What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் இருபது

டென்மார்க்
குஞ்சரி அறை


உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள்.

''Christian!! What the hell are you doing!!''
(கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!)

சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ, ஆணவனை எரித்திடும் பார்வைகள் பார்த்தாள் இமைக்காது.

''What's wrong Mayu..''
(என்னாச்சு மயூ..)

புரியாதவனோ திடுக்கிட்டு கேட்க, விழிகளை அகல விரித்து ஆணவனை விழுங்கும் பார்வை பார்த்தவளோ மீண்டும் பொங்கினாள்.

''What's wrong!! You asked me what's wrong!!''
(என்ன தப்பா!! என்ன தப்புன்னு என்னையே கேட்கறியா!!)

அலறினாள் முகமென்ற பொங்க பானை சூடேறி கன்றிட குஞ்சரி.

''Mayu.. what happened!! why are you screaming!!
(மயூ.. என்னாச்சு!! ஏன் நீ சத்தம் போடுறே!!)

பாவம் செகண்ட் ஹீரோ. இப்போதும் அவனுக்கு விளங்கவேயில்லை, என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறதென்று.

''Get out Chris!! Get out from my room right now!!''
(வெளிய போ கிரிஸ்!! இப்பவே என் ரூம்லருந்து வெளிய போ!!)

சக்கர நாற்காலி நங்கையோ கையை கதவை நோக்கி காட்டி சத்தமாய் சொன்னாள் ஆக்ரோஷம் குறையாது.

''Woh!! Woh!! Woh!! Calm down Mayu!! Calm down!! I'm sorry.. I admit it's my mistake.. I should not try to kiss you without your permission.. I'm really sorry for that.. ok..''
(ஓஹ்!! ஓஹ்!! ஓஹ்!! அமைதியாகு மயூ!! அமைதியாகு!! என்ன மன்னிச்சிடு.. நான் ஒத்துக்கறேன் என் மேலதான் தப்பு!! உன் அனுமதியில்லாமே நான் உன்னே கிஸ் பண்ண முயற்சி பண்ணிருக்க கூடாது.. அதற்காக நான் ரொம்பவே மன்னிப்பு கேட்டுக்கறேன்..)

மதங்கியின் சினத்திற்கு காரணம் தன் செயலே என்றுணர்ந்தவன், தவறுக்கு மன்னிப்பு கேட்டு கோதையின் கோபத்தை குறைத்திட முனைந்தான். இருந்தும் பலனில்லை.

''My foot Chris!! My foot!!! Seriously Chris I didn't expect this from you!!! how could you can be so cheap!!''
(சத்தியமா இதை நான் உன்கிட்டருந்து எதிர்பார்க்கலே கிரிஸ்!!! எப்படி கிரிஸ் உன்னாலே இவ்ளோ மட்டமா நடந்துக்க முடிஞ்சது!!)

சக்கர நாற்காலி சுந்தரியோ, விடாது தாளித்தெடுத்தாள் கெஸ்ட் ரோல் ஹீரோவை. பொறுமை கொண்டவனுக்கும் ஒரு கட்டத்தில் கடுப்பு தலைக்கேறியது. அதுவும் தையல்காரியவள் அவன் மீது ஒழுங்கற்ற குற்றசாட்டை வைத்திட.

''One second Mayu!!! One second!! just wait!! Are you labelling me a cheap fellow just because I try to kiss you!!''
(ஒரு நிமிஷம் மயூ!!! ஒரே ஒரு நிமிஷம்!! உன்னே கிஸ் பண்ண வந்ததாலே என்னே தரங்கெட்டவன்னு முத்திரை குத்திட்டியா!!)

இடை இறுக்கி குறையா ஆத்திரத்தோடு கேட்டான் கிரிஸ்டியன்.

''Yes!! because I'm already married and mother of one kid!!''
(ஆமா!! ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிருச்சு!!! நான் ஒரு குழந்தைக்கு தாயும் கூட!!!)

''Mayu please!! you are going to divorce!!''
(மயூ ப்ளீஸ்!! உனக்கு விவாகரத்தாக போகுது!!)

மிக சாதாரணமாய் கிரிஸ்ட்டியன் சொல்லிட, கொதித்து போனாள் ரீசனின் தாரம். மூச்சிரைப்பு தூக்கலாய் கொள்ள வேள்வி கொண்டாள் தாட்டியவள்.

''what!!''
(என்ன!!)

''Soon you are no longer Mrs. Reesan..''
(இன்னும் கொஞ்ச நாள்லே நீ திருமதி ரீசனே இருக்க மாட்டே..)

இப்போதுதான் புரிந்தது குஞ்சரிக்கு. இக்குழப்பத்திற்கெல்லாம் காரணம் அவளின் தந்தைதான் என்று. இருந்தும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தாள் மடவரல் அவள்.

