What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 49

தீனா என்ற எழுத்திலேயே நின்றது செக் வைத்த குஞ்சரியின் விழிகள். மேற்கொண்டு கடிதத்தின் உள்ளடக்கத்தை படிக்காதவளோ மூச்சு விடும் சிலையாய் நின்ற இடத்திலேயே கொலு கொண்டாள் தீப்பிடித்தெறியும் மதுரையாய்.

வெறிக்கொண்டிருந்த நீலாம்பரிக்கு சகுனியாய் வந்தான் அவளுடன் படிக்கும் விஜய்.

''என்ன மயூரி.. என்னாச்சு.. பையனுங்க சொன்னானுங்க அந்த ஊமே பொண்ணு வந்து என்னவோ லெட்டர் கொடுத்துச்சாம்.. அதை பார்த்ததுலருந்தே நீ ரொம்ப அப்செட்டா இருக்கியாம்.. எங்க கொடு அந்த லெட்டரே..''

என்றவனோ பூவையவளின் விரல்கள் இறுக்கமாய் பற்றியிருந்த மடலை இழுக்க, விடாதவளோ மிழிகளை சிமிட்டிடாமலே இருந்தாள் அனல் மூச்சு கடுங்கோபத்தின் நெடியை வீச.

''மயூரி நீ என்னவோ அந்த ரீசனே சின்சியராத்தான் லவ் பண்றே.. அது எங்க எல்லாருக்குமே தெரியும்.. ஏன்.. இந்த ஒட்டு மொத்த காலேஜுக்கே தெரியுமே.. ஆனா.. என்ன பண்ணே மயூரி.. அவனுக்கு அந்த ஊமச்சியைத்தான் புடிச்சிருக்கு..''

என்றவனோ எறியும் நெருப்பில் எண்ணையை வேண்டுமென்றே ஊற்றினான். விஜயவன் வருகையிலேயே அறிவான் கடிதத்தின் முன் தீனா என்ற எழுத்தே குஞ்சரியை கடுப்பாக்கியிருக்கிறதென்று.

''ஆர்ஹ்ஹ்.. சோரி மயூரி.. எப்படி சொல்றதுன்னு தெரியலே.. நானே என் கண்ணாலே பார்த்திருக்கேன் நிறைய தடவே அவன் அந்த பொண்ணு கூட பைக்லே சுத்தறதே..''

சொன்னவன் வேண்டுமென்று பவுஸ் விட காரியமாய், முன்னிருந்த மங்கையோ மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் அருவிக் கொண்டு ஏறெடுத்தாள் விஜயை.

''ஐயோ பிளீஸ் மயூரி! நோ! நோ! நோ! அப்படி பாக்காதே என்னே! பிளீஸ்! பிளீஸ்! நான் குற்ற உணர்ச்சியிலையே செத்துடுவேன் மயூரி பிளீஸ்! நான் சொல்லிருக்கணும்! அந்த துரோகி பண்ண நம்பிக்கே துரோகத்தை நான் சொல்லிருக்கணும்!''

நடித்தான் விஜய் நடிப்பின் சிகரமே தோற்றுப் போகும் அளவிற்கு.

''சத்தியமா சொல்றேன் மயூரி.. உன் அழகுக்கும் படிப்புக்கும் அந்த பிச்சைகாரப்பயே துளிகூட அருகதையே இல்லாதவன்! நீ கிடைக்க மாட்டியான்னு இந்த காலேஜ் இல்லே பக்கத்து காலேஜ் பசங்க வரைக்கும் தவம் கிடக்கறானுங்க மயூரி! தவம்! ஆனா.. நீ போயும் போயும் ஒரு அல்ப ஏழை துரோகிக்கிட்ட ஏமாந்துருக்கே!''

என்ற விஜய் கண்ணில் போலியையும் வார்த்தையில் நஞ்சையும் மனதில் வக்ரத்தையும் கொண்டு இல்லாததையும் பொல்லாததையும் வாந்தியெடுக்க,

''நோ! நோ! நோ!''

என்ற கோமகளோ முகத்தை மூடி கதறிட ஆரம்பித்தாள் காதல் பித்து தலைக்கேறிட.

ஜால்ரா கூட்டமோ செய்வதறியாது நிற்க, விஜயின் ஜிங்ஜாக்களோ குதித்தனர் ஆ உவென்று.

