- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் ஏழு
ஏகவிர் இல்லம்
வீரின் ஆபிஸ் அறை
''பைத்தியமடா உனக்கு!!''
வீரின் சத்தத்தில் ரீசனின் காது கொய்யென்றது.
''உன்னாலே முடியலன்னா பரவாலே மச்சான்.. நான் வேறே லாயர் பார்த்துக்கறேன்..''
ரீசன் அழுத்தமாக சொல்ல, பார்வையை வேறு பக்கம் திருப்பிய வீரோ வாயை குமித்து காற்று ஊதி அடுத்த டயலாக்கிற்கு தாவினான்.
''நான் முடியாதுன்னு சொல்லலடா.. இது அவசியமில்லன்னு சொல்றேன்!! புரியுதா!!''
கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல அரைமணி நேரமாக ரீசனுக்கு வகுப்பெடுத்த டிவோர்ஸ் லாயர் கடுப்பில் கத்தினான்.
''எனக்கு அவசியம்டா!!!''
செவிடன் காதில் ஊதிய சங்கே வீரின் உபதேசமெல்லாம் என்பதை மெய்ப்பித்தான் ரீசன் மாறாத அவனின் முடிவோடு.
''இங்கப்பாரு ரீசன்.. இது பேசி தீர்க்க வேண்டிய விஷயம்.. எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க முடியாது.. ஏன்டா அதை நீ புரிஞ்சிக்க மாட்டறே!!''
நண்பனின் குடும்ப வாழ்க்கையின் நலன் கருதி மீண்டும் உபதேச புராணத்தை ஆரம்பித்தான் வீர்.
''என்னடா புரிஞ்சிக்கனும்!! பிடாரிடா அவே பிடாரி!! மனசாட்சியில்லாத ராட்சசிடா!!! என் மேல இருக்கறே கடுப்பே கீத்து மேல காட்டிருக்கா!! குழந்தடா!! அவளே போய் அந்தடி அடிச்சிருக்கா!! உடம்பெல்லாம் அப்படியே வரி வரியா சிவந்து போய்..''
சொல்ல முடியாது தழுதழுத்தது தகப்பனின் குரல்.
''சரி.. ரிலாக்ஸ் பண்ணு மச்சான்..''
ஆறுதலாய் ரெண்டு வார்த்தை சொன்னான் வீர்.
''கொஞ்சம் விட்டிருந்தா என் பொண்ணே கொன்னுருப்பாடா அந்த பிடாரி!!''
ரீசனால் ஜீரணிக்கவே முடியவில்லை, மகளிடத்தில் அவன் குஞ்சாயியின் செயலை. இன்னமும் கண்களிலேயே நிற்கிறது ஆறு வயதே நிரம்பிய பட்டாம் பூச்சி கீத்து குட்டி, பட்டு போன மரமாய் மெத்தையில் பேச்சு மூச்சின்றி சரிந்து கிடந்த அவல நிலையை.
''அது உன் மேல உள்ளே கோபமில்லே ரீசன்.. அவே மேல அவளுக்கே வந்திருக்கறே கோபம்.. கோபம்ங்கறதே விட.. பயங்கறதுதான் நிஜம்!! எங்கே நீ அவளுக்கு இல்லாமே போயிடுவியோங்கற இன்செக்யூரிட்டி (insecurity).. அதுதான் அவளே இப்படி வயலண்டா (violent) பிஹேவ் (behave) பண்ண வைக்குது..''
வீரின் சைகொலஜி ( psychology) என்னவோ நெஞ்சம் முழுக்க வலி வேதனையை கொண்டவனிடத்தில் எடுப்படவில்லை.
''அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது வீர்!! சும்மா வாயுக்கு வந்ததை சொல்லி அவளுக்கு ஒத்து ஓதாதே!!''
''பஜாரியே கட்டுனே ஒவ்வொருத்தனும் இதுலே அனுபவசாலிதான் ரீசன்.. உனக்கு சொன்னாலாம் புரியாது!! பட்டாக் கூட புரியாது!!''
