What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் பதினெட்டு

ரீசன் குஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை


உடலில் ஏற்பட்டிருந்த ஊனம், ஊடையவளின் மனதையும் ஊனமாக்கியிருந்தது. தன்னை கையாலாகாதவள் என்றே நினைத்துக் கொண்டாள் கோமகள். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாகவே தோன்றியது.

அவசர தேவைக்கு கூட அடுத்தவரின் உதவியையே நாடி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அவலத்தை எண்ணி எண்ணியே மரித்தால் மங்கையவள் துக்கம் தாளாது.

தாட்டியின் தாயென்ற ஸ்தானத்திற்கு பங்கம் வாராது உயிரை காத்துக் கொடுத்த கடவுள், கோதையவள் செய்த பாவத்தின் வினையாய்; ரீசனுக்கு துணைவியாக இருக்கின்ற பாக்கியத்தை பறித்துக் கொண்டதாகவே எண்ணினாள் பிரபஞ்சத்தின் கர்ம வினையை நன்கறிந்தவள் நங்கையவள்.

முன்பைப் போல கோபத்தையோ தாபத்தையோ ஒருக்களித்தவாறு வெளிப்படுத்திட முடியாது போக; ஒன்னும் பதியுமாய் கிடந்த மடந்தையோ; இப்போதைய உயிரே வேஸ்ட் என்று நினைத்தாள்.

குஞ்சாயியின் உணர்ச்சியற்ற கால் விரல்களில் அவளின் தங்க மிஞ்சிகளை அணிவித்து விட்டான் ரீசன். பாவையின் பாதத்தில்தான் உணர்ச்சிகள் இல்லை. ஆனால், சிங்காரியின் செவித்திறனோ மரிக்கவில்லை.

தலையை ஓரமாய் சாய்த்து பார்த்தாள் குஞ்சாய். மென் புன்னகை புரிந்தான் அவளைப் பார்த்துக் கொண்டே பொஞ்சாதியின் காலில் மிஞ்சியை டைட்டாக இறுக்கிய ரீசன்.

மகளிர்கள் காலில் வெள்ளி மிஞ்சியை அணிவதுதான் வழக்கம். அப்படியிருக்க, குஞ்சாய் காலில் தங்கத்தையே மிஞ்சாக்கியிருந்தான் கணவனவன்.

வேண்டாமென்று தலையைட்டினாள் தலைமகளவள்.

''என் தேவகுஞ்சரி.. தீனரீசன் பொண்டாட்டி.. முருகனோடு தெய்வானை.. சாமி கால்லே தங்கம் இருக்கறது தப்பில்லே..''

இமைகளை மூடிய இயமானியின் மிழிகளோ கண்ணீரை காரிகையின் நெஞ்சு வரைக்கும் படர விட்டு நனைத்தது.

''இப்போதான் இந்த தாலிக்கொடிக்கே ஒரு தனியழகு வந்திருக்கு..''

என்றப்படி கரங்களை காந்தாரியின் கந்தரத்திலிருந்து பிரித்தெடுத்தான் ரீசன். குஞ்சாயோ மூடிய விழிகளோடு மெதுவாய் சாய்ந்தாள் தீனரீசனின் மார்பில் குழவியாய்.

''ஏய் குஞ்சாய்.. ரெயின்போ பார்க்கலாமா..''

ரகசியமாய் அவன் கேட்க, தலை தூக்கி கணவனை ஏறெடுக்காத அருணியோ சொன்னாள் தழுதழுத்து.

''நான் பாதி செத்தவ ரீசன்..''

''ஒரு மணி நேரம் கழிச்சு அதை நான் சொல்றேன்..''

என்றவன் மென்மையாய் மஞ்சத்தில் சாய்த்தான் சீமாட்டியவளை.

''ரீசன்.. வேண்டாம்..''

''பயமா இருக்கா குஞ்சாய்.. இல்லே வலிக்கும்னு வேணாம் சொல்றியா..''

தடுத்தவளின் வலி புரியாமலில்லை ஆளனுக்கு, இருந்தும் விடாப்பிடியாக இருந்தான் செயலில்.

''என் குஞ்சாயியை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு நல்லாவே தெரியும்..''

என்ற ரீசனின் மெல்லிய தூண்டலில் சில்லிட்டது காதலின் தேன் பெண்ணவளின் பெண்மையில்.

