What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் இருபத்தி மூன்று

தீனரீசன் பெற்றோர்கள் இல்லம்

வரவேற்பறை

சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள்.

வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான். வீக்கெண்ட்ஸ் என்பதால் கீத்துமா வீட்டில்தான் இருந்தாள் டியூசன் (tuition) செல்லாமல்.

ரீசனோ தினந்தோறும் விசாவிற்கு வேண்டிய மீன், கோழி வகைகளை பிரெஷாக (fresh) வாங்கி வந்து தந்தான் மம்மி அம்பாளிடம். அவராக எதுவும் சொல்லவும் இல்லை கேட்டிடவும் இல்லை. அவனாகவேத்தான் எல்லாவற்றையும் செய்தான்.

விசாவோடுதான் அவனுக்கான வீராப்பான சண்டை சச்சரவெல்லாம். அவள் பெற்ற சிங்கத்திடம் இல்லை. இருப்பினும், கொஞ்சல் மிஞ்சல் எல்லாவற்றையும் கூட அளந்தே வைத்துக் கொண்டான் தகப்பனவன் காரணமாய் பிள்ளையிடத்திலும்.

சிசிரியேன் ஆப்ரேஷன் முடிந்த நிலையில் ஓரளவு தன்னிச்சையாக நடக்க ஆரம்பித்திருந்த விசாகாவை மருத்துவமனையிலிருந்து கிளம்பிட சொன்னான் தமிழ் ஐந்தாவது நாளில்.

வீடு திரும்பும் ஆனந்தத்தில் பெற்றவளோ குழந்தையைக் கேட்க, எடை அதிகரிக்காத பட்சத்தில் பையன் இன்னும் சில நாட்கள் என்.ஐ.சி.யூவில் இருந்திட வேண்டிய சூழ்நிலையை விளக்கினான் தமிழ்.

மனம் வெம்பிய ஆயிழையோ வீடு திரும்பிட எண்ணம் கொள்ளவில்லை. அவளுக்கென்று ஆராத்தி எடுக்க ஆட்களா உண்டு பேரிளம்பெண்ணின் மாளிகையில்.

ஆகவே, தமிழிடம் கெஞ்சி மருத்துவமனையிலே தஞ்சம் கொண்டு விட்டாள் விசா தொடர்ந்து சில நாட்களுக்கு. பாப்பு அவர்களின் இல்லம் அழைத்தும் பேதையவள் வரவில்லை என்று விட்டாள். அண்ணனாய் தமிழ் கூப்பிட்டும் இன்முகத்தோடு வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

அக்கறையாய் போன் போட்டு விசாரித்த அம்பாளிடம் கூட டிஸ்சார்ஜ் மேட்டரை ஓபன் செய்திடவில்லை விசாகா. பத்திய சாப்பாடு கொண்டு வந்த ரீசனையும் நேரடியாக பார்த்திட விருப்பமின்றி, உணவை வாயில் காவலாளிகளிடம் கொடுத்து போகவே சொல்லி பெற்றுக் கொண்டாள் கோதையவள்.

விசாவின் மருத்துவமனை ஓவர்னைட்ஸ் (overnights) என்னவோ அவளுக்கு லக்கே (luck). காரணம், தினமும் பொழுதை என்.ஐ.சி.யு.வில் இருக்கின்ற குழந்தையோடு நிம்மதியாக கழித்தாள் காரிகையவள்.

ரீசன்தான் பாவம். அவனின் ஆண் வாரிசை அன்றைக்கு ஆப்ரேஷன் தியேட்டரில் பார்த்ததோடு சரி, அதற்கு பிறகு குழந்தையை பார்த்திடும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவே இல்லை. எல்லாம் கோவிட் (Covid) கெடுபிடியே.

ஏழு நாள் பதினான்காகி போனது. முழுதாய் இரண்டு வாரங்கள் கடக்க குழந்தை பையனும் நல்லப்படியாக எடை கூடியே இருந்தான். இம்முறை சுந்தரியவளை வீட்டிற்கு அனுப்பும் முன் அழைப்பை தமிழ் யாருக்கு போடணுமோ அங்கு போட்டான்.

