- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் பதினான்கு
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
ரீசனின் தவிப்போ மருத்துவன் தமிழ் செல்வனுக்கு சிரிப்பை வரவழைத்தது. குஞ்சரி புருஷனின் கரங்கள் அவனறியாது பற்றி இறுக்கியது விசாவின் வலக்கர உள்ளங்கையை.
''கேட்கறந்தானே!! என்னாச்சு!! பையன் எங்கே!!''
ரீசனின் அதட்டலுக்கு மசிய தமில்ழென்னே குஞ்சாரியா இல்லை விசாகாவா. காது கேட்காதவனை போல காரியத்தில் கண்ணாயிருக்க டாக்டர் பையன், அச்சத்தில் உழன்று கிடந்த வனிதையோ விசும்பி அழ தொடங்கினாள்.
''தினா.. அண்ணா என்ன சொல்றாரு தினா.. எனக்கு ரொம்ப பயமா இருக்க தினா!!''
ஆணவனின் முகத்தை ஏறெடுத்து அவன் கரங்களை நம்பிக்கையோடு பற்றி ஒப்பாரி வைத்தாள் பெண்டு அவள், பிரச்சனைக்கு தீர்வு கண்டிடுவான் தினா என்று.
''ஆளே காணோம்னுதானே சொன்னேன்.. வேறேதாவது சொன்னேனா..''
என்றப்படி தமிழ் ஒரு முறைப்போடு மீண்டும் விசாவின் கருப்பையில் கையை விட்டு துழாவிட ஆரம்பித்தான், குட்டி ஹீரோவை தேடி.
தமிழின் முறைப்பில் ரீசனின் முகமோ கடுங்காப்பியாய் மாறிப்போக, கண்மை கரைந்தோட ரீசனின் கடைக்கண் பார்வையாவது கருணைக் கொண்டு அவள் மீது படர்ந்திடாதா என்று ஏங்கினாள் நலிந்த நங்கையவள்.
''தினா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தினா!! பாப்பாக்கு எதுவும் ஆகிடாதுலே!!''
பயம் கொண்ட கலக்கத்தில் கோதையவள் கதறிட, கருவிற்கு காரணமானவனோ என்ன பேசுவதென்று தெரியாது ஊமையாகி நின்றான்.
''டேய்!! சின்ன வாண்டு.. எங்கடா சொருகிக்கிட்டு இருக்கே!!! மாமாக்கு டிமிக்கி காட்டுறியா!! வெளிய வாடா!!''
தங்கை மகனை உரிமையோடு சொந்தங் கொண்டாடி அழைத்தப்படி தமிழ் அவன் வேலையில் மும்முரமாகவே இருந்தான்.
மடவரல் விசாகாவோ மாற்றாளின் கணவன் முகம் பார்த்து சொன்னாள் தேம்பியவாறு.
''தினா.. நான் முன்னாடி பண்ண தப்பெல்லாம் மன்னிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.. அதுக்காக நம்ப பை..''
ரீசனின் உயிரால் உருவான சிசுவிற்கு அவனே தந்தையென்று மானினியவள் மொழிந்து, பின் நிறுத்தினாள் பாதி வார்த்தையில்; அவன் கண்டிப்பாய் விதண்டாவாதம் செய்வான் என்றுணர்ந்து.
''இல்லே!! இல்லே!! என் பையனே.. தனியா விட்டுடாதீங்க!!''
சுருக்கென்றது ரீசனுக்கு மாயோளின் பிரிவினையில்.
''உங்க கூட கூட்டி போய் வளர்க்க முடியாட்டியும்.. ஏதாவதொரு ஆசிரமத்துலே சேர்த்து அவன் நல்லா படிக்க உங்களாலே முடிஞ்ச உதவிய பண்ணுங்க.. அதுப்போதும்!!! அப்படியே கை கழுவிடாதீங்க தினா!!''
பேசிக் கொண்டிருந்தவளின் வாய் வார்த்தைகள் குளறின. வாய் ஓரம் ஒதுங்கி கொள்ள தொடங்கியது.
''என்ன பேசறே விசா!! பைத்தியமா உனக்கு!!''
இருக்கும் இடம் மறந்து ரீசன் மனைவியாகாதவளை கடிந்துக் கொள்ள, நயாகரா நீர்வீழ்ச்சி தோற்று போகும் அளவில் கண்ணீரை வழிய விட்ட வாடிய தாமரையோ; இருக்கரங்கள் கொண்டு ஆணவனின் கையை பற்றி மன்றாடும் தொனி கொண்டாள்.
