு கிடைத்தது ஆய்வகத்தின் ப்ளூ பிரிண்ட், கேட்கும் இடத்தில் அவனிருக்க, கொடுப்பவர்கள் மறுவேள்விக் கொள்ளாது கொடுக்க.
டேனியலோ லேப்புக்குள் எவ்வழி நுழைந்து எத்தனை நிமிடங்களில் வேலைகளை முடித்து அங்கிருந்த வெளியேறிடணும் என்று கண கச்சிதமாய் பிளான் போட்டிட ஆரம்பித்தான்.
இதற்கு இடையில், புதிய மருந்துகள் சிலவற்றின் பங்கு சந்தை மீட்டிங் ஒன்றுக்காக குழுமியிருந்தனர் பல பெரிய அதிகாரிகளும் மூர்த்திகன் குழுவின் முக்கிய புள்ளிகளும், நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றில்.
தம்பியும் ஜப்பானிலிருந்து வந்திருக்க, விளக்கக்காட்சி கொடுக்க வேண்டிய மமாடியோ சொன்ன நேரத்துக்கு வராது கெய்டனை தலை குனிய வைத்தான்.
பிஸ்னஸ் புள்ளிகள் நக்கல் கொள்ள, ஔகத்தோ அப்பனுக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க, அவனே மார்க்கெட்டாக போகும் மருந்துகளுக்கான விளக்கங்கள் கொடுத்திட ஆரம்பித்தான்.
ஒரு மணி நேரம் தாமதமாய் வந்த மமாடியோ, குடிபோதையில் ஆட்டங்கொள்ள, அங்கிருந்த அத்தனை பேரின் முகமும் சுணங்கி போனது.
பேசிக்கொண்டிருந்த டாக்டரை குறுக்கிட்டு நிறுத்தியவனோ, வந்திருந்தோரின் உச்சுக் கொட்டல்களை கண்டுக்காது விளக்கம் என்ற பெயரில் உளறல்கள் கொண்டான்.
விநியோக அதிகாரிகளோ சிரிப்பாய் சிரிக்க, அத்தனைக்கும் காரணமான ஆர்செனியோவோ நல்லவனை போல் பாசாங்குக் கொண்டு நடித்தான், பேரை கெடுத்துக் கொண்டிருக்கும் மமாடியை அங்கிருந்து வெளியேற்றும் உத்தமனாய்.
கெய்டனோ மகனையே மீண்டும் தொடரச் சொல்லி உத்தரவிட, அதிகாரிகளோ அடுத்த சந்திப்பிற்கான நாளை சொல்லி அனுப்புவதாய் சொல்லி கிளம்பினர்.
அவர்கள் வெளியேறிய அடுத்த நொடி, தள்ளாடிக்கொண்டிருந்த மமாடியின் சட்டைக் காலரை எக்கி பற்றினான் சுரஜேஷ்.
வந்தவர்களை வழியனுப்ப போன கெய்டனோ உள்ளுக்குள் நடந்த கலவரத்தை அறியவில்லை.
நிறுத்தக்கோரி தம்பியை டாக்டர் தடுக்க, ஒப்புக்கு மமாடியை பின்னோக்கி இழுப்பதாய் போலித்தனத்தில் நடிகர் திலகத்தை மிஞ்சிய ஆர்செனியோவோ, குடிகாரன் தள்ளாதே போய் விழுந்தான் மல்லாக்க தரையில்.
சரிந்தவனின் மண்டை நச்சென்று அடிவாங்க, எல்லோரையும் நம்ப வைக்க சொந்த கபாலத்தையே பகடைக் காயாக்கியவன், மமாடியை வில்லனாக்கினான்.
குடியில் உளறினாலும் கீழே கிடந்தவனுக்கு உதவிட வந்த மமாடியை நிறுத்திக் கோரி கத்தினான் சுரஜேஷ் அவனை அங்கிருந்து வெளியே போக சொல்லி.
டாக்டரோ இருவரின் கைகலப்பையும் நிறுத்த முயற்சிக்க, மதுவோடு போதையும் கொண்டிருந்த மமாடியோ சின்னவனை சீண்டி சண்டைக்கு அழைத்தான் தேவையற்ற விடயங்கள் பேசி.
சினங்கொண்டாலும் அண்ணனின் வயதுக் கொண்டவன் என்ற ஒத்தைக் காரணத்தால் அனாவசியமான விதண்டாவாதங்கள் வேண்டாமென்றான் சுரஜேஷ்.
டாக்டரோ சமரசம் பேச முயல, மமாடியோ போதையில் முஷ்டி மடக்கிய கரத்தால் சின்னவனின் முகத்தை சரமாரியாக தாக்கிட ஆரம்பித்தான். அமைதியும் பொறுமையும் கொண்ட ஔகத்தோ பொங்கி எழுந்தான்.
