What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 53

விலோசனங்களை மெதுவாய் திறந்தாள் மயிலினி. புதியதோர் அறைக்குள் படுத்துக் கிடக்க டக்கென்று மஞ்சத்திலிருந்து எழுந்தவள் சுற்றி முற்றி விழிகளை ஓட விட்டாள்.

நாலாப்புறமும் சுவர்களே குடிக்கொண்டிருக்க கலர் கலரான சாயங்கள் கொண்ட அறையோ பெண்ணவளை பயமுறுத்தியது.

''மயிலினி..''

என்ற அழைப்போடு அறைக்குள் நுழைந்தாள் குஞ்சரி.

அவளை பார்த்த மாத்திரத்தில் நடுக்கம் கொண்டாள் ஏமாந்த பெண்டு அவள். காரிகையின் கைகளோ தானாகவே அவளின் வயிற்றை இறுக்கமாய் பற்றிக் கொண்டது.

''என்ன மயிலினி அங்கையே நிக்கறே.. வா இங்க.. வந்து இப்படி உட்காரு..''

என்ற குஞ்சரியோ வஞ்சக புன்னகையோடு அழைக்க, மதில் முட்டி முதுகு தேய்த்து நின்ற பாவையவளோ முடியாதென்று தலையை ஆட்டினாள்.

''அட வா மயிலினி..''

என்ற குஞ்சரியோ வாஞ்சையாய் நெருங்க, தப்பிக்க முனைந்த வயிற்று புள்ளைக்காரியோ அறையின் கதவை நோக்கி ஓடினாள் விடுதலையை ஏங்கி.

பாவம் மயிலினி. போன வேகத்தில் இடித்து நின்றதென்னவோ விஜயின் மீதே. ஆணவனின் ஜால்ரா கூட்டத்தினர் மயிலினியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து சரித்தனர் கட்டிலில்.

குஞ்சரியோ நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து ஏளன சிரிப்பை அறை முழுதும் ஒலிக்க விட்டாள்.

''அழு! நல்லா அழு! உனக்கு என் ஆளு கேட்குதா! இதுக்கு மேலையும் நல்லா அழுவே பாரு!''

என்ற குஞ்சரியோ உக்ர காளியாய் மூச்சிரைக்க, பஞ்சணையில் விழுந்த பிறவி ஊமையோ எழுந்த வேகத்தில் மண்டியிட்டு கைக்கூப்பினாள் குஞ்சரியின் முன்.

''என்னடி உயிர் பயம் வந்துடுச்சா! நீ கெஞ்சினாலும் கதறினாலும் உன்னே விட மாட்டேன்டி! இதெல்லாம் நீ என் ரீசன் புள்ளையே வயித்துலே வாங்கறத்துக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்!''

என்ற தேவகுஞ்சரியின் அலறலில் மண்டியிட்டிருந்த அபலையின் கால் முட்டிகளோ தளர்ந்து போயின. இதயத்தில் இடி விழ அரங்கேறிக் கொண்டிருக்கும் அராஜகங்களுக்கு காரணம் என்னவென்று பேதையவளுக்கு இப்போதுதான் புரியவே ஆரம்பித்தது.

''நீ என் ரீசன் கூட படுத்தது தப்பில்லே மயிலினி! ஆனா.. இந்த குழந்தையே காரணங்காட்டி எனக்கு சொந்தமானவனே உரிமைக் கொண்டாடிக்கிட்டு வந்தே பாரு அதுத்தான் தப்பு! நீ பண்ணே மிகப்பெரிய தப்பு! அடிமட்டமான முட்டாள்தனம்!''

குஞ்சரி தவறான புரிதல் கொண்டு கண்டதையும் உளற, உணர்ந்தவளோ அதை சரிப்படுத்த முனைந்து தோற்றாள் சைகை பாஷை கைக்கொடுக்காது போக.

''ஏய்! நிறுத்துடி! நீ இல்லன்னு சொன்னா நான் நம்பிடுவேன்னா! அப்போ இந்த லெட்டர் பொய்யா!''

என்ற குஞ்சரியோ விட்டெறிந்தாள் மயிலினி கைப்பட தீனவானனுக்கு அலரவள் எழுதிய கடிதத்தை நங்கையவள் முகத்தில்.

தலையில் அடித்துக் கொண்ட கோமகளோ பேனா கேட்டு சைகை செய்ய எதற்கும் செவி சாய்த்திடாத குஞ்சரியோ அவளின் கோபத்திலேயே சிம்மாசனம் கொண்டாள்.

''ஏய் ஊமச்சி! என்னடி வாய் பேச முடியாத குறைய வெச்சுக்கிட்டு என் ரீசனே அப்படியே வளைச்சு போட்டுடலாம்னு நினைச்சியா! கொன்னுடுவேன் உன்னே!''

என்ற தேவகுஞ்சரியின் விரல் நகங்களோ மயிலினியின் வாய் தாடையில் முத்திரை பதித்து செம்புனலை சதை கிழிய பரவ விட, பின்னோக்கி கதறிய கோமகளோ தவறான புரிதலை எப்படியாவது குஞ்சரிக்கு எடுத்துரைக்க வழியேதும் கிடைக்காதா என்றெண்ணி வெம்பினாள்.

''ஏய்! இங்கப்பாரு! எப்படி ஒரு புருஷனே அடுத்தவே வந்து சொந்தங்கொண்டாடினா பொண்டாட்டிக்கு கோபம் வருமோ அப்படித்தான் எனக்கும் வரும்! ஏன்னா நான் மட்டும்தான் ரீசனோட பொண்டாட்டி! நீ கேட்கலாம் அவன் ஒழுங்கான்னு! என் புருஷன் ஒழுங்கோ இல்லையோ! அதைப்பத்தியெல்லாம் நீ பேசக்கூடாது! ஆனா நான்.. இந்த தேவகுஞ்சரி என்னைக்குமே அவனுக்கு பத்தினித்தான்! புரிஞ்சுதா!''

என்றவளோ மயிலினியின் பின்னங்குழலை கொத்தாய் பிடித்து காதல் வசனம் பேச, பாரிதாபத்தின் முழு உருவமான வயிற்று பிள்ளைக்காரியின் கண்ணீரோ கன்னங்கள் கடந்து கழுத்திறங்கியது.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 53
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top