- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 78
புத்தியை கிறங்கடித்து, மனசை கொள்ளையடித்த படாஸ், எங்கோ ஓரிடத்தில் சோக கீதம் வாசித்திருக்க, இங்கோ பேரழகனின் காதலி கிருத்தியை, பதின்ம வயது தொட்டே மனைவியென்ற ஸ்தானத்தில் வைத்த டாக்டர் ஔகத் சர்வேஷ் குமாரோ காதலான காமத்தில் முக்குளிக்க வைத்திருந்தான்.
முட்டாள் பேதை அவளுமே, இன்றைக்கு மனித உயிர் காக்கும் டாக்டரின் கையில் தவழ்ந்திருக்க ஒரே காரணம் காரிகையவள் அவனை படாஸ் என்று நம்பியதால் மட்டுமே.
என்னதான் வாசுரை அவளிடம் கோபங்கொண்டு ஒட்டுறவே வேண்டாமென்று ஔகத் ஒதுங்கியே இருந்தாலும், காலங்காலமாய் அவன் மனதை ஆட்சி செய்த சேயிழையை சாமானியத்தில் அவனால் தூக்கியெறிந்திட முடியவில்லை.
காலம் பதில் சொல்லும் என்ற எண்ணத்தோடு நாட்களை கடத்தியவன் காந்தாரி அவளை மறக்கவும் முடியாது சேர்ந்து வாழவும் முடியாது படாது பாடு பாட்டான்.
அவன் வலி அவனோடு இருக்க, அதை ரகசியமாய் பாதுகாத்தவன் ஒருநாள் சுஜியின் மடியில் படுத்தப்படி படம் பார்த்திருக்க, டிவியின் தொடுதிரையில் கீத்துக்கும் அவனுக்குமான பாடல் காட்சியை பார்க்க, கண் கலங்கி விட்டான் அவனறியாது டாக்டரவன்.
''குட்டி டால்டா, என்னாச்சுடா?!''
என்றவளோ மகனின் தலை கோத, அவனோ ஒன்றுமில்லை என்று தலையாட்டியப்படி பாடலையே பார்த்து கீத்துவை ஏங்கினான்.
''அடேய் சின்ன டால்டா, நீயும் உங்கப்பனே மாதிரியே பண்றியேடா?! என்னாச்சு சொல்லு பார்ப்போம், அம்மாக்கிட்டே?!''
என்றவளோ மகனின் தலையை அவள் வதனம் நோக்கும்படி திருப்பிட,
''மா, என்னே மன்னிப்பிங்களாமா?!''
என்றவனோ மொட்டையாக ஒற்றை வார்த்தையில் கோரிக்கை ஒன்றை வைக்க,
''என்ன பண்ணிட்டான் என் குட்டி சாம்பார்?!''
என்ற சுஜியோ ஒரு தாய்கான தொனி கொண்டு மகனின் முன்நெற்றி கேசத்தை கலைத்து விளையாடினாள்.
''அம்மா ஸ்தானம் இருக்கறே ஒருத்தவங்களே, தவறான கண்ணோட்டத்துலே பார்த்த ஒரு பொண்ணு, வருங்காலத்துலே அவளும் அந்த இடத்துக்கு வருவாங்கறதே மறந்து, அந்த இடத்துக்கு உண்டான மரியாதையே கீழிறக்கி பேசிட்டாமா!''
என்ற ஔகத்தோ, பூசி முழுகினான் அவனுக்கும் கீத்துவிற்குமான அன்றைய சண்டையை வெளிப்படையாய் போட்டுடைக்காமல்.
''சரி, இப்போ அதுக்கு என்னே?!''
என்றவளோ மகனின் நெற்றி நீவிட,
''அந்த பொண்ணு பேசினது தப்புமா.''
என்றான் ஔகத், பெத்தவளை தரங்குறைவாய் கீத்து பேசியதை சுஜி அறிந்தாள், கண்டிப்பாய் மிகவும் வருத்தப்பட்டிடுவாள் என்றறிந்து.
''சரி!''
என்ற சுஜியோ கவனிக்காமல் இல்லை, மல்லாக்க படுத்திருந்த மகனின் கண்ணோரம் நீர் வழிவதை.
''கோவத்துலே நான் அந்த பொண்ணுக்கிட்ட ரொம்ப கடுமையான வார்த்தைகள் பேசி, முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்மா!''
என்றவனோ மீண்டும் தலையை திருப்பி, சுஜியின் வயிற்றில் வதனத்தை ஒளித்துக் கொண்டான்.
''கீத்துவே கல்யாணம் பண்ணிக்கோ ஔகத். உன் வாழ்க்கை அழகா இருக்கும்.''
என்றவளோ மகனின் தலையை வாஞ்சையாய் வருட, சிறு அதிர்ச்சிக் கொண்டவனாய் எழுந்தமர்ந்தான் ஔகத்.
''கேடிக்குள்ள இருந்த கேடிக்கெல்லாம் கேடியவே பார்த்தவடா நானு! இந்த குட்டி கேடி மனசுலே என்ன இருக்கின்னு தெரியாதா எனக்கு?!''
