- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 68
படாஸ் என்றொருவனின் மீது கொண்ட காதல், அகம்பாவ கழுதையான கிருத்திகாவின் வாழ்க்கையை முற்றிலும் தடம் புரட்டி போட்டது.
வினோதன் அவனை மறக்கவும் முடியாது, சேரவும் முடியாது நரக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த காரிகையின் கண்ணுக்கு விருந்தாக அமைந்தான் ஔகத், பல மாதங்கள் கடந்த இன்றைய நாளில்.
புதிய கித்தார் கொலையை நேரில் போய் கண்டு வந்த வஞ்சியோ, மீண்டுமொரு குளியல் போட்டு வந்துச் சேர்ந்தாள் பஞ்சணைக்கு, மனசெல்லாம் படாஸையே நினைத்திருக்க.
உறக்கம் அம்பகங்களை தழுவினாலும், தாரகையின் சிந்தையை ஏனோ எட்டிக்கூட பார்த்திடவில்லை நித்திரா தேவி.
கட்டிலின் விளிம்பில் கால் தொங்க, நெற்றியை ஒருகையால் தாங்கியிருந்த தெரிவையோ, தலையை குனிந்தாற்படி விலோசனங்கள் மூடி சம்பவ இடத்தில் செவிகள் கேட்டு மிழிகள் நோக்கிய காட்சியை நினைத்துப் பார்த்தாள் பேதையவள்.
ஆம்புலன்ஸ் கிளம்ப, ஔகத்தும் கிளம்பிட முனைந்தான். கீத்துவும் சம்பவத்தை முதலில் பார்த்த காவலாளியை விசாரித்து முடித்து அவ்விடத்திலிருந்து நகர பார்த்தாள்.
அரிவையின் பார்வைகளில் சிக்கிய ஔகத்தோ, பெண்ணவளை பார்த்திடாது தவர விட்டிருந்தான். நிஜமாகவே, ஆணவன் ஆட்டியவளை அங்கு கவனிக்காது மிஸ் செய்திருந்தான்.
பேச வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதால் கீத்துவும், தானாக போய் அவனிடத்தில் முன்பை போல் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சிக்கவில்லை. இதுவரையிலான அவளின் காயங்களும் அவமானங்களுமே போதுமென்று ஒதுங்கிக் கொண்டாள் அபலையவள்.
சாலையோரத்தில் மூன்று கார்களுக்கு முன்னதாய் ஔகத்தின் காரும், பின்னதாய் ஆயிழையின் வாகனமும் இருந்தது.
அவன் வலது போக, கீத்து இடது போனாள். அப்போது எதர்ச்சையாக நேரிழையின் காதுகளில் விழுந்தது ஔகத்தின் அலைபேசி கான்வர்சேஷன்.
''கண்ண மூடினா எல்லாம் வரும்!''
என்றவனோ சின்னதாய் சிரித்து தொடர்ந்தான் ரிசீவரில்,
''சரி, அப்போ நான் டோடோ பண்றேன். தூங்கணும்?! ஓகே!''
என்றவனின் வார்த்தையில் ஒரு நொடி இதயம் விக்கித்து போனது முற்றிழையவளுக்கு.
காரின் கைப்பிடியை இறுக்கமாய் பற்றிய பாவையோ. அதை திறக்காமல் அங்கேயே நின்று அதில் அழுத்தங்கூட்டினாள்.
''டோடோ, டோடோ, டோடோ, டோடோ, டோடோ, டோடோ, டோடோ!''
என்ற ஔகத்தோ எப்போதோ காரிலேறி கிளம்பியிருந்தான்.
அந்திகையின் மனசோ பழசை அசைப்போட, அதற்கு மேல் அங்கு நின்றிட விரும்பா வஞ்சியோ, புயலாய் காரை அழுத்திக் கொண்டு பயணித்தாள் மனைக்கு.
அந்த டோடோ, என்ற வார்த்தை நுண்ணிடையாளின் இதயத்தை மீண்டும் பதம் பார்த்தது.