''Is that my dad is the one who behind of this crap!!''
(என் அப்பாதான் இந்த நாடகத்துக்கு பின்னாடி இருக்காரா!!)

அழுத்தமாய் ஆயிழையவள் கேட்க, கற்பூர புத்திக் கொண்ட கிரிஸ்டியன் பதில் வேள்வியை முன் வைத்தான்.

''Is that your dad lying..''
(உன் அப்பா பொய் சொல்றாரா என்னே..)

சுக்கு நூறாய் உடைந்தாள் தேவகுஞ்சரி. தெரியும் அவளுக்கு நம்பிக்கு கணவன் ரீசனை சுத்தமாய் பிடிக்காதென்று. இருந்தும் இந்தளவிற்கு செல்வார் என்று மகளவள் கனவிலும் நினைக்கவில்லை.

''No point I'm lying..''
(நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லே..)

தீர்க்கமாய் கிரிஸ்டியன் அவன் சொல்லிட, நீண்ட பெருமூச்சு கொண்டவள் கூர்மையான பார்வை கொண்டு தொடர்ந்தாள்.

''I'm still Reesan's wife and always will be his wife whatever it's happen!! the tied up gold thread by him will be taken off from my neck only when my times come!!''
(நான் இப்பவும் ரீசன் பொண்டாட்டித்தான்.. எப்பவும் அவன் பொண்டாட்டித்தான் என்ன நடந்தாலும்!! அவன் கட்டுனே இந்த தங்கத்தாலி எனக்கான நேரம் வரும் போதுதான் என் கழுத்துலருந்து இறங்கும்!!)

குஞ்சரியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கிரிஸ்டியனை சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. முதலில் புரியாதவனுக்கு நேரங்கடந்த தொடர் விவாதங்களில் எல்லாம் புரிந்து போனது.

முழுசாய் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல ஏமாந்தவன், ஏமாற்றத்தை வெளிப்படையாகவே காட்டினான்.

''Your father is the real culprit Mayu!! I think you should continue with your husband and be careful with the old cringe!! That old man won't stop!! Better avoid him from your marriage life!! Good luck!!''
(உன் அப்பாதான் நிஜமான வில்லன் மயூ!! நான் நினைக்கறேன் நீ உன் ஹஸ்பண்ட்டோட சேர்ந்து வாழறதுதான் சரி!! அப்படியே உன் அப்பாக்கிட்டே கொஞ்சம் கவனமா இரு!! அவர் கண்டிப்பா இதோட நிறுத்த மாட்டாரு!!! முடிஞ்சா அவரே உன் கல்யாண வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்கிறது நல்லது!! வாழ்த்துக்கள்!!)

சொன்னவன் அடுத்த நொடியே நடையை கட்டினான் அதற்கு மேல் அங்கிருப்பது வீணென்று. இம்முறை வழமையான கட்டிப்பிடியோ கையாட்டலோ கூட கிடையாது குஞ்சரியிடமிருந்து ஆணவனுக்கு.

''Chris..''
(கிரிஸ்..)

அழைத்தாள் தெரிவையவள் வெறுமையை முகத்தில் சுமந்து அறையைக் கடந்தவனை நோக்கி.

''Are will still friends..''
(நாமே இன்னும் நண்பர்களா..)

வஞ்சியின் கேள்விக்கு திரும்பாமலே பதில் சொல்லி கிளம்பினான் கிரிஸ்ட்டியன்.

''Let the time answer it..''
(காலம் பதில் சொல்லட்டும்..)

வெள்ளைக்காரன் அவன் கிளம்ப, இனி கெஸ்ட் ரோலுக்கு வேலையும் இல்லாமல் போனது. அப்பாவின் கேவலமான திட்டத்திற்கு கட் அண்ட் ரைட்டாக முற்றுப்புள்ளி வைத்தாள் பெண்டு அவள்; செத்தாலும் ரீசன் ஒருவனே என சொல்லி முகத்தில் அடித்தாற்போல.

இனியும் இது போன்ற கள்ளத்தனங்களின் ஈடுபட்டால் அப்பா மகள் என்ற உறவே இல்லாது முற்றிலும் அறுந்து போகும் என்று வேறு கடுமையாக எச்சரித்தாள். குஞ்சரியவள் காது கொடுத்து கேட்கவே இல்லை நம்பியின் எவ்வித விளக்கத்தையும்.

நெட்டையன் அவனை வெறுத்திடவும் முடியாது, சேர்ந்து வாழ்ந்திடவும் முடியாது; உள்ளுக்குள்ளேயே நரக வேதனையை அனுபவித்த அணங்கவளோ பலமுறை தற்கொலைக்கு முயற்சித்து கைவிட்டாள்.