சொர்கத்தை உணர்ந்தும் அனுபவித்திட முடியா துர்பாக்கியசாலியாக ரீசனோடு சேர்ந்து ஒப்புக்கு இசைந்தாள் வாழ்வதே கடமைக்கு எனும் எண்ணம் கொண்ட குஞ்சரி.

நிறைகாமம் சூழ்ந்த மகரந்த இரவில் தேவகுஞ்சரிக்கு சேவகம் செய்திடும் விலைமகனாக ஆகிப்போனான் தீனரீசன்.

*

பாராப்லீஜா (Paraplegia) என்பது ஒருவகையான பக்கவாதமாகும். இந்நோய் பெரும்பாலும் மூளை மற்றும் முதுகுத்தண்டை பாதிக்கின்ற விபத்துகளால் ஏற்படும்.

இதைத்தவிர்த்து, முதுகெலும்பு அல்லது மூளையில் கட்டிகள் அல்லது புண்கள், நரம்பியல் நிலைமைகளை உள்ளடக்கிய பக்கவாதம் மற்றும் பெருமூளை வாதம்,
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (multiple sclerosis) போன்ற ஆட்டோ இம்யூன் நிலைமை போன்றவைகளும் இந்நோய்க்கான முக்கிய காரணிகளாகும்.

இப்பக்கவாதம் உடலின் கீழ் பாகங்களை செயலிழக்க செய்திடும். உடலின் கீழ் பகுதிக்கு செல்லும் சிக்னல் தடைப்பட்டு போவதால் இப்பக்கவாதம் ஏற்படுகிறது.

குறிப்பாக, இடைக்கு கீழிருக்கும் அங்கங்களான தொடைகள் தொடங்கி கால் பாதங்கள் வரை அசையாதே போயிடும். சில வேளைகளில் அடிவயிறு, சிறுநீர்ப்பை மற்றும் குடல்கள் கூட இந்நோயால் பாதிக்கப்படும்.

பாராப்லீஜா முழுமையாக உடலை தாக்குவதற்கு முன் சில அறிகுறிகளை வெளிப்படுத்திடும். உடலின் கீழ் பாகங்களில் உணர்வின்மை, உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பாலியல் செயலிழப்பு, தோல் பிரச்சனை, சிறுநீர்ப்பை மற்றும் குடல் சம்பந்தமான செயல்பாட்டில் சிரமம், அடிவயிற்றில் வலி என்று இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் முழுமையற்ற பாராப்லீஜா (incomplete paraplegia) என்றொரு வகையும் உண்டு. இப்பக்கவாதமானது ஒரு காலில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி அசைத்திட முடியாமல் செய்திடும்.

இந்நோய் கொண்ட பேஷண்டுகளின் நரம்பு செயல்பாட்டை மருத்துவர்கள் எலக்ட்ரோமோகிராபி கருவி (electromyography) மூலம் சோதித்திடுவார்கள். இச்சோதனையின் மூலம் தசையின் தூண்டுதலுக்கு உடலின் ரெஸ்பாண்ட்டு (respond) எவ்வாறு இருக்கிறது என்பதையும் அவர்கள் கணக்கெடுத்து வைத்துக் கொள்வார்கள்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஒரே தேர்வு சக்கர நாற்காலியே. இருப்பினும், நீண்ட கால சிகிச்சையின் மூலம் இந்நோயை ஓரளவுக்கு சரிப்படுத்திடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற தேவகுஞ்சரியின் காதுகளில், மகள் கீத்து குட்டியின் குரல் கேட்க எல்லாம் தலைகீழாகி போனது.

முயற்சியை கைவிட துடித்த பெண்ணவளுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. அரிவையின் கழுத்தில் சுற்றிக் கொண்ட சால்வையோ எதிரியாகிப் போனது பூவையவளுக்கு.

ட்ரஸிங் டேபிள் நாற்காலி நுனியிலிருந்த நுண்ணிடையாளின் பெருவிரல் மொத்த ஆட்டத்தையும் கலைத்து போட்டது. தரையில் விழுந்த குஞ்சரியை அழைத்து போக அந்நியன் வந்து விட, யார் செய்த புண்ணியமோ அதிசயமாய் உயிர் பிழைத்தாள் பாவையவள் எமன் போட்ட உயிர் பிச்சையில்.

தலையில் அடிபட சில வாரங்கள் கோமாவில் கிடந்த காரிகையவள் இறுதியாக கண்கள் விழித்தாள். விதி யாரை விட்டது.

