- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 59
பழுதாகிய பைக்கை ஒருவாரியாய் சமாளித்து ஒட்டிய ரீசன் வந்து சேர்ந்திருந்தான் குஞ்சரியின் வீட்டுக்கு.
ஆணவனை கண்டு ஓடி வந்தவளோ கட்டிக் கொண்டாள் நடு ரோடு என்றும் பாராது அவனை இறுக்கமாய். சம்பவத்தின் ஆடென்னவோ ரீசன்தான். வாத்தியார் மகனாயிற்றே எப்படி தெரியாமல் இருக்கும் அங்கிருப்போருக்கு ஹீரோவின் முகரக்கட்டை.
எல்லாம் ஒரு மாதிரியாய் பார்க்க தலை கவிழ்ந்தது என்னவோ ரீசன்தான். ஒப்பாரி வைத்தவளை சமாளிக்க முனைந்து தோற்றவனோ அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றான் அவளறைக்கு.
மஞ்சத்தில் அமர்ந்துக் கொண்ட அந்திகையவளோ ரீசனின் கையை எடுத்து அவளின் கன்னத்தில் பதித்து கண்களை மூடிக்கொண்டாள்.
''சீனியர்! என்ன பண்றீங்க!'
என்றவனோ விறலியவள் செயல் புரியாது தடுமாறினான்.
''ஜூனியர்.. கிட்ட வாயேன்..''
என்றவளோ நெருங்கியவனின் நாசியொடு அவளின் மூக்கை உரசி சின்னதாய் சிரித்துக் கொண்டாள்.
யுவதியவள்தான் விடாது துரத்தி அவனை லவ்வாங்கி செய்து வந்தாள். ரீசனுக்கோ அப்படியான உணர்வேதும் முன்பில்லாமல்தான் இருந்தது. நங்கையவளை பிரிந்திருந்த பதினான்கு நாட்களில் எல்லாம் தலைக்கீழாகி போயிருந்தது.
பிடிக்காத குஞ்சரியை என்னவோ பிடித்திட ஆரம்பித்தது ரீசனுக்கு. தேடல் அவளின் பிரிவை ஏங்க வைத்தது.
அடிவயிற்றில் பட்டாம் பூச்சியையும் நெஞ்சுக்குள் இடி மின்னலையும் முகத்தில் தவுசண்ட் வால்ட்ஸ் பல்பின் பிரகாசத்தையும் கொடுத்தது தீனரீசன் அவனுக்கு தேவகுஞ்சரியின் மீது துளிர்த்திருந்த காதல்.
''சீனியர்.. இருங்க.. இருங்க..''
என்றவனோ மெதுவாய் மங்கையவளை பின்னோக்கி விலக்கி தொடர்ந்து வினாக்களை எழுப்பினான்.
''அப்பாக்கு உடம்பு முடியலே.. அமெரிக்கா போகணும்.. அப்படி இப்படின்னு சொன்னிங்க.. இங்க வந்து பார்த்தா..''
''லூசாடா நீ! அப்பாவே நேரா ஹோஸ்ப்பிட்டலிலிருந்து ஏர்போட்க்கு கூட்டிக்கிட்டு போயிடுவாங்க.. கேர் டேக்கர் ரெடி பண்ணியாச்சு.. அவுங்க பார்த்துப்பாங்க டேடியே.. நான் இங்கிருந்து கிளம்பினா போதும்.. அங்க அப்பாக்கு ஆப்ரேஷன் பிளஸ் ட்ரீட்மெண்ட் அப்பறம் ரிக்வரி பீரியட்னு எத்தனை நாள் நான் அங்கையே இருக்க வேண்டியது வரும்னு தெரியலே ஜூனியர்.. அதான் உன்னே பார்க்க வர சொன்னேன்..''
என்றவளின் விழிகளில் கண்ணீர் மறுபடியும் கடலாய் பெருக்கெடுக்க,
''ஏய் சீனியர்.. என்னதிது..''
