What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் பதினாறு

தனியார் மருத்துவமனை
ஆப்ரேஷன் அறை


மகப்பேறு மருத்துவன் தமிழ் செல்வன் அவன் வேலை முடிய, மாஸ்க் மற்றும் கையுறைகளை கழட்டி போட்டு அடுத்த அறைக்கு நடையைக் கட்டினான்.

''Sorry Mr Reesan..''
(சோரி மிஸ்டர் ரீசன்..)

என்றழைத்த மருத்துவனோ, ரீசனிடத்தில் குழந்தை சம்பந்தமான சில முக்கிய விடயங்களை விளக்கிட ஆரம்பித்தான்.

அந்நேரம் பார்த்து அங்கு வந்து சேர்ந்திருந்த என்.ஐ.சி.யூ. சீனியர் தமிழ் நர்ஸ் விசாகாவிடத்தில் சில கேள்வி பதில் பாப் குவிஸ் நடத்தினார்.

''உங்களுக்கு என்ன குழந்தைம்மா..''

கைகளை பிணைந்தவாறு அவர் கேட்க, அலுமினிய கட்டிலில் கிடந்தவளோ மெதுவாய் பதிலளித்தாள்.

''பையன்..''

''எத்தனை மணிக்கு உங்களுக்கு குழந்தை பிறந்ததுமா..''

சீனியர் கேள்வி எழுப்பிட, ஜூனியர்ஸ் இருவர் விசாகாவின் நெஞ்சில் ஒட்டியிருந்த கார்டியோ (cardio) சம்பந்தமான விசைகளை கழட்டினர்.

''விடியற்காலை மூனு நாற்பத்தி எட்டுக்கு..''

மெல்லிய மூச்சு வாங்கலோடு வதனியவள் சொல்லிட, அடுத்த கேள்விக்கு தாவினார் மூத்தவர்.

''குழந்தை பிறந்த நாள்.. திகதி.. சொல்லுங்கம்மா..''

''வெள்ளிக்கிழமை.. மூனு பிப்ரவரி 2022..''

எல்லா கேள்விக்கும் சரிவர பதில் சொன்னாள் விசாகா. ஏற்கனவே, ஆப்ரேஷன் டீம் தாதியர் அவளிடத்தில் சொன்ன விஷயங்களைத்தான் வந்திருந்த சீனியர் கேட்டு சரிபார்த்து கொண்டார்.

விசாவின் பதில்களின் மூலம் அவள் தெளிவாகத்தான் இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்தினார் வந்திருந்தவர்.

பீடியாட்ரிக் டாக்டர் பாப்பு முக்கிய பாரங்களில் கையெழுத்து போட்டு மொத்தத்தையும் சீனியர் நர்ஸிடம் கொடுத்தாள்.

''ஒன்னும் பயப்பட வேணா.. குழந்தைங்க வெயிட் குறைவா இருந்தா வழக்கமா பண்றே விஷயம்தான் இது.. சோ.. கவலைப்படே ஒன்னுமில்லே.. விசா.. நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்.. ஏறக்குறைய ஆறு வாரத்துக்கு உனக்கு ரெஸ்ட் எடுக்கறது மட்டும்தான் முழு நேர வேலை.. புரிஞ்சுதா..''

விசாவின் விழிகளை தீர்க்கமாய் பார்த்து சொன்ன தமிழின் சீமாட்டியவள், தலையை திருப்பி ரீசனிடத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிட ஆரம்பித்தாள்.

''ரீசன் நீங்க நர்ஸ் கூட போகலாம் என்.ஐ.சி.யூக்கு.. தமிழ் அங்க இருக்கற டாக்டர்ஸ்கிட்டே சொல்லிட்டாரு.. மத்ததெல்லாம் அங்க இருக்கறே டாக்டர்ஸ் சொல்லுவாங்க.. ஓகே..''

சொன்னவள் சிரித்த முகத்தோடு அங்கிருந்தோரிடம் விடைப்பெற்று பக்கத்து அறைக்கு தாவினாள்.