இரக்கப்பட்டு உயிரை மட்டுமே மிச்சம் வைத்து போன காலன், தந்திரமாக தாரகையின் மொத்த வாழ்க்கையையும் வாரி சுருட்டிக் கொண்டான் தம்பி சனீஸ்வரனுடன் சேர்ந்து.

கோமாவிலிருந்து வாரங்கள் கழித்து கண் விழித்த தேவகுஞ்சரியின் காதில் இடியாய் இறங்கியது, அவளால் இனி நடக்க இயலாது என்ற சங்கதி. கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவள் எழ முயற்சித்தாள், முடிந்தது. ஆனால், கட்டிலிலிருந்து இறங்கி முயற்சித்து தோற்றுத்தான் போனாள் மீண்டுமொருமுறை கீழ் விழுந்து.

விழுந்த வலி கூட உணராத கட்டையாய் பித்து பிடித்தவளாட்டம் தரையையே தாரமவள் வெறித்திருக்க, அரக்க பறக்க ஓடி வந்த கணவன் ரீசனோ கட்டியவளை பூவாய் கையிலேந்தி மஞ்சம் கிடத்தினான்.

ஆணவனின் நெஞ்சத்தில் உள்ளங்கையை பதித்து பின்னோக்கி தள்ளினாள் தாட்டியவள்.

''போ.. போயிடு.. இனி இந்த குஞ்சரி உனக்கு தேவப்பட மாட்டா.. எப்போதுமே.. டிவோர்ஸ் பேப்பர் எடுத்து வா.. சைன் போட்டு கொடுத்துடறேன்..''

கலங்கிய விழிகள் ஆர்பரிக்காது காத்திருக்க, ரீசனோ தன்னவளின் பேச்சை கேட்டு அதிர்ந்து போனான். எதை மறந்திருந்தானோ, இல்லை வேண்டாமென்று முடிவெடுத்திருந்தானோ அதிலே வந்து நின்றாள் நங்கையவள்.

''போ!! போயிடு!!''

நேத்திரங்களை மூடிக் கொண்ட பெதும்பை, உடலை இறுக்கி பைத்தியக்காரியை போல அலறிப்படி; தலையணைகளை தூக்கி விசிறினாள் எதிரே நின்றிருந்த ஆளனின் மீது.

''குஞ்சாய்!! குஞ்சாய்!! நான் சொல்றதே கேளுடா.. குஞ்..''

சட்டென நெருங்கி, நொறுங்கி கிடப்பவளை ஆறுதலாய் கட்டியணைத்துக் கொண்டான் தீனரீசன்.

''விடு!! என்னே விடு!!''

அவன் பிடியிலிருந்து விலகிட முனைந்தாள் அரிவையவள்.

ரீசனோ மூச்சு முட்டிடும் அளவில் குஞ்சரியை நெஞ்சுக் கூட்டில் இறுக்கியிருந்தான். போராட்டங்கள் சில நிமிடங்கள் நீடிக்க, அழுது ஓய்ந்திருந்தவள் ஏறெடுத்தாள் காதலித்து கரம் பிடித்தவனை.

''என்னே இப்படி ஊனச்சியாக்கிட்டியே.. உனக்கு இப்போ நிம்மதிதானே!! சந்தோஷம்தானே!!''

ஆவேசத்தை தொண்டைக்குள் பதுக்கி, குரலில் அழுத்தத்தை கூட்டியவள் ரீசனின் ரவுண்ட் நெக் டி- ஷர்ட்டை கையிலிறுக்கி வன்மத்தை கக்கினாள்.

''குஞ்சாய்..''

என்றழைத்து, இல்லை என்ற வார்த்தையோடு வாக்கியத்தை தொடர்ந்திட கூட, ரீசனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை துவண்டிருந்த தாரகை.

''குஞ்சா..''

''பேசாதே!! பேசாதே!!''

அலறினாள் சத்தம் போட்டு, ட்ரிப்ஸ் கொண்ட கரங்களால் ரீசனின் கன்னங்களை அறைந்த அணங்கவள்.

செவுனிகள் சிவக்க அறைகள் வாங்கிய போதிலும், நெட்டிடையனின் நெஞ்சிலோ இனி மறந்தும் டிவோர்ஸ் மேட்டரை தன்னவள் பேசிட கூடாதென்றே வேண்டினான்.

''எல்லாம் உன்னாலதான்!!! உன்னால மட்டும்தான்!! எத்தனை தடவ கெஞ்சிருப்பேன்!! வேணான்னு சொல்லிருப்பேன்!! உன் கால்லே கூட விழுந்தேன்தானே!! தெரியாமே நடந்த போச்சுன்னு எவ்ளோ சொன்னேன்!! ஒரு தடவையாவது காது கொடுத்து நான் சொன்னதை கேட்டியா!! ஒரு ஐஞ்சு நிமிஷம் எனக்கு பாவம் பார்த்துருப்பியா!!!''

