What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 12

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
அத்தியாயம் 12

தலையோடு ஊற்றிக் கொண்டு வந்து படுத்திருந்தாள் சின்ன டிக்கியவள். ஈரக்குழலை காய வைத்திடவும் இல்லை மானினியவள்.

விட்டம் வெறித்தாள் பெண்ணவள், துயில் கண்களை தீண்டவில்லை. குப்பிற படுத்தாள் பாவையவள், நித்திரை அப்போதும் அகமுடையாளவளை நிந்திக்கவில்லை.

ஒருக்களித்து படுத்தவளின் எதிரே வெற்றிடம் காற்று வாங்கியது பக்கமிருக்க வேண்டியவன் இல்லாதிருக்க.

அப்பக்கமாய் கையை நீட்டி பெட்ஷீட்டை இறுக்கியவள் மெதுவாய் நகர்ந்து விரன் படுக்குமிடத்தில் உடலை குறுக்கிப்படுத்துக் கொண்டாள்.

அழுகையின் ஊடே நாயகியின் நயனங்கள் அசந்து சொருகின. சிந்தையோ இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நோக்கி பின்னோக்கியது.

நிழலிகா பிறக்கையிலேயே தாயை விழுங்கி லோகம் கண்டவள். ஆகவே, அம்மா சைட் குடும்பத்துக்கு ஆகாத பிஞ்சாகி போனாள்.

கோபித்துக் கொண்ட நேசமணியோ பச்சப்புள்ளையை தூக்கி கொண்டு வந்து விட்டார் கிராமத்திலிருந்து நகரத்திற்கு. தாயற்றவளை வளர்க்க அரும்பாடு பட்டர் சிங்கள் ஃபாதரவர்.

பெண் பிள்ளையவளை தத்துக்கொடுக்கவும் முடியாது ஆசிரமத்திலும் சேர்க்க முடியாது அல்லாடினார். நன்கு விசாரித்து பின் நல்லதொரு பேபி சீட்டரின் கையில் குழந்தையவளை ஒப்படைத்தார்.

நேசமணிக்கு மளிகை கடைத்தான் குடும்ப பிஸ்னஸ். ஆகவே, கூட்டு குடும்பத்தை பிரிந்து வந்தவர் பின் தனியே ஒரு கடை வைக்க முடிவெடுத்தார்.

அப்படி இப்படியென்று மனைவியின் நகைகளை விற்று பணமாக்கி சிறிய கடையொன்றை வாடகைக்கு எடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்றிட ஆரம்பித்தார்.

காலங்கள் உருண்டோடின. நிழலிகா கிடுகிடுவென வளர்ந்து பெரிய பெண்ணாகினாள். படிப்பில் மிடில் கிளாஸ்தான் காரிகையவள். ஆகவே, போர்ம் சிக்ஸ் படிக்க இடங்கிடைக்கவில்லை கணிதத்தில் மேடம் பெயில் என்பதால்.

அவளின் துரதிஷ்டம் கணித பாடத்தில் முட்டை வாங்கியிருக்க மேற்கல்வியை தொடர ரொம்பவே கஷ்டம் அது முடியவும் முடியாது என்று அப்பாவும் பொண்ணும் போன இடமெல்லாம் சொல்ல நொந்து போனார் நேசமணி மகள் கணக்கில் கோட்டை விட்டதை எண்ணி.

வேறு வழியில்லாதவளோ கொஞ்ச நாளைக்கு அப்பாவின் கடையிலேயே அவருக்கு உதவியாய் ஒத்தாசைக்கு வர கல்லா பெட்டியில் அமர்ந்த ஜிங்கமணிக்கு வரவு செலவை சரிவர பார்க்கத் தெரியவில்லை.

கடைக்கு சாமான் போட வருபவர்களிடம் சண்டைக்கு நின்றாள் கணக்கு வரா வஞ்சினி ஏற்றுமதி இறக்குமதியில் குற்றங் கட்டுபிடித்து.

நல்ல வேலையாய் நேசமணி தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க கையெடுத்து கும்பிடாத குறையாய் மகளை இனி கடைக்கு வர கூடாதென்று ஸ்ட்ரிக்கான அன்பு கட்டளை போட்டார் பெத்தவர் இருப்பதும் எங்கே மகளால் நக்கிக் கொண்டு போயிடுமோ என்று பயந்து.

கொஞ்ச நாளைக்கு மனையே கதியென்று கிடந்தவளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை கடத்துவதென்பதே பெரிய சவாலாகி போனது. ஆகவே, அப்பாவிடம் பேசி பக்கமிருக்கும் ஐஸ்க்ரீம் கூம்பு செய்யும் கம்பெனிக்கு வேலைக்கு போக சம்மதம் வாங்கினாள் வதனியவள்.