தூக்கம் கண்ணை சொருகியது விசாவிற்கு. அவளறியாது சொக்கி சாய்த்தாள் கபாலத்தை வலப்பக்கமாய் விறலியவள். அசதியில் துயில் கொண்டவளை பார்த்த ரீசனோ இனி இடையாளவள் அவன் பொறுப்பென்று உறுதிக் கொண்டான்.

தாதியர்களோ குட்டி குழந்தையை சுத்தமாய் கிளீன் செய்து மருத்துவமனையின் ஊதா வர்ண ஸ்வாடலில் (swaddle) சுற்றி தூக்கி வந்தனர்.

சிந்தைக் கலைந்தது தகப்பனுக்கு, நித்திரை களவுப் போனது தாயுக்கு; பிஞ்சு குட்டியின் பொற்கரங்கள் அங்கும் இங்கும் ஆடி பொக்க வாய் சத்தமில்லா சிரிப்புக் கொள்ள.

பிரியும் முன் பெற்றோர்கள் இருவரிடத்திலும் காண்பித்தார் குட்டி பையனை என்.ஐ.சி.யூ. தாதியர்.

வினாடிகளுக்கு ரீசனும் விசாவும் மாறி மாறி சின்ன பையனை கொஞ்சி மகிழ்ந்தனர். நேரமாகிட, விசாகாவை முதலில் தனியறைக்கு அழைத்து சென்றனர் தாதியர்கள்.

குழந்தையையோ இன்குபேட்டரில் கிடத்தி பின் தள்ளிக்கொண்டு சென்றனர் என்.ஐ.சி.யூ.விற்கு அங்கிருக்கும் நர்ஸ்கள். ரீசனோ தாதியர்களுடன் சென்றான், பாப்பு முன்னமே சொன்னது போல.

பாப்பு சர்ஜிக்கல் ஆடையை களைந்து அவளின் சாதாரண ஆடைக்கு மாறினாள். அது கொஞ்சம் ஸ்பெஷலான அறை. அங்கு தமிழ் செல்வனுக்கு மட்டுமே அனுமதி. அவனின் தனியறை என்றுக் கூட சொல்லிடலாம்.

பொண்டாட்டி அவளுக்கு இல்லாத உரிமையா என்ன. ஆகவே, கணவன் இருந்தாலும் இல்லையென்றாலும் பாப்புவின் முக்கிய செயல்பாடுகள் எல்லாம் அங்கேதான்.

படக்கென்றொரு கரம் வளைத்து பிடித்து இறுக்கியது, அங்கிருந்து வெளியேறிட பார்த்தவளின் இடையை. தெரியும் அவளுக்கு யாரென்று. வெட்கத்தை ஒளித்துக் கொண்டவள் பின்னாலிருந்து கட்டியிருக்கும் கணவன் தமிழ் செல்வனை செல்லமாய் கடிந்தாள்.

''டேய்!! விடுடா!! என்ன பண்றே!!''

''என்ன பண்றேன்னு தெரியலையாடி பொண்டாட்டி..''

என்றவனோ பாப்புவின் கழுத்தோரம் கள்ளெடுக்க ஆரம்பித்திருந்தான்.

''தமிழ்.. வேண்டாம்..''

என்றவளோ மிழிகள் சொக்கினாலும் சுதாரித்து விரித்தாள் விழிகளை.

''லவ் யூ பேபி.. உன்னே ரொம்ப மிஸ் பண்ணேண்டி..''

என்றவன் இதழ்கள் கொண்ட வார்த்தைகளில் மட்டும் ஏக்கத்தை காட்டிடவில்லை. மாறாக, செயல்களிலும் பிரிவின் தாக்கத்தினை காண்பித்தான்.

உள்ளூர புருஷனின் கதகதப்பில் சூடு கொண்டாலும், பலங்கொண்டு கட்டுமஸ்தான ஆணவனை தள்ளிய வேகத்தில்; விலகி ஓடினாள் பொஞ்சாதியவள்.

''ஏய்!! எங்கடி போறே.. இங்க வா..''

ஆசை கொண்ட காமம் விடியற்காலையில் தூபம் போட, கெஞ்சிய தோரணையில் கண்ணடித்து அழைத்தான் கணவனவன்.

''போடா..''

என்ற வார்த்தையோடு நாணியவள், அறையை விட்டு முழுதாய் வெளியேறினாள்.

''பாப்பு..''