கலங்கி ஊற்றிய கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்ட கோதையோ, மெதுவாய் எழுந்து சென்றாள் சுரிகுழலின் அலமாரியை நோக்கி.
அதுக்குள்ளிருந்து வெளியில் எடுத்தாள் பகினியவள், கலை வேலைப்பாடுகள் கொண்ட கைவினை பொருளொன்றை.
கித்தார்கள் செய்ய பயன்படுத்தப்படும், மஹோகனி (Mahogany) மரக்கட்டை அடித்தளமாக அமைந்திருக்க, அதை கடல் நீலத்தில் வர்ணம் தீட்டியிருந்தான் படாஸ்.
24 x 30 சைஸ் அளவிலான பலகையின் மீதோ குட்டி கடலையே உருவாக்கியிருந்தான் கலாரசிகனவன்.
சின்னதான உடுமீன்கள் சூழ, சொறி மீன்கள் (jelly fish) மிதவையாய் இருக்க, சுந்தரியோ வெண்சங்கில் அமர்ந்திருக்க, மகிலையின் கால்களோ பவள பாறையிலான கல்லொன்றின் மீது பதித்திருக்க, ஏந்திழையின் மடியில் தலை சாய்த்திருந்தான் ஆழ்கடல் கோன்.
அப்படித்தான் செதுக்கியிருந்தான் ரேவ், அப்பொம்மை காட்சிகளை. நெஞ்சு வரையிலான ஊதா வர்ண ஆடையில் கீத்துவும், ஆடையற்ற மார்போடு படாஸும் பாலிமர் களிமண் (polymer clay) சிற்பங்களாய் சிரித்திருந்தனர்.
இப்போதும் ஞாபகம் இருக்கிறது பனிமொழியவளுக்கு, இக்கலா சித்திரத்தை பேடை அவளிடத்தில் அடவி அந்திரனவன் கொடுக்கையில்,
''காட்சிகளான என் காதல் இது, கிருத்தி! கைவிலங்கானாலும் உன் கையிலதான், மரணமானாலும் உன் மடியிலதான்!''
என்ற மயூர விழியழகனோ, அவனிதழ்களை கோர்த்தான் இளம்பிடியாளின் அதரங்களில்.
முத்திகள் எல்லாம் எல்லை மீற, முத்துமுத்தாய் வியர்த்து கொட்ட முயங்கல் கொண்டார்கள் காதலர்கள் இருவரும்.
ஒவ்வொருமுறை கூடலின் போதும், படாஸின் முகம் பார்த்திட தவிர்த்தாள் தளிரவள். பேரழகனோ கெஞ்சாத குறையாய் கெஞ்சி குலமகள் பாதம் தழுவ, அப்போதும் மாட்டேன் என்றாளே ஒழிய இம்மியும் மனசிறங்கவில்லை காவல்காரியவள்.
உச்சம் தொடுகையில் கூட, தப்பி தவறி திட்டிகள் திறந்திடக்கூடாதென்று ரொம்பவே கவனமாக இருந்தாள் பெண்டு அவள்.
''படாஸ், தூங்க போறேன். ஒரு பாட்டு பாடேன்.''
என்றவளோ துழாவியெடுத்து அணிந்தாள் அஃறிணையவன் டி - ஷர்டை.
''தொலைக்கத்தானே தேகம்
தேடி எடுக்கத்தானே மோகம்
ஆடைகென்ன வேலை
அங்கங்கள் கூடும் வேளை!''
என்றுச் சொல்லி சேயிழையவளை பின்னாலிருந்து கட்டிக்கொண்டு, கீழிருந்து மேல் நோக்கி இழுத்து கழட்டி வீசினான் அம்மணியின் மேனி கொண்ட ஆணவன் ஆடையை, ரேவ்.
''படாஸ், நம்ப உறவோட முடிவென்னன்னு எனக்கு தெரியாது! சோ, உன் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் உன்னே ஃபீல் பண்ற மாதிரியான ஏதாவதொன்னே எனக்கு நீ கொடுக்கணும்!''
