- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 65
மணி மதியம் ஐந்தாகி விட்டது.
நான்கு மணிக்கே சுஜியை காண வருவதாய் சொல்லியிருந்த, கேடியான ஔகத்தோ நெடுஞ்சாலை நெரிசலில் மாட்டிக்கொண்டு லேட்டாகவே வந்துச் சேர்ந்திருந்தான் மனைக்கு.
எப்படியும் அவன் மண்டை உருள போவது நிச்சயம் என்றறிந்தவன், முன்னெடுப்பாய் தாயான சுஜிக்கு மிகப்பிடித்த சோன் பப்பிடியை வாங்கியெடுத்து வந்திருந்தான்.
சண்டைக்கு பின்னான சமாதானம் என்பது அவன் அறிந்த விஷயமே. இருந்தும், சோன் பப்பிடியை கொடுத்தாவது நீளப்போகும் வாக்குவாதத்தை சுருக்கிடலாம் என்பதே மகனின் எண்ணம்.
''யாருக்கு சோன் பப்பிடி வேணும்?!''
என்றவனோ வீட்டின் வாசலில் நின்றப்படி குரல் கொடுக்க, நிசப்த அமைதியே அங்கு நிலவியிருந்தது.
''பாப்பா?! கேடியோட பாப்பா எங்கே?!''
என்றவனோ காலணியை கழட்டிய வண்ணம், மீண்டும் பெற்றவளை தகப்பனை போல் செல்லங்கொஞ்சி அழைத்தான்.
இப்போதும் பின் ட்ராப் சைலண்டே (pin drop silent). வழக்கமாய் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கேர் டேக்கர்களையும் காணவில்லை.
''மா!''
என்றவனோ சிறு பதற்றம் கொண்டு, கையால் கழட்டிய காலணியை காலாலே, உதறித்தள்ளி வரவேற்பறை வாசலில் அடியெடுத்து வைக்க,
''ஔகத்!''
என்றக் குரல் டாக்டரவனை நிறுத்தியது.
பக்கென்றது தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் இதயம். அது அவன் அம்மா சுஜியின் குரல். நன்றாக தெரியும் ஔகத்திற்கு. ஆனால், இவ்வளவு தெளிவெல்லாம் இருக்காது. இருந்ததும் இல்லை.
மெதுவாய் தலை திருப்பினான் மகனவன், குனிந்த தலையோடே கார் நிறுத்திய வாசலை நோக்கி.
நெயில் பாலிஷ் பாத நகங்களில் பளபளக்க, நேர்த்தியான சிவப்பு நிற சுடியில் நெஞ்சுக்கு குறுக்கே கைகளோ கட்டுண்டிருக்க, கந்தரமோ தாலிக்கொடியில் மங்களமாய் ஜொலித்திருக்க, செம்பட்டை கலர் சுருள் கூந்தல் முன் தோள் படர்ந்திருக்க, செவிகள் ரெண்டும் முத்திலான காதணிகளில் மெருகேறியிருக்க, அடர் சிவப்போ கேரமலின் இதழை குத்தகைக்கு எடுத்திருக்க, நிடலமோ மெல்லிய திருநீர் கீற்றில் பக்தியில் திளைத்திருக்க, நெற்றி வகிட்டில் குங்குமம் கெத்தாய் செழித்திருக்க, தாமரையாய் மலர்ந்திருந்த, சிரித்த முகத்தோடு காரில் சாய்ந்தாற்படி நின்றிருந்தாள் திருமதி நிமலன் சர்வேஷ் குமாரின் தர்மபத்தினி கயல் தீராவாகிய, சுஜி.
பல வருட பைத்தியம் குணமாகியிருந்தது பேதையவளுக்கு.
ரகசியம் காத்திருந்தான் மீகன். வழக்கம் போல் தாயை காண வரும் மகன், அவனாகவே தெரிந்துக் கொள்ளட்டும் இப்படியானதொரு சந்தோஷத்தை என்று.