''என் மேலே உள்ள கோபத்தை.. என் பையன் மேல காட்டிடாதீங்க தினா..என்னதான் இருந்தாலும் இவனும் உங்க ரத்தம்தானே.. அவனை அம்போன்னு விட்டுடாதீங்க தினா!! நான் செத்துட்டேன்னு அவனுக்கு புரியவே லேட்டாகும்.. அதுக்காக அவனை அடிச்சிலாம் காயப்படுத்திடாதீங்க தினா!!''
''வாய மூடு விசா!! அடிச்சு பல்லு கில்லெல்லாம் பறக்க விடப்போறேன் பாரு!!''
அல்ப சிசிரியேனுக்கு உயிரே போயிடும் ரேஞ்சுக்கு விசாகா படம் ஓட்டுவதாய் எண்ணினான் ரீசன்.
உயிரையே பணயம் வைத்து ரீசனுக்கு ஆண் வாரிசை பெற்று தரப்போகும் தாரகையின் சாதாரண ஸ்ட்ரெஸ் நிலையினை கூட சமாளிக்க முடியாது அவளை திட்டுபவனை பார்த்து கொதித்து போனாள் தமிழின் பத்தினி.
பல்லை நறநறவென்று பொண்டாட்டியவள் கடிக்க, அவர்களின் பரீட்சியமான விசில் சத்தம் கொண்டு பாப்புவின் கவனத்தை ஈர்த்த கணவனோ தலையை ஆட்டினான் தலையிடாதே விட்டுடு என்று சைகையில்.
துணைவியவள் விடாது விழிகளால் வேள்வி கொள்ள மருத்துவன் தமிழை, அம்பகங்களை மூடித் திறந்த மகப்பேறு டாக்டரோ; தான் பார்த்துக் கொள்வதாய் அதே சைகை பாஷை கொண்டு பொஞ்சாதியை சமாளித்தான்.
சலிப்பு கொண்ட பீடியாட்ரிக் டாக்டர் பாப்புவோ தற்சமயத்திற்கு எரியும் அனல் மனதை ஆறப்போட, வெகு வேகமாய் நடையைக் கட்டினாள்; அங்கிருக்கும் மற்றொரு அறை நோக்கி.
''தினா நான்தான் யாருமில்லாத அனாதையாயிட்டேன்.. என் பையனுக்கும் அந்த நிலைமை வந்திட கூடாது.. அதுக்காகவாவது அவனை வளர்க்கற உதவியை மட்டும் நீங்க பண்ணிடுங்க பிளீஸ்..''
அழுத வாக்கில் அரிவையவள் சொல்லிட, கடுப்பில் கோபம் கொண்ட ரீசனோ தரையை உதைத்தான் காலணி கால் கொண்டு உதட்டை கடித்து; காரிகையை முறைத்து.
''ஒரு வயசு வரைக்கும்தான் அவனுக்கு உங்க ஆதரவு தேவைப்படும் தினா.. அதுவரைக்கும் சரி.. அதுக்கு அப்பறமும் சரி.. அவனோட அப்பா நீங்கதான்னு ஒருக்காலும் பையன்கிட்ட சொல்லிடாதீங்க!!! நானும் சரி.. என் பையனும் சரி.. யாருக்கும் பாரமா இருக்க விரும்பலே!! நாங்க உங்கசந்தோஷத்தை கெடுக்க மாட்டோம்!!!''
காது கொடுத்து நடக்கின்ற தம்பதியற்றவர்களின் கான்வெர்சேஷனை (conversation), விசாகாவின் வயிற்றை மெது மெதுவாய் வெட்டியப்படி கேட்டுக் கொண்டிருந்தான் தமிழ்.
''முருகா!! ஏன் விசா இப்படி கண்டத்தையும் பேசி சம்பந்தமில்லாமே உளரே!! இது வெறும் ஒரு சாதாரண பேபி ஆப்ரேஷன்தான்!! ஒன்னும் பெரிய மேஜரான ஹார்ட் ஆப்ரேஷன்லாம் கிடையாது!! இதுக்கு போய்..''
தலையில் ரீசன் அடித்துக் கொள்ள, ஆணவனின் அலட்சியமான வார்த்தைகள் கொண்ட வீரியத்தில் விசாகாவிற்கோ செத்துவிட தோன்றியது.
