- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 57
இதுவரை மயிலினியின் பழைய கதையை யாரும் கிண்டி கிளறியதில்லை. ஆனால், மொத்த குடும்பமும் அறியும் புதிய உறவுகளான அண்ணிகளை தவிர்த்து.
மயிலினி சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறு பிஞ்சு.
பணக்கார குடும்பம்தான் மயிலினியின் பூர்வீகம். இருப்பினும், குடிப்பழக்கம் கொண்ட தத்தியான பெண்டுவின் தந்தைக்கோ பிஸ்னஸை நடத்திடவும் திறமையில்லை கட்டிய மனைவியையும் குஷிப்படுத்த தெரியவில்லை.
ஆகவே, சுகதுக்கத்தில் பங்கெடுப்பேன் என்ற வாக்குறுதியோடு கல்யாணங்கட்டிக் கொண்டு வந்த மணவாட்டியோ கையாலாகாத கணவனுக்கு டாட்டா காட்டிட முடிவெடுத்தாள்.
போவது என்று முடிவாகிய பின் இலவச இடைஞ்சலாய் மயிலினி எதற்கு என்று நினைத்த உன்னதமான தாயோ பெற்ற பிள்ளையை அப்பனிடமே விட்டுவிட்டு ஓடிப்போனாள் மலைச்செல்வனின் நண்பனோடு.
சங்கதி அறிந்த மலையோ மடை திறந்த வெள்ளமாகினான். ஒரு குறையும் இல்லாது ராணி போல் பார்த்துக் கொண்டவள் செய்த துரோகம் ஆணவனை நிலைக்குலைய வைத்தது.
அண்ணன் தம்பி என்று இருவர் சேர்ந்து நடத்திய வணிகத்தை கூட வந்தவள் சொல்லைக் கேட்டு பாகம் பிரித்து ஆளுக்கொரு மூலையாகிப் போன சகோதர்களின் பிரிவினை நினைத்து பெரிதும் வருந்தினான் மலை.
தம்பியவன் குடும்பமாய் நிம்மதிக் கொண்டு வாழ வேண்டி மூத்தவனோ அவன் மனைவியோடு தனிக்குடுத்தனம் என்ற பெயரில் முற்றிலும் தொடர்பற்று போனான் வெளிநாட்டிக்கு.
ஓடிப்போன பொண்டாட்டியின் துரோகம் தாளாது நொடிப் பொழுதும் குடியோடு கிடந்த மயிலினியின் அப்பா மலைச்செல்வன் கொஞ்ச காலத்திலேயே கடன்காரர்களிடம் கையேந்திடும் நிலைக்கு வந்தான்.
சாமர்த்தியமற்றவனால் தொழிலும் முடங்கி போய் ஒரேடியாய் படுத்து விட்டது. குடியிருந்த வீடு முதற்கொண்டு பயணித்த கார் வரை எல்லாம் போயாயிற்று. கடன் கொடுத்தவன் பணத்திற்கு பதில் எதுவெல்லாம் கிடைக்குமோ அதையெல்லாம் அள்ளிக் கொண்டு போனான்.
சின்ன குட்டி மயிலினிக்கோ அப்போது ஏறக்குறைய ஐந்து வயதுதான் இருக்கும். வளர்ந்தாள் உபயோகப்படுவாள் என்றெண்ணிய கடன்கார கல்நெஞ்சனோ சாக்லெட்டை காட்டி அலேக்காய் தூக்கி போனான் மழலையவளை.
பெத்த அப்பனோ அப்போதும் குடியை போட்டு சொந்தமில்லா வீட்டின் முற்புறத்திலேயே கவிழ்ந்து விழுந்தான்.
தந்தை தாயற்ற குழந்தையவளோ மூன்று நாட்களுக்கு பட்டினியாய் கிடந்து தவித்தாள் மனசாட்சியற்றவர்களின் பிடியில் சிக்கி.
அம்மா இருந்தாலுமே வேலைக்கார பெண்ணின் கையால் உண்டு வளர்ந்தவளுக்கோ முன்பின் தெரியா முகங்கள் பலதும் அச்சத்தை ஏற்படுத்தின.
அழுதாள் புரண்டாள் வாய் பேச முடியா மலரவள். குழந்தையவள் ஊமையென்று அங்கிருப்போர் யோசித்திடக் கூட இல்லை. முரட்டு பிடிவாதம் பிடிக்கிறாள் என்றே எண்ணினர்.
கொடுப்பதை தின்று வளர்ந்தால் இங்கேயே இருக்கட்டும் இல்லையென்றால் பாலியில் தொழில் செய்யும் இடத்திற்கு இப்போதே அனுப்பி வைத்திட சொல்லி கைக்கூலிகளுக்கு கட்டளையிட்டான் கடன்கார மாமா.
என்னவோ நடக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட மயிலினியாள் அதன் சாராம்சத்தை மட்டும் உணர்ந்திடவே முடியவில்லை அவள் வயதின் காரணமாய்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 57
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.