- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் பதினைந்து
தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை
ஆப்ரேஷன் அறை தோசைக் கல்லின் சூட்டை கொண்டிருந்தது.
''தள்ளுங்க ரீசன்!!!''
அழுத்தமாய் சொல்லி ஆக்சிஜன் மாஸ்க் என்றழைக்கப்படும் நேசல் கானுலா மாஸ்க்கை (nasal canula mask) அதீத ரத்த அழுத்தம் கொண்டவளின் மூக்கில் வைத்தாள் பாப்பு.
தமிழோ, நுண்ணிடையாளின் வயிற்றுக்குள்ளிருந்த குடல் மற்றும் சிறுநீர் பையை ஒதுக்கி வைத்தான்.
''கடவுளே!! விசா!! ஐயோ டாக்டர்!! மாஸ்க் வெச்சும் வலிப்பு நிக்கலையே!! ஏதாவது பண்ணுங்க!! கடவுளே!! டாக்டர்!!''
மாஸ்க் வைத்தும் அடங்கவில்லை அணங்கவளின் தூக்கி தூக்கி போட்ட வலிப்பு நிலை. நொந்தவனோ புரியாது வேள்வி கொண்டு விக்கித்து நின்றான்.
''விசா.. இன்டஸ்டைன்ஸ் அண்ட் ப்ளேடரை (intestines and bladder) ஓரமா நகர்தினாதான் குழந்தையை வெளிய எடுக்க ஈஸியா (easy) இருக்கும்..''
தமிழ் சொன்னது என்னவோ ரீசனுக்குத்தான், படுத்துக் கிடந்தவளுக்கு கிடையாது.
பக்கென்றது ஹீரோவிற்கு. சொன்ன தமிழோ, வாராது முறுக்கி பின் வந்து சேர்ந்த குஞ்சரி வீட்டுக்காரனை ஜாடை பார்வை பார்த்திட; ரீசனின் அம்பகங்களோ குளக்கரையாய் தேங்கி கிடந்தது.
ஆணவனின் இருவிழிகளும் இடப்பக்கம் இழுத்துக் கொண்டு கிடந்த விசாகாவின் முகம் பார்த்து, தேக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டின.
''ரீசன்.. இப்படி வந்து நின்னுக்கோங்க..''
என்ற பாப்புவோ, தமிழ் பக்கம் சென்று நின்றாள்.
விசாகாவின் அடிவயிறு பிளவுப்பட்டு கிடந்த கொடூரத்தை பார்த்தான் ரீசன். குஞ்சரியின் சுகப்பிரசவத்தின் போது அவன் பார்த்திடாத குருதி கடலல்ல.
இருந்தாலும், இப்போது பெண்டு அவளின் குத்துயிரும் கொலையுயிருமான நிலைக்கு தான்தான் மூலக்காரணம் என்பதை மறுத்திட முடியாதவன் தலைகுனிந்து குற்ற உணர்ச்சி கொண்டான்.
விசாகாவின் முகம் குஞ்சரியை அவனுக்கு நினைவுறுத்தியதோ என்னவோ ரீசனின் மனம் பொறுக்கவில்லை காதலியில்லா பெதும்பையின் வேதனையைக் கண்டு.
மடந்தையவளோ சுவாச கவசம் அணிந்தப்படி படுத்துக் கிடக்க, மூச்சு சீராகி போனது தையல்காரிக்கு.
''விசா.. பையன் வர போறான் பாரு.. வர போறான்..''
கூலாக தமிழ் சொன்ன வார்த்தைகளை கேட்டவளின் நெஞ்சம் பூரித்து போனது. ரீசனின் முகத்தை பார்த்திட விரும்பினாள் விசாகா நெஞ்சம் நெகிழும் தருணத்தைக் கொண்டாடிடும் பொருட்டு.
வஞ்சியவளின் தலைக்கு பின் பக்கமாய் ரீசன் நின்றிருக்க, வதங்கி கிடந்த பூவையவளின் கர்ப்பப்பைக்குள்ளிருந்து வெளியே தூக்கினான் தமிழ் அவன் மருமகனை.
''வாடா!!! வாடா!!! வாடா!!!''
தமிழின் ஆனந்த கோஷத்தில் நெஞ்சு கூட்டு நிரம்பி விரிந்தது பெற்றவளுக்கு. தலையை பின்னோக்கி சாய்த்தவளின் விழிகள் ரெண்டும் ரீசனின் மிழிகளை சந்தோஷம் கொண்டு நோக்கினாள்.
''congratulation Dheenareesan!! God has gifted you a prince!!''
(வாழ்த்துக்கள் தீனரீசன்!! கடவுள் உனக்கு ஒரு இளவரசனை பரிசா கொடுத்திருக்காரு!!)
