What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 119

இப்புவியில் உயிர்கொண்ட ஒவ்வொரு ஜீவனும் வரமான வாழ்வையே வாழ்ந்திட விரும்புகிறது. ஆனால், கர்மவினையோ அவ்வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறது.

சிலர் சாபமாகினும் அதில் சொர்கத்தை உருவாக்கி நல்லதொரு வாழ்வை வாழ்ந்து சிவனடி சேர்கின்றனர்.

பலரோ, தலையெழுத்து என்ற ஒத்தை வார்த்தையில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி, பொத்தம் பொதுவாய் வாழ்ந்து அடங்கி போகின்றனர்.

என்னதான் உடலளவில் பல பிரச்சனைகளைக் கொண்டாலும், கேடி குடும்பத்தின் சந்தோஷத்துக்கும் கொண்டாட்டத்திற்கும் அளவே கிடையாது.

படைத்தவனிடத்தில் பாரத்தை போட்டு கால சக்கரத்தோடு சுகமாய் நாட்களை கடுத்துபவர்களே துஷேந்திரன் மற்றும் சுபிக்ஷவின் பரம்பரை விழுதுகளாவர்.

தீபாவளி பண்டிகையை ஜப்பானில் கொண்டாடித் தீர்த்த மூத்தவனும் சின்னவனும் மீண்டும் ஜெர்மன் திரும்பினர் ஒரு வாரம் கழித்து.

ஓவியா சம்பந்தப்பட்ட சம்பவங்களை சுரஜேஷ் மூத்தவனிடம் மறைத்திருந்தான். சதஸ் உதவியுடன் அவனே சமாளித்திடலாம் என்று நினைத்திருந்தான்.

ஓடிப்போன ஓவியாவை கண்டுப்பிடித்திட முடியவில்லை என்று சதஸ் சொல்ல, சினத்தில் சீறிய சின்னவனோ கொஞ்ச நேரத்துக்கு அவன் அவனாகவே இல்லையென்பதை போலுணர்ந்தான்.

உடலுக்குள் ஏற்படுகின்ற மாற்றங்களை சந்தேகித்தவன், உடனே ஓடினான் தாமதிக்காது அண்ணனின் ஆய்வகத்தை தேடி.

மூத்தவனுக்கு தகவல் சொன்னவன், எமர்ஜன்சி குப்பியை கையிலெடுத்து அதற்குள்ளிருந்த திரவத்தை இன்ஜெக்ஷன் வழி நரம்புக்குள் செலுத்திக் கொண்டான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் தலை சுற்றியது சுரஜேஷுக்கு. கண்ணெல்லாம் சிவப்பேறி போக, மூளையோ பனியில் உறைந்தாற்போன்ற ஒரு நிறுத்தம் கொண்டது.

ரத்த நாளங்களோ சுருங்கி புடைத்தது உள்ளுக்குள். வெளி வியலோ ( உடல்) சொல்ல முடியாதொரு அரிப்பைக் கொண்டது.

சில நொடிகளுக்கு விறைத்து போனது அவனுடல். பின், தளர்ச்சியை உணர்ந்தவனாய் முகம் தொடங்கி முதுகு வரைக்கும் வெறிக்கொண்டு சொரிந்திட ஆரம்பித்தான் சுரஜேஷ்.

கவனிக்கவில்லை ஆணவன், தோலை வலுட்டியெடுக்கும் அளவுக்கு நீளமாகியிருந்த அலகை போலான அவன் விரல் நகங்களை.

நாசித் துவாரங்களோ, ரெண்டு ஒன்றாக, அமுங்கி ஒட்டிப்போனது. செவிகளோ கூம்பு போலான வடிவத்திற்கு உருமாறி அவன் பின்னந்தலை வரைக்கும் வளைந்து பற்றிக் கொண்டது.

பற்களோ வன விலங்குகள் கணக்காய் கூர்மைக்கொண்டு இதழ்களை மூடிட முடியாதப்படி சுரஜேஷின் வாயை அகல பாதாளமாக்கின. சீரற்று ஒன்றின் மீது ஒன்றென நீட்டிக்கொண்டு நின்றன.

அலறினான் சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா, அவனின் வேதியல் மாற்றங்களின் விகார தோற்றத்தினை கண்ணாடி அலமாரிகளின் வழி கண்டு.

