- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் இருபத்தி இரண்டு
தீனரீசன் தேவகுஞ்சரி வீடு
அடுக்களை
சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய்.
கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர் அடிக்கடி ரீசன் குஞ்சாய் இல்லம் வந்து போவார்.
ரீசன் இப்போதெல்லாம் ராவில் கூட மதுக் கூடத்தின் பக்கம் அவ்வளவாய் போவதில்லை. எந்நேரமும் குஞ்சரியுடனே வாசம் செய்தான்.
கல்யாணங்கட்டி குட்டி ஒன்று போட்டதை மறந்து, காதல் ஜோடியாய் தம்பதிகள் இருவரும் தினம் லோங் ட்ராவல் பயணத்தில் ஊர் சுற்றினர்.
குஞ்சரிக்கு காரில் சும்மாவே தூர பயணம் போவது பெரும் அலாதியாகும். ஜன்னலை திறந்து வைத்து, சுற்றிரே எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது அவளின் வாடிக்கையாகும்.
அலறியது ஆணவனின் கைப்பேசி. பார்வையை இன்கம்மிங் காலில் (incoming call) பதித்தவன் கழுவிய கைகளை துடைத்துக் கொண்டான், மார்னிங் டவலால். அது வேறென்றுமில்லை, ரசத்தை ருசி பார்த்திருந்தான் ரீசன்; அவ்வளவே.
போனை காதில் வைத்தவன், தாய் அம்பாள் சொன்ன விடயத்தில் கடுப்பாகி போனான்.
''என்னம்மா விளையாடறீங்களா!! அதெல்லாம் முடியாது!!''
கடுகடுத்தான் நெட்டையன் முகம் இறுக.
''என்னடா முடியாது!! ஆஹ்!! என்னே முடியாது!! உனக்காக புள்ளே பெத்தவடா அந்த பொண்ணு!! பார்க்க போனா.. நீ பண்ணே காரியத்துக்கு அவளை நீதான்டா வெச்சு பார்க்கணும்!! ஆனா.. இங்கெல்லாம் தலைகீழாலே இருக்கு!!''
அம்பாள் கொஞ்ச நேரத்திற்கு காளியாத்தாவாக மாறி போக, அம்மா போட்ட போட்டில் செருப்பால் அடித்ததை போலுணர்ந்தான் ரீசன்.
என்ன சொன்னாலும் சரி, செஞ்சாலும் சரி; உண்மையை மாற்ற முடியாதென்று அறிந்தவன் பிரச்னைக்கு முடிவு காண்பதை விட்டுவிட்டு கழண்டிக்கவே பார்த்தான்.
''மா பிளீஸ்!! நீங்க என்ன சொன்னாலும் சரி!! விசாவே இந்த வீட்டுலே தங்க வைக்க முடியாது!! அதுவும் குஞ்சரி இங்க இருக்கும் போது.. வாய்ப்பே இல்லமா!!''
தீர்க்கமாய் மகன் சொல்ல, அதிர்ந்த அன்னையோ வருந்தி கேட்டார்.
''என்னடா ரீசா இப்படி மனசாட்சியே இல்லாமே பேசறே!! குஞ்சரி மட்டும்தான் பாவமா.. விசாகா இல்லையா!!!''
காதோரத்தில் போனை இறுக்கியப்படி, பாத்திரங்களை துலக்கியவன் பல்லை கடித்தான் டயலாக்கோடு.
''மா.. நான் மறுபடியும் சொல்றேன்!! ரெண்டு பேரையும் ஒரே வீட்டுலே தங்க வெச்சு ஏழரை நாட்டு சனியே இழுத்து என் தலையிலே நானே மண்ணள்ளி போட்டுக்க முடியாதுமா!! புரிஞ்சிக்கோங்க!!''
ரசம் கொதித்ததோ இல்லையோ, ரீசன் கொதியோ கொதியென்று கொதித்தான்.
''ரீசா.. நீ நிஜமாவே என் வயித்துலதான் பொறந்தியா!! எப்போருந்துடா இப்படி ஒரு சுயநலவாதியானே!!!''