நம்பியின் திட்டத்தை முறையடித்த கடவுளோ, தம்பதிகளுக்கு வேறொரு ட்ராக்கை போட்டுக் கொடுத்தார்.

*

மலேசியா


ரீசனோ வழக்கம் போல் பாரில் குடியும் குடித்தனமுமாய் இருக்க, அனிச்சலோடு வந்து சேர்ந்தான் சீனப்பையன் வீர் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிட.

டைகர் பீர் கொண்ட டவர் ரெண்டு ரவுண்டு முடிய, ஜிஞ்ஜர் பஜாரியின் ஓயாத போன் தொல்லையால் நண்பர்களிடமிருந்து விடைபெற்றான் வீர். பிறந்தநாள் பையனுக்கு மீகன் முடிந்தவரை கம்பெனி கொடுத்து, விடியற்காலை நான்கிற்கு கிளம்பினான் வீட்டிற்கு.

என்னதான் கணக்கு வழக்கில்லாமல் டைகர் பீர் உள்ளே இறங்கியிருந்தாலும், ரீசனுக்கு போதை மட்டும் ஏறியப்பாடில்லை. ஆணவனின் எண்ணமெல்லாம் குஞ்சரியே நிறைந்திருந்தாள்.

காதலோ வெறுமனே ஏங்கியது இரு ஜோடிகளின் பிரிவினை எதிர்கொண்டிட முடியாது. மரணத்திற்கு ஈடனான வலியை குஞ்சரியின் பிரிவில் உணர்ந்தான் ரீசன்.

காலை ஆறு மணிக்கு மனை வந்துச் சேர்ந்தவன் குளியலை போட்டு மெத்தை சரிந்தான். தூக்கம் சொருகிய விழிகளுக்குள் குஞ்சாய் அவளின் முகமே கோலாட்டம் கொண்டது.

சிணுங்கியது தலையணையோரம் கிடந்த ஒல்லி பையனின் போன். மிழிகள் திறவாது அழைப்பிற்கு பதிலளித்தான் ரீசன்.

''ஹலோ..''

தூக்க கலக்கத்தில் ஹீரோ சொன்ன ஹலோ, மறுமுனையை கரைத்தது.

''ஹேப்பி பர்த்டே..''

என்றப்படி ஒலித்தது இனிமையான குரலொன்று.

''குஞ்சாய்..''

என்றவன் படக்கென்று விலோசனங்களை திறந்தப்படி எழுந்தமர்ந்தான் மஞ்சத்தின் விளிம்பில்.

''ஹேப்பி பர்த்டே..''

தழுதழுத்தது குஞ்சரியின் தொனி. ரீசனின் குரல் கேட்ட மாத்திரமே கத்தி கதறத்தான் தோன்றியது வதுகைக்கு. இருந்தும் ஆர்பரித்திட துடித்த மனதை அடக்கிக் கொண்டாள் பேதையவள்.

''குஞ்சாய்.. எப்படி இருக்கே..''

நெஞ்சம் படபடக்க, கலங்கிய அம்பகங்களை விரல்களால் துடைத்துக் கொண்டான் ரீசன்.

''ஹேப்பி பர்த்டே..''

மீண்டும் சொன்னாள் குஞ்சரி, குட்டியான அழகு தலையணையை நெஞ்சோடு இறுக்கி.

''நல்லாருக்கியா குஞ்சாய்..''

விழி நீர் வழிந்திறங்க கேட்டான் ரீசன்.

''ஹேப்பி பர்த்டே..''

மீண்டும் மீண்டும் அதே வாழ்த்து குஞ்சாயிடமிருந்து, கொஞ்சம் விசும்பலோடு.

''உனக்கு அங்க டிரீட்மெண்ட் ஓகே தானே..''

தன்னவள் படும் துன்பத்தை வேறெப்படி விசாரிப்பதென்று தெரியாது, மறைமுகமாக கேட்டான் ஜூனியரவன்.

''ஹேப்..''

குலுங்கி கதறினாள் குஞ்சாய். முடியவில்லை அவளால். மடை திறந்த வெள்ளமாய் பெருக்கெடுத்து விட்டாள்.

''திரும்ப வந்துடுடி குஞ்சாய்.. பிளீஸ் சீனியர்.. எனக்கு ஓரே ஒரு சான்ஸ் கொடுங்க சீனியர்..''

உடைந்தவன் வார்த்தைகளை உதிர்த்து, சரிந்திறங்கி தரை அமர்ந்தான்.

அனுபவ பாடம் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல்தான். பிரிவில்தான் உணர்ந்துக் கொண்டாள் ஆட்டியவள், ரீசனின்றி ஓரணும் அவளுக்கு அசையாதென்று.