தமிழோ தாயின் தொடை மீது போட்ட அழாத குழந்தையை கையிலேந்தி கலைத்தான் ஜோடிகளின் பார்வைகள் மட்டுமே கொண்ட பரிபாஷைகளை, வாழ்த்துக்கள் கூறி.
பீடியாட்ரிக் டாக்டரம்மா பாப்புவோ தமிழின் கையிலிருந்து குழந்தையை வாங்கிட, வீலென்று அலறினான் பிஞ்சவன்.
ரீசனின் விலோசனங்கள் ரெண்டும் மெல்லமாய் மேலேறி வெறித்தது, தொண்டையைக் கிழித்து கதறிய சிசுவை. புல்லரித்து போனது ஆணவனுக்கு மீண்டுமொருமுறை தந்தையானதில்.
ஆண்கள் குழந்தை விஷயத்தில் கொஞ்சம் வேறு மாதிரி தான். அது நல்லவனோ கெட்டவனோ சிறு துளி ஈரத்தையும் கருணையையும் எதிர்பார்த்திடலாம். சில வேளைகளில் இப்படியான நம்பிக்கைகள் பொய்த்து போவதும் உண்டு.
விதி வலியது அவ்வளவே.
தமிழோ பிளந்து போட்டிருந்த பேரிளம்பெண்ணின் கீழ் வயிற்று உள் பகுதியை, திசுவால் துடைத்தான் இன்னொரு மருத்துவனுடன் சேர்ந்து.
இடையாள் அவளின் மரத்து போன இடைக்கு கீழான பாகத்தையும் உணர்ச்சிக் கொண்ட மேல் பாகத்தையும் பிரித்திருந்த துணியிலான திரையை தமிழ் ஓரத்தில் தூக்கி கடாசியிருந்தான்.
கர்ப்பிணிகளில் சிலர் அவர்களின் சிசிரியன் ஆப்ரேஷனை கண் கூடாய் பார்த்திட விரும்பிடுவர். பலர் அச்சமே கொள்வர்.
மருத்துவர்களோ நேரடியான ஆப்ரேஷனை பேஷண்ட்ஸ் பார்ப்பதை பெரும்பாலும் ஆதரிப்பதில்லை. காரணம், அப்போதைக்கு இல்லையென்றாலும் பின்னர் அது அவர்களுக்கு பிரச்சனையாகிடும் என்பதே அவர்களின் கணிப்பு.
''விசா முதல்லே நகர்த்தி வெச்சே ப்ளேடர்.. இண்டஸ்ட்டேன் எல்லாத்தையும் மறுபடியும் பழைய இடத்துக்கே ஷிஃப்ட் பண்ண போறேன் சரியா..''
சிரித்தவாறு சொல்லிய தமிழ், தங்கையானவளின் வயிற்றுக்குள் பீறிட்ட குருதியை பட்டையான பஞ்சு துணியால் துடைத்து வெளியில் போட்டான். ரத்த சகதியான பஞ்சு குவியல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பி வழிந்தன அலுமினிய ட்ரேயில்.
அவைகளை இமைக்காது பார்த்த ரீசனின் அம்பகங்கள் ஆர்பரித்தன. நினைவுக்கு வந்தது சம்பவம் ஒன்று.
சில மாதங்களுக்கு முன், கர்ப்பம் தரித்திடும் முன் ரீசனின் வீட்டிற்கே வந்து கூத்து காட்டிய விசாகா குட்டியை கடுப்பில் அறைந்திட காரசேவா அவன் கையை ஓங்கிட; பயந்து பின் வாங்கிய கன்னிகையோ அடிக்கும் முன்னரே கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சொன்னாள்.
''பிளீஸ் தினா!! என்னே எவ்ளோ வேணும்னாலும் திட்டுங்க.. ஆனா.. அடிக்க மட்டும் செய்யாதீங்க!! எனக்கு அடின்னா ரொம்ப பயம்.. அடிச்சிடாதீங்க தினா!! பிளீஸ்!!''
கெஞ்சியவளின் மழலை தொனி இன்னமும் ரீசனின் காதுகளில் கேட்டது. உதடுகளை மடக்கி இடக்கையால் முகத்தை மறைத்துக் கொண்டவன் எண்ணத்தில் மீண்டும் அதே சம்பவம் உயிர் கொண்டது.
''எங்கப்பா கூட என்னே சின்ன வயசுலருந்து அடிச்சதே இல்லே தினா .. எனக்கும் என் உடம்பு.. கைகால்.. முகமெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. சின்ன கீறல் கூட படாமல் பார்த்துப்பேன்.. பாருங்களேன்!!''
நீட்டி காண்பித்தாள் மகடூ அவள் கரங்களை ஒத்தடை குச்சியவனை நோக்கி.