கதறி அழுதவள் தள்ளி விட்டாள் அவளோடு ஒட்டிக் கிடந்த ரீசனை தூரமாய்.

''ஐயோ!! ஐயோ!! ஐயோ!! இப்படி ஆகிப்போச்சே என் நிலைமை!! இதுக்கு நான் செத்தே போயிருக்கலாமே!! ஏன்டா!! ஏன்!! ஏன்!! என்னே காப்பாத்தனீங்க!! எதுக்கு!! ஒவ்வொரு நாளும் உன்கிட்டே கெஞ்சிக்கிட்டு நிக்கவா உதவிக்கு!!!

கால்களை அசைத்திட முடியாதவளோ, தலையில் அடித்துக் கொண்ட ஆவேசத்தோடு மூச்சிரைத்த சுவாசம் கொண்டு விழிகளை உருட்டி வெம்பினாள் அவளின் அவளை நிலைக்கு ரீசனே காரணமென்று பொங்கி.

''போடா வெளியே!! போ!! போயிடு!!''

தள்ளி விட்டாள் பலங்கொண்டு ரீசனின் முதுகை குஞ்சரியவள். சாதாரணமாய் அமர்ந்திருந்தவனோ நிஜமாகவே தடுமாறி விட்டான் மெத்தையிலிருந்து.

''நீ பிச்சை போட்டுத்தான் நான் வாழணும்னா.. அப்படிப்பட்டே வாழ்க்கையே எனக்கு தேவையில்லடா!! உன் உதவியிலதான் நான் வாழணும்னு நீ நினைக்கறே பாரு!! அதுக்கு நான் காலில்லாத முண்டமாவே வாழ்ந்திடுவேன்டா!!''

என்றவள் காரி உமிழ்ந்தாள், தரை நோக்கி விழ போனவனின் புற முதுகை வெறித்து.

''போடா!! போ!! என் கண்ணு முன்னுக்கு நிக்காதே!! போய் தொலை!! என்ன எப்படியாவது தலை முழுக்கிட்டு அந்த பரட்சி கூட கூத்தடிக்கத்தானே துடியாய் துடிச்சே!! இப்போ நானே உனக்கு விடுதலை கொடுக்கறேன்!! போ!!''

''குஞ்சாய்..''

என்றவன் வாய் ஆயிழையின் பெயரில் மட்டுமே நிறுத்தம் கொண்டது. வேறு வார்த்தைகள் பேசிட ஆணவனின் மனம் முன்வரவில்லை.

சுருக்கென்ற ஊசியாய் உல்லியின் வெளிப்பாடுகள் இருக்க, அதற்கு முழுக்க முழுக்க அவனே காரணமென்று தலைகுனிந்து குற்ற உணர்ச்சி கொண்டான் பார் ஓனர்.

''நீ என்னடா என்னே வேணான்னு சொல்றது!! நான் சொல்றேண்டா இப்போ!! நீ எனக்கு வேண்டாம்!!''

கட்டிலின் விளிம்பில் பாரியாளின் பத்து விரல்களும் ஈரம் பூத்த அனலாய் கொதித்திருந்தன.

''குஞ்..''

விழிகள் ரங்க ராட்டினம் ஆடிட, பேச முனைந்து நெருங்கியவனின் முகத்தில் மீண்டும் மங்கையவளின் எச்சில் கோலம்.

''குஞ்..''

துடைத்தவன் மீண்டும் ஏறெடுக்க, துப்பினாள் மறுபடியும் குஞ்சரியவள்.

இடக்கையால் முகத்தை வழித்தெடுத்தவனோ இடையிறுக்கி நின்றான் பொறுமைக்கொண்டு, கோபத்தின் உச்சியில் முத்தி போய் கிடந்தவளோ கழட்டி எறிந்தாள் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியை ஹீரோவை நோக்கி.

''நீயே வேணா.. இந்த தாலிக்கொடி மட்டும் எதுக்கு!! சீனுக்கா!!''

தங்கத்திலான தாலிக்கொடியை உள்ளங்கையில் இறுக்கியவனோ பெருமூச்சு கொண்டு அங்கிருந்து வெளியேறினான், மிழிகள் ரணத்தை உதிர்த்திட.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 18
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top