கேர் டேக்கர்களுக்கும் அதே ஆர்டர்தான். தெளிந்த தெரியிழையின் நா மலர்ந்த முதல் வார்த்தை என்னவோ, கேடிதான்.
மீகன் கதை சொல்ல, உக்ர காளியோ இறுதியில் அழுது ஓய்ந்து களைத்தாள் உடம்பும் வயசும் இளமையை தாண்டிய முதுமையை கொண்டிருக்க.
ஆறுதலாக இனி மகன் ஔகத் இருப்பான் என்ற நம்பிக்கையோடு தலைமுழுகினாள் துன்பங்களை, நிமலனின் காதல் மனைவி தீரா.
ஒருமுறைக்கூட மகனவனை நேரடியாய் பார்த்திராத தாயோ. அதீத ஆவலில் காத்திருந்தாள் அவனுக்காக. டாக்டர் பையன் எப்படி இருப்பான் என்றவள் கேட்க,
''உனக்கு புடிச்ச மாதிரி! அச்சு பிசுக்காமே! மயில் வர்ண கண்களோடு!''
என்றான் மீகன் பீடிகையோடு சொல்லாமல் சொல்லி, ஔகத் அப்பனை போலவே என்று.
கேடியையே காண போவது போல் ஆர்ப்பாட்டம் கொண்டாள் சுஜி. பேடிக்குவர், மேனிக்குவர் என்று கேர் டேக்கர்ஸ் எல்லாரையும் பம்பரமாய் வேலை வாங்கி தயாராகி போனாள் வரப்போகும் மகனுக்காய்.
ஔகத்தும் வந்தான், தாயைக் கண்டான்.
சுஜியும் கண் முன், கேடியே நிற்பது போலுணர்ந்தாள் ஔகத்தை பார்த்த நொடி.
ஔகத்தின் விழிகளோ ஸ்தம்பித்து போய் ரொம்ப நேரம் ஆகியிருந்தது. கலங்கிய கண்களோடு வரவேற்பறை வாசற்கதவின் சுவரை கரங்களால் பற்றியவனோ அப்படியே அமர்ந்து விட்டான் நடு வாசலிலேயே.
அதிர்ச்சியிலான அதிர்வில் என்னசெய்வதென்று தெரியவில்லை நாயகன் அவனுக்கு.
உதடுகள் மடக்கிக் கொண்டவனின் தலையோ தரை பார்க்க, உள்ள களிப்பினை வெளிக்கொணர முடியாது ஆனந்தத்தில் வெடிக்க பார்த்த இதயத்தை கொஞ்சம் ஆசுவாசம் செய்திட நினைத்தான் ஆணவன்.
எத்தனை வருஷ வேண்டுதல் இது. இன்று மிழிகளின் முன் பலித்து நிற்கும் சாட்சியை என்னவென்று சொல்வது. கடவுள் கல்லில்லை, கருணையின் கடல் என்ற திருவாசகம் ஒன்றை தவிர.
ஒரு வார்த்தைக் கூட பேசாது, ஏறெடுத்து பார்த்த மகனை கண்ணசைத்து அழைத்தாள் சுஜி அவள் நோக்கி வரச்சொல்லி.
மகனோ நகராது அங்கேயே கிடந்தான், இன்ப அதிர்ச்சி இன்னும் அவனை பிடித்துக் கொண்டு தள்ளாட்டத்திலேயே வைத்திருக்க.
பெத்தவளின் முகத்தை பார்க்காதவனோ தலையை மட்டும் அங்கும் இங்கும் திருப்பி, உதடுகள் தந்தியடிக்க, ஒற்றைக்கையால் முன்நெற்றி கேசத்தை பின்னோக்கி தள்ளியவனாய் தவித்தான், அம்மாவிற்கு எப்படி ரெஸ்பாண்ட் பண்ணுவது என்று தெரியாது.