''பார்த்திங்களா.. விரல்லே நெயில்ஸ் (nails) கூட நீட்டமா வெச்சுக்காமே.. அழகா குட்டியா வெட்டி நெயில் போலிஷ் போட்டிருக்கேன்..''
அப்போது கடுப்பில் தலையில் அடித்துக் கொண்ட ரீசனோ, இப்போது முகத்தை மூடிய கையை மெதுவாய் கண்ணீரை வழித்தெடுத்து கீழிறிக்கினான்.
*
வீலென்ற குழந்தையை பாப்பு கொண்டு வந்து போட்டாள் விசாகாவின் நெஞ்சில். சிசிரியனில் இது வழக்கமல்ல, தாயின் தொடையில் சில வினாடிகள் குழந்தையை படுக்க வைத்து தூக்குவதே வழமை.
இருப்பினும், தமிழ் செல்வன் நேரடியாக சம்பந்தப்பட்டால் எல்லாமே சாத்தியமே.
கண்ணீர் வராமல் அழுத குட்டி பையனோ, அம்மா விசாகாவின் நெஞ்சில் அமைதிக் கொண்டான். வெறிக்க வெறிக்க பார்த்தான் மிதமான ரத்தம் மற்றும் வெர்னிக்ஸ் கேசோசாவில் (vernix caseosa) உழன்று கிடந்தவன்.
''எப்படி பார்க்கறான் பாறேன்..''
பாப்பு பூரிப்போடு சொல்ல, பெற்றவளோ கண்ணீர் ததும்ப நெஞ்சம் நெகிழ்ந்து வைத்தாள் குட்டி குழந்தையின் இதயமிருக்கும் நெஞ்சுக்கூட்டில் அழுத்தமான ஒரு முத்தம்.
''வாடா பையா அத்தைக்கிட்டே!!''
என்றப்படி சிசுவை மெதுவாய் தூக்கியவள் தொடர்ந்து சொன்னாள்.
''விசா.. பையன் வெயிட் குறைவா இருக்கான்.. இன்குபேட்டர்லே (incubator) வைக்கணும்.. பையனே கிளீன் பண்ணிட்டு என்.ஐ.சி.யூக்கு (NICU) நர்ஸ் தூக்கிட்டு போயிடுவாங்க.. நீ நல்லா தூங்கி எழுஞ்ச பிறகு பையனை பார்க்கலாம்..''
சின்ன கீறலை கூட தன் மேனியில் படாமல் பார்த்துக் கொண்ட விசாகா இன்றைக்கு சிசிரியன் என்ற அடிவயிற்று வெட்டுக்கு அவளையே தியாகம் செய்திருப்பதன் காரணம் என்னவோ தீனரீசன் மீது கொண்ட காதலே.
புரிந்து, தெரிந்து வந்த காதலல்ல. கண்மூடித்தனமாக அறியாமல் வந்த காதல்.
''ரீசன்..''
என்றழைத்த பாப்பு நீட்டினாள் பிறந்த குழந்தையை தகப்பனிடத்தில். வாஞ்சையாய் வாங்கிக் கொண்டான் தீனரீசன் அவனின் வாரிசை பீடியாட்ரிக் மருத்துவச்சி பாப்புவிடத்திலிருந்து.
''பையன் வெயிட் 1.7.. டிஸ்சார்ஜ் (discharge) பண்ணே மினிமம் (minimum) 1.8 கிலோவாவது இருக்கணும்.. சின்ன சைஸ்.. சோ.. ஆக்சிஜன் பிரச்சனை ஏதும் வராமல் பார்த்துக்கத்தான் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இன்குபேட்டர்லே வைக்கணும்.. அப்சர்வேஷன் (observation) ஓகேவா இருந்து.. வெயிட் கூடிட்டா பையனே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடலாம்..''
சொல்ல வேண்டிய தகவல்களை பவ்வியமாய் சொல்லி நகர்ந்தாள் குழந்தைகள் மருத்துவர் பாப்பு.
ரீசனோ அழாமல் அவன் கைகளில் கண்ணை மூடி தவழ்ந்திருந்த குழந்தையை செல்லமாய் முத்தமிட, சிணுங்கியவனோ தள்ளினான் பிஞ்சு கைகள் கொண்டு அவன் டேடியை.
''அம்மா செல்லமா நீங்க..''
என்றவனோ சிசுவின் கன்னத்தில் முத்தங்கள் வைத்தான் நிறுத்தாது ரீசன். நிஜமாகவே ஆண் பையனவன் மம்மி கட்சித்தான் போல, குட்டி வாயை திறந்து நாக்கு துடித்திட அலறினான்.