தம்பியை தாக்கிய நண்பனின் கழுத்தை பிடித்து அறையிலிருந்து வெளியேற்றினான்
நடக்கும் கூத்தின் விபரீதம் உணராத மமாடியோ, மீண்டும் மீட்டிங் அறைக்குள் நுழைய முற்பட்டான் சத்தமான சிரிப்போடு.
ஔகத்தோ அவன் நெஞ்சில் கரம் பதித்து பின்னோக்கி தள்ள ஒரு கணம் ஸ்தம்பித்தன் நண்பனவன்.
எச்சரித்தான் ஔகத், இனி தோழன் அவன் முகத்தை வாழ்நாளில் எப்போதுமே அவன் பார்த்திட விரும்பிடவில்லை எனக்கூறி.
மமாடியோ லைட்டாய் போதை இறங்க அதிர்ச்சிக் கொண்டான் ஆருயிர் நண்பனின் வார்த்தைகளில்.
சின்னவன் சுரஜேஷ்தான் உலகம் ஔகத்திற்கு. அப்படியிருக்க அவன் மீது ஒருவன் கை வைக்க சும்மா இருந்திடுவானா டாக்டர். யாராக இருந்தாலும் பாய்ந்திட மாட்டானா என்ன.
என்னதான் மனம் வேதனையில் கனத்தாலும், ஔகத்தால் சிநேகிதனின் செயலை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே, அதிர்ந்து நிற்கும் மமாடியின் முகத்தை பார்த்திடாமலே ஆவேசங்கொண்டான் அவனை அங்கிருந்து போகச்சொல்லி அலறி.
அதை சற்றும் எதிர்பார்த்திடாத மமாடியோ, மொத்த போதையும் சுத்தமாய் இறங்க, ரோஷங்கொண்டவனாய் அங்கிருந்து விருட்டென வெளியேறினான்.
இச்சம்பவத்திற்கு பிறகு, சுரஜேஷ் எவ்வளவோ எடுத்துரைத்தான் மூத்தவனிடம் மீண்டும் மமாடியோடு பேசிட சொல்லி. ஆனால், ஔகத்தோ முதல் முறையாக சின்னவனின் கோரிக்கையை நிராகரித்தான்.
எல்லாவற்றிக்கும் காரணமான ஆர்செனியோவோ, அவன் பங்கிற்கு நாலு வார்த்தை பேச, மமாடியின் இந்நிலைக்கு காரணமே அவன்தானென்று அறிந்த ஔகத்தோ வார்த்தைகளால் குதறினான் ஆறுதல் சொல்ல எத்தனித்தவனை.
தன்னிலையை காப்பாற்றிக்கொள்ள முனைந்த குள்ள நரியோ, அளவாக இருக்க வேண்டிய பழக்கத்தை அதிகமாக்கிக் கொண்டது மமாடியின் தவறென்றான்.
அதை பழக்கியதே அவன்தானென்று டாக்டர் சரிக்கு சமமாய் வாதங்கொள்ள, பேரலையில் நீச்சல் கொண்டிட முடியுமென்று முங்கியவனின் முட்டாள்தனத்திற்கு அவன் பொறுப்பேற்றிட முடியாதென்றான் ஆர்செனியோ.
அதோடு அடங்கிப்போன டாக்டரோ, சொந்த புத்தி மழுங்க சொல் புத்தியும் கேளாது குடியே கதியென்று கடக்க, இனி மமாடியை திருத்தவே முடியாதென்று கைகழுவி விட்டான்.
அதேப்போல், அவனை மீண்டும் தோழனோடு சேரச்சொல்லி புராணம் பாடிய அனைவரிடமும், இனி அதைப்பற்றி யாரும் பேசிட வேண்டாமென்று கறாராய் சொல்லி விட்டான்.
நல்லவன் போர்வைக் கொண்ட ஆர்செனியோவோ, என்னதான் டாக்டரிடம் மமாடிக்கு எதிராய் போர்க்கொடி தூக்கினாலும் ஒவ்வொரு நாள் இரவும் அவனோடு கூத்தடித்திட மறந்திடவில்லை.
அப்படியான ஒரு நாளில், வழக்கத்தை தாண்டி அவனை அழைத்துக் கொண்டு போனான் ஆர்செனியோவோ நகரத்துக்கு அப்பால் இருக்கின்ற மதுக்கூடம் ஒன்றுக்கு.
எப்போது டாக்டருக்கு மமாடியை கெடுத்தது ஆர்செனியோதான் என்று தெரிந்ததோ, அப்போதே உஷாராகி விட்டான் விஷ ஜந்து அவன், எங்கே இனிவரும் காலங்களில் அவனை சந்தேகப்பட ஆரம்பித்திடுவானோ ஔகத் என்று.
