- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 63
ஆறறிவு கொண்ட ஜந்துவாகினும் கண்ணுக்கு புலப்படா ராஜ்யமான மனத்துக்குத்தான் அடிமையாகி கிடக்கிறது மனித குலம்.
மனிடனின் பலமும் அன்புதான், பலவீனமும் அதேதான்.
அதற்கான பெயர்கள் வேண்டுமென்றால் மாறிடும். ஆனால், என்றைக்குமே மாறாதது சட்டென தோன்றிடும் உணர்வு குவியலான காதலே.
படாஸின் மீது கிருத்தி அதீத நேசம் கொண்டிருக்க, அவனை வெறுத்திட முடியவில்லை அந்திகையவளாள். பேச்சுக்கு மட்டுமே ஓகே என்றவாறு நாட்களை நகர்த்தினாள் நடைப்பிணமான நாயகியவள்.
மனசளவில் மங்கையவள் இன்னமும் படாஸ் என்ற அந்திரனின் வருகைக்காகவே ஏங்கியிருந்தாள்.
அஃறிணை ஆணவனை மறக்க முடியாது தவித்த நேரிழையோ, அந்நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளாதும் மறுத்தாள்.
அதுவே, மாயோள் அவளை புகையிலையில் கஞ்சா சேர்த்து இழுக்க வைத்திடும் அளவுக்கு கொண்டு போய் விட்டிருந்தது.
சுருங்கச் சொன்னால், லேடி தேவதாஸ் ஆகிப்போயிருந்தாள் படாஸின் கிருத்தி.
அன்றைக்கு மகளின் இருட்டிய பக்கத்தை பார்த்த தாயோ, கடுங்கோபத்தில் விருட்டென நுழைந்தாள் கீத்துவின் அறைக்குள்.
''ஔகத்! படாஸ்! படாஸ்! ஔகத்!''
என்று கேபினெட்டின் மீது பள்ளிக் கொண்டு காற்றோடு கதையளந்து கொண்டிருந்த போதைக்காரியை தரதரவென இழுத்து போனாள் குளியலறை நோக்கி குஞ்சரி.
''மம்மி! நோ விடுங்க! மம்மி!''
என்றலறிய ஆயிழையின் தலையில் ஷவரை திறந்து விட்ட லேடி பீஸ்ட்டோ, அரை வாலி தண்ணீரையும் சேர்த்தே அள்ளி ஊற்றினாள் தொப்பையாகி கிடந்த தெரிவையின் மீது.
''மம்மி! என்ன பண்றிங்க?!''
என்ற மகிலையோ, போதை பாதியாய் இறங்க கூச்சல் கொண்டவளாய் பளிங்குத் தரையிலிருந்து மேலெழும்ப பார்க்க,
''வாய மூடு கீத்து! எழுந்திருச்சே, வளர்ந்த பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன், வாலியாலையே அடி நெம்பி எடுத்திடுவேன்!''
என்ற தாயை அகல விரிந்த விலோசனங்களோடு இமைக்காது பார்த்தாள் வதனியவள், தாயோ காளியாய் மாறியிருக்க.
பழைய கீத்துவாய் இருந்திருந்தால், இந்நேரத்துக்கு நெஞ்ச நிமிர்த்து கொண்டு எதிர் வாதம் கொண்டிருப்பாள் அன்னையென்றாலும் சிறு அச்சமும் இன்றி.
சிறு வயதில், ரீசன் மரித்த சில மாதங்களிலேயே அவன் ஸ்தானத்தை கையிலெடுத்தவள் ஆத்தாவையே கொஞ்ச நாளைக்கு ஆட்டி வைத்த அன்றைய பிஞ்சுக்கு இன்றைக்கு வளர்ந்த வஞ்சியாகிய பின்னும், அதே குஞ்சரியை அதிகாரம் செய்திட ரொம்ப நேரம் பிடித்திடாது.
இருந்தும், ஏனோ சிறகுடைந்து பறவையைப் போல் தாய் சொல்லை தட்டா மகளாகவே இம்மியும் நகராதே கிடந்தாள் வாய் மூடி முற்றிழையவள் மூலையில்.
''ஏன், இப்படி பண்றே?! ஏன்?! ஏன்?! ஏன்?!''
என்ற குஞ்சரியோ, பளார் பளாரென்று மகளின் கன்னங்கள் சிவக்க அறைகளை தெறிக்க விட, வெறுமனே இருந்த போலீஸ்காரியோ அடிவாங்கிய நிலையில் திணறி அதிர்ச்சிக் கொண்டாள்.
''இனி நடக்கவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்த என்னே, நடக்க வெச்சதே நீதான் கீத்து! என் ரீசனுக்கு அப்பறம் வாழ்க்கையே இல்லன்னு நான் நினைச்சப்போ, நான் இருக்கேன் சீனியர்னு என் முன்னுக்கு வந்து நின்னவே என் பொண்ணு கீத்து! என் ஜூனியர் கீத்து, அதுதான் நான் பெத்த, எங்கு பொண்ணு கிருத்திகா தீனரீசன்! நீ இல்லே!''