ஓடோடி வந்தனர் அம்பாளும் அவரின் கணவர் தாண்டவனும். ரீசனிடத்தில் சொன்னால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிப்பான் என்றறிவான் தமிழ். விசாகாவோ வீம்பு பிடிப்பாள். ஆகவே, ஒரே கல்லில் இருவரின் ஈகோவையும் அடித்து உடைத்திருந்தான் டாக்டர் தமிழ் செல்வன்.

பல சமாதானங்களுக்கு பிறகு ஒருவாரியாய் சம்மதித்தாள் விசாகா தன்னிலைக்கு காரணமானவனின் பெற்றோரின் மனைக்கு சென்றிட.தொழில் நிமித்தமாய் வெளி மாநிலம் சென்றிருந்த ரீசனுக்கு மருத்துவ தகவல் என்னவோ லேட் நைட்டே (late night) ரிசீவ் (receive) ஆனது.

வழக்கம் போல் அம்மாவின் இல்லம் சென்றவன் கண்டான் வலுவிழந்த காந்தாரியை. அன்ன நடை போட்டவள் சோகம் முகத்தில் கும்மாளம் போட அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

என்னவென்று விழைய மனம் பரிதவித்தாலும், தற்காலிக உணர்ச்சிகளுக்கு உரம் போட ரீசன் விரும்பிடவில்லை. கிளம்பிட நிந்தித்தவனை தடுத்த மகள் கீத்துவோ டேடியின் மடியில் துயில் கொண்டாள்.

அடுக்களையில் இருந்த மம்மி அம்பாளோ கொண்டு வந்து நீட்டினார் உணவு தட்டை சுள்ளானின் முன். தலை திருப்பி, அம்மாவின் முகத்தை ஏறெடுத்தவனோ சொன்னான் சாதாரண குரலில்.

''நான் சாப்பிட்டேன்மா..''

''உனக்கில்லே.. விசாக்கு..''

''அப்போ.. அவக்கிட்டே கொடுக்க வேண்டியதுதானே..''

சொன்னவனின் முகமோ டிவியின் பக்கம் திரும்பியது.

''ஆர்ஹ்ஹ்.. மேடம்கு பத்திய சாப்பாடு வேண்டாமா!! சலிச்சு போச்சாம்!!''

சலிப்போடுதான் அம்பாளும் சொன்னார்.

''அப்போ அவளுக்கு என்ன வேணுமோ அதையே சாப்பிடே சொல்லுங்க..''

குரலில் எரிச்சலின் நெடி தெரிய, ரிமோட்டால் டிவி சேனல்களை திருப்பிக் கொண்டிருந்த ரீசனின் தோளை பிடித்துலுக்கினார் அம்பாள்.

''டேய்.. வித விதமா சாப்பிட்டு வளர்ந்த பணக்கார பொண்ணுடா.. முன்னே பின்னே அப்படித்தான் இருப்பா.. நாமதான் கொஞ்சம் விட்டு பிடிக்கணும்..''

அம்மாவின் புராணம் என்னவோ ரீசனுக்கு கசந்தது.

''அப்போ நீங்களே விட்டு பிடிங்க.. எதுக்கு என்ன கோர்த்து விட பார்க்கறீங்க..''

''உப்ப தின்னவன் தண்ணி குடிச்சித்தான் ஆகணும்!!''

அம்பாள் நாசூக்காய் வார்த்தைகளில் ஊசி ஏற்ற, கண்களை இறுக மூடி தலையை தொங்கப் போட்டவனோ உச்சுக் கொட்டினான் நெற்றியை தேய்த்து.

''இந்தா புடி.. கொண்டு போய் கொடு.. நீ சொன்னா சாப்பிடுவா..''

''மா..''

என்றவனோ வெறுப்போடு மம்மியை முறைக்க, அம்பாளோ அவனை டம்மியாக்கி துரத்தி விட்டார் விசாவின் அறைக்கு.

*

மஞ்சத்தில் தஞ்சம் கொண்டிருந்தவளோ எத்தனையாவது திசு பாக்கெட்டை முடித்திருந்தாள் என தெரியவில்லை.