அதனால்தான், இப்படி ஊருக்கு ஒதுக்குபுறமான தனியார் மது கூடத்துக்கு வந்திருந்தான் கயவனவன் ஏமாளி மமாடியை இழுத்துக் கொண்டு.
ஔகத்தின் செயலில் பெரும் மன உளைச்சல் கொண்ட கறுப்பினத்தவனோ, அவமானத்தில் கூனி குருகி உள்ளுக்குள் புழுங்கிக் கிடந்தான்.
காரியம் சாதிக்க நினைத்திருந்தவனோ இல்லாத பொல்லாத கதைகளை அள்ளி விட்டு, மமாடியின் கோபத்தை மேலும் தூண்டி விட்டான்.
எரியும் நெருப்பில் எண்ணெய் கொஞ்சங் கொஞ்சமாய் ஊற்றப்பட, வெகுண்டெழுந்தான் மமாடி வன்மம் கொண்டவனாய் வஞ்சம் தீர்க்க.
அவன் ஆராய்ச்சியின் கண்டுப்பிடிப்பில் உருவாகி, ஔகத்தின் பயன்பாட்டிலிருக்கும் திரவத்தை பற்றி சந்தர்ப்பவாதியிடம் சொன்னவன், அவர்களின் சண்டைக்கு முக்கிய காரணமான சுரஜேஷை ஏதாவது செய்தே ஆகவென்றுமென்று வெறிக்கொண்டான்.
இவை அனைத்தையும் பின் டேபிளிலிருந்தப்படி ஒட்டுக்கேட்ட ஓவியாவோ, அவளை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆர்செனியோவுடன் கூட்டுச் சேர்ந்தாள்.
பணத்தாசைக் கொண்டவளுக்கு எதை, எங்கு, எப்படி வியாபாரம் செய்ய வேண்டுமென்று நன்றாகவே தெரியும், சுரஜேஷின் செயலாளினி என்பதால்.
முதலில் அவளின் பேச்சை மறுத்து அப்பாவி நாடகம் கொண்ட ஆர்செனியோவோ, பின் அவள் தொல்லை செய்து மிரட்டிட, சினத்தில் கூச்சல் கொண்டான் அவளை அங்கிருந்து கிளம்பச் சொல்லி.
எந்த பிரச்சனையும் இல்லாது சுமூகமாய் காய் நகர்த்த பார்த்தவனின் முன் தடையாய் ஒருத்தி வந்து நிற்க, என்னசெய்வதென்று தெரியாமல் விழித்தான் ஆர்செனியோ.
இச்சங்கதியை அறிய வேண்டிய கும்பல் அறிந்தால், அவ்வளவுதான் ஆர்செனியோவிற்கோ பாடைதான் என்றறிந்தவன், என்ன செய்து ஓவியாவை ஓட விடலாம் என்று யோசித்தான்.
அசராத கள்ளியோ அவள் கைவசமிருந்த அவர்களின் குரல் பதிவு ஆதாரத்தை ஒலிபரப்பினாள். வேறாளை பாரென்று ஆர்செனியோ சொல்ல, சாமர்த்தியமான ஓவியாவோ அவனில்லையென்றால் இன்னொருவன் அவன் இடத்துக்கு என்று ஒற்றை வரியில் ஆணவனை சிந்திக்க வைத்தாள்.
பேரம் பேசப்பட்டிருந்த ஆர்செனியோவோ மேல்மாடிக்கு வேலை கொடுத்தான். ஓவியா சொல்வது முற்றிலும் உண்மையே.
அவனில்லை என்றால் கூட டாக்டரின் ஆராய்ச்சிகளை கைப்பற்றிட நினைப்பவர்கள் வேறு ஆட்களின் மூலம் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் போகிறார்கள்.
கொடுத்திருக்கும் வேலையில் இவன் கொஞ்சம் பிசுறு தட்டினாலும் கூட, ஆர்செனியோவின் உயிர் ஊசல்தான். தெரிந்தேதான் அப்பெரிய சதிக்கார கும்பலோடு கைக்கோர்த்திருந்தான் ஆர்செனியோ.
ஆகவே, காசு கொடுத்து ஆணவனை விலை பேசியிருந்த வியாபாரிக்கு போனை போட்டு ஓவியாவை பற்றி சிறு விளக்கம் கொடுத்த ஆர்செனியோ, அவளையும் அவளின் காதலனான நுவானையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டான்.
மமாடியோ இது எதுவும் தெரியாது தூங்கிப் போயிருந்தான் நாற்காலியிலேயே.
காரியக்காரி ஓவியாவோ, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறந்தாள் ஆர்செனியோவிடமிருந்து பணத்தை. அப்படியான ஒரு நாளில் அவளிடம் பணத்தை கொடுக்க போன டேனியலோ அவளைக் கண்ட நொடி எடுத்தான் ஓட்டம் ராக்கெட் வேகத்தில்.