சின்னவனின் ரம்மியமான குரலோ கொஞ்சங்கொஞ்சமாய் அதன் தன்மையை இழந்து வண்டாய் முரலியது. எழ முயற்சித்தவன் உணர்ந்தான் முட்டிக்கால்கள் ரெண்டும் தன்னிச்சையாய் முட்டிபோட்டு நடக்க முனைய, மழலையைப் போல்.

அரிப்பின் ஊடே எரிச்சல் பரவியது சுரஜேஷுக்கு வெளி உடலில். காதுக்குள் புயலின் சத்தம் கேட்க, ஒலி தந்த வலியில் குதிரையாய் கனைத்தான் ஆணவன்.

ஆய்வகத்துக்கு வந்த மூத்தவனோ ஆடிப்போனான் தரையில் தம்பி சுரஜேஷ் புழுவாய் நெளிந்து மயிலாய் அகவிட. ஓடிப்போய் அவனை மடியில் கிடத்தி கொண்டவனோ, சுரஜேஷுக்கு என்னானது என்று தெரிந்துக்கொள்ள முயற்சித்தான்.

அண்ணனின் அணைப்பில் நாயாய் குரைத்தவனோ, மோப்பம் பிடித்தான் டாக்டரின் முகத்தை அகோர உருவத்தோடு.

தம்பியின் வாயிலிருந்து வழிந்திறங்கிய ஜவ்வான திரவமோ ஔகத்தின் முகம் முழுதும் பரவிக் கிடக்க, சுரஜேஷின் இப்போதைய நிலையைக் கண்ட டாக்டரோ அச்சமேதும் கொள்ளவில்லை.

காரணம், இதை விட பன்மடங்கு பயங்கரமான சூழ்நிலையை அவன் இதற்கு முன்னரே பார்த்திருப்பதான், பல வருடங்களுக்கு முன்னாலேயே.

ஆந்தையாய் அலறிய சுரஜேஷோ விட்டம் பார்க்க, சின்னவனின் சரீரமோ தோலை உதிரியாய் உதிர்க்க, தலைமுடியோ கொட்டியது தரையெங்கும் அவன் அணிலாய் கீச்சிட.

தசையற்ற மேனியோ சின்னவனின் எலும்புகள் அத்தனையையும் அப்பட்டமாய் காண்பிக்க, விலா கூட்டைத் தாண்டிய சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவின் இதயமோ ரத்த சகதியில் பூத்த மலராய் விட்டு விட்டு துடித்தது.

கல்லீரல் தொடங்கி குடல் வரை எல்லாம் வெட்ட வெளிச்சமாய் தெரிய, தலையை இறுக்கினான் ஔகத், கண்கள் காண்கின்ற காட்சிகளுக்கான காரணம் புரியாது.

காகமாய் கரைந்த சுரஜேஷின் கூனிக்குறுகி போன தேகமோ அழுகிய வாடை கொண்டது. உடலை குறுக்கிக் கொண்டவனோ தரையில் படுத்து பாம்பாய் சீறிட, கைக்கு அகப்பட்ட ஊசியை எடுத்து நுகர்ந்தான் ஔகத்.

சுரஜேஷோ குன்றிய பார்வைகளோடு, முட்டிக்கால்களால் அங்கும் இங்கும் நடந்த, ஆய்வகத்திலிருந்த பொருட்களின் மீது முட்டி மோதினான் பார்வையற்ற சிங்கமாய் கர்ஜித்து.

நறுமணம் கொண்டவனின் தயாரிப்பில் கலப்படத்தை உணர்ந்த ஔகத்தின் முகமோ இறுகிப் போனது. நடந்ததை அறிய, ஆய்வகத்தின் ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை காண கைக்கடிகார தொடுதிரையை அழுத்தினான் டாக்டர்.

அதிர்ச்சிக் கொண்டான் ஔகத், கண்ணால் கண்ட துரோகத்தை.

மமாடியின் திருவிளையாடலே தம்பியின் இந்நிலைக்கு காரணமென அறிந்த டாக்டரின் நேத்திரங்கள் ரெண்டும் மரகத பச்சையாகி போயின.

கழுத்தோர நரம்புகள் அத்தனையும் புடைத்துக் கொள்ள, புஜங்களோ அவனின் லோங் ஸ்லீவ் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வந்தன.

