What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 79

தாயிற் சிறந்த கோவிலில்லை என்பதை ஆணித்தரமாக நம்பும் ஜீவன் ஔகத் சர்வேஷ் குமார். என்னதான் சுஜி அவனை சீராட்டி பாராட்டி வளர்க்கவில்லை என்றாலும், எப்போதுமே அவனுக்கு அவன் அம்மா வேண்டும்.

கேடி எப்படி மது பின்னால் சுற்றிடுவானோ, அதேபோலத்தான் ஔகத்தும் அவன் மம்மி சுஜிதான் அவனுக்கு எல்லாமே. குணமாகி வந்தவளின் சொல்லை அவன் ஒருப்போதும் தட்டியதில்லை.

குற்ற உணர்ச்சிக்கொண்ட கீத்து ஒப்பாரி வைத்து போனப்பின், கல்யாண பேச்சை சுஜி எடுக்க, மகனோ தாயின் விருப்பமென்று சொல்லி கையை விரித்தான், பெண் அவள் தேர்வென்று.

மகன் மருமகள் விஷயத்தை மனம் திருப்பான் என்று காத்திருந்த தாய்க்கோ, ஏமாற்றமே மிஞ்சியது, ஔகத் எதுவுமே நடவாதது போல் நாட்களை கடத்த.

இது சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்த சுஜியோ, நேரடியாய் குஞ்சரியிடம் திருமண ஏற்பாடுகளை பற்றி பேசி, பின் ஔகத்திடம் மேட்டரை சொல்லிக் கொள்ளலாம் என்று தனியொரு திட்டத்தைக் கொண்டிருந்தாள்.

அதற்கேற்றாற்போல, மகனும் காதல் வஞ்சியை ஏங்கி கண்ணீர் கொள்ள, தாய் மாடியில் கிடந்தவனிடம், போட்டு வாங்கி விஷயத்தை அவன் வாயாலேயே தெரிந்துக் கொண்டாள் சுஜி.

மகன் மனம் ஆனந்தம் கொள்ள, அவன் விருப்பப்படியே கீத்துவை கட்டிக்கச்சொல்லி சம்மதமும் தந்தாள் சுஜி.

அம்மாவின் ஆசியோடு, நடந்தவைகளை மறந்து புதியதொரு வாழ்க்கையை தொடங்கிடலாம் என்று எண்ணங் கொண்டான் ஔகத்.

ஆகவே, கீத்துவை அன்றைக்கு படாஸ் கொண்டு வந்து டாக்டரின் வீட்டு வாசலில் போட, அவளைத் தூக்கி போய் ஔகத் அவன் கட்டிலில் போட, பேதையவளோ போதையில் ரேவ் என்று நினைத்து சும்மா இருந்த பையனை கலவரமாக்க, முறுக்கேறியவனோ இன்னும் என்ன அடுத்தது கல்யாணம் தானே என்ற சிந்தையோடு வீரியம் கூட்டி சுந்தரியவளை சொந்தமாக்கிக் கொண்டான்.

இருப்பினும், ஔகத் இவ்வளவு அதுப்பாய் ஆயிழையிடம் உரிமை எடுத்துக்கொள்ள கிருத்திகாவே முழு முதற்காரணம்.

அன்றைக்கு குளிக்கையில் உடலில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கண்ட மாத்திரமே டாக்டரை போலீஸ்காரி போனை போட்டு விலாசியிருந்தாள், அவன் இன்றைக்கு அத்து மீறுவதை பற்றி யோசித்திருக்கக்கூட மாட்டான்.

அதேப்போல், அவன் டின்னர் என்று வாட்ஸ் ஆப் அனுப்பி பேச்சை வளர்க்க, அப்போதே கட் அண்ட் ரைட்டாக பேசி அவனை தள்ளி வைத்திருந்தால், ஆணவனை பகினியவள் சந்திக்க வேண்டிய சூழ்நிலையே வந்திருக்காது.

ஏன், கோவில் போய் வந்தவளின் பூவை இடம் மாற்றி, அவள் பக்கம் நகராது நின்று மகிலையையே இமைக்காது ரசித்தவனை, வழக்கம் போல் வதூ அவள் ரெண்டு ஓட்டு ஓட்டியிருந்தால், அப்போதே சுதாரித்து வாலை சுருட்டிக் கொண்டிருந்திருப்பான் ஔகத்.

ஆனால், அகம்பாவ கள்ளியவளோ, அவர்களுக்குள் அரங்கேறிய கூடலின் உடற்காயங்களை கண்டும், அதைப்பற்றி ஔகத்திடம் ஒரு வார்த்தைக் கூட பேசாதது அமைதி காக்க, அவனை பொறுத்த மட்டில், அது அவளுக்கு விருப்பம் என்றே பொருளாகி போனது.

அதே வேளையில், ஆணவன் வாட்ஸ் ஆப் அனுப்பி கடலை போட, நோஸ் கட் செய்யாது அவனோடு சேர்ந்து எமோஜியிலான கன்வர்ஷேசனை கோதையவள் வளர்க்க, அதையுமே ஔகத் அவளுக்கு பிடித்திருக்கிறது என்றே எண்ணிக் கொண்டான்.