ஏறக்குறைய ரெண்டாண்டுகள் அம்மணி அங்கே வேலைக்கு போக அப்பாவின் மளிகை கடையோ ஆட்டங்கண்டிட ஆரம்பித்திருந்தது எதிரே பெரிய ஷோப்பிங் மோல் ஒன்று உருவாக.

முன்னாளில் அது உணவு கூடாரமாக இருந்தது பல பேர் வந்து புசிக்க திறந்த வெளி மடமாய். பின், யாரோ அவ்விடத்தை மொத்தமாய் வாங்க புதியதொரு நவீன பேரங்காடி செயல்பாட்டிற்கு வந்தது.

அச்சமயத்தில்தான் விரன் இதுநாள் வரை சேமித்த காசை கொண்டு லீசுக்கு வந்த கடையை வாங்கிட முடிவெடுத்தான் அவனுக்கான தனியார் ஜிம் ஒன்றை வழிநடத்த.

மேல்மாடி கீழ் போர்ஷன் என கடையதை மொத்தமாய் விலை பேசி முடித்தவன் அங்கே நேசமணி என்றொரு ஜீவன் கெஞ்சி கேட்க கடைசியில் மனசை மாற்றிக் கொண்டு கீழ் தளத்தை அவருக்கே விட்டுக்கொடுத்து மேல் மாடியை மட்டும் அவனின் உடற்பயிற்சி கூடத்திற்காக பயன்படுத்திக் கொண்டான்.

முன்னரே சிலமுறை நேசமணி வாடகைக்கு மளிகைக்கடை நடத்தி வரும் கடையை வாங்கிட அக்கடையின் உரிமையாளரை கேட்க அவரே சாமானியரால் கொடுக்க முடியா தொகையையே விலையாய் நிர்ணயித்தார்.

கல்யாண வயதிலிருக்கும் மகளுக்காக அடித்து பிடித்து சிறுக சிறுக சேமித்து நகைகள் வாங்கி வைத்திருந்த தந்தையவரோ அதைக்கொண்டு கடையை வாங்கிட நினைத்திருந்தார்.

ஆனால், ஓனரின் விலையோ குதிரை கொம்பாயிருக்க நேசமணியோ அவரின் திட்டத்தினை கைவிட்டுவிட்டு கடவுளின் மேல் பாரத்தை போட்டு பிழைப்பை பார்த்திட ஆரம்பித்தார்.

பின்னர், ஓனருக்கு ஏத்த விலையை கொடுத்து விரன் கடையை அவனதாக்கி கொள்ள. ஓனரோ நேசமணியை உடனடியாக கடையை காலி செய்ய சொல்லி நச்சரித்தார்.

வயதுக்கு வந்த புள்ளையை வைத்துக் கொண்டு எங்கே போவதென்று தெரியாத நேசமணியோ போய் நின்றார் விரனின் முன். அவனோ அவரை அங்கேயே இருக்க சொல்லி விட்டான் வயதில் பெரியவரவர் சின்னவனவன் காலை பிடிக்கும் அளவிற்கு வர.

தெய்வம் இருக்கிறது என்று நம்பிய நேசமணியோ நொடித்து போனார் ஷாப்பிங் மோல் திறப்புவிழா காண. மளிகை கடை ஓட்டம் குறைய ஆரம்பித்தது. சில நாட்கள் அறவே வியாபாரமின்றி போனது.

அவருக்காக இல்லாது போனாலும் மகளுக்காகவாவது கொஞ்சமேனும் பணம் சேர்த்திட வேண்டுமென்று நினைத்தார் தந்தையவர். நிழலிகாவை நல்லதொரு இடத்தில் கரை சேர்த்திட விரும்பினா நேசமணி.

இதுநாள் வரை யாருமற்றவளாக வளர்ந்தவள் போகின்ற இடத்திலாவது நாலு பேர் இருக்கும் குடும்பத்தில் வாக்கப்பட வேண்டுமென்று கடவுளை பிராத்தித்தார் பெத்தவரவர்.

வியாபாரம் முழுசாய் படுத்துவிட அக்கம் பக்கம் விசாரித்து தொழிலுக்காக வட்டி வாங்கிட முடிவெடுத்தார் நேசமணி அதுவும் சிங் தாத்தாவிடம் அது விரனின் தாத்தா என்றறியாமலேயே.

ரிங்கிட் பத்தாயிரத்தை பத்து பர்சண்ட் வட்டியோடு கடனாய் பெற்றுக் கொண்டார் நேசமணி அவருக்கென்று ஏதும் அடகு வைக்க இல்லாததால். வழக்கமாய் ஐந்து பர்சண்ட்தான். இப்படி உத்தரவாதம் ஏதுமின்றி யாருமின்றி வருவோருக்கு வட்டி கணக்கே வேறு.

