What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 21

தீனரீசன் தேவகுஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை


இரவுகள் வெலவெலத்து போக, வற்றாத காதலை ஆசைதீர பேசிய இரு தேகங்களும் இளைப்பாறி கிடந்தன மஞ்சத்தின் மேல்.

ஆணவனோ பல நாட்களுக்கு பிறகு ஏகாந்த நித்திரையை தழுவியிருக்க, தாரமோ துயில் கொள்ளா மிழிகளோடு மலங்க மலங்க விழித்துக் கிடந்தாள்.

ரீசனின் மார்பில் துஞ்சிக் கிடந்த தலையை மெதுவாய் மங்கையவள் நகர்த்திட, நங்கையின் விலகலை உணர்ந்தவனோ சிறு சிணுங்கலோடு அசைந்தான்.

இதான் சாக்கென்று சீமாட்டியவள் முழுதாய் அவனிடமிருந்து ஒதுங்கி படுக்க, ஜூனியரோ போர்வைக்குள் முழுசாய் மூழ்கி காணாமல் போனான் குப்பிற படுத்தப்படி.

திறந்திறந்த பால்கனி கதவை பஞ்சணையின் மீதிருந்தபடி வெறித்தாள் குஞ்சரி. இதமாய் சில நினைவுகள் நெஞ்சை வருடி சென்றன. இதழோரம் வெட்க புன்னகை துளிர்க்க, பக்கத்தில் படுத்திருந்த சுள்ளானின் கேசத்தை விரல்களால் வாஞ்சையாக வருடினாள் வதனியவள்.

பயத்தை போக்கிட இருளை கடந்திட வேண்டும். அதுபோலத்தான் ரீசனின் மேல் குஞ்சரி கொண்ட வெறுப்பும். ரீசனோடு இருப்பதொன்றே துணைவியவளின் ரணங்களுக்கு அருமருந்தாகும்.

தம்பதிகள் இருவரும் எப்போதுமே அப்பால்கனி கதவை சாத்தியதில்லை. என்னதான் ஏசி அறையென்றாலும் நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த ரீசனுக்கு குளுகுளு வெளிக்காற்றுதான் நிஜமான ஏசி.

மின்னல் கீற்றுகள் பளிச்சிட, குஞ்சரிக்கு பால்கனியில் சென்று அமர்ந்துக் கொள்ள தோன்றியது. பொழிய போகின்ற மாரியில் நனைந்திட ஆசைக் கொண்டாள் ஆயிழையவள்.

அதுதான் குறைச்சல் இப்போது என்று சொந்த உள்ளமே அவளை வசைப்பாடி வேதனைக்குள்ளாக்கியது. இனி நிராசைகளுக்கு மட்டுமே தான் லாயிக்கு என்ற பட்டத்தை அவளே தன்னிச்சையாக சூட்டிக் கொண்டாள்.

தடதட சத்தம் காதுக்கு இனிமை சேர்த்தது. பெளர்ணமி நிலவை இன்னும் எழிலாக்கியது கொட்டிய அடிதூற்றிய மழை.

முன்னமே ஆரம்பித்த மழை, தொடங்கிய அரை மணி நேரத்திலே நிறுத்தம் கொண்டு, சூட்டை கிளப்பி விட்டது. இப்போது மறுபடியும் ஸ்டார்ட்டாகி விட்டது.

ரீசனை தொந்தரவு செய்திட மனம் வரவில்லை குஞ்சரிக்கு. கூடவே, மழையின் தூவல்களை ரசித்து விளையாடிடவும் கொள்ளை விருப்பமாய் இருந்தது.

ஆகவே, வீட்டாள் அவளே சத்தமின்றி பால்கனி நோக்கி பயணிக்க முடிவெடுத்தாள். கண்டிப்பாய் அவளுக்கு ரீசனின் உதவி தேவை சக்கர நாற்காலியில் அமர்ந்திட.

அதனால், சக்கர நாற்காலி ட்ராவலிங்கை தூக்கி கிடப்பில் போட்டாள். என்னதான் அது மின்சார வகையைச் சார்ந்த நவீனமான சக்கர நாற்காலியாகினும்.