அம்பாளின் மனம் குறுகி போனது. ஏற்கனவே, வளர்ப்பு தப்பாகி விட்டதின் பலனே விசாகாவின் கர்ப்பத்திற்கு காரணம் என்று தினந்தோறும் வருந்திடும் அவருக்கு; ரீசனின் இன்றைய பொறுப்பற்ற பேச்சுகள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
''என்னம்மா பண்றது எல்லாம் என் கிரகம்!! இப்போதான் என் குஞ்சாய் கொஞ்சங் கொஞ்சமா சரியாகிக்கிட்டு வரா.. இந்த நேரத்துலே உங்க பேச்சே கேட்டு ஏதாவது ஏடாகூடமா பண்ணி திரும்பவும் அவளே இழக்க நான் தயாரா இல்லே!!''
''அப்போ விசாக்கு ஏதாவது ஆனா பரவாலையா!!''
வயிற்றை கூறு போட்டு வந்து படுத்திருக்கும் பாவையவளை ரீசன் கண்டுக்காத ஆத்திரத்தில், அந்த பத்திர மாத்து தங்கத்தை பெற்ற ம்மிக்கோ பீபீ எகிறியது.
மகனோ அம்மாவின் கேள்விக்கு மனசில் பட்டதை பட்டென சொல்லி, அவரிடம் மேலும் வம்பு வளர்த்திட விரும்பவில்லை.
''மா.. நான் ஒன்னு சொல்றேன் தயவு செஞ்சு கேட்கறீங்களா.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அங்க அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கோங்க.. நாளைக்கே நான் ஒரு புது வீடு பார்த்துடறேன்.. சரியா..''
மண்டை காய்ந்து போன ரீசன், பெருமூச்சை இழுத்து விட்டு; ஒரே போடாய் போட்டான் சூடான கன்வெர்சேஷனுக்கு முற்று புள்ளி வைக்கின்ற ஐடியாவை.
''நாங்க உன் வீட்டுக்கு வர கூடாதா ரீசன்..''
அப்பாவின் திடீர் கேள்வியில், அதுவும் அம்மாவோடான பேச்சு வார்த்தையின் இடையில், பேசாத தந்தை அப்படியொரு வினாவை கேட்டு விடை காண காத்திருந்தால்; என்செய்வான் ரீசன்.
''பா.. அப்படியெல்லாம் ஏதும் இல்லப்பா..''
ரீசனின் உயர்ந்த தொனி அடிமட்டத்திற்கு இறங்கியது. பெற்றவர் மனம் கோணாமல் பதிலளித்தான் சுள்ளானவன்.
''அப்பறம் எதுக்கு வேற வீடு..''
எல்லாம் தெரிந்தும், அப்பா இப்படியொரு வேள்வியை தொடுத்திட; மகனோ மௌனியாகி போனான் என்ன சொல்வதென்று தெரியாது.
''சண்டே போட்ட ரெண்டு பேரும் சமாதானமாக இது ஒரு நல்ல வாய்ப்பு ரீசன்..''
டேடி வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டோ என்னே. ஆமோதித்து முஷ்டி மடக்கிய கையால் கிட்சன் கேபினெட்டுக்கு நலுங்கு வைத்தான் ஹீரோ.
''சரிப்பா.. நான் லாரிக்கு ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன்..''
கடுப்பை மனதில் வைத்து ரிசீவரை வைத்தவன், கோபத்தில் ரச பானையை பறக்க விட்டான்.
*
சிசிரியேன் முடித்த விசாகா முதல் மூன்று நாட்கள் மருத்துவமனையில்தான் இருந்தாள். முதல் நாள் பொழுது தூக்கத்திலேயே கழிந்தது காரிகைக்கு. இரண்டாவது நாள் நடக்க வேண்டிய கட்டாயத்தில் முயற்சித்து சோர்ந்தாள் யுவதியவள்.