வேதனையும் கோபமும் ஒருசேர உள்ளுக்குள் கொதித்தவனின் தணலில் டாக்டரின் மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரமோ பட்டென தெறித்துப் போனது.

புறாவாய் குனுகிய சுரஜேஷின் முதுகிலோ, கொப்பளங்கள் முளைத்தன தன்னிச்சையாய். ஊதா வர்ண புழுக்களோ அதற்குள் தேரையை போல் மிதந்தோடின.

சின்னவனுக்கு ஏற்படுகின்ற மாற்றங்களை கண்ணிமைக்காது பார்த்த ஔகத்தோ, மனதில் வஞ்சங்கொண்டான், சுரஜேஷ் படுகின்ற வேதனையை விட கொடூரமான மிடலை இதற்கு காரணமான கோஷ்டி கண்டிப்பாய் அனுபவித்திட வேண்டுமென்று.

தள்ளாடி அலைமோதிய சின்னவனை இழுத்தணைத்துக் கொண்ட டாக்டரின் நயனங்களோ ஒரு துளிக்கூட ஈரங்கொள்ளவில்லை.

யானையாய் பிளிறிய சின்னவனை, ரணமான வெறியோடு கட்டிக்கொண்ட டாக்டரின் சஞ்சரமோ (உடல்) நறுக்கென்ற குத்தலொன்றை உணர, தம்பியை மெதுவாய் அவன் அணைப்பிலிருந்து பிரித்தவனோ ஆடிப்போனான் சுரஜேஷின் பூட்சியில் (உடல்) பூத்திருந்த முற்களைக் கண்டு.

அவைகளை உற்று நோக்கிய ஔகத்தோ, ஒற்றை விரலால் அதிலொன்றை தொட, அதுவோ அவன் விரலை சுழற்றிக் கொண்டது உக்ரமாய்.

மற்ற முட்களும் அதனோடு சேர்ந்து மொத்தமாய் டாக்டரின் விரலை பின்னிக்கொள்ள, சுரஜேஷோ மூத்தவனின் பிடியிலிருந்து தரை சரிந்தான் எருதாய் எக்காளமிட்டு.

மின்சார தாக்குதல் கொண்டவனை போல் சுரஜேஷ் துடிதுடிக்க, முட்களிலிருந்து தோன்றிய வேர்களோ, அவன் எலும்புகளை சுற்றி வளைத்துக் கொண்டன.

டாக்டரோ அவன் விரலை காப்பாற்றிட போராடுகையில் உணர்ந்துக் கொண்டான், வேர்கள் அவை அசுர வளர்ச்சிக் கொள்வதை.

படபடவென பட்டாசை போல் சத்தம் கேட்க, பின்னோக்கி போனான் தரை கிடந்த சுரஜேஷ், துப்பாக்கி சூடு கொண்டவனை போல், முதுகின் புழு கொப்பளங்கள் அத்தனையும் வெடித்து சிதற.

ஆய்வகமோ புழுக்களின் ராஜாங்கத்தில் பிசுபிசுத்து போக, சுரஜேஷின் முதுகோ, அடர்ந்த ரோமத்துக்குள் குடிக்கொண்டது.

''சுரஜேஷ்!''

என்றலறிய ஔகத்தின் கண் முன்னே, சின்னவனின் முகத்திலிருந்த மொத்த சதையும் புகைக்கொண்ட அனலில் காணாமல் போனது.

''சுரஜேஷ்!''

என்று மீண்டும் அலறியவனோ, முன்னிருந்த தம்பியைத் தேட, அவனோ திரவங்கள் நிறைந்த மேஜை மீதேறி குதித்து அங்கிருந்து ஓடினான் ஆய்வகத்தின் முன் வாசல் கதவை உடைத்துக் கொண்டு.

சின்னவனின் பின்னால் ஔகத் ஓட, முன் வாசலிலோ காவலாளியை கடித்துக் குதறி இழுத்துக் கொண்டு ஓடினான் சுரஜேஷ் பின்பக்கமாய் இருந்த வனத்துக்குள்.

மண்டை ஓடாய் உருமாறியிருந்தது சுரஜேஷின் அழகிய வதனம். நீந்திருந்த சிகையோ செங்குத்தாய் நிற்க மண்டை ஓட்டில் ஒட்டிக்கொண்டு, புறமுதுகின் மேல் எலும்பிலோ பச்சை இலைகள் ரெண்டு இறக்கையை போல் பரந்து விரிந்தன.

