What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 54

இதுவரையிலும் ஒரு ஓரத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த விஜய் வந்தான் இருப்பெண்களையும் நோக்கி.

''விடு குஞ்சரி இவக்கிட்டலாம் போய் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு! இந்தா புடி நீ கேட்ட ஜூஸு!''

நீட்டினான் விஜய் ஆவேசங்கொண்டு நின்றிருந்த சண்டாளியின் முன்.

ஜூஸ் கிளாஸை கண்ட மாயோள் மயிலினிக்கோ கண்கள் அகல விரிந்தன. அடிவயிறோ இனம் புரியா புளிகரைச்சலைக் கொண்டது. மனமோ ஏதோ தப்பாக போகிறதென்பதை உணர்த்தியது.

''வாய திறடி! திற!''

என்று ஆக்ரோஷம் கொண்ட குஞ்சரியோ வலுக்கட்டாயமாக ஊற்றினாள் பாவப்பட்ட மயிலினியின் வாயுக்குள், அன்னாசி மற்றும் பப்பாளி கலந்த பழச்சாறை.

பேச முடியா மௌனியோ நடப்பதை தடுக்க அடங்காது திமிற,

''ஆர்ர்ஹ்ஹ்! குடிச்சு தொலையேன்! ஏன்! ஏன்! ஏன் இப்படி முரண்டு பிடிக்கறே! புரியாதா உனக்கு சொன்னா! ''

என்று கடுப்பாகிய குஞ்சரியோ உள்ளங்கைகள் சிவக்க மயிலினியின் கன்னங்களை பழுக்க வைத்தாள்.

நல்லவேளை அறைகள் தொடர்ச்சியாகாமல் நிறுத்தம் கொள்ள அலறியது தேவகுஞ்சரியின் அலைப்பேசி.

அழுது புரண்டு கெஞ்சிய மயிலினிக்கோ கொஞ்சமும் பாவம் பார்க்கவில்லை அங்கிருந்து ஜால்ரா கூட்டத்தினர். ஒருவருக்கு கூட மனம் கூசவில்லை ஈனக்காரியம் செய்திட.

ஆளுக்கொருவர் காந்தையவளின் கால்களை பற்றி பிடிக்க, இன்னும் இருவர் கைகளை பிடிக்க; விஜயோ ஆயிழையவளின் தலையை ஒருகையில் பின்னோக்கி சாய்த்தும் மறுக்கையில் வாயை குமித்தும் ஊற்றினான் பழச்சாறை பேதையவளின் வாயுக்குள்.

நயனங்கள் ரெண்டும் வராத தீனவானனை எதிர்பார்த்திருக்க தொண்டைக்குழி இறங்கிய பழச்சாறோ விஷமாகிப் போனது மயிலினியின் வயிற்றுக்குள் ஜனித்திருந்த உயிருக்கு.

கிளாஸ் காலியாக மொத்தமாய் சரிந்தாள் நாயகியவள் தரையில் நடைப்பிணமாய் கருவின் உயிர் உள்ளுக்குள் இதயத்துடிப்பை கொஞ்சங் கொஞ்சமாய் நிறுத்திட.

''அப்பா!''

என்றலறினாள் குஞ்சரி.

''என்னாச்சு குஞ்சரி!''

பதறினான் விஜய். இருக்காத பின்னே. சோழியங் குடுமி சும்மாவா ஆடும். ஆணவனுக்கு முன்பிருந்தே குஞ்சரியின் மீது ஒரு கண்ணல்ல ரெண்டு கண்ணல்ல ஓராயிரம் கண்கள்.

மனசில் உள்ளதை சொல்லி பெண்ணவளை அவன் கரைட் செய்யலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் அம்மணியவள் போட்டாள் குண்டொன்றை ரீசனை விரும்புவதாய்.]

பலமுறை முயற்சித்தான் விஜய் விறலியின் மனதை காலியாக்கி அங்கே அவன் நாற்காலி போட. ஆனால், விதி யாரை விட்டது.

தாங்கு தாங்கென்று தாங்கிய விஜய் வெறும் நண்பனாய் தெரிய, ரீசன் ஒருவனே எல்லாமும் என்று உணர்ந்தாள் தெரிவையவள்.

ஆகவே, கிடைக்கும் இந்த வாய்ப்பையாவது நன்றாக பயன்படுத்திக் கொண்டு சுந்தரியவள் நெஞ்சத்திலிருந்து நாயகனவனை துரத்திட வேண்டுமென்று கங்கணம் கட்டியிருந்தான் விஜய்.

''அப்பாக்கு திடிர்னு ஹார்ட் அட்டக் வந்துடுச்சாம் விஜய்! ஆபிஸ் ஸ்டாப்தான் கோல் பண்ணாங்க! நான் உடனே போகணும்! நீ இங்க எல்லாத்தையும் சரியா பார்த்துகோ! பிளீஸ் விஜய்! சொதப்பிடாதே! வாழ்நாள்ளே இனி இவே ரீசனே நினைக்கவே கூடாது!''

என்றவளோ அங்கிருந்து வெளியேற கதவு நோக்கினாள்.

ஒப்பாரி கடலில் மூழ்கியிருந்த மயிலினியின் கண்ணீர் துளிகளோ தரையில் மொட்டுகளாய் துளிர்க்க பிறந்தது புது ஐடியா ஒன்று மானினிக்கு.

கண்களை விரல்களால் துடைத்தவளோ வேகங் குறையாது சிமெண்டு தரையில் எழுதினாள் தீனவானன் என்ற பெயரை. ஏழுந்தோடினாள் ஊமை அலறல் கொண்டு போகின்ற குஞ்சரிக்கு இழுத்து வந்து உண்மையை விளக்க.

எல்லாம் ஒரு நப்பாசைத்தான் பெண்டு அவளுக்கு நிஐம் உயிர் கொண்டாளாவது போன உயிரை எப்படியாவது போராடி உயிர்ப்பித்திடலாமொன்று.

அதற்குள் அங்கிருந்த கூட்டமோ ஓடிட பார்க்கிறாள் அந்திகை என்றெண்ணி பெண்ணவளை தரதரவென்று இழுத்து வந்து சரித்தது மெத்தையில்.

வஞ்சினியவள் கண்ணீரில் எழுதிய எழுத்துகளோ ஜால்ராக்களின் காலணிகளுக்கு அடியில் புதைந்து போனது. முகத்தை மூடி கதறிய வதனியோ நிடலத்தை கட்டிலின் விளிம்பில் முட்டினாள்

கடுங்கோபங் கொண்ட குஞ்சரியோ வாசற்கதவோரம் நின்றப்படியே அலறினாள்.

''விஜய் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது! ஒத்தை புள்ளைக்கு என் ரீசன்தான் அப்பான்னு சொன்ன இவே சின்னா பின்னமாகணும்! உண்டாக போறே குழந்தைக்கு அப்பன் யாருன்னே தெரியாத அளவுக்கு இந்த மயிலியினியே கண்டவனும் மேயணும்!''

மனசாட்சியற்றவளோ வஞ்சம் கொட்டி போனாள்.

கொடூரமான வார்த்தைகளைக் கேட்டவளோ உயிரோடு மரித்து போனாள்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 54
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top