What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 69

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
332
அத்தியாயம் 69

உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான் நிழலிகாவும்.

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கணக்காய் வீட்டுக்கு வந்த பரிசை வாங்கி பிரித்தோமா, பார்த்தோமோ என்றில்லாது டிடெக்டிவ் ஏகம்பரம் வேலை பார்த்தால் இப்படித்தான் முக்குடைப்பட்டு நிற்கணும்.

இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் போனது, பெண்ணவள் வேண்டாத வேலைகள் பல பார்த்து அலரவளே மண்ணை தோண்டிய குழிக்குள் குதித்து கொள்ள.

இப்போது குத்துது குடையுது என்றால் பாவம் என்தான் செய்வது சுந்தரியவளை.

விரனின் மீது கொண்ட வருத்தத்தை கடவுளிடம் முறையிட்ட அம்மணியோ, மயங்கி சரிந்தாள் பூஜை அறையில் உடம்பு சுகவீனம் கொள்ள.

மருத்துவரோ ஒரு வாரத்துக்கு படுத்தேதான் கிடக்க வேண்டுமென்று ஸ்டிரிக்டாய் சொல்ல, சீமாட்டியவளும் அடிபணிந்தாள் மாமியாரின் அதட்டல் தொனி கொண்ட அக்கறைகளுக்கு.

விரன் பதறி போய் வந்த நொடி முகத்தில் வெறுப்பை காண்பித்தாள் காரிகையவள். ஆயிழையின் ஆதங்கம் சற்று தூக்கலான மந்தரத்தையே வெளிப்படுத்தியது.

உணர்ந்தவன் காரணம் அறிந்திருக்க குற்ற உணர்ச்சியில் செத்து சுணங்கியவனாய் பின்வாங்கிக் கொண்டான் அவளை நெருங்காது.

ஓய்வு கொண்ட விரனின் தர்மபத்தினியோ இணையதளத்தை பராமரிக்கும் ஹனியிடம் இனி அது தேவையற்றது என்றுரைக்க நினைத்தாள். அதற்குள் வந்து சேர்ந்தது ஐந்து வீடியோக்கள் நிறைந்த ஹனியின் மின்னஞ்சல் ஒன்று மின்னலாய்.

வேண்டா வெறுப்பாக அப்படங்களை ஒளிபரப்பு செய்த பொற்றேடியோ விக்கித்து கண்ணீர் கொண்டாள் பைசெக்ஸுவல் ஆட்களின் வேதனைகளை காதால் கேட்டு கண்ணால் பார்க்க.

ஹனி இப்படியான நேர்காணல் பற்றியெல்லாம் ஏதும் சொல்லவில்லை. அவளாகவே புது முயற்சி ஒன்றை தொடங்கி ஆர்வமிகுதியில் இதையெல்லாம் செய்து வைத்திருக்கிறாள் என்பதை அடுத்த மெயிலின் மூலம் அறிந்துக் கொண்டாள் நிழலிகா.

காணொளி காட்சிகளை பார்த்த பிறகு வதனியோ ஆழ்ந்த சிந்தனைகள் பல கொண்டாள். விரனுக்கு பிரச்சனை என்பதை தாண்டி பைசெக்ஸுவல் என்றால் என்ன என்பதை முதலில் கண்டறிய முற்பட்டாள்.

ஹனியின் உதவியுடன் அதைப்பற்றிய தமிழாக்க புத்தகங்களை உடனடியாக வாங்கி அனுப்பிட சொன்னாள். டாக்டர் தமிழ் செல்வனை அழைத்து பைசெக்ஸுவல் நோயா அல்லது கோளாறா என்று வினவினாள்.

மகப்பேறு மருத்துவனவனோ இதற்கு சரியான ஆள் டர்ஷிக் என்றறிந்து அவன் எண்ணையே சின்ன டிக்கிக்கு பரிந்துரைத்தான். நிழலிகாவோ நேரடியாக சென்று சந்தித்தாள் டர்ஷிக்கை.