லல்லி குட்டியின் பாதிக்கப்பட்ட மனநிலையை கருத்தில் கொண்டு வீர் தேவகுஞ்சரிக்கு சப்போர்ட் (support) செய்திட, ரீசன் மசிவதாய் தெரியவில்லை.
''இல்லே மச்சான் எனக்கு தெரியும்.. அவளுக்கு பயம்லாம் இல்லடா!! கடுப்பு!! என் மேல இருக்கறே ஆத்திரம்!! அதை என்கிட்ட காட்டே முடியாமத்தான் கீத்துக்கிட்டே காட்டிருக்கா!!''
சலிப்படைந்த வீரோ வேறு வழியின்றி சரணடைந்தான் ரீசனிடத்தில்.
''சரி உனக்கு வேணாம்.. எனக்கு வேணாம்.. மச்சான்!! தேவகுஞ்சரியே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வா.. உட்காரே வெச்சு பேசிடலாம்!! ஓகேவா!!''
நண்பனின் குடும்பம் சிதைவதை வீர் விரும்பிடவில்லை. அதனால் , சமரச பேச்சு வார்த்தைக்கு அடிப்போட்டான்.
ஆனால், சம்பந்தப்பட்டவனோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே பிடிவாதம் கொண்டான்.
''ஒரு கன்றாவியும் தேவையில்லே!! நீ எனக்கு டிவோர்ஸ் பேப்பர்ஸை ரெடி பண்றே வேலையே மட்டும் பாரு!!''
ஒரேடியாய் வீரின் வாயடைத்தான் ரீசன். நெற்றி நீவி சிகரெட்டை பற்ற வைத்த வீரோ நன்குணர்ந்திருந்தான் ரீசனின் மனநிலையை. சம்பவம் நடந்து இப்போதுதான் ரெண்டு நாட்கள். அதான், இன்னும் சூடாறாமல் ஆவி பறந்து கொண்டிருக்கிறதென்று.
''ரீசன் இது நீங்க ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லே.. உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு.. உங்களோட முடிவு.. குறிப்பா உன் அவசர முடிவாலே கீத்துவோட எதிர்காலமே கேள்விக்குறியாகிடும்.. அதை கொஞ்சம் மைண்ட்லே (mind) வெச்சுக்கிட்டு.. எந்த முடிவா இருந்தாலும் எடு..''
''எனக்கு என் பொண்ணு வேணும் மச்சான்!! அவ்ளோதான்!! உன்னால முடிஞ்சா எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடு.. இல்லையா..''
''போதும்டா நிறுத்து!! சும்மா சும்மா அதையே சொல்லாதே!! சைல்ட் கஸ்டடி (child custody) உனக்கு கிடைக்காமே போறதுக்கு யாரும் தேவையில்லே நீ ஒரு ஆளே போதும்!!''
வீர் எகிறிட, புரியாத ரீசனோ நண்பனை விழிகளால் அளந்தான்.
''ஆமா.. பின்னே.. பார் ஓனர்.. இதுக்கு மேல என்ன வேணும்!! அவுங்க லாயர் ஒரே வார்த்தையிலே நம்மளே அடிச்சு தூக்கிடுவான்!!''
''ஏன் பார் ஓனர் நல்லவனா இருக்க மாட்டானா!!''
கொதித்து போயிருந்த அப்பனோ, மண்டைக்கு ஏறிட ஆவேசம் கொண்டான்.
''நான் அப்படி சொல்லலே.. ஆனா.. அவுங்கக்கிட்டே நிறைய சாதகமான விஷயங்கள் இருக்கு.. இப்போ பாறேன்.. கீத்து படிக்கறது இன்டர்நேஷனல் ஸ்கூல் (International school).. உனக்கே தெரியும் அந்த ஸ்கூல் ஸ்டாண்டர்ட் அண்ட் ஃபீஸ் (standard and fees) பத்தி.. சைல்ட் கஸ்டடி உனக்கு கீழே வந்தா கண்டிப்பா நீதான் மேக்ஸிமம் (maximum) அந்த பணத்தை கட்டே வேண்டியது வரும்.. அது மாதிரி இன்னும் நிறைய இருக்கு மச்சான்..''