என்றவனின் உள்ளங்கைகளோ மானினியவளின் முகத்தை தாங்கியது.
''ப்ரோமிஸ் பண்ணு ஜூனியர்.. நீ எத்தனை பொண்ணு கூட வேணும்னாலும் செக்ஸ் வெச்சிக்கோ! எனக்கு பிரச்சனையில்லே! ஆனா.. நீ என்னைத் தவிர வேற யாரையும் காதல் பண்ண கூடாது! கல்யாணமும் பண்ண கூடாது! உன் குழந்தைக்கு நான்தான் அம்மாவா இருக்கணும்! என்ன மீறி வேற எவளாவது உன்னே சொந்தங் கொண்டாடிக்கிட்டு நீதான் வேணும்ணு வந்து நின்னா நான் அவளே அழிச்சிடுவேன்! இது நான் உன் மேல வெச்சிருக்காரே காதல் மேல சத்தியம்!''
''ஐயோ சீனியர்! என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு.. நான் இன்னும் படிப்பு முடிஞ்சு என்ன வேலைக்கு போறதின்னே முடிவு பண்ணலே..''
என்றவனோ விரல்களால் இயமானியவளின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைக்க,
''நான் போயிட்டா உனக்கு நிம்மதியா இருக்கும்.. லவ் பண்ணு.. பார்க்க வான்னு.. டார்ச்சர் பண்ணே மாட்டேன்.. கண்டதையும் கிஃப்ட்ங்கிற பேர்லே வாங்கி கொடுக்க மாட்டேன்.. சமைச்சேன்னு சொல்லி உன்னே சாப்பிட சொல்லி கொடுமே படுத்த மாட்டேன்..''
''ஐ மிஸ் யூ.. லோட்.. தேவகுஞ்சரி..''
என்றவனின் வார்த்தையில் ஸ்தம்பித்து போனாள் பேதையவள்.
''முதல்லே எனக்கு எல்லா பிடிக்காமத்தான் இருந்தது.. சுத்தமா பிடிக்கலே.. ஆனா.. உன்னே பார்க்காத இந்த ரெண்டு வாரமும் நரகமா இருந்தது.. எப்போ முடியும்.. உன்னே வந்து எப்போ பார்க்கறதுன்னு மைண்ட் ஃபுல்லா அதே நினைப்புதான்..
என்றவனோ மென்மையாய் அவளின் கரங்களை வருடினான்.
''என் மேல உனக்கு லவ் வந்துடுச்சா ஜூனியர்..''
''தெரியலே சீனியர்.. ஆனா.. இந்த தேவகுஞ்சரி இனி எனக்கு மட்டும் குஞ்சாய்ன்னு தோணுது..''
என்றவன் லேசாய் புன்னகைக்க அவன் நெஞ்சில் சாய்ந்தவளோ மிழிகளை இறுக்கமாய் மூடி கண்ணீர் வடித்தாள்.
''ஜூனியர் நான் உன்ன கிறுக்கி மாதிரி லவ் பண்றேன்.. ஏன்னு எனக்கே தெரியலே! யாராவது உன்னே பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது.. ஆனா.. இப்போ உன் மனசுலே நான்தான் இருக்கேன்.. நான் மட்டும்தான் இருக்கேன்னு நீ சொன்ன பிறகுதான் எனக்கு நிம்மதியாவே இருக்குடா! தெரிஞ்சோ தெரியாமலோ நான் ஏதாவது சைக்கோ தனம் பண்ணி உன்னே காயப்படுத்தியிருந்தா பிளீஸ் என்னே மன்னிச்சிருடா ஜூனியர்.. இப்போ கூட நான் அந்த மயி..''
என்று சொல்ல வந்தவளை சொல்ல விடாது தடுத்தான் தீனரீசன் இதழ்கள் கொண்டு குறுக்கிட்டு.
''ஐ லவ் யூ குஞ்சாய்..''
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 59
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.