ரீசன் பக்கமிருந்து கவனித்துக் கொண்டான் கோதையவளை. அவளால் எழவோ, நடக்கவோ முடியாத பட்சத்தில் தோள் கொடுத்தான். இறுதியில், தமிழிடம் நன்றாய் வாங்கி கட்டிக் கொண்டான்.
''இவரு பெரிய உதவிக்கர வள்ளலு!! மூஞ்சியே பாரு!! வெளிய எத்தனை நர்ஸ் இருக்காங்கே!! கூப்பிட்டா வர மாட்டாங்களா என்னே!! ஆனா.. ஏன் யாரும் உதவி பண்ணே மாட்டறாங்கே.. அதை கொஞ்சமாவது யோசிச்சியா!!''
கடுகடுத்த தமிழ் விட்ட டோசீல் ரீசனின் தலை தொங்கியது. ரூட்டின் ரவுண்ட்ஸ் வந்த தமிழின் பார்வைகள் கோப்புகள் மீதிருந்து விலகி விசாவின் மேல் பாய்ந்தது.
''விசா.. நீ சொந்தமா யார் உதவியும் இல்லாமே நடக்க பழகணும்.. அப்போதான் உன்னாலே ஆப்ரேஷன் வலியே படிப்படியா கடந்து வர முடியும்.. அடுத்தவங்க உதவி பண்ணே ஆரம்பிச்சா அப்பறம் ஒவ்வொரு தடவையும் நீ அவுங்களே எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவே.. அது நல்லதில்லே.. பின்னாலே உனக்குத்தான் கஷ்டம்.. புரிஞ்சுதா..''
அண்ணன் கண்டிப்பான குரலில் சொல்ல, தங்கையோ ஆமாம் சாமி போட்டாள் வாய் திறவாது தலையாட்டி.
''நர்ஸ்.. ஊசி போட்டாச்சா..''
தமிழ் மொழியில் கேட்டான் தமிழ் செல்வன் இந்திய தாதியிடம்.
''இதுக்கு மேலதான் டாக்டர்..''
என்று நர்ஸம்மா சொல்லிட, தமிழ் பேசிடும் முன் விசா முந்தினாள்.
''அண்ணா.. எப்போ நான் என் குழந்தையே பார்க்க முடியும்..''
ஆசையாய் கேட்டாள் தாயவள்.
''பார்க்கலாம் விசா.. ஆனா அதுக்கு முன்னாடி நீ நல்லா நடக்க ஆரம்பிக்கணும்..''
விசாகாவின் பூத்த முகம் கவிழ்ந்து போனது.
''நான்தான் இப்போ நல்லா நடக்கறேன்னே.. இன்னும் என்னண்ணா!!''
சோகம் அப்பிய குரலில் விசா கேட்டிட, தமிழோ மெல்லிய சிரிப்போடு தங்கையின் தலை முடியை விரல்களால் வருடி சொன்னான்.
''இப்போ வரைக்கும் நீ சொந்தமா நடக்கலையே விசா.. நீயா நடந்துட்டா..எப்போ வேணும்னாலும் தாராளமா உன் குழந்தையே நீ என்.ஐ.சி.யுலே போய் பார்க்கலாம்..''
''ஸ்ஹ்ஹ்..''
முகம் கோணியது விசாகாவிற்கு, நர்ஸ் அவளின் மேல் தொடையில் ஊசியை இறக்கியிருக்க.
சிசேரியன் மூலம் குழந்தைகளை பிரசவிக்கும் கர்ப்பிணிகளுக்கு ஹெப்பரின் ஊசி (heparin injection) கட்டாயமாகும். ஆன்டிகோகுலண்ட்டான (anticoagulant) இது ரத்தத்தின் உறைதலை (blood clots) குறைத்து, இரத்த நாளங்களில் (blood vessels) ஏற்படுகின்ற உறைவையும் தடுத்திடும்.