எப்படியோ சமாளித்து ஒவ்வொரு மாதமும் கடைக்கான ரெண்ட் பணத்தையும் வட்டி காசையும் கொடுத்து வந்த நேசமணி திடிரென்று படுத்தார் படுக்கையில் ஒருநாள் நெஞ்சு வலி வந்து.

ஆடிப்போனாள் மகளவள் தந்தைக்கு நேர்ந்த பிணியை கண்டு. என்செய்வதென்று தெரியவில்லை அவளுக்கு.

பொது மருத்துவமனையும் தேறியவரை அங்கு நாட்கள் கடக்க தங்க வைத்திட அனுமதிக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு பிறகு அப்பாவோடு இல்லம் திரும்பியவள் தலையில் விழுந்தது இடி யுவதியவளுக்கு வேலை போக அதீத விடுப்புகளால்.

சிக்கிய சில் வண்டாய் சீட்டியை மீண்டும் பார்க் செய்தாள் சுந்தரியவள் பிடிக்காத அப்பாவின் மளிகை கடை கல்லா பெட்டியிலேயே. ஒரு மாதம் கூட முழுதாய் முடியவில்லை, அம்மணியின் வர்த்தக திறனில் கடை இழுத்து மூடும் நிலைக்கு வந்தது.

அப்பாவிடம் உண்மையை மறைத்தவளோ நேசமணி அவரும் வட்டி கதை தொடங்கி கடை இப்போது ஓனரின் கையிலிருந்து விரனின் கைக்கு மாறிய கதை வரைக்கும் எதையுமே மகளிடத்தில் சொல்லாததை அறியவில்லை.

ஆளாளுக்கு ரகசியம் கொண்டு நாட்களை நகர்த்த, நிழலிகாவோ அவளுக்கு தெரிந்த ஓரே வேலையான மருதாணியை கையிலெடுத்தாள்.

சொற்ப வருமானமே வரும் என்றறிந்தும் சும்மா இருப்பதற்கு இதுவே மேல் என்று தோன்றியது தெரிவையவளுக்கு. இருந்தும் நம்பிக்கை கொண்டு களமிறங்கினாள் வெற்றி காண வியாபாரத்தில்.

அப்பாவிற்கு தெரியாமல் மளிகை கடையை மருதாணி கடையாக்கினாள் நிழலிகா. கூடவே, யூடியூப் சேனல்களை பார்த்து பல்வகையான குழல் அலங்காரங்களையும் கற்றுக் கொண்டாள்.

பங்ஃசன் செல்வோருக்கு மருதாணியை இலவசமாக்கினாள் சிகையலங்காரம் நிழலிகாவிடம் என்றால். அலைமோதும் கூட்டம் இல்லையென்றாலும் ஒருநாளைக்கு ஒருத்தர் இருவர் என்று ஓரளவு கல்லா நன்றாகவே கட்டியது நேசமணியின் மளிகை கடையை விட பேஷாகவே.

முதல் இரு மாதங்கள் வாடகை வராதிருக்க வெளியூர் போயிருந்த விரன் திரும்பி வந்து கடையின் மாற்றங்களை காண என்னவோ நடந்திருப்பதை உணர்ந்துக் கொண்டான்.

ஆணவன் நேசமணிக்கு போனை போட அவரோ சங்கடங்களை வரிசையாய் ஒப்புவித்து கொஞ்ச கால அவகாசம் கேட்டார் வாடகையை செட்டில் செய்திட.

ஓகே சொன்னே விரனோ அதற்கு பிறகு அந்த வாடகை மேட்டரை மொத்தமாய் மறந்து போனான்.

பணம் இருப்பவன் என்பதால் வயதில் மூத்தவரவர் பொண்ணு கல்யாண பேச்சை ஆரம்பிக்க பேச்சை வளக்க விரும்பாதவனோ அவருக்கு சாதகமாய் பதிலளித்து கோவில் உண்டியல் கணக்கில் சேர்த்தான் கீழ் கடை ரெண்ட் அமாவ்ண்டை.

நேசமணியோ மகள் கேட்க ஓனர் வீட்டுக்கு வந்து பணம் வாங்கிக் கொள்வார் என்று வேறு கதையை அவளிடத்தில் சொல்லி சமாளித்தார்.

ஓசியில் மங்களம் வாசித்த நிழலிகாவோ பின்னாளில் முக ஒப்பனைகளையும் கற்றுக் கொண்டாள். தொடர்ந்து பேடிக்குவர் மேனிக்குவர் என்று ஒட்டுமொத்தமாய் எல்லா சேவைகளையும் வழங்கும் ஆளாகி போனாள்.

ஒரு வருட காலத்தில் ஒரு முறை கூட மருதாணி கடைக்காரம்மா சின்ன டிக்கியும் ஜிம் ட்ரெனர் குட்டி குஞ்சனும் இதுவரை பார்த்துக் கொண்டதே இல்லை அவர்களுக்கான அன்றைய நாள் வரும் வரையில்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 12
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top