வேதனையில் உழன்ற நாயகியின் பொற்கரங்கள் கொண்ட கடிதமோ தரை தட்டியது. சந்தர்ப்பவாதியோ நாதியற்ற மடலுக்கு வாழ்க்கை கொடுத்து குரலையும் கொடுத்தான்.

அவன் வாசித்த கிறுக்கள் பொன்மகளின் காதில் விழ, அருணியவளுக்கோ கிறுக்கு பிடித்தது. அலறியவள் நம்ப மறுத்தாள் விஜய் வாசித்த வார்த்தைகளை. பிடிங்கி படித்தாள் மயிலினி எழுதிய கடிதத்தை.

சுக்கு நூறாகியது ஆயிழையின் மனம்.

கடிதமோ இப்படி தாங்கி வந்திருந்தது பாவப்பட்டவளின் உணர்ச்சிகளை.

'வாழ்த்துக்கள் தீனா.. நீங்க அப்பா ஆகிட்டிங்க.

ஆனா.. நீங்க இன்னைக்கு நைட்டுக்குள்ள என்ன வந்து கூட்டிக்கிட்டு போகலன்னா.. நானும் உங்க குழந்தையும் கடவுள்கிட்ட போயிடுவோம்..

மன்னிச்சிருங்க தீனா.. எங்களுக்கு வேற வழி தெரியலே.. அண்ணா அண்ணி எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.. கேனடா கூட்டிக்கிட்டு போக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க..

நான் மூணு நாளா உங்களுக்கு கோல் பண்றேன் உங்க நம்பர் கிடைக்கவே இல்லை தீனா.. உங்க வீட்டுக்கு முதற்கொண்டு பண்ணிட்டேன் தீனா.. யாரும் எடுக்கவே இல்லே.. என்ன பண்றதுண்ணே தெரியலே தீனா எனக்கு..

யார் காரணம்னு கேட்டு ஒரே டார்ச்சர் தீனா வீட்டுலே.. மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன் தீனா.. மன்னிச்சிடுங்க.. நீங்கதான்னு சொல்லிட்டேன்.. பயம் வந்துடுச்சு தீனா.. கல்யாணம் அது இதுன்னு சொல்லவும்..

ஆனா.. நமக்கு கல்யாணங்கறது முடியவே முடியாதாம்! சொல்லிட்டாங்க தீனா! நீங்க தீட்டாம்! நாங்க வேற நீங்க வேறையாம்! கலைக்க சொல்லி ஒரே குடைச்சல்! முடியாதுன்னு நான் தீர்க்கமா சொல்லிட்டேன்!

அமைதியாகிட்டாங்க.. ஆனா.. எனக்கு தெரியும் தீனா.. கண்டிப்பா எப்படியாவது நம்ப குழந்தையே ஏதாவது பண்ணி என்கிட்டருந்து பிரிச்சிடுவாங்கன்னு..

அண்ணி டாக்டர் உங்களுக்கு தெரியும்.. தினம் ஒரு மாத்திரை கொடுத்து போட சொல்றாங்க தீனா.. தூக்கம் நல்லா வரும்.. கண்டதையும் யோசிக்க மாட்டேன்னு வாய் கூசாமா கருக்கலைப்பு டேப்லட்ஸ் கொடுக்கறாங்க தீனா..

அன்பா இருக்கற மாதிரி அக்கறையா பேசறாங்க தீனா.. பொய் எல்லாம்! எனக்கு தெரியும்! நான் அவுங்களையும் நம்பலே அந்த மருந்தையும் போட்டுக்கலே தீனா!

நானும் பாப்பாவும் உங்களுக்காக வெயிட் பண்ணுவோம்.. கண்டிப்பா நீங்க இன்னைக்கு நைட் வந்து எங்களை கூட்டிக்கிட்டு போயிடணும்.. நம்பிக்கையா காத்திருப்பேன் தீனா! வந்துடுங்க தீனா!

மயிலினி அண்ட் குட்டி பாப்பா லவ் யூ தீனா..'

மடலை வாசித்த மலரவளின் மனமோ மணல் கோட்டை கரைய மண்ணாய் கசிந்துருகியது நனவெல்லாம் கனலாய் போக.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…


முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 49
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top