ஒரு நாளைக்கு ஒருமுறை என்ற விகிதத்தில், குழந்தை பிறந்த முதல் நாள் தொடங்கி பத்து நாட்களுக்கு கடக்கிட்டு ஒவ்வொரு நாளும் இதை மேல் தொடை அல்லது முழங்கை பகுதியில் குத்திட வேண்டும். சில வேளைகளில் வயிற்று பகுதியிலும் இந்த ஊசி குத்தப்படுவதுண்டு.
''விசா.. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.. சீக்கிரமா தனியா நடக்க பாரு..''
என்ற தமிழ் செல்வனோ அடுத்த நோயாளின் கட்டிலை நோக்கி அடிகள் வைத்திட, அவன் பின்னாலே வால் பிடித்து போனான் ரீசன்.
''ஆர்ஹ்.. தமிழ்.. விசாவே எப்போ வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம்..''
ரீசனின் கேள்வி காதில் விழ, கோப்பை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தவனோ முகத்தை திருப்பிடாமலே நையாண்டி செய்தான்.
''ஆமா!! ஆமா!! அப்படியே திருப்பி கிழிச்சிடுவே வீட்டுக்கு கூட்டிட்டு போய்!!''
இறுகி போனது ரீசனின் முகம், தமிழின் கிண்டலில்.
''ஒரு நாளைக்கு ரெண்டு வேளை பத்திய சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கறதுக்கு வலிக்குது!!''
தமிழ் மிக சரியாய் மோப்பம் பிடித்தான் ரீசனின் கேள்விக்கான காரணத்தை.
ரீசன் நாள் தவறாது இருமுறை வந்து போவான் மருத்துவமனைக்கு. அம்மா அம்பாள் சமைத்து கொடுக்கும் பத்திய உணவை விசாகவிற்கு சப்ளாய் (supply) செய்வதே அவனின் தலையாய கடமையாகி போனது.
அவனே ஒரு ராக்கோழி. தூங்குவதென்னவோ காலையில்தான். அப்படியிருக்க, அம்மணிக்கு சாப்பாடு கொண்டு வர, ரீசனின் துயில் தடைப்பட்டு போனது. ஆகவே, விசாவை சீக்கிரமாக டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டி செல்லலாம் என்று திட்டம் தீட்டினான் ஹீரோ.
''இதே குஞ்சரியா இருந்திருந்தா உள்ளங்கையிலே வெச்சு தாங்கிருப்பே!! இது விசா.. அதான் கசக்குது!!''
''தமிழ்..''
ரீசன் அவனாகவே அவனுக்கு வக்காலத்து வாங்கிட முனைய, குறிக்கிட்டான் தமிழ்.
''இன்னும் ரெண்டு மூனு நாள்தான்.. பையன் மட்டும் ஒரு வாரம் இல்லே பத்து நாள் என்.ஐ.சி.யுலே இருக்கணும்.. வெயிட் மினிமம் (weight minimum) 1.8 வந்தாதான் குழந்தையே டிஸ்சார்ஜ் பண்ண முடியும்..''
''தமிழ் இந்த இன்குபேட்டர் எவ்ளோ வரும்.. சொன்னா நான் அதுக்கு ஏற்பாடு பண்ணிடுவேன்.. சோ.. விசா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரும் போது பையனையும் ஒரேடியா தூக்கிட்டு வந்திடுவா..''
ரீசனின் எட்டாம் அறிவை போற தோன்றியது தமிழ் செல்வனுக்கு. அவனை முறைப்பால் கொன்றவன் எரிச்சலோடு சொன்னான்.
''நீ பணக்காரந்தான் நான் இல்லன்னு சொல்லலே!! அதுக்காக நீ டாக்டராகிட முடியாது!! குறிப்பா.. கைனகாலஜிஸ்ட் தமிழ் செல்வன்!! நீ விசாவே கவனிச்சா போதும்!! பையனே நாங்கே பார்த்துப்போம்!!''
முகத்தில் அடித்தாற்போல் சொல்லி தமிழ் கிளம்பிட, ரீசனுக்கோ முகம் கன்றி சிவந்தது கன்னங்கள் பழுக்காமலே.
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 22
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.