கூச்சல் கொண்டு அவனைத் துரத்தியவளோ, தூரத்தில் காரை நிறுத்தியிருந்த ஆர்செனியோ இழுத்தமர்த்த மூச்சிரைப்போடு பின் சீட்டியில் பிட்டத்தை பார்க் செய்தாள்.
அலறினாள் மீண்டுமொருமுறை அந்திகையவள் ஆர்செனியோவின் காருக்குள் டேனியலை காண.
அவனைக் கண்டப்படி திட்டிய ஓவியாவோ கைப்பைக் கொண்டு ஆணவனை விடாது அடிக்க, பின்னரே தெரிந்துக் கொண்டான் ஆர்செனியோ, போலீசுக்கு டிமிக்கி கொடுத்து நித்தமும் ஓட்டத்தில் வாழ்க்கையைக் கழித்திருந்த கள்ளக்குடியேறி டேனியல், முன்பொருநாள் இரவில் மங்கையவள் ஹேண்ட்பேக்கை ஆட்டையைப் போட்ட கதையை.
அவர்களின் பழைய பகையை ஆர்செனியோ ஒரு முடிவுக்கு கொண்டு வர, சமரசத்தில் ஈடுப்பாடுக் காட்டாத ஓவியாவோ, திருடப்பட்ட அவளின் கைப்பையை பற்றியே டேனியலிடம் தோண்டி துருவினாள்.
மூன்று மாதங்களுக்கு முன்னாள் காணாமல் போன ஹேண்ட் பேக்கை பற்றி இப்போதும் ஓவியா மிக அக்கறையாய் விசாரிக்க, அதுவும் ஒருமுறை கூட அது அவளின் விருப்பமான கைப்பை என்பதை, பேச்சுக்கூட சொல்லாமல் டேனியலை நங்கையவள் பாடாய் படுத்த, அதில் ஏதோ மர்மமிருக்க கண்டான் ஆர்செனியோ.
ஆகவே, கண்ணசைத்தான் ஆணவன் டேனியலிடம் ஹேண்ட் பேக்கை பற்றி ஓவியாவிடம் மூச்சு விட்டிட வேண்டாமென்று, அது அவனிடத்தில் இருந்தாலுமே.
புரிந்துக்கொண்ட களவாணியும் காப்பாற்றி சோறு போடுபவனுக்கு விசுவாசமாய், குற்றமானவனை போல் தலைகுனிந்து, ஓவியா கொடுத்த அடியுடன் கூடிய ஏச்சுக்களை வாங்கிக் கொண்டான்.
அன்றைய தொகையை வாங்கிக் கொண்டவள் கிளம்ப, ஆண்கள் இருவரும் விரைந்தனர் ஆர்செனியோவின் வீட்டுக்கு.
அவன் தோட்டத்து ஸ்டோர் ரூமின் பக்கம் போன டேனியலோ, அன்றைக்கு கொள்ளையடித்திருந்த ஓவியாவின் கைப்பையை அவ்வறைக்குள் தூக்கி வீசிய பின்னர்தான் மனைக்குள்ளேயே எகிறி குதித்திருந்தான்.
ஆர்செனியோவோ பெண்ணவளின் ஹேண்ட் பேக்கை உள்ளே வெளியே என்று திருப்பி பார்க்க எதுவும் பெரிதாய் தெரியவில்லை. இருப்பினும் அவனுக்குள்ளிருந்த சந்தேகமோ விலகவில்லை.
ஆகவே, அப்பையைத் தூக்கிக் கொண்டு விரைந்தான் ஆய்வகத்திற்கு ஆணவன். அவனுக்கென்று தனியொரு லேப் உண்டு. ஆனால், அதை ரகசியமாய் வைத்திருந்தான் ஆர்செனியோ.
லெதர் பேக்கை கத்தரித்து கிழித்தவன், அதை பூதக்கண்ணாடிக்கு கீழ் படுக்க போட்டு பார்த்திட, ஆடிப்போனான் ஆர்செனியோ.
மவராசி ஓவியாவோ அவன் நினைத்ததை விட பலே வில்லியாய் இருந்தாள். ஹேண்ட் பேக்கின் உள்பக்க லெதர் நூல்களில், வைரங்களை பதுக்கி வைத்திருந்தாள் கில்லாடியவள்.
சிறிய அளவிலான, இருபத்து ஐந்து வைரக்கற்களை கண்டெடுத்தான் ஆர்செனியோ அக்கைபைக்குள்ளிருந்து.
சரியான ஆளைத்தான் கூட்டு சேர்த்திருப்பதாய் பெருமிதம் கொண்டான் முள்ளமாரியவன், அந்நொடியில் பெருமைக் கொண்டு.