வெறுப்பல்ல வெறும் ஊடலே என்பது ஒவ்வொரு முறையும் கிரிஸ்டியனின் சம்பவம் கண் முன் வந்து போகி, பூவையின் உடல் தீக்குளிக்க உணர்ந்துக் கொண்டாள்.

தற்கொலைக்கு முயன்றிட துணிந்தவள், எப்படியும் ரீசனோடு வாழ்ந்திட ஒருமுறையாவது வாழ்ந்திட முயற்சித்தே ஆகணும் என்ற நிர்பந்தமான முடிவினை அவளின் தன்மானத்தோடு போராடி எடுத்தாள் கற்பாள் அவள்.

தப்பு யார்தான் செய்யவில்லை. அதை உணர்ந்து தன்னிலையை திருத்திக் கொள்பவர்களே வாழ தகுதி கொண்டவர்கள் என்று நம்பினாள் பாரியை.

அந்த நம்பிக்கையிலேயே குறையாத காதல் கொண்டு பிழிந்தெடுத்தாள் ரீசனை கட்டியவள்.

''அறிவிருக்காடா ஜூனியர்!! சீனியர் எனக்குத்தான் ஈகோ ஜாஸ்தி.. உனக்கெங்கடா போச்சு புத்தி!! சீனியரே தேடி வரணும்.. சோரி கேட்கணும்!! அசிங்கமா திட்டி துரத்தி விட்டாலும் கால்லே விழுந்தாவது கரைட் பண்ணணும்னு ஏன்டா உனக்கு தோனலே!!''

கதறியவள் நிறுத்தம் கொள்ள இடைவெளியாய், சட்டென குறுக்கிட்டவனோ சொன்னான்.

''ஐ லவ் யூடி குஞ்சாய்!!''

அவ்வளவுதான் தேவகுஞ்சரியின் அழுகாச்சி முகம் அழகு முகமாகி போனது. பூரிப்பு முகத்தில் தாண்டவம் கொள்ள செல்ல சண்டை கொண்டாள் கணவனிடத்தில்.

''மடையா!!! மடையா!! நேர்லதான் பார்க்க வர துப்பில்லே!! போன்லையாவது கெஞ்சி கூத்தாடி என்னே சமாதானம் பண்ணிருக்கலாம்லே!!''

''ஜூனியர் மக்குன்னு தெரியாதா சீனியர்!!''

சிரிப்பின் ஊடே சமாளித்தான் ரீசன், விடிந்ததும் முதல் வேலையாய் டென்மார்க்கிற்கு டிக்கெட்டை போட எண்ணி.

மலேசியாவிலிருந்து குஞ்சரியிருக்கும் ஊருக்கு செல்ல ஏறக்குறைய 13 மணி நேரங்கள் ஆகிடும்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் அங்கு காலை என்றால் இங்கே மாலை என்றிருக்கும். டென்மார்க்கை விட மலேசியா 7 மணி நேரம் முன்னோக்கி இருக்கும்.

ஒப்பாரியெல்லாம் ஓரம் போக, சக்கரபி நாற்காலி பத்தினியோ பழைய அதட்டல் குரல் கொண்டாள்.

''அதான் தெரியுமே!! லொகேஷன் ஷேர் பண்ணி பத்து நிமிஷமாகியும் ப்ளூ டிக் (blue tick) விழாமே இருந்தப்பவே!! எருமே!! எருமே!! இப்போ என்னடா தூக்கம் உனக்கு அதுவும் இந்த நேரத்துலே!! எப்போதும் இத்தனை மணிக்கெல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டுதானே இருப்பே!!''

மணவாளியவள் உரிமையோடு கடித்து துப்ப, பதறி டக்கென்று செவியிலிருந்த போனை கைக்கு கொண்டு வந்து வாட்ஸ் ஆப்பை திறந்தான் ரீசன்.

அவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை. பொலிவற்றவனின் முகம் பளிச்சிட்டது அந்த தேவதாஸ் கோலத்திலும்.

''ஜூனியர் சார்.. வெயிட் பண்ணவா.. இல்லே.. வந்த வழியாவே போயிடவா..''

குஞ்சரியின் குரல் நக்கல் கேள்வியாய் ஒலிக்க, ரீசனோ அலறினான் குளியலறைக்குள்ளிருந்து.

''ஏய்!! குஞ்சாய்!! குஞ்சாய்!! ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணுடி!! ஓடி வந்துடறேன்!!''

என்றவனோ போனை கையில் இறுக்கியப்படி ரவுண்ட் நெக் டி- ஷர்ட் ஒன்றை எடுத்து மாட்டி பரபரவென வெளியேறினான் வீட்டிலிருந்து.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 20
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top