ரணம் கொண்டவளின் மனமோ இச்சூழ்நிலையிலும் அவளை வைபவனை பார்த்து கேட்க சொன்னது ஒரு கேள்வி. ஈரமில்லா நெஞ்சான் அவன் விழிகள் நோக்கி ஆறாய் பெருக்கெடுத்த அழுகையோடு செருப்படியாக கேட்டாள் விசாகா குட்டி.
''குஞ்சரியா இருந்திருந்தா தாங்கு தாங்குன்னு தங்கிருப்பீங்க தாலி கட்டினே பொண்டாட்டிங்கறதுனால!!! நான் வெறும் படுக்கைக்கு மட்டுமே வந்தவங்கறதுனாலதானே என்னே தேவடியா மாதிரி நடத்தறீங்க!!''
''விசா!!''
அவ்வளவெல்லாம் ரீசன் யோசிக்கவில்லை. கடுப்பு அவனுக்கு. முருங்கை மரம் ஏறிய வேதாளம் சீக்கிரத்தில் ஆத்திரத்தை தணித்துக் கொள்ளாது. ரொம்பவே சுயநலமிக்க ஆறறிவு கொண்ட வேதாளமே தீனரீசன்.
அலறினான் கையாய் ஓங்கியவன். கண்களை பயத்தில் மூடிக் கொண்ட கோதையோ தலையையும் சேர்த்தே வலப்பக்க தோளில் சாய்த்து மறைத்துக் கொண்டாள்.
*
''ரீசன்!! எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு!! நான் ஏற்கனவே சொன்னேன்.. இங்க நான் மட்டும்தான் பேசணும்னு!! இதுக்கு மேலே ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்துச்சு.. நான் பேச மாட்டேன்!! இந்த ப்ளேடுதான் பேசும்!! அப்படியே தொண்டையிலே சொருகிடுவேன்!!''
சொன்ன வேகத்தோடு திரும்பினான் தமிழ் பாதியில் விட்ட வேலையை பார்த்திட. அங்கிருந்தோருக்கு நன்றாகவே தெரியும் தமிழின் ஸ்டைல், ஆகவே, யாரும் பெரிசாய் ரீயாக் பண்ணிடவில்லை.
பாவம் ரீசன். அவனுக்குத்தான் தெரியாது, இன்முகமான டாக்டர் தமிழ் செல்வனுக்கு இன்னொரு டெரர் முகமும் இருக்கிறதென்று.
இண்டியூஸான நார்மல் டெலிவரி என்று ஆரம்பித்து பின் ஆப்ரேஷனில் வந்து நிற்க; குழந்தை வயிற்றிலேயே மரணித்திடும் என்ற கூற்றோடு ரீசனின் இதயமற்ற வார்த்தைகள் தந்த அதீத வலியை எதிர்கொள்ள முடியாது திணறினாள் பாவப்பட்ட விறலியவள்.
உணர்ச்சி பொங்க குமுறியவளின் ரத்த அழுத்தமோ டக்கென்று கூடிப் போனது.
செம்புனல் ரீடிங் (reading) பீப் சவுண்டோடு (beep sound) பீதியைக் கிளப்பிட, மானிட்டரை ஓரக்கண்ணால் பார்த்த தமிழோ அலறினான்.
''faster!!!''
(சீக்கிரம்!!!)
ஜூனியர் மருத்துவர்களும் தாதியர்களும் அதற்கு முன்பே தேவையானதை தயார் செய்தப்படிதான் இருந்தனர். தமிழின் அலறலில் அனைவரும் ராக்கெட்டின் சுறுசுறுப்பு கொண்டனர்.
எகிறி பாய்ந்த குருதி வீச்சின் விகிதத்தில் மதங்கியின் கண்ணேல்லாம் மேலேறி சொருகி கொள்ள, ரீசனை ஓரந்தள்ளிய ஆப்ரேஷன் குழுவே அவர்களின் பணியை செய்திட ஆரம்பித்தனர்.
நடப்பது புரியாது நின்றவனே, தமிழ் சர்ஜரி செய்துக் கொண்டிருப்பதையே மறந்து கேள்வி கணைகளை தொடுத்தான்.
''என்னாச்சு தமிழ் விசாக்கு!! சொல்லுங்க தமிழ்!!''
மதிக்கவில்லை தமிழ், குழந்தையின் அப்பனை. அதே வேளையில், பொஞ்சாதியில்லா விசாவின் உடலோ வலிப்பு வந்தாற்போல வெட்டி வெட்டி இழுத்தது.