இருப்பினும், ஓவியாவை வெறுமனே புகழ்ந்து தள்ளிட ஆணவனுக்கு விருப்பமில்லை. ஆகவே, அவளின் மிரட்டல் ஸ்டைலை பகினி அவளுக்கே திரும்ப ரிவீட் அடித்திட முடிவெடுத்தான்.
ஆர்செனியோ போனை போட்டு வைரக்கற்கள் பேச்செடுக்க, வேறு வழியில்லா கள்ளியோ அவனிடமிருந்து பெற்ற மொத்த தொகையையும் அவனிடமே திரும்ப கொடுத்திடுவதாய் சொன்னாள்.
மாறாக, அவளின் வைரங்கள் திரும்பவும் வஞ்சியவளுக்கே வேண்டுமென்று கறாராய் சொல்ல, சிரித்த ஆர்செனியோவோ அதற்கு மட்டும் வாய்ப்பே இல்லையென்று சொல்லி அவளை மூக்குடைத்தான்.
பல மணி நேரங்கள் போன உருட்டல் பிரட்டலின் முடிவாய், கூட்டாக இருவரும் சேர்ந்தே இனி டைமண்ட் டீலிங்கை செய்து பணத்தை ரெண்டாய் பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர்.
இதை மற்றவர்கள் அறியாமலும் பார்த்துக் கொண்டனர், ஆர்செனியோவும் ஓவியாவும்.
தளிரியல் அவள் கைகாட்டிய கள்ள சந்தை வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து பணத்தை பெற்று வந்தான் டேனியல்.
அவனைப் போலவே வெளிநாட்டு கள்ள சந்தையில் வைரங்களை கித்தாருக்குள் ஒளித்து வைத்து கைமாற்றினான் நுவான். தண்ணீரில் பயணிக்கும் கப்பலே அவனின் தேர்வாகி போனது.
மூர்த்திகன் குரூப்ஸின் மாணிக்க கற்களை கூட விட்டு வைத்திடாது அசால்ட்டாய் ஆட்டையைப் போட்டாள் திருடியவள். பெண்ணாசை கொண்ட பித்தர்கள் இருக்கும் வரை, ஓவியா போன்ற சதிகாரிகளுக்கு சுலபமே நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள.
பித்தலாட்ட கூட்டத்தின் திருட்டு வியாபாரமோ கொழுத்த பணத்தை அவர்களுக்கு வாரிக் கொடுத்தது.
என்னதான் மமாடியோடு எவ்வித தொடர்புமின்றி டாக்டர் இருந்தாலும், அவன் கொண்ட ஆய்வக சாவியை திரும்ப கேட்டிடவேயில்லை ஔகத். நம்பிக்கை கொண்டான் ஆணவன் நண்பன்தானே என்று.
அதேப்போல் அவன் ஆராய்ச்சிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்திடவில்லை டாக்டர். தோழனுக்கு சேர வேண்டிய ஷேர்களை கூட அடுத்தவருக்கு விற்றிடாமல் மெயிண்டன் செய்தான் ஔகத்.
எல்லாம் அப்படியே இருக்க, முறிந்து போன அவர்களின் நட்பு மட்டும் சேராமலேயே இருந்தது.
ஆனால், மமாடியோ தவறான உறவுகள் கொடுத்த அல்ப வார்த்தைகளின் கர்வத்தில் ஆடிட ஆரம்பித்தான். நாளுக்கு நாள் அவனுக்குள்ளிருந்த வன்மமோ வீறு கொண்டு துடித்தது, சுரஜேஷ் மற்றும் ஔகத்தை பழிவாங்கிட.
மாதங்கள் கடக்க, கண்டுப்பிடித்தான் சின்னவனவன் ஓவியாவின் திருட்டுத்தனங்களை.
வைரங்களை பிரித்தடுக்கி பாதுகாத்திடும் அறைக்குள் அதன் பொறுப்பாளனோ, ஓவியாவோடு குஜாலாய் இருக்க, அக்காட்சியை எதார்த்தமாய் ரகசிய கேமரா பதிவின் மூலம் கண்ட சுரஜேஷோ இருவருக்குமான பணி நீக்கத்தை ஏற்பாடு செய்தான்.
வேலையைத் தக்க வைத்துக் கொள்ள, மொத்த பழியையும் தூக்கி ஓவியா மீது போட்ட புள்ளக்குட்டிகாரனோ வாய் தவறி மிக முக்கியமான உண்மையை உளறிக் கொட்டினான்.
அதுதான் இத்தனை காலமாய் ஓவியா மூர்த்திகன் குரூப்ஸின் வைரங்களை லவிட்டிய சம்பவமாகும்.
வயசான கட்டையான அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட் தலைமையோ இச்சம்பவத்தை கேள்விப்பட, அவளின்பால் கொண்ட காண்டை இதன்மூலம் தீர்த்துக் கொண்டார்.
