What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் பதிமூன்று

தனியார் மருத்துவமனை நடைபாதை


''ரீசன்!!''

கணீரென்று அழைத்தான் தமிழ் திரும்பி நின்றிருந்தவனை.

''ஹாய் தமிழ்..''

என்றப்படி நீட்டினான் கையை ரீசன், மரியாதை நிமித்தமாய் மருத்துவன் தமிழை நோக்கி கைகுலுக்கிட.

மனசு கேட்காமலெல்லாம் ஒத்தடை குச்சியவன் மருத்துவமனை வந்திடவில்லை. எங்கே வீர் பையன் கடுப்பை டிவோர்ஸ் கேஸில் காட்டி கவுத்து விட்டிடுவானோ என்றொரு பயம்தான்.

அதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லையென்றாலும், சீனப்பையனின் கோபத்தை சம்பாரித்து அவனின் நட்பை இழந்திட விருப்பமும் இல்லை தீனரீசனுக்கு.

தமிழோ காரியக்காரன் நீட்டிய கையை ஒரே இழு.

''தமிழ்''!!! என்ன பண்றீங்க!!! தமிழ்!!''

ரீசனின் அலறல் அமைதியான மருத்துவமனையின் விடியற்காலை பொழுதை அசைத்திடவில்லை.

''தமிழ் பிளீஸ்!! விடுங்க கையே!!! எங்க இழுத்துக்கிட்டு போறீங்க என்னே!! தமிழ்!! சொல்லுங்க தமிழ்!!''

மனசாட்சியின்றி பேசி வீரிடத்தில் வீம்பு பண்ணவனின் பருப்பு என்னவோ தமிழிடத்தில் வேகவேயில்லை.

''ஐயோ!! தமிழ்!! பிளீஸ்!! என்ன பண்றீங்க நீங்க!!''

குச்சி விளக்குமாறு சைஸான ரீசனின் கூப்பாடை கண்டுக்காத தமிழ், அவனின் பலங்கொண்ட அண்டர்டேக்கர் கையால் தரதரவென்று இழுத்து போய்; தாலி கட்டிடாத விசாகா புருஷனை தள்ளி விட்டான் அறுவை சிகிச்சை அறைக்குள்.

''தமிழ்!!''

அலறினான் ரீசன் மண்டை டமாரென்று ஸ்லைடிங் கதவில் இடிக்க. அது அறுவை சிகிச்சை அறையின் முதல் கதவு கொண்ட வளாகம். நல்லவேளை அங்கு யாருமில்லை.

சர்ஜிக்கல் ப்ளேடை (surgical blade) விரலில் உரசி ரீசனை சனிப்பார்வை பார்த்த தமிழோ, அவனைக் கடந்து ஆப்ரேஷன் நடக்கின்ற பக்கம் அடிகளை வைத்தான்.

மருத்துவனின் கையில் ப்ளேடையும் அவன் லுக்கையும் கவனித்த காரசேவா ஹீரோவோ நடையைக் கட்டினான் வாயை மூடிக் கொண்டு தமிழின் பின்னால்.

பாடம் புகட்டிடவே நினைத்திருந்தான் தமிழ், முரண்டு பிடித்த முருக பக்தனுக்கு; ஆப்ரேஷனை நல்லப்படியாக முடித்த பிறகு. ஆனால், குஞ்சரி மணாளன் தானாகவே வந்து இப்படி வசமாய் சிக்கிடுவான் என்று தமிழ் நினைத்திடவில்லை.

ஆகவே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரீசனை இன்றைக்கு வைத்து செய்திட வேண்டுமென்று தீர்க்கமாய் முடிவெடுத்து விட்டான் மகப்பேறு டாக்டரவன்.

''எங்க போயிட்டிங்க தமிழ்!! சீக்கிரம்!! சீக்கிரம்!! எபிடுரல் (epidural) கொடுத்து பத்து நிமிஷமாச்சு!!''

பிடியாட்ரிக் மருத்துவச்சி பாப்பு மென்மையாய் கணவனிடத்தில் கடுமையை காட்டிட, கண்ணடித்தவனோ பல்லிளிக்கா இதழோர இளிப்பு கொண்டு சர்ஜரிக்கு தயாராகினான்.

ரீசன் ஆப்ரேஷன் அறையை பார்த்திருக்கிறான், கீத்து குட்டி பிறக்கையில்; குஞ்சரிக்கு நார்மல் டெலிவரி (normal delivery) நடக்கையிலே.