என்றவளோ அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் கன்னத்தை வருட,
''என்னையே கொடுத்திருக்கேனே!''
என்றவனோ மெல்லியாளின் நுதலில் இதழ் பதித்தான்.
''நீ வேண்டாம் போ! வேறே ஏதாவது?!''
என்றவளோ அவன் மீதேறி அமர,
''திமிறாடி கிருத்தி உனக்கு?! குத்துக்கல்லு மாதிரி இருக்கறே நான் வேணா! ஆனா, ஷோ கேஸ்லே வைக்க மட்டும் கிஃப்ட் வேணுமா?!''
என்றவனோ மாயோளின் தொடையை செல்லமாய் திருக,
''டேய், டால்டா! நீ எனக்குள்ளே இருந்து என்னையவே ரூல் (rule) பண்றே படாஸ்டா!''
என்ற துடியிடையாளோ, அவன் நெற்றியில் முத்தமிட்டு தொடர்ந்தாள்.
''ஹ்ம்ம், கொடு?!''
என்றவன் கையை இழுத்து, அவன் கை மேல் வைத்தாள் அவளின் உள்ளங்கையை கிருத்திகா.
படாஸோ சனிகையவள் கையை அப்படியே மூடி ஓரந்தள்ளினான்.
''நிமலனின் சதிக்கான சமர்ப்பணம், இனி என் கிருத்தியின் தர்ப்பணம்!''
என்றுச் சொல்லி, அவன் கழுத்திலிருந்த மெல்லிய ருத்ராட்ச மாலையை கழட்டி அதை அணிவித்து விட்டான் ரேவ், விறலியின் கந்தரத்தில்.
''ஐ லவ் யூ ரேவ்!''
என்ற அளகவளோ படாஸை இறுக்கமாய் கட்டிக்கொள்ள,
''வா, நான் உன்னே தூங்க வைக்கிறேன்.''
என்றவனோ காதலியை இழுத்து மார்பில் போட்டுகொண்டு வல்வியின் தோளை வாஞ்சையாய் தட்டிட ஆரம்பித்தான்.

என்றவனின் நெஞ்சில், தலையை முட்டிய ராங்கிக்காரியோ,
''ஐயோ! ரேவ்! போதும்! என்னடா இது டோடோ, கீடோன்னு!''
என்று நக்கலோடு சிரிப்பாய் சிரிக்க,
''எங்கம்மாவே, எங்கப்பா இப்படித்தான் தூங்க வைப்பாராம்!''
என்றவனோ அடங்காது அலைபாய்ந்த அழகியை அடக்கினான் கரங்களுக்குள் இறுக்கி.
''அது அந்தக்கால லவ்ஸு டா, என் டால்டா!''
என்ற கீத்துவோ, நெத்தியடி ஒன்று வைத்தாள் படாஸின் நுதலில்.
இதற்கு முந்தைய நாளிலொன்றில் படாஸ் சொல்லியிருந்தான் வாசுரையவளிடத்தில் , அவன் டேடியை, ஆணவனின் மம்மி, டால்டா என்று கொஞ்சலாய் அழைக்கும் தகவலை.
அதை பிடித்துக்கொண்ட கீத்துவோ தோன்றும் போதெல்லாம் படாஸை அப்படி அழைத்து சிரித்துக் கொள்வாள்.
''நீ அடங்க மாட்டே! உனக்கு ஹங்கிரி கோஸ்ட் ட்ரீட்மெண்ட்தான் சரிப்பட்டு வரும்!''
என்றவனோ தலையணை கொண்டு அவனை அடித்து சிரித்த, ஒளியிழையின் கையை பிடித்திழுத்து மஞ்சம் சரித்தான்.
நடந்தவைகளை நினைத்து பார்த்த தெரிழையின் திருசிகளோ அருவியாய் கண்ணீரை கொட்ட, கந்தரத்தில் கிடந்த ருத்ராட்ச மாலையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு அப்படியே கண்ணயர்ந்தாள் படாஸின் கிருத்தி.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 68
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.