இடக்கரத்தை தரையில் ஊன்றி, உடலையே தரை நோக்கி சாய்த்தாள் குஞ்சரி. ஏற்கனவே, கீழே போட்டு வைத்திருந்த பெட்ஷிட்டின் மீது உணர்வற்ற இருகால்களோடு சேர்த்து தரை சரிந்தாள் நாச்சியவள்.

பொத்தென்ற சத்தம் மிதமாக கேட்டாலும், பட்டென தலையை குனித்துக் கொண்டவள்; ஒரு எட்டு கபாலத்தை தூக்கி ரீசனை நோட்டமிட்டாள். எல்லாம் ஒரு பயம்தான், எங்கே மணாளன் விழித்துக் கொள்ள போகிறான் என்று.

ஜூனியர் அவனோ இடியே விழுந்தாலும் எழாத தூக்கத்தில் லயித்திருந்தான். பெருமூச்சோடு நெஞ்சிலிருந்த கையை கீழிறக்கினாள் குஞ்சரி.

ஜில்லென்ற பளிங்குத் தரையில் அழுத்தமாய் உள்ளங்கைகளை ஊன்றி, கொஞ்சங் கொஞ்சமாய் பாம்பாய் ஊர்ந்து; பயணித்தாள் பால்கனி நோக்கி மடவோள் அவள்.

ஜோவென்ற மழை மதங்கியின் மேனியில் சாரல்களை படர விட்டது பேய்கின்ற சாக்கில். பால்கனி விளிம்பில் இடத்தோளை ஒட்டிக் கொண்டவள், ஒருவாரியாய் சமாளித்து கால்களை நேராக இழுத்து நீட்டி அமர்ந்தாள்.

மழையின் திவலைகள் அருணியின் சொரணையற்ற கால்களில் பட்டுத் தெறித்து பாவையவளின் முகத்தில் பூத்தன மொட்டுகளாய். துள்ளிக் குதித்த முயலாய் சுற்றி திரிந்தவள், முடங்கிய மயிலாய் ஓரிடத்தில் தஞ்சம் கொண்டாள்.

அதான், மழைக்கூட இம்முறை வழக்கத்திற்கு மாறாய் வேகமாய் பெய்ததோ என்னவோ ஆயந்தியை நனைத்திட.

டென்மார்க்கிலிருந்து வந்த நாள் தொடங்கி சில நேரங்களில் மட்டுமே சரியாய் இருந்த குஞ்சரி பல நேரங்களில் அழுகாச்சியோடுதான் இருந்தாள். முரட்டுத்தனம் கொண்டு ரீசனை தாக்கிய சம்பவங்களும் உண்டு.

தனிமை அவளை பெரிதும் பாதித்தது. ஆதலால், ரீசன் முடிந்த வரைக்கும் அவளுடனே இருந்திட சம்மதித்தான். குஞ்சாயியை சீக்கிரம் தேறி வர வேண்டி ஒருக்காலும் அவன் அவசரப்படுத்தியதில்லை. காலத்தின் பின்னே ஓடினான், தானாய் எல்லாம் சரியாகிடும் வரை பொறுத்து.

உணர்ச்சி பிழம்புகள் மொத்தமாய் தவிடு பொடியாகிய இடைக்கு கீழான பகுதியில், தாம்பத்தியத்தை கூட உணர முடியாத பாவியாகிய குஞ்சரிக்கு; பெண்மையில் ஏற்படும் கிளர்ச்சியைக் கூட சுகித்திட முடியா நிலையே.

இப்படியான குற்ற உணர்ச்சி நெஞ்சை துண்டாக்கிடும் தருணங்களில் குஞ்சரி கோபத்தின் உச்சிக்கே போயிடுவாள். ரீசனோடு பேசாது முரண்டு பிடிப்பாள். இப்போதும் அதையேதான் செய்துக் கொண்டிருக்கிறாள்.

கூடலின் ஒவ்வொரு நொடியிலும் நாயகியின் நாணம் கொள்ளும் சிணுங்களையும் முனகலையும் அணு அணுவாய் ரசித்தவனுக்கு, இனி வாழ்நாள் முழுக்க போலியான சுகந்தத்தை மட்டுமே பேதையவளால் தந்திட இயலும் என்ற கசப்பை நினைக்க நினைக்க செத்துவிட தோன்றியது தெரிவையவளுக்கு.

வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது தேவகுஞ்சரிக்கு டென்மார்க்கிலிருந்து. வாராது இருந்திருந்தால் ஒரு வேளை ரீசன் இந்நேரத்திற்கு விசாகாவுடனாவது சந்தோஷமாய் புது வாழ்க்கையை ஆரம்பித்திருப்பானோ என்று தோன்றியது.

சம்பையை போல சடீரென்று தோன்றிய எண்ணத்தை பெட்ரோல் ஊற்றி கொழுத்திட தோன்றியது ரீசனின் பரவைக்கு.

தலையில் அடித்துக் கொண்டாள் குஞ்சரியவள், கணவனின் மீது கொண்ட காதலால் அவனை யாருக்கும் விட்டு கொடுத்திட இயலாது; அவளே இயலாமல் போயிருந்தாலும்.

''என்ன காதல் இது!! அவனையும் வாழ விடாமே.. என்னையும் இப்படி ஆக்கிட்டு!! எதுக்கு இப்படியெல்லாம்!! அவன் வேறே பொண்.. பொண்ணு..''

கதறிய காரிகையின் வழிந்திறங்கிய கண்ணீரோடு, தெறித்த மழை திவலைகள்; ஒன்றாகி கொண்டன.

வார்த்தைகளில் கூட ரீசனை குடும்பினியால் மற்றொரு பெண்ணோடு சேர்த்து பேசிட முடியவில்லை. கடவுளின் ஒரவஞ்சனையால் பாதிக்கப்பட்டவள் நேத்திரங்களை மூடி அவர்களின் பிரிவிற்கு பின்னாடியான முதல் சந்திப்பை நினைவுக் கூர்ந்தாள்.

*

காதல் மிக பொல்லாதது.

சிலரை வாழ வைக்கும், பலரை வாழ வழியில்லாது போக வைக்கும்.

ஊடையவள் காத்திருக்கும் இடம் போய் சேரும் வரை இருவரும் போனில் கதைத்தப்படியே இருந்தனர்.

அரை மணிநேரம் பதினைந்தாகி போனது.

''வந்துட்டியா.. இவ்ளோ சீக்கிரமாவா..''

கேட்டாள் குஞ்சரி, அறிவிப்பு சத்தத்தின் எதிரொலி மறுமுனை போனில் இருந்தவளுக்கு கேட்க ஆர்வமாய்.

இருக்காதா பின்னே, எத்தனை மாதங்கள் கடந்தாயிற்று இருவரும் சந்தித்து. அதுவும் இருவரின் பிரிவென்னவோ நல்ல விதமாய் கூட இல்லையே.

ஆகவே, இச்சந்திப்பை எல்லாவற்றிக்கும் சேர்த்து ஈடுகட்டிட நினைத்தாள் குஞ்சரி.

''டேய் ஜூனியர்.. ஒழுங்கா சொல்லுடா.. கொன்னுடுவேன் உன்னே..''

''நீங்கா கொல்லறதா இருந்தா எத்தனை தடவே வேணும்னாலும் சாக ரீசன் ரெடி சீனியர்..''

நக்கல் வாய் முழுதும் பல்லை கடை பரப்பியிருந்தாலும், தொனியில் மட்டும் சிரிப்பை கொண்டான் ரீசன்.

''பேச்சை மாத்தாதடா ஜூனியர்!! அதான் நல்லாவே கேட்குதே அனவுன்ஸ்மெண்ட் (announcement) சத்தம்..''

காரை விமான நிலையத்தின் முன் வளாகத்திலேயே பார்க் செய்தவன், அரக்க பறக்க ஓடினான் விமான நிலையத்திற்குள்.

''நீங்க ரொம்ப ஷார்ப் சீனியர்..''

என்ற கணவனோ கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிடாமலே தேடி கண்டான் பொண்டாட்டியை.

''டேய்.. டேய் ஜூனியர்..''

அலைப்பேசி முனையில் குலியவள் கணவனை செல்லப்பெயர் கொண்டு தொடர்ந்தழைத்தாள் விழிகளால் ஆளனை தேடி.

''சீனியர் மேடம்..''

கேட்டது மனம் கவர்ந்தவனின் குரல் செவியோரம். தலையை திருப்பியவள் முன் தீனரீசன், மண்டியிட்டப்படி.