எப்போது ஓவியா வைரக்கற்களை குறி வைத்திட ஆரம்பித்தாளோ, அப்போதே இளவயது கன்னியவள் நாற்பதை தாண்டியவனை விலகி, அவள் வயது ஒத்த ஆடவனோடு உறவாடிட தொடங்கினாள்.
ஆகவே, நிதித்துறை தலைமையோ வதனியவள் சுருட்டிய கல்லா பண சங்கதியையும் சுரஜேஷிடம் போட்டுகொடுத்திட, ஓவியாவை களி தின்ன வைத்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்தான் சுரஜேஷ்.
வசமாய் மாட்டிக் கொண்ட ஓவியாவோ, காலில் விழாத குறையாய் கெஞ்சி கதறி நாடகமாடினாள் கெய்டன் மகனிடம். தெரியாமல் நடந்த தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பொன்று கொடுக்க சொல்லி மன்றாடினாள் நிர்வாகி அவனிடம்.
ஆனால், சுரஜேஷோ பல மோசடிகளை செய்தவளுக்கு இரக்கமே காட்டிடவில்லை.
முதலாளியின் முடிவில் மாற்றமில்லை என்றறிந்த ஓவியாவோ, தப்பித்திட இனி வழியே இல்லையென்று எண்ணி எடுத்தாள் ஓட்டம் ஆர்செனியோவின் வீட்டுக்கு.
போலீஸ் அவளை ஆங்காங்கே வலை வீசி தேட, யாருமே சந்தேகிக்காத வகையில் கூட்டு களவாணியின் வீட்டில் தஞ்சங் கொண்டாள் ஓவியா.
எப்போது பண விஷயம் வெளியில் வந்ததோ, அப்போதே சுரஜேஷ் நிச்சயம் மற்ற விடயங்களையும் மோப்பம் பிடித்திடுவானென்று அனைவரின் மனசுக்குள்ளும் ஒரு வித பயம் குடிக்கொண்டது.
நிலைக்குத்திய நிலையில் சம்பவத்தை குறிப்பிட்டவனின் காதுக்கு கொண்டு போய் சேர்த்தான் ஆர்செனியோ. அவன் கட்டளைப்படி ஓவியாவை போட்டுத்தள்ளிட நேரங்குறித்தான் நயவஞ்சகனவன்.
ஓவியா ஒருத்தியால் ஏற்பட்ட சகல பிரச்சனையும், அவளை சாகடிக்க முடிவுக்கு வந்திடுமென்று ஆர்செனியோவின் தலைமை எண்ணியது.
ஆகவே, ஆரவாரமில்லா இரவில் சிறு ஊசியைக் கொண்டு ஓவியாவின் கதையை முடித்திட பார்த்த ஆர்செனியோவிடம் உயிர் பிச்சைக் கேட்டாள், தப்பி பிழைத்த ஓவியா கட்டிலின் விளிம்போரம் பேயறைந்த நிலையில், அதிர்ச்சி விலகாது.
எதுவும் வேலைக்கு ஆகாது, என்ற கல்நெஞ்சுக்காரனிடத்தில், அவளின் உயிருக்கு விலை பேசினாள் மாயோள் அவள். ஆர்செனியோவோ அலரவள் இனியும் வாழ்ந்தாள் அவன் இறக்க நேரிடும் என்ற உண்மையை தெளிவுப்படுத்தினான் ஓவியாவிடம்.
அச்சங்கொண்டாலும், கலங்காத ஓவியாவோ, இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் இருக்கின்ற வைரக்கற்கள் அவளிடம் உள்ளதென்று சொல்லி ஆணவனை அதிர்ச்சியாக்கினாள்.
அவளின் கூற்றை நம்ப மறுத்த ஆர்செனியோவோ ஆதாரம் கேட்க, போனில் படத்தை காண்பித்தவள், இனி அவளின் உயிருக்கு ஆபத்து ஏற்பாட்டால் வைரங்கள் இருக்குமிடம் அவனுக்கு தெரியாமலேயே போயிடுமென்று மிரட்டினாள்.
ஆர்செனியோவோ விரைந்து தகவலை தந்தியனுப்பினான் மேலிடத்திற்கு.
அதே வேளையில் ஓடோடி வந்த ரெண்டாவது நாளிலேயே ஓவியாவோ லாபகரமான டீலிங்கொன்றை முடித்து பெரிய தொகை ஒன்றை சம்பாரித்துக் கொடுத்தாள் அவர்களின் குழுவிற்கு.
அவளை உலகத்தை விட்டே அனுப்பிட நினைத்திருந்த ஆர்செனியோவின் மேலிடமோ, ஓவியாவின் திறமையையும் அவளிடம் இருக்கும் வைரங்களும் தேவையென்பதால் அரிவை அவளை கொல்லாது விட்டு வைத்தது.