''விசா!! விசா!!''
முதல் முறை மனம் வந்து அவனாகவே துடித்தலறினான் ரீசன் வஞ்சினியின் நிலைக் காண முடியாது.
''தமிழ்!! ஏதாவது பண்ணுங்க தமிழ்!! விசா!!''
அலரவளின் முகத்தை இருக்கரங்களுக்குள் அடக்கி இறுக்கியவன், கண்ட காட்சியில் மரணித்துதான் போனான் நொடியில்; முகம் என்னவோ குஞ்சரியை ஞாபகப்படுத்திட.
''sir.. please..''
(சார்.. ப்ளீஸ்..)
தாதி ஜோலியை பார்த்திட, ரீசனை ஓரம் ஒதுக்க; அவனோ பொறுமையில்லாது பொங்கினான்.
''ஏய்!!''
என்ற ரீசனின் ஆவேசமான குரல் மருத்துவன் தமிழின் காதை கொய்யென்று ஆக்கிய போதிலும், முதல் முறை கடுப்பை காட்டிடாமல் ஒளிந்து விளையாடும் குட்டி பையனை தேடுவதிலையே முனைப்பைக் காட்டினான் டாக்டர் சார்.
தமிழ் செல்வனை பொறுத்த வரை அவனிருக்கும் இடத்தில் அவன் மட்டுமே ராஜா. இந்த அதட்டல், உருட்டல், மிரட்டலெல்லாம் அவன் மருத்துவமனையில் அவன் பின்பற்றிடாத தனி ரூல்ஸ்களே.
வஞ்சியின் வெட்டியிழுத்த இடப்பக்க உடல் அங்கங்கள் ஒரு பக்கமாய் போயின. இடக்கன்ன சதை கொஞ்சமாய் கீழிறங்க கலங்கிய விழிகளோடு பெண்ணவளின் முகத்தை உலுக்கியவனோ அவனறியாது புலம்பினான்.
''விசா!! என்னாச்சு!! விசா!! என்னமா ஆச்சு!! தமிழ்!! என்னாச்சு விசாக்கு!!!''
காரிகையின் மை தீட்டிய மிழிகளோ கண்ணீரை சொரிந்தன கண்ணோரங்களில். குஞ்சரிக்காக கதறியிருக்கிறான் ரீசன், விசாவின் விடயத்தில் தினாவின் செயல்கள் எல்லாம் வெறும் கனவே.
ஆனால், அவளாலேயே இப்போது நம்ப முடியவில்லை அவளின் தினா துடிப்பதை பார்த்து, அதுவும் அவளுக்காக பதறுவதை நிஜமாகவே உணர முடிகின்ற பொழுதில்.
''ஐயோ!! விசா!! என்னாச்சு!! யாராவது சொல்லித் தொலைங்களேன்!! தமிழ்!!''
ரீசனின் அலறலை அங்கு யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையிலும் யாருமில்லை. வதனியின் வாயோ பேச முடியாது அடைத்து கிடந்தது.
''excuse me sir..''
(சார்.. கொஞ்சம் தள்ளிக்கோங்க..)
தீண்டாது நகர சொல்லி வேண்டினாள் நர்சம்மா, குறுக்கே நிற்கும் ரீசனை துரத்திட முடியாது.
சுகப்பிரசவத்திற்கு மட்டுமே துணையாக ஒருவரை அனுமதிப்பர் டெலிவரி அறைக்குள். ஆனால், சிசிரியன் பிரசவத்திற்கு கர்ப்பிணி மற்றும் மருத்துவ குழுவை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது ஆப்ரேஷன் அறைக்குள்.
இருப்பினும், தமிழ் இழுத்து வந்து நிறுத்திய தீனரீசனை வெளியே போக சொல்ல முடியுமா என்ன. யாருக்கு இருக்கிறது அவனிடத்தில் மார் நிமிர்த்தி சண்டைக்கு நிற்க, தமிழ் தவறென்று சொல்லிட.
அதுவும் மருத்துவமனையே தமிழ் செல்வனுடையது எனும் போது, இப்படியான கெடு பிடிகளுக்கு பஞ்சாயித்து வைத்திட கட்டிய மனைவி பாப்பு கூட துணிந்திட மாட்டாள். குடும்பம் நடத்தியவள் நன்கறிவாள் புருஷனவன் காரணமின்றி கோக்கு மாக்காக எதையும் செய்திட மாட்டான் என்று.
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 14
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.