நிலையை சமாளிக்க, கீத்துவை பகடைக்காயாக பயன்படுத்தினான் வீர்.
''நான் ஃபைனான்ஷியலா (finance) ஸ்டேபிள் (stable) இல்லன்னு சொல்றியா மச்சான்..''
''நான் இந்த பிரச்சனையிலே இருக்கறே ப்ரோ அண்ட் கோன்ஸ் (pro and cons) பத்திதான் சொல்றேன் ரீசன்..''
டாப்பிக் சூடு பிடித்தது.
''நானும் ஒருவகையிலே அவுங்க அளவுக்கு பணம் இருக்கறவந்தான்டா!! அதுவும் பெத்த பிள்ளையோட தேவைகளே கவனிக்க முடியாத அளவுக்கு கையாலாகாத அப்பன் இல்லே நான்!!! அவுங்களே விட என் பொண்ணு கீத்துவே நான் இன்னும் நல்லா பார்த்துப்பேன்!! அது அவுங்களுக்கே தெரியும்!!''
''ஏன்டா இவ்ளோ பிடிவாதம் பிடிக்கறே.. ஒருதடவை பேசித்தான் பார்க்கலாமே.. டிவோர்ஸ் வரைக்கும் போயிட்டா.. திரும்பி வர்ரது ரொம்ப கஷ்டம்டா மச்சான்.. பிஞ்சி மனசுலே இப்பவே ஒரு வெறுப்பு வந்திடும்.. அது யார் மேலே வேணும்னாலும் வரலாம்..''
''எப்போ அவே எனக்கு பொண்டாட்டியா இருக்கறே தகுதியே இழந்திட்டாளோ.. அப்பவே என் பொண்ணுக்கு தாயா இருக்கறே அருகதையையும் இழந்துட்டா!!''
என்றவன் தாமதிக்காது விருட்டென்று அவ்வறையிலிருந்து வெளியேறினான்.
மாடிப்படியில் ஆணவனின் கால்கள் வேகமாய் பயணிக்க, அதைவிட பன்மடங்கு வேகத்தில் தீனரீசனின் அம்பகங்களிலிருந்து கண்ணீர் வழிந்திறங்கியது, நிஜம் ஊசியாய் நெஞ்சை குத்திட.
*
விசாகா இல்லம்
விடியற்காலை ஐந்து மணி.
விழிகள் விரிக்காத விசாகா குட்டி கைகளால் துழாவி எடுத்தாள் ஏசி ரிமோர்ட்டை. அடைத்து போட்டாள் 16°C ஏசியை. மெதுவாய் கண்களைத் திறந்தாள். அறை முழுதும் கும்மிருட்டு.
ஒருக்களித்து படுத்திருந்தவள் பொசிஷன் (position) மாறாது, மெதுவாய் கால்களை தரையில் இறக்கி எழுந்தமர்ந்துக் கொண்டாள். உறக்கத்திலிருக்கும் குழந்தை கொண்ட வயிற்றை ஒரு முறை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தாள் தாயவள்.
''குட்டி பையா.. அம்மா லவ் யூ..''
காற்றுக்கும் கேட்கா வண்ணம், அவள் மகனுக்கு மட்டும் விளங்கும்படியாக சொல்ல, தாயை தூக்கத்தில் உணர்ந்த உயிர் கொண்ட செல்லகண்ணனோ; மென்மையாய் அசைந்தான். முறுவல் கொண்ட கோமகளோ மீண்டும் வயிற்றை பதமாய் தடவினாள்.
''அச்சச்சோ.. அம்மா டிஸ்டர்ப் (டிஸ்டர்ப்) பண்ணிட்டேனா குட்டி பையனே.. சோரிடா செல்லப்பையா.. நீங்க தூங்குங்க.. சரியா..''