என்றவளோ குஞ்சரியோ, மூச்சிரைப்போடு எதிரிலிருந்த வாலியை வேறு ஓரத்துக்கு தூக்கி வீசினாள். ஜில்லென்ற நீரில் முக்குளித்து கிடந்த அபலையோ, தாயையே வெறித்தாள் கிடுகிடுத்த உடம்போடு.
''உன்னே மாதிரியான கோழையெல்லாம் என் ரீசன் பொண்ணாவே இருக்க முடியாது! என் புருஷன் பேரே இனிஷியலா வெச்சுக்கறே தகுதியே உனக்கு கிடையாது!''
என்ற குஞ்சரியின் ஆக்ரோஷத்தில் அதிரிப்போனது பணிமொழியின் மனது.
''மா!''
என்றவளோ விக்கித்து தழுதழுக்க,
''சீ! வாயே மூடு! என்னே அப்படி கூப்பிடாதே! ரீசன் பொண்ணு கீத்து, தைரியமானவே! எதையும் ஒரு கை பார்க்கறவே! மத்தவங்க முடியாதுன்னு சொல்றதே அசல்ட்டா செஞ்சு முடிச்சு போய்க்கிட்டே இருக்கற ரகம்! உன்னே மாதிரி முடங்கி போக மாட்டா எங்க பொண்ணு! இப்படி ஒப்பாரி வெச்சு, கண்ட வேலையெல்லாம் பார்த்து, உடம்பே கெடுத்துக்க மாட்டா!''
என்ற குஞ்சரியோ சினத்தில் வார்த்தைகளை கொட்ட,
''நான் செத்து ரொம்ப மாசமாச்சுமா!''
என்றவளோ முகத்தை மூடி குலுங்க, மூச்சு வாங்க நின்றிருந்த குஞ்சரியோ இப்போதாவது மகள் வாய் திறக்கட்டும் என்று குறுக்க பேசாது அமைதியாகவே இருந்தாள்.
''அப்பா மேலே வெச்சே நம்பிக்கையே அவன் மேலே வெச்சசேன்மா!''
என்றவளோ கதற, ஓரடி தானாய் பின்னோக்கி போனது குஞ்சரியின் கால்கள்.
''He suck my heart and swallow my soul, mummy!''
(என் இதயத்தே உறிஞ்சி, ஆன்மாவே விழுங்கிக்கிட்டான் மம்மி!)
என்ற படாஸின் கிருத்தியோ, திட்டிகள் மூடிய வதனத்தோடு முஷ்டி மடக்கிய கைகளை தரையில் அழுந்த குத்தி கத்தி கதறினாள்.
அம்மணியின் கருவிழிகளுக்குள்ளோ மீண்டும் அவனோடான கட்டில் லீலைகள் காட்சிகளாய் விரிந்து யுவதியின் ஒப்பாரியை கூட்டியது.
செவிகளிலோ, ஆணவனின் முகிரத்திலான ஐ லவ் யூக்கள், ஏந்திழையின் மிச்ச உயிரையும் பாடையில் ஏற்றியது. காதுகளை பொத்திக் கொண்டு அலறி அழுதவளோ நீர் கொண்ட தரையில் சரிந்தாள் அப்படியே.
மகளின் நிலையைக் சாட்சியாகி போன குஞ்சரியோ இடிந்து போனாள். ஒருவாரியாய் அவளை சமாதானப்படுத்தி தலையோடு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி, வேண்டாமென்றவளுக்கு கொஞ்சமாய் சோறூட்டி, மடியில் போட்டு தாலாட்டி சீராட்டி தூங்க வைத்தாள்.
பெற்றவளால் உணர முடிந்தது மகளின் உள்ளம் கொண்டிருக்கும் காயத்தை. காதல் கொடுக்கும் வலி சாமானியத்தில் நிவர்த்திக்க முடியாததென்று, ரீசனை காதலித்து கரம் பிடித்த குஞ்சரிக்கு நன்றாகவே தெரியும்.
கீத்து நிறுத்தாது அழ, மடியில் படுக்க போட்டு முதுகு தட்டியவளிடம்,
''அம்மா ஒரு தடவே ஔகத்கிட்ட பேசி பார்க்கவா?!''
என்று மனசு கேட்காது கிருத்திகாவின் தலை கோதி தாயவள் மகளின் விருப்பத்தை அறிய முயல,
''எந்த உறவும் அதுவா வரணும் மம்மி, போர்ஸ் பண்ணவோ, கெஞ்சவோ கூடாது! அது நிலைக்காது, உண்மையாவும் இருக்காது! டேடி சொன்னது!''
என்றவளோ நில்லாத கண்ணீரோடு கண்ணயர்ந்தாள்.