''ஓஹ்.. ஓஹ்.. சரிடா.. சரி.. சரி.. அப்பா செல்லம்.. ஆழக்கூடாது.. இங்கப்பாருங்க..''
ரீசன் அழுகின்ற குழந்தையை சமாதானம் செய்திட பார்க்க, கையை மெதுவாய் மேலேத்தி உயிர் கொண்டு நிற்கும் கருவின் தலையை மென்மையாய் வருடிக் கொடுத்தாள் விசாகா. என்ன அவளால் பேசிடத்தான் முடியவில்லை.
நல்லவேளை நர்ஸ் வந்து வாங்கிக் கொண்டார் ரீசனின் கையிலிருந்த ஆண் குட்டியை. பையனை தாதியிடத்தில் கொடுத்தவனின் பார்வைகள் எதார்த்தமாய் தமிழ் கைப்பட தையல் போடுவதை பார்த்து மேலும் வேதனைக் கொண்டது.
விலோசனங்களை இறுக்கமாய் மூடித் திருந்த நெட்டையன் மொத்தமாய் உருகுலைந்ததாய் உணர்ந்தான். கிளம்பிடத்தான் வந்தான். ஆனால், இப்போதோ இடத்தை விட்டு நகராதே இருந்தான்.
என்ன நினைத்தானோ மவராசன் தெரியவில்லை. விசாவின் பின்னந்தலைக்கு பின்னே நின்றிருந்தவன் படக்கென்று அவளின் கந்தரத்தில் அவனின் முழங்கையை பதித்து மென்மையாய் மானினியின் கழுத்தை வளைத்திறுக்கி வாதனியின் தலையோடு அவன் தலையை ஒட்டிக் கொண்டான்.
வெறும் மூச்சு மட்டுமே அவனின் வார்த்தையாக வாஞ்சினியின் செவிகளுக்குள் விழுந்தது. விசாகாவின் விழியோரம் ததும்பி வழிந்தது நிம்மதியின் பெருவூற்று.
வாயால் மன்னிப்பு என்ற ஒத்த வார்த்தையால் ரீசனால் அவனின் அலட்சியத்தையும் முன்னாளில் பெதும்பையிடத்தில் நடந்துக் கொண்ட ஈரமற்ற தனத்தையும் சரிகட்டிட முடியாது என்று நன்கறிவான்.
இருந்தும், இனியாவது பிராயச்சித்தம் தேடிட பார்த்தான்.
''BP norm..''
(பிபி நார்மலா இருக்கா..)
என்று தாதியொருத்தி கேட்டிட, மற்றொரு தாதியோ பெருவிரல் காட்டி ஓகே என்பதை தெரிவித்தார், விசாவின் ரத்த அழுத்தம் பழைய நிலைக்கு திரும்பியிருக்க.
காதில் விழுந்த தூரத்து வார்த்தைகளை மோப்பம் பிடித்த விசாகாவோ, மெதுவாய் அவளின் மூக்கை பட்டா போட்டிருந்த மாஸ்க்கை கீழிறக்கினாள்.
ரீசனின் கண்ணீரெல்லாம் காரிகையின் காதுகளுக்குள் சில சொட்டுகளாகவும் குழலோரம் காட்டாற்று வெள்ளம் போலவும் வழிந்திறங்கியது.
''உங்களே இஷ்டப்பட்டது .. கல்யாணம் பண்ணிக்க நினைச்சது.. உங்க மனசுல இடம் பிடிக்க ஆசைப்பட்டது.. எல்லாமே உண்மைதான் தினா.. ஆனா.. அது எதையுமே குஞ்சரி அக்காவே உங்க வாழ்க்கையிலருந்து துரத்தி.. அந்த இடத்துக்கு நான் வரணும்னு நினைக்கலே தினா.. உங்க குடும்பத்துலே ஒருத்தியா இருக்கத்தான் விரும்பினேனே தவிர நல்லாருக்கறே குடும்பத்தை கெடுக்க ஒருக்காலும் நான் நினைக்கலே தினா..''
விம்மி அவள் சொல்லிட, தீனரீசனோ என்ன மூட்டில் இருந்தானோ டக்கென்று அவனின் தலையை கொஞ்சம் முன்னோக்கி கொண்டு சென்றவன் சுமங்கலியாகாமல் சுமந்தவளின் கருவிழிகள் நோக்கி சொன்னான்.
''குஞ்சரியும் நீயும் இனி எனக்கு ஒன்னுதாம்மா..''
சொன்னவன் சிவந்த விழிகள் கொண்ட கண்ணீரை பொருட்படுத்தாது, சுணங்கி கிடந்த சுந்தரியின் வகிட்டினில் குங்குமத்திற்கு பதிலாக முத்தத்தை வைத்தான்.
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 15
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.