ஆரணியத்துக்குள் ஓடிய ஔகத்தோ, தம்பியின் பெயரை பல மணி நேரங்கள் ஏலம் போட்டு மூச்சிரைக்க தேடல் கொண்டான். ஆனால், திக்கற்ற சங்கிரகத்துக்குள் (காடு) போனவனோ போனவன்தான்.

சின்னவனை பிடிக்கும் முயற்சியில் தோற்று போன ஔகத்தோ நிலைக்குத்தி நின்றான் செய்வதறியாது.

சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவோ, கோர பசியோடு கானகத்துக்குள் சிக்கிய ஓநாய் ஒன்றை குருதி தெறிக்க, கந்தரம் கடித்து ருசித்திட ஆரம்பித்திருந்தான்.

முதுகில் குத்திய நயவஞ்சகர்கள் மீது கோபங்கொள்வதா, இல்லை, தம்பி இப்படி சீரழிந்து நிற்க காரணமான ஏமாளியாய் இருந்த அவன் மீதே கதங்கொள்வதா என்ற குற்ற உணர்ச்சியில் தலை குனிந்திருந்த ஔகத்தோ விதியை நொந்தவனாய் மரத்தோரம் முதுகு சாய்த்தமர்ந்தான்.

கெய்டனுக்கு என்ன பதில் சொல்வதென்று யோசிப்பதை விட, டால்டா, டால்டா என்று நித்தமும் உயிரை விடும் தாயிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விட்டம் வெறித்தான் டாக்டரவன்.

துரோகத்தில் நொறுங்கியிருந்தவனின் விலோசனங்களோ, அப்போதுக்கூட ஒருதுளி நீரை கக்கிடவில்லை.

தூரத்திலோ ஹேனாவின் உக்குரலில் கொக்களிப்பு கொண்டான் சுரஜேஷ் ஓநாயை புசித்த பசி அடங்காது.

வன்மம் கொண்டவனின் மூளையோ தம்பியை தேடிப்பிடித்து சரிப்படுத்திய அடுத்த நொடியே, வஞ்சகர்களுக்கு முடிவு கட்டியே தீர வேண்டுமென்ற வேட்கை கொண்டு நின்றது.

அமைதியாய் தரையையே வெறித்திருந்தான் ஔகத். கோபத்தின் செயல்பாடுகள் எதுவும் நன்மை பயக்காது என்றறிந்தவன் காழ்புணணர்ச்சியில் கோலாட்டம் கொண்டிருக்கும் அவன் மூளையை முதலில் சாந்தப்படுத்திட முனைந்தான்.

அமாவாசையில் மொத்த தில்லமும் (காடு) கும்மிருட்டி கொண்டிருக்க, கேட்டது திடிரென்று கர்ஜனை ஒன்று குவிரம் அதிர வனத்தின் ஏதோ ஓரு மூலையில்.

விடுக்கென்று அம்பகங்கள் விரித்த ஔகத்தோ, சத்தம் கேட்ட திசையை நோக்கி பட்டென தலையை திருப்பி அழுத்தமாய் இறுக்கினான், கடத்தின் (காடு) கருமண்ணை விரல்களால்.

பூனையாய் கத்திய தம்பியின் அழுக்குரலோ தூரத்தில் விசும்ப, எழுந்து போக பரபரத்த கால்களை அடக்கியவனாய் அவன் முழங்கையையே பற்களால் கடித்துக் கொண்டான் டாக்டர்.

பேண்டின் இடையோரத்தில் சொருகியிருந்த சாவி கொத்தை மறுகையால் இழுத்தவனோ, அதிலிருந்த சிறு திரவ போத்தல் மூடியை குருதி கொண்ட பல்லால் இழுத்து துப்பி திரவத்தை வாயுக்குள் ஊற்றிக் கொண்டான்.

அப்பாலோ, வெறிக்கொண்ட கேசரி (சிங்கம்) சுரஜேஷை அடி வெழுத்தெடுக்க, இயற்கையோ மழை காற்றுக் கொண்டு அரிமா அவனை சாந்தப்படுத்தியது.