கீத்து உறங்கிட, அமைதியாய் அவளறை சென்றாள் குஞ்சரி. மஞ்சத்தில் சென்றமர்ந்தவள் கட்டிலின் விளிம்பை பற்றிக் கொண்டு அம்பகங்களை இறுக்கமாய் மூடினாள்.
''டேய் ஜூனியர், காதலாலே நம்ப பொண்ணு சிதைஞ்சு போயிருக்காடா! நம்ப கீத்து இப்படி என் கண்ணு முன்னாடியே சீரழிஞ்சி போறதே பார்க்க என்னாலே முடியலடா! என்னையும் உன் கூடவே கூட்டிக்கிட்டு போயிடுடா ஜூனியர்!''
என்றவளின் அழுகை கடவுளுக்கு கேட்டதோ என்னவோ தெரியவில்லை, படாஸுக்கு கேட்டு விட்டது போல.
அடுத்த கொலைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினான் அதிபுத்திசாலியவன் மீண்டும் வெறிக்கொண்டு கீத்து பழைய அகம்பாவ சுந்தரியாய் திரும்பி வந்து அவன் ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட.
மறுநாள் கீத்து ஸ்டேஷன் கிளம்பிய பின்னர், கர்ணாவை வீடு வரைக்கும் வரச் சொல்லியிருந்தாள் குஞ்சரி.
வந்தவனிடம் மகளின் நிலையை எடுத்துச் சொல்லி ஒப்பாரி வைத்தாள் ரீசனின் மம்மி. அப்படியே, புதல்வியின் அறையிலிருந்து கைப்பற்றிய புகையிலை ஐட்டங்களை கூட அவனிடத்தில் காண்பித்தாள்.
''நான் வேணும்னா ஔகத்கிட்ட பேசி பார்க்கவா?!''
என்றவனை முறைத்த குஞ்சரியோ,
''ஒரு மண்ணும் வேணாம்! அதான், நான் கேட்டதுக்கே முடியாதுன்னு சொல்லிட்டானே! இப்போ, திரும்பவும் போய் கேட்டா என்ன நினைப்பான்?! அதுவும் கீத்து மேலதான் தப்பா இருந்திருக்கும், இல்லாட்டி அவன் இப்படி சொல்ல மாட்டான்! அவளுமே நேத்து நான் கேட்டதுக்கு வேண்டான்னு சொல்லிட்டா. ஆனா, வாய் மட்டும்தான் சொல்லுது. மனசெல்லாம் என்னவோ அவன்தான் இருக்கான்!''
என்ற பெத்தவளோ கன்னத்தின் ஈரங்களை துடைத்துக் கொள்ள,
''ஒன்னு கீத்து அவனே மறக்கணும், இல்லே ஔகத் அவளே கட்டணும்! இது ரெண்டுலே ஏதாவது ஒன்னு நடந்தாதான் நாமே நிம்மதியா இருக்க முடியும்!''
என்றவனோ எழுந்த வேகத்தில் தொடர்ந்தான் பேச்சை.
''வேலையே பொறுத்த வரைக்கும் சரியாதான் இருக்கா, இந்த வீக்கெண்ட்ஸ்லதான் இப்படி பண்றா! பேசாமே, பழையப்படி ஹாக்கி, கராத்தே இப்படி எதுலையாவது சேர்த்து விடு! போய் கோச்சிங் பண்ணட்டும்! தனியா சும்மா கிடந்தாதானே இப்படியெல்லாம் பண்ண தோணுது! சோ, ஃபிரீ டைம்னு ஒன்னு இருக்கவே கூடாது அவளுக்கு! அப்படி இருந்தா மட்டுந்தான் கீத்து ஒழுங்கா இருப்பா!''
''ஆமா, ஒரு விஷயத்தே 48 நாள் தொடர்ந்து பண்ணா, அது அப்படியே பழக்கமாயிடும். ஸ்போர்ட்ஸ்லே கீத்து பிசியா இருக்கற கேப்லையே, சீக்கிரமா அவளுக்கு ஒரு கால் கட்டு போட்டிடணும்!''
என்ற குஞ்சரியோ முன் வாசல் நோக்கிய கர்ணாவை பின்தொடர,
''என்னே நீயும் கடைசியா இப்படி இறங்கிட்டே?!''
என்ற போலீஸ்காரனோ சிரித்தப்படி காரிலேறி அமர்ந்தான்.
''ரீசனுக்கு அப்பறம் எனக்கிருக்கறே ஒரே சொத்து கீத்துதானே! அவளோட சிரிப்பும் சந்தோஷமும்தான் என
க்கு முக்கியம்!''
என்றவளுக்கு புன்னகை ஒன்றை பரிசாக்கி அங்கிருந்து கிளம்பினான் கர்ணா.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Last edited:
Author: KD
Article Title: படாஸ்: 63
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.