என்று குழந்தையோடு கதைத்து முடித்த வதனியவளோ, தலையணைக்கு அடியிலிருந்த கைப்பேசியை பொற்கரங்களால் தள்ளியெடுத்தாள். பெதும்பையவள் மணியை பார்த்திட, கியூட்டான டும்போ யானை படம் கொண்ட முன் தொடுத்திரையோ விடியற்காலை ஐந்து இருபதைக் காட்டியது.
ஆயிழையின் அடிவயிற்றில் ஒருவித பிடிப்பு ஏற்பட, எழ எத்தனித்தவள் முயற்சியை கைவிட்டு; மெத்தை விளிம்பை கைகளால் இறுக்கினாள்.
கையிலிருந்த அலைப்பேசி தவறி தரை கொண்ட பளிங்கில் விழ, அதைக் கூட கண்டுகொள்ளா இயலா வலியே அரிவையவளுக்கு.
''சின்ன பையா.. அம்மா செல்லமில்லே.. பிளீஸ்டா குட்டி.. அம்மாக்கு வலி கொடுக்காதடா.. அம்மா வலி தாங்க மாட்டேண்டா..''
மூடிய கண்ணோரம் கண்ணீர் வழிய, விட்டம் பார்த்தவள் சொன்ன ரணம் மகன் உணர்ந்தான் போலும். குறும்புக்காரன் வாலை சுருட்டிக் கொண்டு தாயவளுக்கு சௌகரியமாக ஓரோரத்தில் அமைதியாய் சென்று அமர்ந்துக் கொண்டான்.
தரையை முத்தமிட்டிருந்த கைப்பேசியை குனிந்தெடுத்திட கூட வயிறு உப்பிய காரிகையாள் இயலவில்லை.
ஆனால், பார்க்கின்ற எவரும் ஏழு மாத கரு கொண்ட வயிறென்று சொல்லிடவே மாட்டார்கள். காரணம், இப்போதுதான் ஐந்து மாத வயிற்றுக்கான அளவிலேயே இருந்தது விசாகாவின் வயிறு.
குழந்தையின் மந்தமான வளர்ச்சி தாயையும் சேர்த்தே பாதித்திருந்தது. மனத்தால் துவண்டு கிடந்தவள் அப்பெரிய பங்களாவில் தனித்திருந்தது இன்னும் அவளை ஒடுக்கி போட்டது.
என்னசெய்வது எல்லாம் காலத்தின் கோலம்.
இருகால்களையும் அகல விரித்துக் கொண்டவள் மெதுவாய் கீழே குனிந்து விரல்களால் போனை எக்கியெடுத்தாள்.
போனில் ஓரத்து பொத்தானில் கைப்பட்டு டார்ச் வெளிச்சம் கொள்ள, ஏறெடுத்தவள் திட்டிகளோ கண்டுக் கொண்டது சோபாவில் பள்ளிக்கொண்ட ரீசனை.
ஆணவனோ அருணியவளின் கட்டிலுக்கு எதிரேயிருந்த ஆடம்பர சோபாவில்தான் படுத்துக் கிடந்தான். நல்ல தூக்கம் அவனுக்கு. வழக்கம் போல் விடிந்துதான் வந்திருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள் பெண்டு அவள்.
இன்றைக்கு விசாகா வரவேற்பறை சோபாவில் படுத்திடவில்லை. மாறாக, மேல் மாடியிலிருக்கும் அவளறைக்கு தானாகவே மாடியேறி வந்து; முன்கூட்டியே துயில் கொண்டிருந்தாள்.
ஆகவே, இன்றைக்கோ ஹீரோக்கு கர்ப்பிணி அவளை கையிலேந்தும் வேலை மிச்சமாகி போனது. ரீசன் இரவு படுக்கும் போது வழமையாய் டி - ஷர்ட் அணிந்திட மாட்டான்.