பித்தம் பிணியாய் ஆகிட, காளையவனின் கெஞ்சல் முரட்டு தொனி கொண்டது. உதடுகள் குவித்து முத்தம் வைத்தவளோ, சிறு புன்னகையோடு கையில் சுழட்டி காண்பித்தாள் சாவியொன்றை.

கேபினெட்டின் விளிம்பில் வசதியாய் சாய்ந்திருந்த தமிழோ, மோகன மயக்கம் தெளிய நேராய் எழுந்து நோக்கினான் ஆயந்தியவளை வியப்போடு.

''பாப்பு.. இது..''

தமிழ் கேட்டவாறு அறைக்கு வெளியில் வர, அடிகளை வேகமாக்கிய தலைமகளோ சில்மிஷ சிரிப்பு கொண்டு; கணவனை பார்த்தப்படியே எமன் வீடு நோக்கி பயணித்தாள்.

தமிழோ மந்தகாச முறுவல் கொண்டான் உதடு மடக்கி. சுற்றி முற்றி ஒருமுறை பார்த்தவன் பின்னந்தலையை தடவிக் கொண்டு வேக வேகமாய் பின் தொடர்ந்தான் காதல் மனைவியை.

*
பழைய பிணவறை பகுதி


மருத்துவமனையின் கடைசி பகுதி என்றுக் கூட சொல்லிடலாம் அவ்விடத்தை. ஆட்கள் நடமாட்டம் அப்பகுதியில் குறைவே. புதிய கட்டிடத்தை ஒட்டிய பழைய கட்டிடம்.

பிணமில்லா பூட்டிய அறை. இருப்பினும் காவலுக்கு ஒருவர்.

''அண்ணா நீங்க போய் காஃபி சாப்பிட்டு வாங்களேன்..''

விடியப் போகும் நேரத்தில் வரக் கூடாத இடத்திற்கு வந்திருந்த பாப்பு காவல்கார தமிழ் அண்ணனை நாசூக்காய் விரட்டினாள்.

''இல்லே பரவாலம்மா.. நான் வீட்டுலருந்தே காஃபி எடுத்திட்டு வந்துட்டேன்..''

இயமானியின் நிலை அறியாது, வயதான காவல்கார அண்ணனோ போக மாட்டேன் என்றிட; தலையை சரியென்று ஆட்டியவளோ வேறேதும் பேசாது கொண்டு வந்திருந்த சாவி மூலம் திறக்க வேண்டிய கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

''மா.. நீங்க..''

ஏனென்றே கேள்வியை மேடமிடத்தில் கேட்டிட தயங்கியவர், வாக்கியத்தை தொங்க விட்டார் பாதியில்.

மெல்லிய குறுநகை கொண்டவளோ ஏதும் பேசாது பிணவறைக்குள் நுழைந்தாள்.

முதலாளியம்மாவின் செயலுக்கு விளக்கம் கேட்டிட முடியுமா என்ன. புரியாத மனுஷனோ கண்களை உருட்டி நிற்க; உள்ளிருந்த குளுகுளு ஏசி காற்று வெளியிலிருந்தவரை செல்லரிக்க வைத்தது.

ஒருக்களித்த கதவோ காத்திருந்தது தமிழ் செல்வனுக்காக. வர வேண்டியவன் வர காவலாளியை பார்வையாலே இடத்திலிருந்து நகர வைத்தான் வந்தவன்.

கொஞ்சமாய் திறந்திருந்த கதவை பின்னங்காலால் தள்ளி முழுதாய் சாத்திட வழி வகுத்தான் தமிழ்.

பாப்புவோ ஸ்ட்ரெச்சர் மீது கால் மேல் கால் போட்டப்படி ஜம்பமாய் அமர்ந்திருந்தாள். குண்டு பல்ப், அதுவும் மயக்கும் மங்கிய மஞ்சள். அதுதான் ரொமண்டிக் என்று நன்றாய் இருந்த வெள்ளை விளக்குகளை புடுங்கி போட்டு இதை மாட்டிட சொன்னது ஐயாதான்.