''நீ வர மாட்டே!''
என்றவளோ ஏக்கமான சிறு மூச்சோடு, மகனை நோக்கி அடிகளை முன்னோக்கி வைத்தாள்.
திட்டிகள் கண்டு வியந்திருக்கும் காட்சி கனவா நனவா எனும் பரிதவிப்பில் தனக்குத் தானே போராட்டம் கொண்டிருந்தவனின் தலையை வாஞ்சியாய் கோதினாள் சுஜி.
தலை தூக்கி பெற்றவளை பார்த்த ஔகத்தின் அம்பகங்களோ, நிரம்பிய குடமாய் அவன் பார்வைகளை மறைத்திருக்க,
''என் கேடி மாதிரியே இருக்க!''
என்றவளோ மெதுவாய் அவன் கேசத்தை கோதி தொடர்ந்தாள்.
''இந்த கண்கள்!''
என்ற ஏந்திழையோ வலி நிறைந்த குரலோடு மகனின் முகத்தை இருக்கரங்களால் பற்றி தொடர்ந்தாள்.
''அழகான நெத்தி, கூர் மூக்கு, கடுக்கண் காது, க்யூட்டான உதடு, கையிலே குத்தாத மாதிரியான தாடி, இருந்தாலும், இல்லாட்டியும் கெத்து காமிக்கறே மீசை, ருத்ராட்ச மாலை..''
என்றவளோ மென்மையாய் மகனின் கரம் பற்றி,
''இந்த ப்ரஸ்லட் (bracelet)!''
என்றுச் சொல்லி தெப்பக்குள கண்ணீரோ அருவியாய் கொட்டிட, மகனின் நெற்றியில் அழுத்தமான முத்தமொன்றை பதித்தாள்.
''மா!''
என்றழைத்த ஔகத்தோ, தாயாகிய சுஜியின் வயிற்றில் முகம் புதைத்து கதறினான் சத்தமின்றி.
ஆர்பாட்டமில்லா அழுகையில், கருவிலானவன் தங்கியிருந்த அன்னையின் வயிற்றில் மூச்சு முட்டும் வரை சைலண்ட் ஒப்பாரி வைத்தவனோ,
''என்னடா சின்ன டால்டா, உங்கப்பாக்கு போட்டியா நீ?! அவனும் இப்படித்தான் ரொம்ப டவுனா இருந்தா, என்னே புடுச்சுக்கிட்டு விடவே மாட்டான்! நானா, சளி சிந்தி அவன் மேல போடறே வரைக்கும்!''
என்ற சுஜியின் காமெடியான பழைய நினைவுகளில், லைட்டாய் முறுவல் கொண்டு, மெதுவாய் அவன் தலையை பிரித்தெடுத்துக் கொண்டான் ஔகத் தாயின் வயிற்றிலிருந்து.
அவன் பக்கத்தில் சென்று அமர்ந்துக் கொண்ட பெதும்பையோ,
''எப்படி இருந்தது குட்டி கேடி, இந்த லேடியோட சர்ப்ரைஸ்?!''
என்றவளோ மகனின் தலையை கலைத்து கலாய்க்க, ஏதும் பேசிடாதவனோ, இழைந்தோடும் இதழோடு சுஜியின் முகம் பார்த்து மீண்டும் தலையை பளிங்கு தரை பார்த்து குனித்துக் கொண்டான்.
மகனவன் வேண்டாத தெய்வமில்லை, தாயவள் இப்படி மீண்டும் திரும்பி வர. தந்தை இருக்கையில், தாயில்லை. பெத்தவள் கைசேர்ந்த நேரம் அப்பனோ புவியில் இல்லை.
பலர் இருந்தும், பெற்றோர் இல்லா ஔகத் அனாதையே.
''ஔகத்..''
என்றழைத்தவளை திரும்பி பார்த்தவனின் முன்னே, சோன் பப்பிடி கொண்ட விரல்களை நீட்டியிருந்தாள் சுஜி.
