What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
232
அத்தியாயம்: 11

வார்த்தைகளுக்கு உயிருண்டு. இன்சொற்கள் நல்லதையே விதைக்கும். இழி சொற்கள் இம்சைகளையே கொடுக்கும்.

சில வேளைகளில் ஒரு வேண்டாம் பல வேண்டும்களுக்கு கூட வித்தாகும். விதிவிலக்கென்பது புரிவோருக்கு மட்டுமே. உணர்ந்திடுவர் மனதால் வேண்டும் வேண்டாம் என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை கொண்டவர்கள்.

ஒருதலை காதலெல்லாம் நரகத்தில் நிச்சயக்கப்படுவதுதான் நிதர்சனம் போலும். வலியுடன் கூடிய அன்பு பேரன்பாக ஊற்றெடுக்கும் நேரத்தில் பிரிவென்ற ஒன்று எப்படியும் இரு மனங்களுக்கு இடையினில் தோன்றி மலர்ந்த காதலை பஸ்பமாக்குவது வாடிக்கையான வேடிக்கையே.

கூடாத காதலின் தலையெழுத்தை அமைதியாக கடப்போரில் சிலர் மட்டுமே பின்னாளில் நல்லதொரு இல்வாழ் கிடைக்க சொர்கத்தை வாழ்கின்ற நாளில் அனுபவிக்கின்றனர்.

ஆனால், பலரோ மனம் ஒம்பாது கிடைத்த வாழ்வை ஏற்றுக் கொண்டு ஏனோ தானோ என்ற நிலையிலேயே இயந்திரமான வாழ்வை வாழ்ந்து மடிகின்றனர்.

எதுவாகினும் காலம் அதுபாட்டுக்கு நிக்காது ஓடிக்கொண்டேதான் இருக்கும், அனுதினமும் புது புது விடயங்களை இப்புவியில் அறிமுகப்படுத்தி.

*
இழக்கும் போது பேதையவள் அறியவில்லை இழந்து பெறப்போவது இனிமையான சுமையல்ல இழி பெயர் கொண்ட பத்து மாத பாரமென்று.

சரியாக ஒன்பதாவது மாதத்தில் காலடி எடுத்து வைத்திருந்தாள் விசாகா. பிரசவம் நெருங்க வாரத்திற்கு ஒருமுறை செக் ஆப் (check up) என்பது சாதாரணமே. யாருமற்ற அவள் ரீசனின் அக்கறையையும் வேண்டாமென்று ஒதுக்கிய பின்னர் அவளாகவே அவளைப் பார்த்துக் கொண்டாள்.

அழுகை வழமையாகினும் தன்னிலைக்கு தான் மட்டுமே காரணமென்பதை எப்போதுமே தாயாகி போன யுவதியவள் அவளுக்கு அவளே ஞாபகப்படுத்திக் கொள்வாள்.

எல்லை மீறும் ஆண்களை யாருமே குற்றம் சொல்வதில்லை. சேலை, முள் என்று எல்லா பழியையும் மொத்தமாய் தூக்கி போட்டு விடுவார்கள்; பெண்ணென்ற இளிச்சவாயின் மீது.

தமிழின் மருத்துவமனையிலேயே, அதுவும் அவன் கையாலேயேதான் இளம்பிடியாள் விசாகாவிற்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ரீனாவிற்கு பின் தமிழ் அதீதமாய் விழுந்து விழுந்து கவனித்த மதங்கி விசாகாதான்.

தங்கை இல்லாதவனுக்கு ஏனோ வெகுளி இவளின்பால் இனம் புரியா ஒரு பாசமே. அன்றைக்கும் அருணி விசாகா மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றிருந்தாள் காலை பத்து மணிவாக்கில்.

தங்கையானவளை பரிசோதித்த அண்ணனாகிய தமிழின் முகம் மாறுதல் கொண்டது கன்னி நங்கையின் ரிசால்ட் டாலடிக்க. வினவிய மாதுவிடம் சமாளித்தான் உண்மையை மறைத்த அண்ணனான டாக்டர் தமிழ், சி.எம். திறக்கும் நேரம் வந்தாயிற்று என்று மட்டும் சொல்லி.

கால்களை அகல விரிக்காதவளோ திருதிருவென விழிக்க, அவசர அவசரமாக அறையை விட்டு வெளியேறிய தமிழ்; அடுத்த கணமே பூவையவளை சிறைப்பிடித்தான் தனியறை ஒன்றில் அங்கேயே.

தாதியர்கள் மூலம் கட்டளைகளை பிறப்பித்து முடிந்தளவு விசாகாவின் பிரச்சனையை தீர்த்திட நேரம் தேடி அலைந்தான் தமிழ், இளையாளின் முகம் பார்க்காது; அவனின் அன்றைய பிஸி ஷெட்யூலில் (busy schedule).