ஆர்செனியோவோ முயற்சித்தான் இனிக்க பேசி அவளிடம் உண்மையை பிடிங்கிட, ஆனால், பலனில்லை. ஓவியாவோ வைரங்களை எங்கு வைத்திருக்கிறாள் என்று வாயே திறக்கவில்லை.
ஆணவனின் கையாலாகா தனத்தை மேலிடமோ காறித்துப்ப, வாய்மூடி வசைகளை வாங்கிக் கொண்ட ஆர்செனியோ, அம்மணியின் காதலனை போட்டு தள்ளிடுவேன் என்று தெரிவையவளை மிரட்ட, வித் பிளஷர் என்றவளோ விபூதி அடித்தாள் ஆர்செனியோவின் முகத்தில்.
எதற்குமே மசியா பணப்பேய் அவளை நேரடியாய் சந்தித்திட இறங்கி வந்தது ஆர்செனியோவின் மேலிடம்.
இளமையும் அழகும் ஒருசேர இருந்த அவளை அனுபவிக்க முப்பதை தாண்டிய மேலிட ராஜாவுக்கு ஆசை வந்தது.
அனுபவித்தவனோ, ஓவியா தந்திரமான கள்ளியென்பதை புரிந்துக் கொண்டான், பஞ்சணையிலேயே பாவையவள் கோடியிலான வைரக்கல் டீலிங்கொன்றை முடிக்க.
நுவானோ வைரத்தை கொண்டு போய் பத்திரமாய் சேர்த்தான் ஓவியா சொன்ன இடத்தில். அவனுக்குமே அவளாக சொல்கின்ற வரையில் டைமண்ட்ஸ் எங்கு இருக்கிறதென்று தெரியாது.
அதையும் கண்கூடாகவே பார்த்துத் தெரிந்துக் கொண்டான், வைரக்கல் கள்ளியை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்திருந்த மேலிடமவன்.
யாரை விட்டாலும், ஓவியாவை விட்டிடக் கூடாதென்று முடிவெடுத்தான் தலைமை அவன். ஆகவே, அவளுக்கு போலி பாஸ்போர்ட்டை ரெடி செய்து பறக்க விட்டான் மலேசியாவிற்கு பணிப்பெண்ணாக கட்டில் லீலைகள் எல்லாம் முடிய.
ஓவியாவின் வைர பிஸ்னஸின் டீலிங்குகளை கவனிக்கவே ஐசெக்கை துரித உணவு பணியாளனாக மாற்றினான் மேலிடம் அவன், மலேசியாவிற்கு அனுப்பி.
நுவானை வெளிநாட்டிக்கு அனுப்பச் சொல்லி ஓவியா கேட்க, கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் லக்ஷ்மியவள் கேட்ட அத்தனையையும் கேள்விகள் ஏதுமின்றி செய்துக் கொடுத்தான் ஆர்செனியோவின் தலைமை.
மீதமிருந்த மற்றவர்களும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்கு பயணிக்க தயாராகினர் தண்ணீர் கப்பலில், மமாடியைத் தவிர்த்து.
வைரக்கல் பிஸ்னஸ் பற்றி எதுவுமே தெரியாத ஒரே ஒரு ஜீவன் டாக்டரின் ஆருயிர் நண்பன் மட்டுமே.
மற்றவர்கள் அனைவரும் குவியலாய் சம்பாரிக்க, ஊரார் பேச்சை கேட்டு குடியில் மூழ்கி மொத்த வாழ்க்கையையும் பாழாக்கிக் கொண்ட மமாடியோ, அன்றாடங் காட்சியைப் போல் ஆர்செனியோவிடம் கையேந்தியே கிடந்தான்.
வைரக்கல் மேட்டரில் எல்லோரும் அவரவர் வாழ்க்கையை ஒருவழியாய் நிலைப்படுத்திக கொள்ள, ஆர்செனியோ மட்டும் தனியாய் சிக்கிய ஆடாகினான் மேலிடத்திடம்.
அவனுக்கான கடமையை இன்னும் அவன் முழுதாய் முடித்திடவில்லை. மேலிட ராஜா அவனை ஜெர்மன் அனுப்பியதே அதற்காகத்தான்.
ஆகவே, பணக்கார வியாபாரி அவனின் லட்சியம் நிறைவேறவில்லை எனில், ஆர்செனியோ சட்னிதான் என்பது கயவன் அவனுக்கு நன்றாகவே தெரியும்.
அதுவும் உயிர்பலி அவன் மட்டுமல்ல, அவனின் பொஞ்சாதி புள்ளைகளையும் சேர்த்துதான் என்பதையும் அறிவான் ஆர்செனியோ.
ஆகவே, அனைவரும் ஜெர்மனை விட்டு கிளம்பிடும் முன் எப்படியாவது மமாடியைக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ள பார்த்தான் ஆர்செனியோ. அதுதான் அவனுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பும் கூட.