''எப்போதுமே, நீதானே எனக்கு ஊட்டி விடுவே?! இனி நான்!''
என்றவளோ மகன் வாய் திறக்க, இனிப்பை திணித்தாள் அவன் வாயில்.
''சரி வா, அம்மா சாப்பாடு ஊட்டறேன். கண்டிப்பா, நீ இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டே. எனக்கு தெரியும்!''
என்றவளோ ஔகத்தின் கரம் பற்றி இழுத்து போனாள் வீட்டுக்குள்.
''சாப்பாடு எங்கே?! என் குட்டி கேடி சாப்பிட போறான்! சாப்பாடு எங்கே?!''
என்றவளோ மகனை டைனிங் நாற்காலியில் அமர்த்தி, கேர் டேக்கர்ஸ் கொண்டு வந்து கொடுத்த உணவை ஔகத்திற்கு ஊட்டிட ஆரம்பித்தாள்.
''தெரிஞ்சோ, தெரியாமலோ நீ என்னே சின்ன வயசுலையே பிரிஞ்சு போக நானும் ஒரு காரணமாகிட்டேன்! தயவு செஞ்சு இந்த அம்மாவே மன்னிச்சிரு ஔகத்!''
என்றவளோ கோழி குழம்பு கொண்ட சோற்றை மகனின் வாயருகே கொண்டுச் செல்ல,
''மா! நீங்க என் அம்மாமா! நீங்களும் அப்பாவும் இல்லாமே நான் இல்லமா!''
என்றவனோ பெத்தவளின் மூக்கை பிடித்தாட்டி, முற்றிழையின் குவிந்த விரல்களின் சோற்றை வாயால் வாங்கிக் கொண்டான்.
''நான் எந்த ஜென்மத்துலே பண்ண புண்ணியமோ, தெரியலே! என் மகனே எனக்கு அம்மாவா இருந்திருக்கான் இத்தனை வருஷமா! உங்கப்பா குணம் ஔகத், உனக்கு!''
என்றவளோ தழுதழுத்த தொனி கொள்ள, 'கடாக்' என்ற சத்தத்தில் வேறொங்கோ பறந்திருந்த பாவையின் எண்ணங்கள் மகனின் செயலில் நிறுத்தங்கொண்டு நின்றது.
ஔகத், கோழி எலும்பை சப்புக்கொட்டு ரசித்து, ருசித்து, உறிஞ்சி, சிங்கபல்லின் இடுக்கில் வைத்து அதை மீண்டும் ஒரு கடி கடித்தான் 'கடாக்' என்று.
கயல் தீராவின் உடைந்த நெஞ்சோ அக்கடியில் மீண்டும் உயிர்த்தெளிந்தது. சோற்று தட்டை ஓரம் வைத்து மகனின் நெஞ்சில் துஞ்சிக் கதறினாள் தாயவள்.
''என் கேடி எங்கையும் போகலே! என்னே விட்டு போகலே! என் பையன் ரூபத்துலே என்கூடவேதான் இருக்கான்!''
என்றவளோ, மகன் என்றும் பாராது பழைய சுஜியின் சேட்டையை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாது, சிந்தி வைத்தாள் சளியை ஔகத்தின் சட்டையில்.
''இதுக்கு, நீங்க எனக்கு சோறு ஊட்டாமலே இருந்திருக்கலாம் மம்மி!''
என்றவனோ நக்கல் கொள்ள,
''என்னையவே கிண்டல் பண்றியாடா, சின்ன டால்டா!''
என்ற நேரிழையோ, ஔகத்தின் கன்னங்களை குழம்புக் கையோடு செல்லமாய் பிடித்தட்டினாள் மகன் எரிச்சலில் அலற, அவள் அங்கிருந்து எகிற.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/படாஸ்.14/

Author: KD
Article Title: படாஸ்: 65
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.