அதே பழக்கம்தான் அவனுக்கு விசாகா வீட்டிலும். வலது கரத்தின் முழங்கை தலைக்கு மேலிருக்க, இடது கையோ அவன் வயிற்றின் மீதிருந்தது. கால்கள் ரெண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடந்தன.
தினாவை இமைக்காது கைப்பேசி வெளிச்சத்தில் பார்த்தாள் விசாகா. பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கருவுற்ற நாளிலிருந்து ஒருமுறை கூட தினா அவளிடத்தில் வரம்பு மீறியதில்லை.
தீனரீசன் அவன் விசாகாவிற்கு அன்றையிலிருந்து இன்று வரை தினாதான், அவர்களுக்குள் என்ன நடந்திருந்தாலும்.
மலம் கழிக்கின்ற உணர்வு வர, அன்னமாய் நடைப்போட்டு கழிவறையை நோக்கிச் சென்றாள் விசாகா. ஜில்லென்ற தண்ணீரெல்லாம் இப்போது வேலைக்கே ஆவதில்லை.
சுடுதண்ணீர் இருந்தால் மட்டுமே அவளால் மலம் கழிக்க முடியும் என்றளவில் ஆகிப் போனது. ஆனால், துரதிஷ்ட வசமாய் கழிவறை பைப் மக்கர் செய்திட, வேறு வழியின்றி குளியலறை பைப் கொண்டு, சுடுதண்ணீரை வாளியொன்றில் நிரப்பினாள் டாஃபிகலர்க்காரி.
மூச்சு வாங்க நீர் நிறைந்த வாளியை தூக்கிய மங்கையவள், பாரம் தாங்காது மெனெக்கெட; கைநழுவியது வாளி அம்மணியின் பிடியிலிருந்து.
தடார் என்ற சத்தத்தில் தெரித்தெழுந்தான் ரீசன்.
''குஞ்சாய்!!''
என்றவன் ஓடோடி வர, கழிவறை கதவோரம் ஏதும் பேசாது தலை கவிழ்ந்து நின்றிருந்தாள் தெரிவையவள்.
அறிவாள் விசாகா குட்டியவள், ரீசனின் நெஞ்சத்தில் தேவகுஞ்சரியை தவிர வேறு யாருக்கும் இடமில்லையென்று; அவர்களுக்குள் பிரிவென்ற போர் நடந்தாலும்.
''ஏன் வாளி இங்க வந்துச்சு..''
அவன் கேட்க, மதங்கியவளோ உண்மையை உரைத்தாள்.
''சுடுதண்ணி பைப் வேலே செய்யலே.. அதான்.. பாத்ரூம்லருந்து தண்ணி புடிச்சிட்டு வந்தேன்..''
பெருமூச்சோடு கழிவறைக்குள் நுழைந்து வாளியை கையிலெடுத்தவன் கடிந்துக் கொள்ளாது சொன்னான்.
''என்ன எழுப்பே வேண்டியதுதானே.. இங்கதானே இருக்கேன்..''
''நல்லா தூங்கிக்கிட்டு இருந்தீங்க..''
என்றவள் சொல்ல, வாளியில் சுடுநீரை நிரப்பி கழிவறைக்குள் வைத்தவன் நகர்ந்துக் கொண்டான்.
கர்ப்பிணி அவளோ குனிந்த தலை நிமிராதே அவனைக் கடந்து கழிவறைக்குள் நுழைந்தாள்.
கீத்துவை காதல் மனைவியவள் சுமந்திருந்த சமயத்தில் குஞ்சாயி அவளை பாத் டாப்புக்குள் வைத்து சுடுதண்ணீரில் குளிப்பாட்டி விடுவதே ரீசனின் கடமையாகும்.
அன்றைய காதல் நினைவுகளெல்லாம் ஆணவனின் கண் முன் தோன்றிட, காதல் கொண்ட காளையவனின் முட்டாள் மனமோ ரீசனின் விழிகள் கலங்க வழிவகுத்தது.
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: அத்தியாயம்: 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.