கையிலோ சாமந்தி பூக்கள் நிறைந்த கொத்து. குஞ்சாய் வியப்போடு அவனை ஆழ்ந்து நோக்கிட, இமைகளை சிமிட்டியவனோ நீட்டினான் கையிலிருந்த மலர் கொத்தை அலரவளிடத்தில்.

படக்கென்று அதை வாங்கி தூரம் போட்டவள், புருஷனின் அதிர்ச்சி குறையும் முன் அவன் டி- ஷர்ட்டை இழுத்து இயமானியின் இதழ்களை ஆளனின் அதரங்களில் ஒற்றினாள்.

ஆயந்தியின் சூடான கண்ணீர் வழிந்திறங்கியது இருவரின் உதட்டு கோர்வையில் ஊடுறுவி. ரீசனின் முகத்தை இருக்கரங்களுக்குள் பத்திரப்படுத்தியவளோ, மிதமான விசும்பலின் ஊடே மெல்லிய கதறல் கொண்டு சொன்னாள்.

''வேறே மாப்பிளை பார்க்கே ஆரம்பிச்சிட்டாரு நம்பி.. அவர் பொண்ணுக்கு..''

மூடிய கண்களை படக்கென்று திறந்தான் ரீசன். சொடக்கிடும் நொடியில் இதயமே நின்று போனது அவனுக்கு. மணவாட்டியவளோ, நாசி ஒட்டிய முகத்தோடு அனல் மூச்சு வாங்க தொடர்ந்தாள்.

''உங்க திருப்திக்காக ஆயிரம் மாப்பிளை வேணும்னாலும் பார்த்துக்கோங்க.. ஆனா.. உங்க பொண்ணுக்கு எப்போதுமே ஒரு புருஷன்தான்.. அது தீனரீசன்தான்னு சொல்.. சொல்லிட்டு..''

வந்துவிட்டேன், எல்லாவற்றையும் தூக்கி எரிந்து என்றவள் முடிப்பதற்குள் தன்னவளை காதலோடு இறுக்கமாய் கட்டியணைத்துக் கொண்டான் ரீசன்.

''நான் உனக்கு பாரம் இல்லல்லே..''

நெஞ்சம் வெம்பி கேட்டவளை அணைப்பிலிருந்து விலக்கி எழுந்தவன் சிறு முறுவல் கொண்டு சொன்னான்.

''இப்போ சொல்றேன்..''

என்றவன் ஒரே தூக்காய் தூக்கினான் அவன் குஞ்சாயியை கைகளில்.

ஏர்போர்ட் சம்பவத்தை நினைத்திருந்தவளின் இடைக்கு மேலே சில விரல்கள் படியேறிட, விடுக்கென்று விழிகள் விரித்தவள் முகம் தாமரையாய் மலர்ந்தது.

கட்டியவளின் இருகால்களையும் தூக்கி தொடைகளைத் தாண்டிய முதுகுக்கு பின்பக்கமாய் போட்ட ரீசன், வல்லபியின் இடையை இருக்கரங்களால் பற்றி அவன் மீது அவளையே அமர்த்திக் கொண்டான்.

''என்னே புதுசா.. தனியா.. என்னே விட்டுட்டு.. பால்கனி விசிட்..''

முகிழ்நகை கொண்டு ரீசன் பொஞ்சாதியவளை வம்பு பண்ணிட, மிழிகளால் காதல் கணவனை சிறை பிடித்தவளோ; அவன் வலகன்னத்தை விரல்களால் மென்மையாய் வருடினாள்.

''என்னே ரொம்ப லவ் பண்றியா ரீசன்..''

கேள்விக்கு பதிலை இதழ்கள் வழி சொன்னான் ஜூனியரவன்.

ரீசனின் இருக்கர பிடியில் இருந்தப்படி, வெறுமனே உடலை பின்னோக்கி சாய்த்து கிடந்தாள் குஞ்சரி; சிலிர்க்க முடியா நிலையிலும்.

தம்பதிகளின் கீரிடை எப்போதுமே குஞ்சரியின் இடை எலும்பு முத்தத்திலிருந்துதான் ஆரம்பிக்கும். இம்முறையும் அப்படியே.