அடிவாங்கிய சுரஜேஷோ வலி கொண்டு கதற, மூத்தவனோ அதை கேட்க சகிக்காது ஆவேசத்தில் அலறினான் இருக்கரங்களையும் மண் தரையில் அழுத்தி, கழுத்தோர நரம்பெல்லாம் புடைத்து முகம் அகோரமாய் மாறிப்போக.

வெற்றி மகுடம் சூட்டிய தீத்தபிங்கலமோ (சிங்கம்) பூரணி (காடு) தலைவணங்க மீண்டுமொருமுறை கொண்டான் முழக்கத்திலான கர்ஜனையை.

ஔகத்தின் செவிகளோ எட்டா தொலைவில் சருகுகளை மிதித்து, பாய்ந்தோடி வருகின்ற வேங்கையின் (cheetah) வேகத்தை துல்லிதமாய் உணர்ந்தது.

ஆணவனின் கைக்கொண்ட ரோமங்களோ சிலிர்த்து பூத்தன, காட்டு செடிகளை எம்பி குதித்து தாவிய சிறுத்தையின் (leopard) தாவலில்.

முழங்கையை முட்டிக்காலில் பதித்து, தகிக்கும் உடலின் வெப்பத்தை ஆட்கொண்டவனாய் திட்டிகள் மூடி ஔகத் அமர்ந்திருக்க, கர்ஜனை கொண்டு அவன் முன் வந்து நின்றது அஃறிணை அது.

சதை கிழிந்து இரத்தம் வழிய பீய்ந்து தொங்கியது டாக்டரின் முழங்கை. அரத்தத்தின் வாடை தேகத்தை செல்லரிக்க வைக்க, கர்ஜித்தது வந்து நின்ற கரு உருவம் அது தலையை சிலிர்ப்பி.

சோணம் சொட்டு சொட்டாய் தரை விழ, அஞ்சிடாத ஔகத்தோ வெறுமனே அமர்ந்திருந்தான் எவ்வித ரியாக்ஷனும் இன்றி மூக்கோ மூச்சை அனலாய் வெளியேற்ற, வந்திருக்கும் விருகத்தின் சம்பாஷணை புரிந்து.

வாலாட்டிய மிருகமோ, நேரெதிர் இருந்தவனின் புருவங்கள் குறுகக் கண்டான், சிம்மாசனம் கொள்ளா ராஜா அவன் நுதலின் நடுவிலிருந்த கோடு அழுத்தங்கொண்டு ஆழமாய் தெரிய.

பின்னோக்கியது விருகம் அது, அதன் அடிகளை மெது மெதுவாய் கர்ஜனைக் கொண்டு.

வலப்பக்கம் சிவிங்கிப்புலியாகவும், இடப்பக்கம் சிறுத்தையாகவும் இருக்க, மொத்தத்தில் ஜகுவாரின் உடலமைப்போடு, மயூர கண் கொண்ட அவ்விலங்கை கண்கள் திறந்து ஏறெடுத்தான் ஔகத்.

ஆணவனின் நிடலம் கொண்ட கோடோ மறைய ஆரம்பிக்க, கர்ஜனையை ஒத்தி வைத்த நாலு கால் ஹீரோவோ உரும்பல் கொண்டான் டாக்டரின் நெற்றி முட்டி.

ஆடாது அசையாது அப்படியே அமர்ந்திருந்த ஔகத்தோ, ஒரு வார்த்தைக் கூட பேசாது தலையை வான் பார்க்க மேல் தூக்கினான்.

கர்ஜித்த அடவி அந்திரனோ, ஓட்டமாய் ஓடினான் துருக்கத்துக்குள் (காடு) நுழைந்தான்.

சுரஜேஷை துவைத்தெடுத்த நல்லுள்ளமோ, டாக்டரை நோக்கி வந்து அவனை அழைத்தான், தம்பி இருக்குமிடம் மூத்தவனை கூட்டிப்போக.

ஆனால், ஆத்திரத்தில் புத்து கொண்டிருந்த ஔகத்தோ பார்வைகளாலேயே வந்த ஜீவனை துரதியடிக்க, அதுவோ மீண்டும் சுரஜேஷையே தேடி ஓடியது.