மகப்பேறு மருத்துவன் அவன் பார்க்காத கேஸ்களா. இருந்தும், சொந்தம் என்றால் ஒரு நொடி மனம் பதைத்திடத்தானே செய்யும். ஆகவே, தலைப்போர அவசரம் என்றாகினும் பொறுமையாய் டீல் செய்திடவே நிந்தித்தான் தமிழ்.

மெடிக்கல் அசிஸ்ட்டன் ஒருத்தி கட்டிலில் கிடந்த விசாகாவிடத்தில் சிரித்தப்படி பேச்சுக் கொடுக்க, தாதியோ சத்தமின்றி அவளின் கையில் மயக்க ஊசியை சொருகினார்.

கர்ப்பிணி மயங்கி விழ, ஏற்ற வேண்டிய ட்ரிப்பை பெண்ணவள் கையில் துளையிட்டு ஏற்றி குளுக்கோஸ் நீரை; அவளுக்கும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவாக்கி வைத்தனர்.

*
மருத்துவன் தமிழோ அழைக்க வேண்டியவனை அழைத்தான் விசாகாவின் சீரியஸினை எடுத்துரைத்திட.

சிறு திருத்தம். அழைப்பு பார் ஓனர் மிஸ்டர் தீனரீசனுக்கு அல்ல மாறாக சீனப்பையன் வீருக்கு. மருத்துவன் தமிழ் அறிவான் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று.

யார் மூலமாக செய்தி போனால் சிறிதளவாவது புள்ளத்தாச்சியின் மீது கருணை கொண்ட மாற்றம் தெரியும் ஹீரோவிற்கு என்பதை கணித்தே தகவலை டிவோர்ஸ் லாயர் மூலமாய் ரீசனிடத்தில் சேர்த்திட நினைத்தான் தமிழ்.

ஆனால், என்செய்வது எல்லோரும் ஒரே மாதிரி இல்லையே. குறிப்பாய், ரீசன். அவன் மற்றவர்களை காட்டிலும் அவன் வரையில் கிராக்கி பிடித்தவனே.

விசாகாவின் இஷுவை (issue) சொல்லி, ரீசனின் பாசிட்டிவான (positive) பதிலை எதிர்பார்த்த வீருக்கு ஏமாற்றமே.

''மச்சான்.. நான் வெளியே இருக்கேன்டா..''

மனசாட்சியே இன்றி மெத்தையில் புரண்டு படுத்துக் கொண்டு சொன்னான் ரீசன்.

''எங்க இருக்கே..''

சத்தமே இல்லாமல் இருக்க, சந்தேகம் கொண்ட லாயரோ பார் ஓனரை குடைய ஆரம்பித்தான் கேள்வி கேட்டு.

''கேட்கறேன் தானே.. இப்போ எங்க இருக்கே..''

''ஆஹ்ஹ்.. இப்போ.. பார்லதான்.. ஆனா.. இன்னும் கொஞ்ச நேரத்துலே ஜே.பி. கிளம்பணும்..''

மவராசன் தீனரீசன் பச்சையாய் பொய்யுரைத்தான், முகத்தை தலையணைக்குள் புதைத்து.

''நீ எங்கையும் போக வேணாம்!! மூடிக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு (hospital) வா!!''

தடாலடியாய் வீர் சொல்ல, விருப்பமற்றவனோ சலிப்போடு ரிப்ளை செய்தான்.

''டேய்!! அதெல்லாம் வர முடியாதுடா!! நான் போயே ஆகணும்!! நல்ல ஜோக்கானே இடம்டா!! இந்த இடத்தை விட்டா.. இன்னொரு இடம் இதே மாதிரி அடிமாட்டு விலைக்கு.. அதுவும் ஜோகூர் சிட்டி நடுவுலே கிடைக்கறது ரொம்ப கஷ்டம்டா!!''

புது பார் விடயமாய் ஏற்கனவே ஒரு டீலிங் (dealing) ஓடிக்கொண்டிருப்பதென்னவோ உண்மைத்தான். ஆனால், அது ஒன்றும் இன்றைக்கே பேசி முடிக்க வேண்டிய மேட்டரல்லே ரீசன் சொல்வதைப் போல.

''நீ வாயிலே வடை சுட்டதெல்லாம் போதும்!! இன்னும் அரை மணி நேரத்துலே ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ரே!! போனை வை!!''

டிவோர்ஸ் லாயர் கிரிமினல் லாயர் கணக்காய் ரீசனுக்கு ஆர்டர் போட்டு போனை வைத்திட போக, சூடடேறி போன ரீசனோ அவன் பங்கிற்கு குதித்தான்.

''வர முடியாதுடா!!''