தேவேந்திரன் என்ற மிதமான பணக்காரரின் மகள் விசாகா ஒன்றும் தேவகுஞ்சரிக்கு சளைத்தவள் அல்ல.

என்ன ஒரு வேறுபாடு என்றால், அவளுக்கோ முப்பது எட்டி பார்த்து விட்டது. விசாகாவிற்கோ இப்போதுதான் இருபதே எட்டி பார்த்திருக்கிறது. ஏறக்குறைய பத்து வயது வித்தியாசத்தில் முதிர்ச்சியும் பின்னடைவே விசாகாவிற்கு.

வயதிற்கான இளமையும் அலைபாய்ந்திடும் மனமும் ஒருசேர, நடத்தைகளுக்கு தன்னிலை விளக்கத்தை கொடுத்தவளால்; அடுத்தவரின் வாழ்க்கை பாழாய் போகிறதே என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கான பக்குவத்தையும் அவள் கொண்டிருக்கவில்லை.

தாயில்லா மகளாகினும் ஓரளவு நன்றாகவே வளர்ந்திருந்தாள் விசாகா. கசப்பான சம்பவம் ஒன்றின் பிரதிபலனாய் பூவையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது.

ஆர்மி கேம்பிற்கு வாக்கப்பட்ட ராணுவ வீராங்கனையாய் இளங்கன்றவள் ஜெயில் வாசம் கொண்டாள் என்றே கூறிட வேண்டும், அதுவும் சொந்த வீட்டிலேயே கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தினரால்.

அம்மணியின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் ரகசியமே. அதுவும் படிப்பு முடிந்த இரண்டாண்டுகள் கழித்தே. வேலைக்காரி தொடங்கி தோட்டக்காரன் வரை எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவியே வாழ்ந்து வந்தாள் வஞ்சியவள்.

கல்வியில் டாப்பு டக்கரு என்றிட முடியாது அரிவையை. இருப்பினும், சாமானிய மாணவர்களின் தேர்ச்சியைப் போல நல்ல ரிசல்ட்ஸ்சே அவளுக்கும். குடும்ப தொழிலிருக்க வேலைக்கு போக வேண்டிய அவசியமில்லை அணங்கவளுக்கு.

ஆகவே, தேவேந்திரனின் நல்லதொரு வரனை மகளுக்கு பார்த்திட ஆரம்பித்தார் பொறுப்பான அப்பாவாய். வெளிநாட்டு மாப்பிள்ளைகளை டேடி அவர் தரவிறக்கம் செய்ய, தந்தையை பிரிய மனமில்லா மங்கையோ அழுது சாதித்தாள் உள்நாட்டு மாப்பிள்ளையே போதுமென.

தெரிந்த பூசாரி மூலம் தரகரை வர சொல்லி விசாகாவின் ஜாதகத்தை தேவேந்திரன் கொடுத்தனுப்ப, மகளவளோ மாப்பிளை செலெக்ஷன் நடந்திடும் முன்னே கன்னி கழிந்திருந்தாள் தீனரீசனால்.

அன்றைக்கு மட்டும், இல்லை இல்லை கள்ளத்தனமாய் நைட் பார்ட்டி செல்லும் பழக்கம் மட்டும் விசாகாவிற்கு இல்லாமல் இருந்திருந்தால்; இந்நேரத்திற்கு யார் வீட்டிலாவது விளக்கேற்றிய வீட்டாளாகியிருப்பாள்.

என் செய்ய, விறலியின் ரகசியமான மதுக் கூட உல்லாசம் அவளுக்கு இப்படியானதொரு ஆப்பை அடிக்குமென்று யுவதியவள் கனவிலும் நினைக்கவில்லை.

செய்கின்ற ஒவ்வொரு திருட்டுத்தனத்திற்கும் அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டுமென்பது சனீஸ்வரனின் கர்மவினையாகும்.