ஆனால், இப்போது ஏன் அதே போன்றொரு அறையில் நிற்கிறான் என்று ஆணவனின் மூளை யோசித்தது குழப்பம் கொண்டு. காரணம், விசாகாவிற்கு சிசிரியன் என்றுதான் வீர் போன் கோலில் சொல்லியிருந்தான்.

நெட்டையனின் மண்டையோ கூட்டி கழித்து கேள்விக்கு விடை தேடிட, பார் ஓனரின் வாயோ பொறுக்க முடியாது ஓப்பனாகி (open) விட்டது.

''தமிழ்.. விசா..''

அவன் இழுக்க, முழு சர்ஜன் கெட்டாப்பிலிருந்த தமிழோ விழிகளால் ரீசனை கொத்துக்கறி போட்டு சொன்னான்.

''நான் வீர் இல்லே.. தமிழ்!! பேச்சு வந்தது.. ஸ்ட்ரெச்சர்லையே ஒரே அடி!! மண்டே பொளந்திடும்!! இந்த ரூம்பே விட்டு போறே வரைக்கும் நான் மட்டும்தான் பேசுவேன்!!''

அழுத்தமாய் சொன்ன தமிழ் அவனை வெறித்த தீனரீசனை எச்சரித்தான் கூரிய பார்வைகள் கொண்டு. ஹீரோவோ அதிர்ச்சியில் வாயடைத்து கிடந்தான்.

*
விசாகாவையோ பக்கத்து அறையிலிருந்து தள்ளிக் கொண்டு வந்தார்கள் தாதியர்கள்; ஆப்ரேஷன் நிகழப் போகும் அறைக்கு.

இடைக்கு கீழே மரத்து போய் கிடந்த பெதும்பையோ மூடிக் கிடந்த கண்களை மெதுவாய் திறந்தாள். சுற்றத்தாரின் பேச்சு காதில் நன்றாகவே விழுந்தது சிசிரியேனுக்கு தயாராகி இருந்தவளுக்கு.

ஒருநாளும் நினைத்ததில்லை விசாகா அவள் வாழ்க்கை இப்படி ஆகுமென்று. அடிக்கு மேல் அடி ஆடவளவளுக்கு. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இளம்பாவை அவளின் உயிர் வாழும் ஊன்றுகோல் இன்றைக்கு பெற்றெடுக்க போகும் முத்தே.

ஆப்ரேஷன் அறைக்குள் யாரோ ரீசனின் பெயரை உச்சரிக்க, குரல் ஒலித்த திசை நோக்கி திருப்பிட ஆர்வம் கொண்டாள் பேதையவள். மெல்லமாய் தலையை வலப்பக்கம் திருப்பி விலோசனங்களை சுழட்டினாள் பயந்து போயிருந்தவள்.

ஆறுதல் சொல்லவோ கையைப்பிடித்து நெற்றி முத்தம் வைத்து நம்பிக்கை கொடுத்திடவோ பாவை அவளுக்கென்று யாருமில்லை.

பக்கமிருக்க வேண்டியவனோ பக்கம் பக்கமாய் வீரிடத்தில் வசனம் பேசி பல மணி நேரங்கள் கழிய, சுயநலமாய் யோசித்தே வந்து சேர்ந்திருந்தான் வயிற்றை அறுக்க சம்மதம் கொண்டவளை கண்டிட; கடமைக்காய்.

வீங்கிய திட்டிகள் ரெண்டும் ரீசனை பார்த்திட, அவனுக்கோ அங்கு வந்த காரியம் சுலபமாய் முடிந்ததில் ஆனந்தமே.

காத்திருந்து காணவிருந்தவளை கையோடு இழுத்து வந்து உடனடியாக சந்திக்க வழிவகுத்த தமிழ் செல்வனுக்கு நன்றி சொல்லி, கூடவே குழந்தையை பிரசவிக்க போகும் காரிகையிடத்திலும் ஒப்புக்கு ரெண்டு வார்த்தை பேசி இடத்தை காலி செய்திடவே நினைத்தான் ஒத்தடைக்குச்சியவன்.