''எதெய்!! வர முடியாதா!! ஞாபகம் இருக்கட்டும்!! நீ பண்ண வேலைக்குத்தான் நான் உன்னே ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்றேன்!! என்னவோ உனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி பேசறே!!''

லாயரின் மண்டைக்கும் மணியடித்தது காரணகர்த்தா பொறுப்பின்றி பேச.

''அப்படிதான்டா பேசுவேன்!! ஏன்னா நீ யாருக்காக வர சொல்றியோ.. அவளே செருப்பாலே அடிக்காதே குறையா சொல்லிட்டா.. அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு!! அப்பறம் நான் என்ன மயிருக்கு அங்க வரணும்!!''

கடுப்பில் காட்டு கத்து கத்தினான் வளர்ந்த நெட்டையன் ரீசன் இடையில் டவலை இறுக்கி.

''டேய்!! டேய்!! பைத்தியக்காரன் மாதிரி பேசாதடா!! சண்டை போடறே நேரமாட இது!!''

காரின் ஸ்டேரிங் குத்து வாங்கியது வீரின் முஷ்டி மடக்கிய கையால். ரீசனின் முகத்தில் விழ வேண்டிய குத்து அது. ஜஸ்ட் மிஸ்ட் (just missed). கள்ளன் அவன் கண் முன் இல்லாது போக.

''பொம்பளே அவளுக்கே இவ்ளோ திமிருன்னா ஆம்பளை எனக்கிருக்காதா!!!''

பல்லை துலக்கி பிரஷை (brush) பறக்க விட்ட ரீசனின் வார்த்தைகளும் சூடாகவே வெளிவந்தன அவனின் வாயிலிருந்து.

''மடையனாடா நீ!! குழந்தை ஹார்ட் பீட் (heart beat) ரொம்ப ஹைப்பரா (hyper) இருக்கு!! பேபி வேறே சின்ன சைஸ்லே இருக்கு!!! தமிழ் உடனே ஆப்ரேஷன் (operation) பண்றதுதான் ரெண்டு உயிரையும் சேவ் (save) பண்றதுக்கான ஒரே ஆப்ஷன்னு (option) சொல்றான்னு சொல்லியும் மண்டே ஓடி மாதிரி பேசிக்கிட்டு இருக்கே!!!''

காரை வீட்டின் முன் பார்க் (park) செய்த வேகத்தில் கர்ஜித்தான் வீர்.

''ஆமா!! நான் மண்டே கிறுக்கு புடிச்சவன்தான்!! இப்போ என்னே அதுக்கு!!''

குளியல் அறை கதவு வாங்கியது ஒரு வாங்கு, ரீசனின் வார்த்தைக்கு ஏற்ப.

''என்னடா பேசறே நீ!! இந்த மாதிரி நேரத்துலே விசா பக்கத்துலே வேறே யாருடா நிக்க முடியும்.. உன்னே தவிரே!!''

மாடிப்படிகளில் ஏறிய வேகத்தோடு மூச்சிரைக்க வீர் மல்லுக்கட்டிட, மாங்கனிக்காக கோபம் கொண்ட முருகனின் பெயர் கொண்ட ரீசன் மட்டும் என்ன சளைத்தவனா; அவனும் காட்டினான் அவனின் கெத்தை சீனப்பையனிடத்தில்.

''ஏன் நீ நில்லேன்!! என்ன கேடு வந்ததாம்!! அவதானே சொன்னா.. உதவிங்கிற பேர்லே உபத்திரம் பண்ணே வேண்டாம்னு!! அப்பறம் என்ன இப்போ மட்டும்!!''

விசாகா குட்டி அன்றைக்கு நல்ல எண்ணத்தில் சொன்ன வார்த்தை என்னவோ குழந்தையின் தகப்பனின் மனசை வெகுவாகவே பதம் பார்த்திருந்தது. திருத்தக் கூடிய தவறில்லை அவன் செய்தது.

இருப்பினும், ஆணவன் முடிந்தவரைக்கும் தப்புக்கு பிராயச்சித்தம் செய்திட விருப்பினான். அதைக்கூட வீம்புக்காரி வேண்டாமென்று உதறித்தள்ளிட, கோபம் கொண்டவனோ இன்னும் அதை மறக்காது மனதில் வைத்திருந்தான்.

வார்த்தைகளின் வீரியத்தில் காயம் கொண்டவனின் கோபம் தனியாதிருக்க இப்போது அவன் டேர்ன் (turn) என்பது போல முரண்டு பிடிக்கிறான் நேரங்காலம் பாராது ரீசன்.