மணவாளியின் இருக்கரங்களும் அப்பழைய அலுமினிய ஸ்ட்ரெச்சரின் விளிம்பினை இறுக்கியிருந்தது. விட்டிலாக தகித்திருந்த தாரமவளோ விளக்கவனுக்காக காத்திருந்தாள், முழுதாய் உடல் தியாகம் செய்திட.

துகிலுரிக்க போகும் துச்சாதனாய் திட்டிகளில் தீவிரம் கொண்டு தமிழ் பத்தினியவளை நோக்கி கெத்தாய் படையெடுக்க, மோக சில்னஸ் கரைந்து வழிகொடுத்தது ஆசையெனும் மேகம் சரளமாய் பொழிந்திட தம்பதிகளுக்குள்.

காரமுறுக்கவனின் நெருக்கத்தில் பாப்புவின் இடக்கால் மீதிருந்த வலக்கால் மெதுவாய் கீழிறங்கியது.

''இந்த ரூம் சாவி எப்படி உன்கிட்டே வந்துச்சு பாப்பு..''

என்றவனின் நாசி கொண்ட சுவாசமோ உல்லியின் காது மடல்களில் மின்விசிறியாய் ஆகிப்போனது.

காளையவனின் ஊதா வர்ண சர்ஜிக்கல் ரவுண்ட் நெக் டி - ஷர்டில் கரங்களை பட்டென பதித்தாள் பாரியை.

''ஏய்.. என்னடி.. ஒரு மார்க்கமா பாக்கறே..''

''ரவுண்ட் நெக் டி - ஷர்டிக்கு பதிலா பட்டன் வெச்ச ஷர்டா இருந்திருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும்..''

என்றவளோ ஹீரோவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஸ்டெதாஸ்கோப்பின் (stethoscope) இருபக்கத்தையும் ஒரு சேர உள்ளங்கைகளில் இறுக்கிப் பற்றினாள்.

''என்னடி.. சவுண்டே சரியில்லே..''

அவளை கண்டிப்பு மிகுந்தவனாட்டம் வேள்வி கொண்டவன், பார்வைகளால் குளிக்க வைத்தான் குலியவளை.

''டேய்.. நாமே இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா..''

நெருக்கி இழுத்து கேட்டாள் மணாளனை துணைவியவள்.

''வாய்ப்பே இல்லைங்க பொண்டாட்டி..''

அதரங்களை மடக்கி சத்தமின்றி குலுங்கியவனோ தலையை ஆட்டினான் வேண்டாமென்று சொல்லி, கற்பாள் அவள் கிறக்கமாய் கேட்க.

''ஹும்ம்.. ஏன்டா..''

உதடு பிதுக்கினாள் பெருமாட்டியவள்.

''இருக்கறதே போதும்..''

சொல்லி சிரித்தான் கட்டியவன்.

''இன்னொன்னு இருந்தா நல்லாதானே இருக்கும்..''

கொஞ்சலின் ஊடே கெஞ்சல் கொண்டாள் குடும்பினியவள்.

''உன்னே ஒருதடவே ரத்தமும் சகதியுமா பார்த்ததையே என்னால இப்ப வரைக்கும் மறக்க முடியலே.. இதுலே இன்னொன்னா..''

மனைவியின் முகத்தை இருக்கைகளுக்குள் அடக்கியவனோ சொன்னான் பெருமூச்சு கொண்டு.

''பிரசவம்னா அப்படித்தானே.. இதுலென்னே இருக்கு..''

என்றவளோ புருஷனின் கன்னத்தை பிடித்தாட்டிட, அவனோ தலையை மீண்டும் நோ என்ற பதிலோடு ஆட்டி தொடர்ந்தான்.

''ரீசனே ஏன் சிசிரியன் ரூம்குள்ளே அலாவுட் பண்ணேன் தெரியுமா..''

''விசா டெலிவரி பண்றதை பார்க்கே..''

பாப்பு சொன்ன பதிலை கேட்ட தமிழோ, மென் புன்னகை கொண்டு தொடர்ந்தான் தலையை இல்லையென்றாட்டி.
''செக்ரிஃபைசேஷனை (sacrifice) பார்க்கே..''

கணவனின் பதில் இதோடு நிற்காது என்றறிந்தவள், பொறுமைக் காத்தாள் ஆணவன் மொத்தத்தையும் சொல்லி முடிக்கும் வரை.

