- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 64
ரேவ் உண்மையில் யார், அஃறிணையான ஆணின் நிஜமென்ன போன்ற விபரங்களை எங்கே நாயகியவள் கண்டுப்பிடித்திடுவாளோ என்றே, அணங்கவளின் பலவீனத்தை வித்தகனவன், அவனின் பலமாக்கி கொண்டதாய் நினைத்துக் கொண்டாள் கீத்து.
தளிரியல் அவளின் எண்ணத்தை திசை திருப்பி, காதல் என்ற நாடகத்தில் நங்கையவளை பகடைக்காயாக்கி இத்தனை நாளும் படாஸ் தப்பித்து வந்திருக்கிறான் என்று அவளாகவே தனியொரு கணக்கு போட்டுக் கொண்டாள்.
ஆயிழையின் எண்ண ஓட்டங்கள் தவறான போதிலும், அதை உணராத வதூ அவளோ தப்பான அபிப்ராயத்தை படாஸின் மீது கொண்டு, அதன் மூலம் காயங்கொண்ட மனதை ஆற்றிக்கொண்டாள்.
மேலிடத்து ஆர்டர் படி கவுன்செலிங் போனவள் சொந்த காதல் விவகாரத்தில் எமோஷனல் முத்தி போய் சில பல விடயங்களை செய்ததாய் வாக்குமூலம் கொடுத்து மிச்ச மீதி பெயரை காப்பாற்றிக் கொண்டாள்.
நல்லவேளை எவ்வித கட்டொழுங்கு சர்ச்சையும் எழவில்லை கீத்துவின் வைரலான மருத்துவமனை வீடியோவால்.
குஞ்சரி சொல்ல, அதன்படி மைண்ட் ரிலேக்சேஷனுக்காக போய் சேர்ந்தாள் கீத்து மீண்டும் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான செண்டர்களில்.
ஏற்கனவே, ஹாக்கி பிளேயர் என்பதால், பகுதி நேர கோச்சாக பொறுப்பேற்றிருந்தாள் கீத்து. அதைத் தாண்டி, ஸ்விமிங் மற்றும் கராத்தேவில் பிசியாகி போனாள். வார இறுதிகளில் சின்ன டிக்கியோ பிள்ளைகளுக்கு அவளை ஆயம்மாவாக்கினாள்.
கொஞ்சங் கொஞ்சமாய் மீண்டும் மலர்ந்திட ஆரம்பித்தது கீத்துவின் முகம். குஞ்சரியோ நிம்மதிக் கொண்டாள் மகள் பழைய மாதிரியாக.
நடந்த அத்தனையும் நினைவுகளாக, அதில் பாடம் கற்பித்த வாத்தியாரை மட்டும் மாயோள் அவளால் மறக்க முடியவில்லை. ஏன், வெறுக்கவும் முடியவில்லை.
இருந்தப்போதும், அப்போதைய பைத்தியக்காரத்தனமான காதல் இப்போதும் இருக்கிறதா என்றுக் கேட்டால், மென்புன்னகை கொண்டு கடந்து சென்றவளால் இல்லை என்று சொல்லிடவும் முடியவில்லை.
ஆனால், இதழ் பிரிக்கா பேதையின் இழைந்தோடும் முறுவலில் வலி நிறைந்திருக்காமல் இல்லை. நம்பிக்கை கொண்டிருக்கிறாளா படாஸின் மீது என்ற கேள்விக்கும் சேம் ரியாக்சன்தான், கிருத்தியிடமிருந்து.
நினைவுகளை மூளைக்குள் அனுபவமாய் பதப்படுத்திக் கொண்ட மங்கை முதல் முறை இழைத்த தவறுக்கு நேரடியான மன்னிப்பை கோர விரும்பினாள் சம்பந்தப்பட்ட ஆளிடமே.
போனை போட்டாள் கார்மீகன் அனிகேட் குமாருக்கு. நெஞ்சம் குறுகுறுத்த சங்கதியை போட்டுடைத்தாள். அவனோ ஒரு நல்ல நாள் பார்த்து தகவல் சொல்வதாய் சொல்லி அழைப்பை துண்டித்தான்.
பெதும்பையின் தற்போதைய மெண்டல் ஹெல்த் கண்காணிப்பில் இருப்பதால், படாஸ் கேஸ் மட்டுமல்லாது வேறெந்த பயங்கரமான வழக்குகளும் அவளிடம் போகக்கூடாது என்பது மேலிடத்து உத்தரவாகிப் போனது.
சோகங்களை கடந்து இப்போதுதான் வண்ணங்கள் சூழ் உலகில் மீண்டும் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்த அரிவையோ, இம்முறை அலட்டிக் கொள்ளாமல் சொல்லும் வேலையை மட்டும் பார்த்தாள்.
ரொம்ப நாட்கள் கழித்து ஞாழல் ஞாபகம் வர, ஒரு வருடத்திற்கு பிறகு அவளுக்கு கோல் செய்தாள் சேயிழையவள் ஆபிஸ் கேபினில் அமர்ந்தவாக்கில். ஆனால், தோழியின் நம்பரோ யூசில் இல்லை. வாட்ஸ் ஆப்பில் கூட காண்டக்ஸ் இல்லை.
சரி அவளின் மீடியா அலுவலகத்துக்கு போனை போட, அவர்களோ பகினியவள் வேலை விட்டு நின்று மாதங்கள் கடந்து விட்டதென்று கூறினர்.
வெறுமையோடு தொலைந்த தோழியை முகநூல் மூலமாய் கண்டறிந்தாள் போலீஸ்காரி. நட்பழைப்பு விடுத்தாள் பழைய நண்பிக்கு.
சிஜன் இறப்பில் எப்போது கீத்து லேசர் வாய் கொண்டு வார்த்தைகளால் ஞாழலை பதம் பார்த்தாளோ, அப்போதே காவல்காரியை மொத்தமாய் நீக்கியிருந்தாள் மீடியாக்காரி அவள் வாழ்க்கையிலிருந்து.
தோழியின் லோக் செய்யப்படா கணக்கை சகஜமாய் பார்த்தவளின் விழிகளோ பட்டென நிறுத்தம் கொண்டன. ஞாழலின் முகப்பு பக்கத்திலோ, கீத்துவின் ஆருயிர் நண்பியும் படாஸ் என்றவள் நம்பிக் கொண்டிருக்கும் டாக்டரும் கட்டியணைத்த படம் சிரித்திருந்தது.
சோகம் கப்பிய முகத்தோடு ஞாழலுக்கு அனுப்பிய பிரண்ட் ரிக்குவஸ்ட்டை கேன்சல் செய்து விட்டு மடிக்கணினியை மூடினாள் கீத்து.
அலறியது மகிலையின் அலைபேசி. வாரங்கள் கடந்து அழைத்திருந்தான் மீகன். வாட்ஸ் ஆப் செய்திருந்த முகவரிக்கு சின்னவளை வரும்படி சொல்லி போனை வைத்தான், நிமலனின் தம்பி.
பின்குறிப்பாய், ரகசியம் அவசியம் என்றான்.
முகத்தை கழுவி, ட்ரஸ் மாற்றிக் கொண்டவளோ காரிலேறி கிளம்பினாள், முகில் முட்டும் மலையிடம் நோக்கி.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 64
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.