கீத்துவை அவன் இன்று நேற்றென்று பார்க்கவில்லை. பத்து வருடங்களுக்கும் மேற்பட்டு அவளின் குணம் அறிந்தவன் அவன்.

ஆகவே, அவள் பிடித்தால் எப்படி பம்பிடுவாள், வெறுத்தால் எப்படி எகிறிடுவாளென்று டாக்டர் சார் நன்றாகவே நங்கையவளை கரைத்துக் குடித்து வைத்திருந்தான்.

ஆதலால், அழகன் அவனுமே அறிந்திடுவான் பனிமொழி அவளுக்குமே அவன்பால் விருப்பம்தானென்று.

இருப்பினும், அவன் எதிர்பார்த்திடவில்லை ஆசையோடு அவன் தொட வேண்டாமென்றவள் நிஜமாகவே அவனோடு இணைச்சேர்ந்திட விரும்பும் நிலையில் இல்லையென்று.

கூச்சங்கொண்டு அதுவும் நடு வீடென்பதால் தயங்குகிறாள் என்றுதான் நினைத்தானே ஒழிய, கட்டாயத்தின் பேரில்தான் முந்தி விரித்து பந்தி பரிமாறினாள் என்று அவன் ஒருபோதும் நினைக்கவில்லை.

அதைத்தாண்டி, தளிரியலின் ஆடை கிழித்தது, தொடை திருகியது எல்லாம் ஔகத்தின் காம காலியாட்டங்களில் அவன் விரும்பிடும் செயல்பாடுகளே.

ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி பாணி. படாஸ் மூச்சுக்காற்றால் சீண்டியே ஏந்திழையை உச்சம் தொட்டிட வைப்பான்.

ஔகத்தோ முரட்டுத்தனம் கொண்டே முற்றிழையை சொர்கம் அழைத்து போயிடுவான்.

எது எப்படியோ அனுபவிக்கும் கிருத்திகாவிற்குத்தான் சலிக்கா இன்பம், யாரோடு கூடினாலுமே.

மழைதான் சதி செய்ததென்றால், இருள் கவ்விய வீட்டில் மௌனத்திலேயே காரியம் சாதித்துக் கொண்ட இருவரையும் என்சொல்வது.

உச்சா போக எத்தனித்தவளோ, வாயை திறந்தாவது அவனிடத்தில் கத்தியிருக்கலாம். ஆனால், வஞ்சியவளோ அப்படி செய்யும் நிலையை கடந்திருந்தாள் உடல் ஆணவன் தொடுகைக்கு எதிர்வினை ஆற்றிட.

படாஸ் என்ற நினைப்பிலேயே ஔகத்தின் அத்து மீறல்களை கண்கள் மூடி சுகித்தாள் கீத்து.

கூடவே, மானினியவளின் விசும்பல் ஔகத்தின் செவியில் விழவேயில்லை. காரணம், சோபாவின் இடுக்கில் முகம் புதைத்துக் கொண்டவளோ, மூக்குச்சளியையும் அழுகையையும் பாவம் அந்த சோபாவிற்கே தாரம் வார்த்திருந்தாள்.

காவல்காரியாள் ஔகத்தை அடி புரட்டி எடுத்திருக்க முடியும். ஆனால், அப்போதும் அவ்விடத்தில் படாஸ் என்றொருவனின் மீது கொண்ட காதலோ போலீஸ்காரியின் கைகளை கட்டிப்போட்டது.

சுவர் கடிகாரம் சத்தம் போட்டு வெளிச்சத்தை கூட்ட, அலரவளின் காம முகம் காண விரும்பிய ஔகத்தோ, அதிர்ந்து போனான் கையில் தாங்கியவளின் வதனம் கண்ணீரும் கம்பளையுமாய் அவனை குற்றவாளி கூண்டிலேற்ற.

அங்கேயே துவண்டு போனது டாக்டரின் மனமும் ஆண்மையும். முயங்கலை நிறுத்தியவன் அரங்கேறியது கற்பழிப்பு என்று குற்ற உணர்ச்சிக் கொண்டான்.

கூனிக்குறுகினான் ஔகத், தாய்குலங்களின் ரியாக்ஷன் இவ்வுண்மை தெரிந்தால் எப்படியிருக்கும் என்றெண்ணி.

செய்த பாவத்திற்கு என்ன தண்டனையை கீத்து வழங்கப் போகிறாள் என்று தெரியாத பட்சத்தில் மன்னிப்பையாவது கேட்டு வைப்போம் என்று நினைத்தவனோ, காலில் விழாது, பாவையின் பாதங்களை கண்ணீரால் அர்ச்சித்து பற்றினான், எங்கே விடிந்தால் இதற்கு கூட வாய்ப்பளிக்காது போயிடுவாளோ மாயோள் அவள் என்று வருந்தி.

இதைத்தான் விதி என்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு யுவதி அவள் கெஞ்சினாள், ஔகத்தின் கால்களை இறுக்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா ரெண்டு உதையும் வாங்கி படாஸின் பெயர் சொல்லி.

இன்றைக்கோ, யாருக்கும் தெரியாது தெரியிழையின் காலை பிடித்து மன்னிப்பு கோருகிறான் ஔகத், செய்த தவறுக்கு முதற்கட்ட பிராய்ச்சித்தமாய்.


படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 79
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top