''நார்மல் டெலிவரி மீன்ஸ் (means) கொஞ்ச நாள்லையே ஒரு பெண்ணாலே பழையப்படி லைஃபே (life) லீட் (lead) பண்ண முடியும்.. ஆனா.. சிசிரியன் அப்படியில்லே.. இம்மியளவு அசந்தாலும் உயிர் போயிடும்..''

''உண்மைத்தான்.. ரொம்ப கவனமா இருக்கணும்.. முதல் ரெண்டு மூணு மாசம் நெருப்புலே நடக்கறதுக்கு சமம்.. என்னதான் சிலருக்கு கொஞ்ச மாசம்.. வருஷம் கழிச்ச பிறகு லைஃப் எப்போதும் போல ஆனாலும்.. பலருக்கு சின்ன சின்ன காம்ப்ளிகேஷன்ஸ் (complications) இருக்கத்தான் செய்யுது..''

பாப்புவிற்கு நார்மல் டெலிவரிதான். இருந்தாலும், சிசிரியனை பற்றி நன்றாகவே தெரியும் நாச்சியவளுக்கு பீடியாட்ரிக் மருத்துவர் என்ற முறையில்.

''பல லேடிஸ் நிம்மதியா தாம்பத்தியம் கூட வெச்சிக்க முடியாமே கஷ்டப்படறாங்க.. வலி.. இண்ட்ரஸ்ட்டே (interest) இல்லாமே பண்ணிடுது..''

வருந்தி சொன்னான் மகப்பேறு மருத்துவனவன்.

''ஆமா தமிழ்.. எண்டோமெட்ரிடிஸ் (endometritis).. பிரசவத்துக்கு அப்பறமா வர ஹெவி பிளட் ப்லொவ் (heavy blood flow @ Postpartum hemorrhage).. அனஸ்தீசியா ரியாக்ஷன்ஸ் (reactions to anesthesia).. கால்.. இடுப்பு நரம்புகளில் பிளட் க்ளோட்ஸ் (blood clots).. இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்லே..''

ஆர்வமாய் மனைவியவள் சொல்லிட, தலையாட்டி ஆமோதித்தவனோ ஆயிழையின் நுதல் தொட்டிருந்த குழல்களை விரல்களால் ஓரந்தள்ளினான்.

''அதுவும் அந்த ரத்த கட்டிகளே கவனிக்காமே விட்டா அவ்ளோதான்.. லங்ஸ்க்கு (lungs) போறே ரத்தத்தை கூட போக விடாமே நிறுத்தி.. ஆளை குளோஸ் (close) பண்ணிடும்லே..''

''ஹ்ம்ம்.. வெளி காயங்கள் எப்படி ஆபத்தோ.. அதே மாதிரி ஆப்ரேஷன் பண்ணும் போது கூட உள் காயங்கள் ஏற்பட அதிகமான வாய்ப்பிருக்கு.. ஏன் அவ்ளோ.. தையல் போட்ட இடத்துலே கூட இன்பிக்ஷன் (infection) ஆக நிறைய சான்சஸ் (chances) இருக்கு.. இன்னும் சொல்ல போனா.. வருங்கால பிரக்னன்சி (pregnancy) சிசிரியன் பேஷண்ட்ஸ்க்கு ரொம்ப சிக்கலே..''

தமிழ் சொல்லிட, டக்கென்று குறுக்கிட்டாள் மனசை நெருடிய எண்ணத்தை வாக்கியமாக்கி.

''அப்போ.. இது ரீசனுக்கான பாடமா..''

''கண்டிப்பா புட்டு!! இந்த குழந்தை உருவாக யார் வேணும்னாலும் முதல் ஸ்டேப் (step) எடுத்திருக்கலாம்.. அதுக்காக மொத்த பழியையும் ஒருத்தர் மேலே போட்டு இன்னோருத்தர் இதுக்கு சம்பந்தமே இல்லாமே இருக்கறதுக்கு பேரு கோழைத்தனம்!!''

''ரீசனே கோழைன்னு சொல்றிங்களா தமிழ்..''

