- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 74
கண்ட நொடியே வாழ்ந்தால் இனி கிருத்திகாவோடுதான் என்ற எண்ணங்கொண்ட ஔகத்தின் அன்பெல்லாம் வம்பாய் மாறிப்போனது என்னவோ, மங்கையவள் வாயால் மட்டுமே.
அதேப்போல், மூளைக்கொண்ட புத்திக்காரனை நேரெதிராய் சந்தித்திடும் முன்னே முற்றிழையின் மனசில் சிம்மாசனம் கொண்ட அசகாய சூரன் படாஸ்தான், இதுநாள் வரையிலும் தன் வெறுப்பை சம்பாரித்த ஔகத் என்ற உண்மை தெரிய வர, ஆடித்தான் போனாள் ஆட்டியவள்.
இருந்தும், விதி சதி செய்ய, ஆளுக்கு ஒரு மூலையென அவரவர் பாதையில் பயணித்தவர்களை மீண்டும் ஒரே ட்ராக்கில் ஓட விட்டு வேடிக்கை காட்டிட ஆரம்பித்தான் ஆதீஸ்வரன்.
''டைம் ஆகுது, இன்னும் பேசவே இல்லையே?!''
என்ற கீத்துவோ உண்டு முடித்த தட்டை முன்னோக்கி தள்ளி வைத்தாள்.
''ஹ்ம்ம்.. சாப்பிட்டு முடிச்சிட்டு பொறுமையா பேசலான்னு இருந்தேன்.''
என்றவனோ நாப்கினில் வாயை ஒத்தியெடுத்துக் கொண்டான்.
காத்திருந்தாள் காரிகையவள் முன்னிருப்பவனே ஆரம்பிக்கட்டும் என்று.
''நாமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறேன் கீத்து.''
என்றவனோ படக்கென்று ஒரே போடாய் போட்டான், அப்பனை போலவே, ப்ரோபோசல் ஏதும் பண்ணிடாமலே.
''இது ஸ்டேட்மெண்ட்டா இல்லே ஆப்டேட்டா?!''
என்ற வதனியோ கிண்டல் தொனி கொண்டாள், முதுகை நாற்காலியில் சாய்த்தமர்ந்து.
''ப்ரோபோசல்ன்னு கூட வெச்சுக்கலாம்.''
என்றவனோ குறுநகையோடு கண்களை சிமிட்டிட,
''எது, இது?! போயா! முள்ளுக்கரண்டியே எடுத்து மூக்குல குத்திட போறேன்!''
என்ற வஞ்சியோ பொய் கோபம் கொண்டு அவனை நக்கலாய் திட்ட,
''சரி, எனக்குதான் வரலே! நீ சொல்லிக்கொடு!''
என்றவனோ பகினி அவளுக்கே ரிவீட் அடித்து, முஷ்டி மடக்கிய கரங்களின் மீது வாய்த்தாடையை பதித்து கொஞ்சல் பார்வை கொள்ள,
''என்ன சொல்லிக் கொடுக்கணும்?!''
என்ற மகிலையோ, நமட்டு குறிஞ்சிரிப்பை ஒளித்து வினவ,
''டங் ட்விஸ்ட்டர்!''
என்றவனோ பற்களால் கீழுதட்டை கடித்து மார்க்கமாய் புன்னகைக்க, அவனை நாணம் கொண்ட இதழ் பிரிக்கா முறுவலோடு லுக்கு விட்டவளோ,
''நான் கிளம்பறேன், லேட்டாச்சு!''
என்றவளோ உடலில் உளவியல் மாற்றம் ஏற்பட, அங்கிருந்து ஓடிட பார்த்தாள்.
எல்லாம் அந்த டங் ட்விஸ்ட்டர் என்ற வார்த்தை ஜாலத்தின் விளைவுதான்.
பத்து நாட்கள் நாயகியோடு இட்லி சட்னியாய் இருந்த படாஸ், அவ்வப்போது காணாமல் போய் திரும்ப வந்து சேர்க்கையில், ஏந்திழை அவளை இழுத்தணைத்து மூச்சு முட்ட முத்தமிட்டிடுவான்.
அதற்கு அவன் வைத்த சொல்ல பெயர்தான் டங் ட்விஸ்ட்டர்.
அப்படி இருக்கையில், இந்த டாக்டர் பையன் அதே கேர்ட் வேர்ட்டை சொல்ல, அவனை ரேவ் என்று நினைத்திருக்கும் கொற்றோடியோ கூசிப்போகாமல் வேறென்னதான் செய்திடுவாள்.
''பதில் சொல்லடி கிருத்திக்காவே?!''
என்றுப் பாடியவனோ, அபிராமிக்கு பதில் கிருத்தியை சேர்த்து பாட்டாகவே பாடி வேள்வி கொண்டான், நாற்காலியிலிருந்து எழுந்த வண்ணம்.
''யோசிச்சு சொல்றேன்!''