சதாரம் (இடி) முழங்க, மழைத்துளியோ விண்ணிலிருந்து மண் நோக்கி வந்து முற்றுகை கொண்டது ஔகத்தின் மரகத விழிகளில். மீசையிலான பூனை முடிகள் சருமத்துக்குள் நுழைந்து மறைய, டாக்டரின் வதனமோ மீண்டும் பேரழகு கொண்டது.

விகாரத்தோற்றம் காணாமல் போக, நெற்றி கொண்ட அதிகார கோடும் முழுதாய் மறைந்து போனது ஔகத்தின் முகத்திலிருந்து.

பாராங்கல்லை நெஞ்சில் சுமந்தாற்போன்ற நிலையில் விரக்தி கொண்டிருந்தவனின் மீதோ மாரி பொலபொலவென கொட்டிட ஆரம்பித்தது.

அங்கங்களில் ஆங்காங்கே ரத்தம் வழிய, காயங்கொண்ட தேகத்தோடு, சொத சொதத்த வழிப்பாதையில் பாதங்கள் ரெண்டோ டாக்டரை நோக்கி வந்தது.

தொங்கிக் கொண்டிருந்த ஔகத்தின் முழங்கையை இறுக்கமாய் பற்றிய வலிமையான கரமோ, அவனை அங்கிருந்து இழுத்துக் கொண்டு போனது தோளில் அடையாளமே தெரியாமல் உருமாறிக் கிடந்த சுரஜேஷை சுமந்தப்படி.

படாஸ் இழுத்து போக, அவன் வழியே பின்னோக்கினான் ஔகத் அடித்தூற்றிய மழையில் தொப்பையாகிய வண்ணம்.

ஆணவனின் முழங்கை உதிரமோ பெயலையில் (மழை) நழுவி ஓடியது. வென்சதையோ நீரில் ஊறி தியானம் கொண்டது.

டாக்டருக்கு சின்னவன் என்றால் எப்படி உயிரோ, அதுபோலத்தான் படாஸுக்கு, கேடி மகன் ஔகத்.

டாக்டர் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், படாஸை யாரிடமும் அறிமுகப்படுத்திடாததுதான்.

ஒருக்கால், அப்படி ஏதும் ஆகியிருந்தால் அவனையும் குடிகாரனாக்கி கெடுத்திருப்பார்கள் வஞ்சகர்கள் அவர்கள்.

யாரிடமும் ஒட்டிடாத இண்ட்ரோவர்ட் பர்சினாலிட்டி (introvert personality) கொண்ட படாஸின் இருப்பிடம் ஜெர்மனியின் ஆழ்கடல் மனையாகும். தனிமையில் இனிமை காண்பதுதான் அவனுக்கு மிக பிடித்த வேலையாகும்.

பல ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டிருக்கும் அவனும் ஒரு விஞ்ஞானியான மருத்துவனே. பிரபஞ்சத்தை ஆளும் சிவனின், சர்வேஷ் என்ற திருநாமமே அவன் பெயர்.

மயில் வர்ண விழிகளுக்கு சொந்தமான அவனை படாஸ் என்று பெயர் சூட்டி, ரேவ் என்று அழைத்தது கிருத்தி மட்டுமே.

பாட்டாகட்டும், ஆட்டமாகட்டும் ஔகத்திற்கு நிகரானவனே படாஸ். இருப்பினும், டாக்டரை போல் இவனுக்கு ஆங்கிலத்தில் பெரிதாய் ஆர்வமில்லை.

அவனுக்கு தமிழ்தான் உயிர். தமிழ் இலக்கியத்திற்கு படாஸ் கொடுக்கின்ற மரியாதையே தனி எனலாம்.

தத்ரூபமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் ஓவியத்தில் அவன் திறமையை அடித்துக்கொள்ள முடியாது. டாக்டரை விட கிருத்தியை அதீதமாய் வர்ணித்து ஒரு அங்குலங்கூட தவறாது கன கச்சிதமாய் வரைந்தவன் அவனே.

ஏந்திழைக்கான காதல் கவிதைகளை எழுதி குவிப்பதிலும் படாஸை மிஞ்சிட ஆளில்லை. கித்தாரை கையிலெடுத்தால் போதும் ஔகத் கடையைச் சாத்திடுவான், அப்படியிருக்கும் படாஸின் கம்போசிங்.

ஆழ்கடல் மனையிலிருந்து இன்றைக்குத்தான் ஆய்வகத்திற்கு வந்திருந்தான் படாஸ், டாக்டரை காண.