என்னதான் தொண்டை தண்ணி வத்திட யார் யாரோ கற்பு இரு தொடைகளுக்கு நடுவில் இல்லை என்று கோஷம் போட்டாலும், வாழ்கின்ற சமூகம் என்னவோ இன்னமும் அதைத்தானே பிடித்துக் தொங்கி கொண்டிருக்கிறது.

இதை நன்றாக உணர்ந்தாள் விசாகா அப்பா பார்த்த பணக்கார வரன் ஒன்று செருப்பால் அடிக்காத குறையாய் மகடூ அவளை பந்தாடியதை.

எப்படி அவளுக்கும் ரீசனுக்குமான முயங்கல் அன்றைய நான்கு சுவற்றுக்குள் மூச்சிறைத்ததோ, அதேப்போல் மௌனமாக விசாகாவின் வயிற்றுக்குள் சிங்கக்குட்டியோ கர்ஜனையின்றி வளர்ந்து விட்டான்.

தேவேந்திரனின் மனசுக்கு பிடித்தாற்போல சம்பந்தம் ஒன்று அமைய, அப்பாவின் மனம் கோணாத மகளாய் கல்யாணத்துக்கு ஆமாம் சாமி போட்டாள் சுந்தரியவள்.

எங்கே தெரிவையவள் இன்னும் இழுத்தடித்தால், அப்பா நடந்தேறிய அசிங்கத்தை அறிந்திடுவாரோ என்ற பயம் அவளைத் தொற்றிக் கொண்டது.

பயங்கொடுத்த தைரியத்தில் திருமணத்திற்கு சரியென்றவளோ, தினமும் என்னாகுமோ ஏதாகுமோ என்ற குழப்பங் கொண்ட அச்சத்திலேயே நாட்களை கடத்தினாள்.

கர்ப்பம் ஆகிடாதவரை நிம்மதியே என்றவளின் வாழ்க்கையை புரட்டி போட ஒருவன் அவளின் வயிற்றுக்குள் ஜனித்திருக்கிறான் என்பதை மடவரல் அவள் அறிந்திருக்கவில்லை.

போனது பேயாயிற்று. வேறென்னே கற்புதான். அதற்காக இப்போது பஞ்சாயத்து ஏதும் வைத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் விசா கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவ்விடயத்தை அவளுக்குள்ளே புதைத்துக் கொண்டாள் சத்தமின்றி.

பார்த்திருக்கும் மாப்பிள்ளை நரேனை கட்டிக் கொண்டு அவனோடு வாழ்வதற்கு உடலையும் மூளையையும் தயார் செய்துக் கொண்டாள் மாயோள் அவள்.

இருந்தும், மனசை மட்டும் அவளால் இம்மியளவும் அசைத்திடவே முடியவில்லை. தினா மீது அவள் கொண்ட ஒருதலை காதல் நங்கூரமாய் நங்கையின் நெஞ்சை புண்ணாக்கியிருந்தது.

வழக்கமாய் எல்லோரும் சொல்வதை போல் பெதும்பையவள் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள். வேறென்ன கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும்.

நரேனும் அதற்கேற்றாற் போல நடந்துக் கொண்டான். காயம் கொண்ட நெஞ்சுக்கு அவன் மருந்தாகவில்லை என்றாலும் அவ்வப்போது விறலியின் முகத்தில் புன்னகை படர்ந்திட அவனும் ஒரு காரணமாகி இருந்தான்.

நாட்கள் வாரங்கள் ஆகி மாதங்கள் தாண்டிட, நரேன் விசாகா இருவருக்கும் நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் சிறப்பாகவே நடந்தேறியது.

பெண் பார்க்கும் படலத்தில் உம்மென்றிருந்தவளின் முகம் நிச்சயத்தின் போது குழப்பத்தில் வாடிக் கிடந்தது. ஆனால், பரிசத்தின் போது முறுவல் கொண்டிருந்தாள் மங்கையவள்.

நம்பினாள் நிஜமாகவே கல்யாணம் முடிய எல்லாம் சுபமாய் இனிமைக் கொள்ளும் என பேதைவள்.

நம்பிக்கையும் கொண்டாள் மானினி அவள் அப்பா பார்த்த மாப்பிள்ளை நரேன் மீது.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 23
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top