''எதையும் யோசிக்காத விசா.. ரிலாக்ஸ்சா.. கூலா இரு.. பையன் நல்லப்படியாய் பொறந்திடுவான்.. சிசிரியேன் ஒன்னும் நார்மல் டெலிவரி மாதிரியெல்லாம் கிடையாது.. வலியே இருக்காது.. ரொம்ப சுலபமா குழந்தை பிறந்திடும்.. சரியா.. நீ கவலையேதும் படாதே.. நான் கிளம்பறேன்.. டேக் கேர்.. (take care)..''

ரீசன் என்னவோ அனுபவசாலியாட்டம் கலங்கிப் போய் கிடந்த காந்தாரிக்கு ஆறுதல் என்ற பெயரில் இன்னும் பீதியை ஏற்றி விட்டு நகர்ந்திட போக, அவனை ஓரப்பார்வை பார்த்த தமிழோ நறுக்கென்று குறுக்கிட்டான்.

''ஆமா!! இவரு பெரிய சி-செக்ஷன் (c- section) எக்ஸ்பெர்ட் (expert)!! ஆயிரம் ஆப்ரேஷன் பார்த்துட்டாரு பாரு!!''

தமிழ் கழுவி ஊற்றியதில், ரீசனின் வாய் கோணியது கடுப்பில்.

ஆனால், இனி வாழ்நாள் முழுக்க வெட்டு கொண்ட அடிவயிற்றை சுமந்திட போகும் தெரிவையோ அவளின் அவல நிலையை நினைத்து மனதுக்குள்ளேயே புழுங்கி வெம்பினாள்.

ரீசனின் முகத்தை கண்ட மாத்திரத்தில் நினைத்தாள் நாயகியவள், தினா அவன் அவளுடன் இருப்பான் என்று. ஆனால், எண்ணியவளின் நினைப்பில் வார்த்தைகள் கொண்ட தீயை அள்ளி கொட்டினான் தினரீசன்.

''தேங்கியூ தமிழ்.. சிசிரியேன் ரூம்குள்ளே என்ன அலாவுட் (allowed) பண்ணதுக்கு.. விசாவே பார்த்துட்டேன்.. பேசிட்டேன்.. நான் கிளம்பலாமா இல்லே.. வெயிட் பண்ணணுமா.. எத்தனை ஹவர்ஸ் எடுக்கும் சி- செக்ஷன்..''

பவ்வியமாய் பார் ஓனர் வாக்கியங்களை தொடுக்க, நக்கல் சிரிப்பு கொண்ட மகப்பேறு மருத்துவனோ கிண்டலாய் சொன்னான்.

''ரீசன் இந்த ரூம் விட்டு போக முடியும்னு நான் சொல்லவே இல்லையே!!''

கண்களை ரீசன் உருட்டிட, தமிழோ தொடர்ந்தான்.

''Let start..''
(சரி வாங்க.. ஆரம்பிக்கலாம்..)

என்றப்படி மருத்துவனவன் ஆரம்பித்தான் விசாவின் வயிற்றை கூறு போட்டிட.

''அங்க நின்னா எப்படி.. இங்க பக்கத்துலே வந்து நின்னாதானே நல்லா தெரியும்!!''

என்றப்படி தமிழ் ஏளன தொனி கொள்ள, ரீசனின் முகமோ இறுகிப் போனது.

வலியேதும் இல்லை விசாவிற்கு சர்ஜிக்கல் ப்ளேடால் தமிழ் பெண்ணவளின் வயிற்று சதை அடுக்குகளை ஒவ்வொன்றாய் வெட்டிக் கொண்டே போக.

ஆனால், கர்ப்பிணியின் மனமோ கைகளைக் நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்டு சிலையாய் நிற்பவனின் அரவணைப்பிற்காக ஏங்கியது.

ரீசனின் நினைப்பெல்லாம் குஞ்சரியே நிரம்பியிருந்தாள்.

எந்த வாயால் அவனை உதாசீனப்படுத்தினாளோ, அதே வாயால் கதறிட தோன்றியது விசாவிற்கு; அவளுக்கு சொந்தமில்லா ரீசனின் பெயரை சத்தம் போட்டு சொல்லி.

விசும்பியவளின் நிலையைப் பார்த்த அனஸ்தீஸியா டாக்டருக்கு அல்லு விட்டது.

''Visa are you in pain!!''
(விசா.. உங்களுக்கு வலிக்குதா!!)