ஆனால், கிறங்கிட வேண்டியவளோ பட்டு போய் கிடக்க, இன்ப சுரத்திற்கு பதிலாய், கரை புரண்ட கண்ணீரோ; அம்பகங்களை தாண்டி நாசியில் பயணித்து குழலில் முற்றுகை இட்டது.

திட்டிகளால் தாரகையவளை ஏறெடுத்தவனோ, அதரங்களை மெதுவாய் பிரித்தெடுத்தான் குஞ்சரியின் இடுப்பு எலும்பிலிருந்து.

''இந்த சொரணைக்கெட்ட குஞ்சரி உனக்கு வேணாம்டா ஜூனியர்!! பிரயோஜனமே இல்லாத இந்த உடம்பு உனக்கு எந்த சுகத்தையும் கொடுக்காதுடா!! சொன்..''

குஞ்சரியின் வார்த்தைகள் சடன் பிரேக் போட்டு நின்றன, ரீசனின் செயலில். கிளர்ச்சி என்னவோ இடைக்கு கீழேதான் வெர்க் ஆகவில்லை. மேல் மாடியெல்லாம் சூப்பராகவே வேலை செய்தது.

ரீசனின் உதடுகள் ஊடையாளின் இடை எலும்புக்கு மேலேறி நாபியில் முத்திரை கொண்டது.

''சொன்.. சொன்.. சொன்னா கேளு..''

தகிப்பினில் தத்தளித்தாள் தாரமவள்.

''நான் உனக்கு வே..''

தவித்தவளின் வாய் குழறியது, புருஷனின் குறும்புகள் எல்லை மீறிட.

கேலி புன்னகையை உதிர்த்த ரீசனோ, ஏறெடுத்த விலோசனங்களை அவன் குஞ்சாயியின் மீது பதித்தான்.

வெறும் மழை அடை மழையாக, ரீசனின் கேசத்துக்குள் இருக்கரங்களையும் நுழைத்த அகமுடையாளோ கொஞ்சங் கொஞ்சமாய் மேலெழும்ப; கணவனவனோ மன்மதனாகி அவளை காதல் கொண்ட காமத்தில் மூழ்கிட வைத்தான்.

பல முத்தங்கள் வைத்தாள் குஞ்சாய் ஜூனியரின் முகத்தில். அவனை நெஞ்சோடு சேர்த்திறுக்கி கொண்டு.

''உன்னே தவிரே வேறே எதுவுமே எனக்கு முக்கியமில்லடா!! எங்கப்பா.. கீத்து எல்லாரை விடவும்!!! நீயில்லன்னா கீத்துவே இல்லடா!!''

''நான் மட்டுமா..''

என்றவனின் விரல்கள் அடுத்தடுத்த ஆக்கிரமிப்புகளை நிகழ்த்திட, நாணம் கொண்ட நங்கையோ சிவந்து சொக்கினாள்.

அவளுக்கு வசதியாகவே அனைத்து சேவகங்களும் நடந்தேறியது. வழுக்கிடும் பளிங்கில் சரிந்து கிடந்த ஆணவனின் மார்பில் விழுந்து கிடந்த குஞ்சரியோ கேட்டாள் கண்களை மூடிக் கொண்டு.

''பூவெல்லாம் கொடுத்தியே அன்னைக்கு.. யார் உனக்கு பூ கொடுத்தா அத்தனை மணிக்கு..''

குஞ்சரியின் நெற்றியில் முத்தம் வைத்தவனோ சொன்னான் சிரித்து.

''மேடமே.. இம்ப்ரஸ் பண்ணே அதைவிட வேற நல்ல ஐடியா கிடைக்கலே.. அதான்.. அம்மா சாமிக்கு வாங்கி வெச்சிருந்தா கொத்து பூவே தூக்கிட்டு வந்துட்டேன் சீனியர்..''

கலகலவென்று சிரித்து விட்டாள் குஞ்சாய், அவன் வெற்று மார்பில் குத்தி.

ஆயிழையின் ஆன்மாவிற்குள் மீண்டுமொருமுறை சஞ்சரிக்க, குஞ்சாயின் மேனியில் நா கொண்ட தேடலை தொடங்கினான் ரீசன்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 21
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top