என்றவளோ சிரித்தப்படி அவன் கண்ணிலிருந்து மறையாது அடிகளை பின்னோக்கி வைக்க,
''லிப்ட்லே இறங்கற கேப் போதுமா, யோசிக்கே?!''
என்ற டாக்டரோ, பனிமொழியுடனேயே சேர்ந்து மின்தூக்கிக்குள் நுழைய,
''ஹ்ம்ம், போதும்! போதும்!''
என்றவளோ கைப்பையிலிருந்து துழாவி எடுத்தாள் சிறியதொரு பையை வெளியில். அதற்குள்ளிருந்த திருநீரை கொஞ்சமாய் விரல்களில் எடுத்த பைந்தொடியோ,
''கடவுளே, இந்த டாக்டருக்கு நல்ல புத்தியே கொடு!''
என்றவாறு ஔகத்தின் நிடலத்தில் திருநீறு கீற்றை வைத்து விட,
''ஆமா, கடவுளே! இந்த அகம்பாவ கள்ளியே எப்படி கரைட் பண்றதுண்ணு ஐடியா கொடு!''
என்றவனோ குறும்புக் கொண்டு சிரிக்க,
''நீ திருந்த மாட்டடா படவா!''
என்றவளோ ஹேண்ட் பேக்கை தூக்கி அவன் நெஞ்சில் ஒரு மொத்து மொத்தியவளாய், சாலையோரத்து பார்க்கிங் நோக்கி நடக்க, அவள் கரம் பற்றியிழுத்தவனோ,
"பனிவிழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்!"
என்றவனோ திருசிகளால் அரிவையின் திட்டிகளுக்கு கொக்கி போட, அவன் உள்ளங்கை கதகதப்பு காந்தாரியை ஏதோ செய்ய,
''நான், நான் கிளம்பறேன் ஔகத்."
என்றவளோ மெதுவாய் அவள் கரங்களை அவன் பிடியிலிருந்து பிரித்துக் கொள்ள,
"பதில்?"
என்றவனோ பச்சிளங்குழந்தையின் சாயல் கொள்ள,
கொஞ்சம் டைம் கொடுங்க.''
என்றவளோ பட்டும் படாமலும் ஜி.வி.எம். பட ஹீரோயின் போல் பேசி, காரிலேறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தாள் கிளம்பிட.
நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றவனோ, நேரிழை அவளையே பார்த்திருக்க, நுண்ணிடையாளின் காரோ மக்கர் செய்திட ஆரம்பித்தது.
பிரச்சனை என்னவென்று ஔகத் பார்க்க, சொல்லுக்கொள்ளும் படி எதுவும் இல்லை. இருந்தும், வல்வியவளின் கார் ஏன் ஸ்டார்ட் எடுக்கவில்லை என்று இருவருக்குமே தெரியவில்லை.
தெரிந்த மெக்கானிகிற்கு கோல் செய்த டாக்டரோ, சம்பவத்தை சொல்லி அவன் கட்டளைகளை பின்பற்றி வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முனைந்த முயற்சியும் தோல்வியே.
''நான் கேப் புக் பண்ணி கிளம்பிக்கறேன் ஔகத். நீங்க முதல்லே கிளம்புங்க. பத்தாகுது மணி.''
என்றவளோ அலைபேசியை கையிலெடுக்க,
''அதெல்லாம் ஒன்னும் வேணாம். நானே கொண்டு போய் ட்ராப் பண்ணிடறேன் வீட்டுலே. இங்கையே வெயிட் பண்ணு பைக் எடுத்திட்டு வந்துடறேன்.''
என்றவனோ கார் சாவியை சுரிகுழலின் கையில் கொடுக்க,
''இல்லே, வேண்..''
என்றவளின் வார்த்தைகளோ அப்படியே நின்றுப்போனது, ஆணவனின் கூரிய திட்டிகள் ரெண்டும் ரதியவளை விழுங்குவது போல் பார்க்க.
உண்மையில், அது ஒரு முறைப்பிலான டிசைன்.
''எக்ஸ்ட்ரா ஹெல்மெட் இருக்கா?''
என்றவளோ அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள், அதே பார்வைகளை ஏற்கனவே மடந்தையவள் ஒருமுறை பார்த்திருக்க.
''என்னோட ஹெல்மட் நீ போட்டுக்கோ. போலீஸ்காரன் புடுச்சா, பைக்லே லோக் பண்ணி வெச்சிருந்த என்னோட ஹெல்மட்டே எவனோ அடிச்சிட்டு போயிடான்னு சொல்லிக்கலாம்.''
என்றவனோ ஒளியிழையவளின் அலைபேசியை அவள் கையிலிருந்து பிடிங்கி,
''நீ விட்டா, எனக்கே விபூதி அடிச்சிடுவே! வர வரைக்கும் இங்கையே இரு!''
என்றுச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தான் பைக்கை எடுக்க.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/படாஸ்.14/

Author: KD
Article Title: படாஸ்: 74
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.