பதறி போய் மருத்துவர் கேட்க, தலையை இல்லையென்று ஆட்டிய ஆடவளோ; பரிதாபமான நிலையில் பொய்யான புன்னகையை சிந்தினாள் டாக்டரவன் மனசு நிம்மதி கொள்ள.

பேஷண்டாகிய விசாவின் வயிற்றின் ஆறாவது அடுக்கு சதையை வெட்டி முடிக்கையில் தலையை திருப்பி பார்த்தான் தமிழ் கண்டுங் காணாதவனாட்டம் நின்றிருந்த ரீசனை.

குஞ்சரி புருஷனின் விலோசனங்கள் ரெண்டும் என்னவோ விசாவைத்தான் வெறித்திருந்தது. ஆனால், எதையோ தீவிரமாய் யோசித்தவன் நனவை எப்போதோ மறந்திருந்தான்.

பெருமூச்சு கொண்ட தமிழோ, கனவில் மிதந்துக் கிடந்த ரீசனை மேலே கீழே அளவெடுத்து கடுப்பாகியதுதான் மிச்சம். கோணியவனின் வாயையும் முகம் கொண்ட கோபத்தையும் மாஸ்க் மறைத்து விட்டது.

மனதுக்குள்ளேயே ரீசனை காரி துப்பிய தமிழோ, சினத்தை ஓரந்தள்ளி; ஆப்ரேஷனில் கவனத்தை செலுத்தினான்.

தமிழ் எப்போதுமே அறுவை சிகிச்சைகள் செய்கையில் நோயாளிகளோடு கதைப்பது வழக்கம். அதாவது, என்ன செய்கிறான் என்பதை மேலோட்டமாய் சொல்லி அவர்களை ஸ்ட்ரெஸ் இல்லாமல் கூலாக வைத்திருப்பான்.

பிரகாஷிடமிருந்து கற்றுக் கொண்ட வித்தை எனலாம்.

''விசா.. இப்போ நான் உன்னோடு யூட்ரஸ் (uterus) தோலே மெலிசான கோடாலே வெட்டுறேன்..''

தமிழ் சொல்லிட, கர்ப்பிணியின் மிழிகளோ அகல விரிந்தன. உடலில் அல்ல, மாறாக மனதில் சிறு நடுக்கம். திட்டிகள் திரண்டு வழிய, வலது பக்கமாய் தலையை திருப்பி கையை நீட்டினாள் விசா கண்ணெதிரே குத்துக்கல்லாட்டாம் நின்றிருந்தவனை நோக்கி.

அழைக்காது தேம்பியவளின் அழுகை என்னவோ ரீசனின் மனசை பிசைந்தது போலும், கனவுலகிலிருந்து விடை பெற்றவனோ; அழைத்தவளின் முகம் பார்த்தும் பார்வைகளை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டான். அவன் மனம் இன்னும் இறங்கவில்லை.

''இன்னும் பத்து நிமிஷத்துல உன் பையனே நீ பார்க்க போறே விசா..''

தமிழ் சிரித்துக் கொண்டே சொல்ல, விசாவோ மைவிழிகள் கரைய புறக்கணித்து ஒதுங்கி நின்றிருந்தவனின் முகம் பார்த்து அம்பகங்கள் மூடி குலுங்கி கதறினாள்.

மதங்கியின் உடல் குலுங்க, தமிழோ நடக்கும் நாடகத்தை உணர்ந்து இருக்கரங்களாலும் அகல விரித்த கர்ப்பப்பை நோட்டமிட்டு சொன்னான்.

''அட!! ஹீரோ சார் எங்கே போனீங்க!! ஆளே காணோம்!!''

முகத்தை மூடி அழுதவளின் அழுகை ஒரு கணம் நின்றுப் போக, மூன்றாவது மனுஷனாட்டம் நின்றிருந்தவனோ சடீரென்று கேட்டான் விசாவின் ஸ்ட்ரெச்சரை நெருங்கி.

''தமிழ் என்னாச்சு!! பையன் எங்கே!!''

பதறியவனின் குரலில் கொண்ட தவிப்பை ஜாடை பார்வையால் துடைத்து போட்ட தமிழோ, கிண்டலாய் கேட்டான்.

''என்ன திடீர் பாசம்!!''

''பிளீஸ் தமிழ் சொல்லுங்க!!''

தகப்பனோ தவித்தான் கெஞ்சி, மகப்பேறு மருத்துவன் தமிழ் செல்வனிடத்தில்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 13
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top