அதற்குள் இங்கு எல்லாம் தலைகீழாய் மாறி போயிருக்க, நிகழ்ந்தவைகளை ஔகத் சொல்லிடாமலேயே புரிந்துக் கொண்டான் ஆழகனவன்.

ஔகத்தின் மனம் நோக காண சகிக்கா படாஸோ, தூக்கி வந்த சின்னவனை அலுமினிய கட்டிலில் கிடத்தினான்.

அவன் தேகம் கொண்ட கொடூரங்களை கண்டறிய தோல் மாதிரிகளை (skin samples) சேகரித்து தனியே வைத்துக் கொண்டான்.

கேடி பயன்படுத்திடும் இன்ஜெக்ஷன் கலவையையே செடேஷன் போல் பாவித்து கொஞ்சமாய் சுரஜேஷுக்கு கொடுத்து அவனை துயில் கொள்ள வைத்தான் ரேவ்.

''புறக்கண்ணால் பார்க்காதே தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்! மனக்கண்ணால் பார்''

என்ற படாஸோ, அவனின் வழக்கமான டயலாக்கை சொல்லி டாக்டரின் கையில் தம்பியை ஒப்படைத்து விடைபெற்றான் இமயமலைக்கு.

''எதுவும் நிரந்தரமல்ல! நிவாரணியோடு வருவேன்! சிவனிருக்க பயமேன்?!''

இதுதான் படாஸ், கூறிய கடைசி வார்த்தைகள் ஔகத்திடம். அவன் வரும் வரை இது ஒன்றுதான் டாக்டரின் நம்பிக்கையாய் இருந்தது.

கெய்டனிடத்தில் உண்மையை மறைத்திட ஔகத்திற்கு மனம் வரவில்லை. ஆகவே, அவனை கூட்டி வந்து காட்டிவிட்டான் சுரஜேஷின் அவல நிலையை மகனவன்.

மருந்துக்கு படாஸ் இமயமலை போயிருக்கும் சங்கதியையும் சொல்லி மன்னிப்பு கோரினான் மகனவன்.

பெற்றால்தான் பிள்ளையா. இருவருமே அவன் ரத்தமில்லைதான். இருந்தப்போதும், ஒருமுறைக்கூட கெய்டனுக்கு அப்படியான உணர்வை மகன்களில் ஒருவன் கூட கொடுத்ததில்லை. அப்படியிருக்க, எவனை காப்பற்ற எவனை தண்டித்திடுவான் அப்பனவன்.

ஊமையாகி வாரியணைத்துக் கொண்டான் டாக்டரை கெய்டன், எப்படியும் படாஸ் சின்னவனை காப்பாற்றிடும் மருந்தோடு வந்திடுவானென்ற நம்பிக்கைக் கொண்டு.

ஒரு மாதம் முடிய வந்து சேர்ந்தான் படாஸ், சொன்ன சொல்லை காப்பாற்றியவனாய்.

மூலிகைகள் கொண்ட கலவையை கேதார்நாத் கோவிலின் கர்ப்பகிருகத்தில் வைத்து பூஜித்தவன், மீண்டுமொரு பூஜை கொண்டான் அங்கிருந்து திரும்பிய மறுநாளே, அவனின் ஆழ்கடல் மனையில்.

ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்டிருந்த நடராஜர் பின்னே இருக்க, முன்பக்கமோ கருப்பு வர்ணத்திலான சிவலிங்கம் முக்கோடுகள் கொண்டிருந்தது.

திருநீறு பட்டைகளுக்கு நடுவினிலிருந்த அருகனின் முக்கண்ணோ சாந்தமாய் காட்சியளித்தது மரகத பச்சையில்.

சுற்றிரூம் பூக்கள் குழுமியிருக்க, நிறுத்தமில்லா அபிஷேகமே லிங்கேஸ்வரன் அவனுக்கு. கடல் நீரையே படாஸ், துளியாய் சொட்டிட வைத்திருந்தான் அவன் மீது.

சுயம்புவின் பீடத்தையோ பாம்பு சுற்றியிருக்க, அதன் மீது வைத்திருந்தான் ரேவ் உருவாக்கியிருந்த மூலிகை திரவத்தை.

மனமுருகி பிராத்தனை செய்தவன் பூஜை முடிய கிளம்பினான் அதை எடுத்து கொண்டு டாக்டரின் ஆய்வகத்திற்கு.