அவளின் அத்தனை சந்தேகங்களையும் சுலபமாய் தீர்த்து வைத்தான் டர்ஷிக் இரத்தின சுருக்கமாய்.

''நிழலிகா, முதல்லே உனக்கொரு பெரிய கைதட்டல் கொடுக்கணும்! விரன் உனக்கு எவ்ளோ முக்கியமா இருந்திருந்தா நீ இவ்ளோ தூரம் வந்திருப்பே. கண்டிப்பா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.''

என்றவனோ பேச்சை தொடர்ந்தான் சின்ன டிக்கியை சன்னமாய் பார்த்து.

''நிழலிகா ரொம்ப ஈஸியா, அதுவும் உனக்கு புரியறே மாதிரி சொல்லணும்னா, எதிர்பார்க்காதே! ஏத்துக்கோ! அவ்ளோதான்!''

''புரியலே!''

என்றவளோ தலையை ஆட்டினாள் முகத்தை பரிதாபமாய் வைத்துக் கொண்டு.

''ஓகே, இப்போ நம்ப டி.என்.ஏ. எப்படி ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமா இருக்கோ, அப்படித்தான் கடவுளின் படைப்புகளும் அது சார்ந்த விஷயங்களும். உணர்ச்சிகளும் உணர்வுகளும் கூட அப்படித்தான். காரணங்களே அலசி பார்க்கறதுக்கு பதிலா ஏத்துக்கிட்டோம்னா வாழ்க்கை ரொம்ப அழகாயிடும் நிழலிகா.''

''ஆனா, எனக்கு அது பிடிக்கலையே! நான் எப்படி அதை ஏத்துக்க முடியும்?! எட்டுக்கு பத்து பெட்டியிலே போட்டு அடைச்சு வெச்சு மாதிரி மூச்சு முட்டுது அதை நினைக்கும் போதெல்லாம்!''

என்றவள் தேம்பிட,

''அப்போ நினைக்காதே!''

என்றவனோ சிரித்தான்.

''எப்படி நினைக்காமே இருக்க முடியும் அந்த துரோகத்தே?!''

''துரோகம் பண்ணவன் தானா வந்து சொல்ல மாட்டான் நிழலிகா, நான் துரோகம் பண்ணிட்டேன், என்னே மன்னிச்சிடுன்னு! முதுகுல குத்தறவனுக்கு நெஞ்சிலே தில்லும் இல்லே, குற்ற உணர்ச்சியும் இல்லே! சோ, மனசாட்சிக்கு அங்கே வேலையே இல்லே!''

''என்னே சொன்னாலும் தப்பு தப்புதானே?!''

என்றவளோ கதங்கொண்டு வெறிக்க டர்ஷிக்கை,

''படைச்சவன் மேலே கோவப்படாமே, பாதிக்கப்பட்டவன் மேலே ஆத்திரப்பட்டு என்ன பிரயோஜனம் நிழலிகா?!''

''உங்க பிரெண்டுதானே அதான் அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசறிங்க!''

''பி பிரெக்டிக்கல் நிழலிகா! நீ பிறக்கும் போது உங்கம்மா கூடத்தான் இறந்துட்டாங்க, அதுக்காக நீ என்னே செத்தா போயிட்டே?! இல்லே, கில்டியா பீல் பண்ணி சாகத்தான் போனியா?! அது அவுங்க விதி போயிட்டாங்கின்ற நிதர்சனத்தை நீ ஏத்துக்கலே?!

''போதும்! உங்க விளக்கத்துக்கு ரொம்ப நன்றி! என் வலி உங்க யாருக்கும் புரியாது!''

என்றவளோ விருட்டென்று வெளியேறினாள் அங்கிருந்து அழுகையோடு.

நிஜத்தை புரிந்துக் கொள்ளும் தன்மையற்றவளை நினைத்து நெற்றியிருக்கினான் டர்ஷிக்.

உயிர் துஞ்சிடுவான் விரன்

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 69
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top