என்றவளோ மகனின் மூக்கை பிடித்தாட்ட, தலைகுனிந்தான் ஔகத், என்ன சொல்வதென்று தெரியாமல் சில வினாடிகளுக்கு.
''நான் உன் அம்மாடா! உன்னே நான் வளர்க்காமே இருந்திருக்கலாம்! ஆனா, நீ இந்த உலகத்தே பார்க்கறதுக்கு முன்னாடி எனக்குள்ளத்தான் இருந்தே! அது போதும் எனக்கு, என் புள்ளே மனசுலே என்ன இருக்கின்னு தெரிஞ்சிக்க!''
என்றவளோ, ஏதும் பேசாது முறுவலோடு அவள் மடியில் மீண்டும் தலை சாய்த்துக் கொண்ட மகனின் நுதலில் இதழொத்தினாள்.
சுஜிக்கு ஓடிப்போயிருந்த மண்டை மூளை சரியானதும், பெண்ணவள் சந்தித்த முதல் ஜீவன் கீத்துதான்.
மீகன்தான் போனை போட்டு வரச்சொல்லியிருந்தான் கிருத்திகாவை மாலை நேரமாய் பார்த்து, முகவரி கொடுத்து.
எப்போது படாஸ்தான் யுவதியவள் விரும்பும் ஔகத் என்று வல்வியவள் அறிந்தாளோ, அப்போதே அவளின் தலைகனமெல்லாம் தூசியாகி போயாச்சு.
ஆனால், பல முயற்சிகள் எடுத்தும் டாக்டரவன் பெதும்பையவளை திரும்பிக்கூட பார்த்திடாத போது, கைக்கூடிடா காதலின் வலியை உணர்ந்த மாதங்கியோ, அன்றைக்கு அவள் பேச்சு ஆணவன் மனதை எந்தளவுக்கு வதைத்திருக்கும் என்று வேதனை கொண்டாள்.
ஆகவே, அதற்கு பிராய்ச்சித்தமாய் ஔகத்தை பெற்றவளிடம் மன்னிப்பு கோரினாலாவது செய்த பாவம் குறையும் என்றெண்ணினாள் மலரவள்.
அதன் தொடர்பாய், ஔகத்தின் சித்தப்பாவை அழைத்த வதூ அவள், பல கெஞ்சல்களுக்கு பிறகு அவன் வாயிலிருந்து சுஜியை சந்தித்திடும் வாய்ப்பை பெற்றாள்.
மகனுக்கு முன் மருமகளை சந்தித்த மாமியாரோ, சின்னவளின் மன்னிப்பிலான மனக்குமுறலை பொறுமையாய் கேட்டாள்.
''எவ்ளோ மன்னிப்பு கேட்டாலும் கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாதுன்னு தெரியும் ஆன்ட்டி! அதுக்காக ஔகத் என்னே இப்படி காயப்படுத்திருக்கே வேண்டாம்!''
என்றவளோ தலை குனிந்தப்படி கலங்கிய கண்ணீர் மடியில் துளிர்க்க,
''என் டேடி மேலே வெச்சே நம்பிக்கையே ஔகத் மேலே வெச்சேன் ஆன்ட்டி! அதுதான், ரொம்ப வலிக்குது!''
என்றவளோ வழிந்த கண்ணீரை விரல்களால் துடைத்துக் கொண்டாள்.
''கீத்து, இங்க வா!''
என்ற சுஜியோ ஆறுதலாய் அவள் கரம் பற்றிட,
''இல்லே, பரவாலே ஆன்ட்டி! ஐம் ஓகே!''
என்றவளோ சுஜியின் கையிலிருந்து விரல்களை பிரித்தெடுத்து திசுவால் நாசியை மூடிக்கொண்டாள்.
''கீத்து, தப்பு பண்ணாதே மனுஷங்களே இல்லே. உங்களுக்குள்ளே, அப்படி ஒன்னும் பெருசா நடந்திடலே! காதலர்களுக்குள்ள வர சாதாரண ஊடல்தான் இது! நான், பேசறேன் அவன்கிட்ட!''
என்றவளோ கீத்துவின் தலையை தடவிக் கொடுக்க,
''பிளீஸ் ஆன்ட்டி, வேண்டாம்! ஜஸ்ட், ஔகத் கூட ஒன்னா இருந்த மூமெண்ட்ஸ்லே..''
என்றவளோ தழுதழுத்த குரலோடு தொடரந்தாள்.
''அவன் கைக்குள்ளே என்னே அவ்ளோ இறுக்கமா புடிச்சுக்கும் போது, டேடி கூட இருக்கற மாதிரியே, அவ்ளோ சேஃவ்வா (safe) ஃபீல் (feel) பண்ணும் ஆன்ட்டி! டேடி, கடைசியா என்னே அப்படித்தான் ஆன்ட்டி ஹக் பண்ணாரு!''
என்றவளோ அருவியாய் பெருக்கெடுத்த கண்ணீரோடு, திசுவால் வாய் பொத்தி அங்கிருந்து ஓடினாள், சுஜியோடான பேச்சை வார்த்தை பாதியிலே நின்றுப் போக.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 78
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.