கோமா பேஷண்ட் போலிருப்பான் என்று ரேவ் நினைத்திருக்க, சுரஜேஷோ கட்டுக்கடங்கா மிருகமாய் உருமாறியிருந்தான்.

கொடூர பசிக்கொண்டவனுக்கு செம்புனல் ஒழுக உணவை கடித்து தின்னவே பிடித்திருந்தது.

மான், ஆடு, முயலென்று எதுவும் அவனுக்கு போதவில்லை. வேறு வழியில்லா ஔகத்தோ அனாதை பிணங்களை கொண்டு வந்து குவித்திருந்தான் தம்பி தின்று பசியாற.

அந்த ஒரு வழி மட்டுமே சுரஜேஷை கூண்டுக்குள் அடைப்பட்டு, சொன்ன சொல் கேட்டு இருக்க வைத்தது. வெளியில் உலாவி மனிதர்களை அடித்து அவன் தின்றிடும் முன் டாக்டர் சாமர்தியமாய் இப்படியானதொரு செயலை செய்திருந்தான்.

மூலிகை திரவத்தோடு வந்த படாஸோ, சின்னவனின் உக்ரத்தை நேரடியாய் பார்த்து தெரிந்துக் கொண்டான்.

சுரஜேஷின் இப்போதைய தேகமோ கரடியை போல் அடர் ரோமங்களுக்குள் புதைந்திருந்தது. இருந்தும், முட்களோ காணாது போகாது உள்ளேயே ஒளிந்திருந்தது.

மண்டை ஓட்டிலான வதனமோ ஆசிட் வீச்சு கொண்டதை போல் காட்சியளித்தது. கண்களோ பிதுங்கி கிடந்தது. செவிகளோ யானையின் காதை போல் சாமரம் வீசியது.

பற்களோ மாற்றமில்லாது இருந்தது. சிகையோ மொத்தமாய் காணாது போயிருக்க, மொட்டை தலைக் கொண்டிருந்தான் சுரஜேஷ் ஆளவந்தானை போல்.

நல்லப்புள்ளையாய் பிணத்தை உண்டு உறங்கியிருந்தவனை நெருங்கிய படாஸோ சத்தமில்லாது இறக்கினான் அவன் கோர பற்களுக்கு இடையில் ஊசி கொண்ட திரவத்தை.

உண்ட களைப்பில் அசந்து தூங்கிய ராட்சத நிலையிலான சுரஜேஷோ, மூலிகை திரவம் தொண்டைக்குள் இறங்க சப்புக்கொட்டி நாக்கை சுழட்டியவாறே நித்திரையைத் தொடர்ந்தான்.

நீண்ட நாவின் நுனியோ படாஸின் முகமுரசி போக, ஜவ்வாய் வழிந்திறங்கிய மஞ்சள் நிற எச்சியை உள்ளங்கையால் வழித்தெடுத்துக் கொண்டான் படாஸ்.

அதைக் கொண்டு போய் குப்பியில் சேகரித்து ஆராய்ச்சியை ஆரம்பிக்க, நிம்மதி பெருமூச்சு கொண்ட டாக்டரோ, சின்னவனை படாஸின் கையில் சமர்ப்பித்து மூர்த்திகனில் கவனத்தை செலுத்தினான்.

படாஸின் உழைப்பு வீண் போகவில்லை. சிறுக சிறுக மாற்றங்களை கண்டான் ஆணவன் சுரஜேஷின் தேகத்தில்.

முதல் மூன்று மாதங்களுக்கு பெரும் வேதனையில் சிக்கி சின்னாப்பின்னமாகினான் சின்னவன் அவன், மருந்தின் வீரியம் தாளாது.

கொன்றிட சொல்லி கெஞ்சினான் சுரஜேஷ் வலியும் எரிச்சலும் பொருத்திட முடியாது படாஸிடம், உயிர் வாழ ஆசைக் கொண்டாலும்.

ரேவ் கொஞ்சமும் கலங்கவில்லை சின்னவன் கொண்ட ரணத்தை கண்டு.

மாறாக, வெறியே கொண்டான் வன்மத்தில் அவன் நிலைக்கு காரணமானவர்களை பழி தீர்த்தே ஆகவேண்டுமென்று.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 119
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top