''டேய் அரைக்கிறுக்கா!! விசா ஒன்னும் உன்னே கூப்பிடலே!! தமிழ்தான் வர சொல்றான்!! ஒரு டாக்டரா பேஷண்டுக்கு (patient) சிசிரியன் (cesarean) செய்யறதுக்கு முன்னாடி புருஷன் சிக்னேச்சர் (signature) வேணும்!! உடனே குதிக்காதே நான் புருஷன் இல்லே.. அவே என் பொண்டாட்டி இல்லன்னு!! இது ஹாஸ்பிட்டல் ரூல் (rule)!! உன் பாஷையிலே சொன்னா.. விசாகா புள்ளைக்கு யாரு அப்பனோ அவன் வந்து சைன் (sign) போடணும்!!''

வீர் கடகடவென சொல்லி நிறுத்த, மயான அமைதியொன்று நிலவியதரீசனிடத்தில். குளித்து முடித்து வந்தவன் உடை உடுத்தி கிளம்பினான். ஆனால், எங்கென்றுதான் தெரியவில்லை.

''இங்கப்பாரு ரீசா.. எப்படி மனிதாபிமானத்தை நாமே மத்தவங்கக்கிட்டே எதிர் பார்க்கறோமோ அதே மாதிரி நாமும் கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்கணும்!!''

பளார் என்றோரறை ரீசனின் கன்னத்தில் விழுந்தாற்போன்றதொரு உணர்வு அவனுக்கு. வீரின் வார்த்தைகள் ரீசனின் நியாயமற்ற விதண்டாவாதத்தை கேள்விக்குறியாக்கியது.

''குஞ்சரியே குத்தம் சொல்லே தெரியுதுலே!! இப்போ நீ மட்டும் என்ன பண்றே!! பண்ண தப்புலருந்து கழண்டிக்கத்தானே பார்க்கறே!! அப்பறம் எதுக்குடா உனக்கு உத்தமன் வேஷம்!!''

நீண்ட பெருமூச்சு கொண்ட ரீசனுக்கு இருகாதுகளிலிருந்தும் புகையே வந்து விட்டது, வீர் போட்டு தாக்கிட.

''நான் அம்மாவே வர சொல்றேன்..''

வீரின் வாயை அடைக்க, பார் ஓனர் செக் போஸ்ட் போட; செக் மேட் வைத்தான் லாயர் விடாது.

''அம்மாவா விசாவே கர்ப்பமாக்கனாங்கே!!''

''டேய்!!''

தலை சீவும் சீப்பு ராக்கெட் வேகம் கொண்டது. பல்லை கடித்து நின்ற ரீசனோ, கண்ணாடியின் ரசம் தோற்கும் அளவுக்கு தன்னைத்தானே முறைத்து நின்றான்.

''சரிடா விட்ரு!! நான் இதுக்கப்பறமும் உன்னே ஃபோர்ஸ் (force) பண்ணே விரும்பலே!! பாவம்.. அந்த பொண்ணு!! அவே தலையெழுத்து!! தனியா கிடந்து சாகணும்னு!!''

வீர் கடுப்பாகினான் என்பதை தாண்டி இனி ரீசனிடத்தில் பேசி புரோஜனம் இல்லை என்று உணர்ந்துக் கொண்டான். ஆகவே, அழைப்பை துண்டிக்க விரும்பினான்.

''வீர்.. நான்தான் அம்மாவே..''

''வேணாண்டா.. அம்மாதான் வரணும்னா.. நான் அம்மாக்கே கோல் (call) பண்ணிருப்பேன்.. பரவாலே.. நான் தமிழ்கிட்டே சொல்லிடறேன்.. கன்செண்ட் ஃபோர்ம் (consent form) தானே.. தமிழ் பார்த்துப்பான்..''

''மச்சான்.. நான்..''

''ரீசன் பிளீஸ்!!!''

''வீர்..''

''மச்சான்.. நேத்து வரைக்கும் நான் குஞ்சரி கேஸ்லே உனக்காக பீல் (feel) பண்ணேன்.. ஆனா இப்போ.. குஞ்சரிக்கு இப்படி ஒரு புருஷனான்னு நினைச்சு ரொம்ப வருத்தப்படறேன்டா!!''

''வீர்!!''

ஆவேசம் கொண்டு அலறினான் தீனரீசன்.
''ஏய்!! சும்மா நிறுத்துடா!! பொறக்க போறே அந்த பிஞ்சு குழந்தைக்கு உன்ன மாதிரி ஒருத்தன் அப்பனா இருக்கறதை விட அப்பன் பேர் தெரியாத குழந்தையாவே அது இருந்திடறது மேல்!!''

என்ற லாயர் படாரென்று போனை வைத்தான்.

ரீசனோ பேயறைந்தவனை போல ட்ரஸிங் டேபிளின் விளிம்பினை இறுக்கி பிடித்து நின்றிருந்தான்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top