அன்றைய ஒரு நாள்தான், அடுத்த நாள் ஆர்செனியோ உயிர் இருக்குமா இருக்காதா என்று நிர்ணயிக்க போகின்ற முக்கியமான நாளாக இருந்தது.
வழக்கம் போல் அன்றைய இரவு மமாடிக்கு நிறைய ஊற்றிக் கொடுத்து, கூடவே கஞ்சாவையும் அதிகப்படுத்தி நன்றாக ஏற்றி விட்டான் வாழ ஆசைக்கொண்ட ஆர்செனியோ, டாக்டர் மற்றும் சுரஜேஷ் பற்றி ஓயாது புறணி பேசி.
ஆர்செனியோவின் மூன்று மணி நேர வன்ம பேச்சு இறுதியில் பயனளித்தது. ஆத்திரத்தில் வஞ்சம் தீர்க்க முனைந்த மமாடியோ விரைந்தான் டாக்டரின் ஆய்வகத்திற்கு.
குளிர்ப்பெட்டி நோக்கி பயணித்தவனோ சுரஜேஷின் பெயர் கொண்ட குப்பியை கையிலெடுத்தான். அதில் மூத்தவன் தம்பிக்காக தயாரித்த திரவம் இருந்தது.
அவசர காலத்தில் ரகசிய அறை வரைக்கும் பயணித்திட முடியாத பட்சத்தில், யாராக இருந்தாலும் சரி, ஆய்வகத்தின் முன் பக்கத்தில் இருக்கின்ற குளிர்பெட்டியிலிருந்து இக்கலவையை தேவையான சூழ்நிலையில் கைப்பற்றிடலாம் என்ற எண்ணங்கொண்டே டாக்டர் அதை அங்கு பத்திரப்படுத்தியிருந்தான்.
அதுதான் இப்போது மமாடியின் கையில் விஷமாகி நின்றது. சுரஜேஷின் மீது தீராக்கோபங்கொண்ட டாக்டரின் நண்பனோ, அவனின் முற்றுப்பெறா ஆராய்ச்சிகளின் கலவைகளிலிருந்து ஒரு சில துளிகளை சின்னவனின் இன்ஜெக்ஷன் திரவம் கொண்ட குப்பியில் கலந்தான்.
அவன் அந்த வேலையில் பிஸியாய் இருக்க, ஆர்செனியோவோ சுரஜேஷின் பெயர் கொண்ட மற்றொரு குப்பியை எடுத்து பாக்கெட்டில் ஒளித்துக் கொண்டான்.
அதே வேளையில், ஔகத்தின் அவசரக்கால இன்ஜெக்ஷனுக்கான கலவைகளை தூக்கி வாஷ் பேஷனில் ஊற்றினான் மமாடி. அதற்குள் நீரை நிரப்பி மீண்டும் அவைகளை இருந்த இடத்திலேயே வைத்தான்.
கணினிகளில் திரவத்துக்கான விளக்க கணக்கீடுகள் அத்தனையையும் மாற்றி வைத்தான். வந்த வேலை செவ்வென முடிய, ஆட்கள் வந்து போனதுக்கான தடயமே இல்லாதது போல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் வந்த இருவரும்.
காவலாளியோ தூக்கத்தை போக்க, காலார நடக்க போய் திரும்பி வந்தான் ஒரு மணி நேரங்கழித்தே. அவனும் அறியவில்லை கொடியவர்களின் தடத்தை.
ஆர்செனியோவோ சமர்ப்பிக்க வேண்டிய குப்பிகளை பத்திரமாய் மேலிடத்தின் கையில் சேர்த்து, உயிர் தப்பிய நிம்மதி கொண்டான்.
அகமகிழ்ந்த பெரியிடமோ கொடுத்த வேலைய செய்தவனுக்கு பணத்தை வாரிக் கொடுத்தான். கூடவே, சுரஜேஷின் செல்களைக் கொண்டு அவர்களுக்கான ஆராய்ச்சிகளை ஆரம்பித்திட சொன்னான். சாவுக்கு பயந்த ஆர்செனியோவையே அதற்கு தலைவனாக்கினான்.
மேலிடமோ அவனின் தனியார் வானூர்தியில் பயணம் போக, ஆர்செனியோவும் அவனின் குடும்பமும் ஜெர்மனிக்கு டாட்டா காட்டி பறந்தனர் கப்பலில் வேறொரு நாட்டிற்கு.
ஓவியாவோ முன்னரே மலேசியா சென்றிருக்க, நுவானும் எப்போதோ புதியதொரு நாட்டில் செட்டிலாகியிருந்தான்.
இதில் ஏமாந்துப்போன மமாடியோ, மதுக்கூடமொன்றில் யாருமற்ற அனாதையாய் போதையில் சஞ்சரித்திருந்தான்.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 118
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.