''பின்னே இல்லையா!! குஞ்சரி வேணும்னா ரீசனுக்கு பெருசா இருக்கலாம்.. அதுக்காக.. விசாவே மனசாட்சியில்லாமே நடத்தறது எந்த விதத்துல நியாயம்!! அவ்ளோ நல்லவனா இருந்திருந்தா விசா மேல கை வைக்கறதுக்கு முன்னாடி அதை யோசிச்சிருக்கணும்!!''

''தமிழ்.. இதெல்லாம் நாமே சொல்லி அடுத்தவங்க புரிஞ்சிக்கறே விஷயமில்லே.. தானா உணரணும்..''

''அதெல்லாம் நல்லாவே ஃபீல் பண்ணிருப்பான் புட்டு!! இல்லாட்டி இவ்ளோ தூரம் அந்த ரூம்லே தாக்கு புடிச்சிருக்க மாட்டான்!! எப்பவோ ஓடிருப்பான்!!''

''அது என்னவோ சரிதான்..''

என்றவளோ குட்டி சிரிப்போடு புருவங்கள் உயர்த்திட, மனைவியின் இருக்கரங்களையும் ஒரு சேர பற்றி பிடித்து கூப்பியவன் செல்லமாய் முத்தமொன்று வைத்தான்.

''சத்தியமா புரியலே பாப்பு.. என்ன மாதிரியான படைப்பு நீங்கெல்லாம்..''

புருஷன் இப்படியான டயலாக்கெல்லாம் அடிக்கும் ரகமல்ல. ஆகவே, விழிகளை உருட்டி தமிழ் செல்வனை மார்க்கமாக கவனித்தாள் பாப்பு.

''தெரியாமே அடிப்பட்டாலே ஐயோ.. அம்மான்னு சொல்ற ஆம்பளைங்களுக்கு மத்தியிலே.. பொண்ணுங்க நீங்க தெரிஞ்சே உங்க உயிரை சாவுக்கு பக்கத்துல கொண்டு போறீங்களே.. எப்படி!! செத்துடுவீங்கன்னு கொஞ்சங் கூட பயமில்லையா உங்களுக்கெல்லாம்..''

மகப்பேறு மருத்துவன் முதல் முறை உணர்ச்சி ததும்ப தாய்மையை பற்றி பேசிட, ஒரு கணம் அவனை அப்படியே ரசிக்க தோன்றியது அவனுக்காக பிள்ளை பெற்ற கோமகளுக்கு.

''என்னது.. எனக்கானது.. என்னோட.. நான்.. அப்படிங்கிற இந்த சுயநல பூமிலே.. எதைப் பத்தியும் கவலப்படாமே எப்படி உங்களாலே இவ்ளோ பெரிய விஷயத்தை பண்ண முடியுது.. பிரமிப்பா இருக்கு புட்டு..''

என்றவன் காதல் வதுகையின் இரு கன்னங்களிலும் இச்சு வைத்தான்.

''என்னே திரும்ப திரும்ப உன்கிட்டே விழ வைக்கறடா காராமுறுக்கு.. ஐ லவ் யூ டா..''

என்றவள் கொஞ்சமாய் எக்கி வைத்தாள் தமிழ் செல்வனின் கந்தரத்தில் லவ் பைட்ஸ்.

''ஏய் புட்டு.. உன்னே.. மம்மியே.. பிரகாஷ் அம்மாவே.. மது ஆண்டியே பார்க்கும் போதெல்லாம் கையெடுத்து கும்பிட தோணுதுடி..''

என்றவன் பொண்டாட்டியவளை நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

''சாமியே கும்பிட்டதெல்லாம் போதும்.. இப்போ நடைய சாத்தி பூஜை போட வாடா பூசாரி..''

சில்மிஷ குரலில், சின்ன சிரிப்போடு கணவனை ஏறெடுத்தவளோ சொல்லி சாய்ந்தாள் பின்னோக்கி அலுமினிய ஸ்ட்ரெச்சரில், தமிழையும் அவளோடு சேர்த்திழுத்து.

ஏசி கொண்ட பிணவறையில் வாசற்கோலமாய் பூத்திருந்த பாப்புவை ஓயாது பெய்த அதிகாலை மழையாய் அலைக்கழித்தான் தமிழ் செல்வன்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 16
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top