What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
332
அத்தியாயம் 68

''ஐயோ சொன்னா புரிஞ்சிக்கோங்க! என்னால இங்க என் வைஃப்பே தனியா விட்டுட்டு வர முடியாது.. அவுங்களுக்கு உடம்பு முடியலே.. நான் கண்டிப்பா அவுங்க பக்கத்துலே இருந்தே ஆகணும்..''

ரீசன் போனில் வழக்கறிஞரோடு வார்த்தை போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனின் பினாங்கு மதுக்கூடத்தில் குடியை போட்டு ரோட்டில் திரிந்த சில வெளிநாட்டு ஆடவர்கள் போதை பொருள் உட்கொண்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்பாக ரீசன் இப்போது பினாங்கு வரை செல்ல வேண்டும். உடல் நலமற்ற குஞ்சரியை தனியே விட்டு போக ஆணவனுக்கு மனம் வரவில்லை. ஆகவே, முடியவே முடியாது என்று லாயரோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான்.

கணவனின் டென்ஷனை தூரத்திலிருந்து பார்த்த குஞ்சாய் வீல் சேரிலிருந்த பட்டனை அழுத்தினாள். சத்தம் கேட்ட ரீசனோ போனை கட் செய்து விரைந்தான் காதல் மணவாட்டியை நோக்கி.

''என்னமா.. என்ன வேணும்..''

''நீ போ..''

''எங்கே..''

''பினாங்..''

''இல்லமா.. நான் போக வேண்டியதில்லே.. லோயர்கிட்ட பேசிட்டேன்.. அவுங்க பார்த்துப்பாங்க..''

''நீ போறே மாதிரி வருமா.. உன் பப்.. உனக்கு பிடிச்ச பப்.. நீ போ.. நான் பார்த்துப்பேன்..''

என்றவளோ வாஞ்சையாய் வருடினாள் கணவனின் கன்னத்தை.

''சரி.. நான் வேணும்னா அம்மாவே வர சொல்லவா..''

என்றவனோ போனை எடுத்து தாய் அம்பாளின் எண்ணை அழுத்த,

''இல்லே.. அத்தே வேண்டாம்.. அவுங்க வந்தா கீத்துவும் வருவா.. வேண்டாம்.. யாரும் என்னே இப்படி பார்க்க வேண்டாம்..''

என்றவள் குரல் தழுதழுக்க கண்ணீரோ பொலபொலத்தது.

''சரி.. அப்போ நான் ப்ரீலான்ஸ் கேர் டேக்கர் யாரையாவது டெம்பரரிக்கு ஹையர் பண்ணுட்டா..''

என்றவனோ பொஞ்சாதியின் கன்னங்களை நனைத்த ஊற்று தண்ணியை விரல்களால் துடைத்தான்.

''யாரும் வேண்டாம்.. அமராவே வர சொல்லு ..''

சின்ன குரலில் தலை குனிந்தவளாய் சொன்னாள் குஞ்சரி.

''அமராவதியா..''

என்ற ரீசனின் அம்பகங்கள் அகல விரிய,

''ஹ்ம்ம்..''

என்றவளோ வேறேதும் பேசாத அமைதியாகவே இருந்தாள்.

''குஞ்சாய்.. நீதான் நல்லா வேலைப் பார்த்துக்கிட்டு இருந்தவங்களே பாதியிலே ஸ்டாப் பண்ணி அனுப்பினே.. இப்போ மறுபடியும் கூப்பிட்டா வருவாங்களா..''

சும்மாவே சந்தேகம் கொண்டு அமராவதியை துரத்தியடித்தவள்தான் குஞ்சரி. இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்டு அவளை வழிய போய் அழைப்பதென்று தெரியாமல் விழித்தான் ஆணவன்.

''நீ.. நீ.. ரொம்பலாம் யோசிக்காதே ஜூனியர்.. நீ கூப்பிடு.. வருவா.. நான் கூப்பிட்டா கண்டிப்பா வருவா..''

என்றவளின் நம்பிக்கையை பொய்யாக்க நினைக்காதவனோ அமராவிற்கு கோலை போட்டு அங்கிருந்து சில அடிகள் முன்னோக்க,

''ரீ.. ரீசன்.. எங்க போறே..''

''கோல் பண்றேம்மா அமராக்கு..''

''இங்க.. இங்க கொடு.. போனே..''

கையை நீட்டி கேட்டாள் கோதையவள் அலைபேசியை ரீசனிடத்திலிருந்து. சந்தேகமோ பயமோ ஏதோ ஒன்று வழக்கம் போல் குஞ்சரியை ஆட்டி படைத்தது.

கணவனின் போனை வாங்கி காதில் வைத்த மணவாளியவள் வீல் சேர் பொத்தானை அழுத்தி பால்கனி பக்கமாய் போனாள்.

புரிந்துக் கொண்ட ரீசனோ மஞ்சத்தில் கண்களை மூடி மெல்ல சரிந்தான்.

குஞ்சரியோ கொஞ்சம் அழுகாச்சி நாடகம் நடித்து தெரபிஸ்ட் அம்மணியை ஒருவழியாய் வீட்டிற்கு வர சம்மதிக்க வைத்திருந்தாள்.

ஊனமுற்றவளின் குணம் அறிந்த ப்ரீதனின் அக்கா அமராவதியோ வம்புக்காரியின் புருஷனின்றி அம்மனை செல்ல ரொம்பவே தயங்கினாள்.

பேஷண்டை சமாளிக்க முடியாத ஆளெல்லாம் இல்லை அமரா, இருந்தாலும் குஞ்சரியின் நிலை எப்போது மோசமாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

டிசோர்டஸ் கொண்ட வஞ்சியவளின் பிரச்சனையே சிரித்து கொண்டிருக்கும் அடுத்த நொடியே கத்தியை காட்டி மிரட்டிடும் திடீரென்ற மறுதல்தான். ஆபத்தான ஆயிழை அவளுடன் தகுந்த துணையின்றி தனியே இருப்பது பேராபத்து.

ஆகவே, ஆளில்லா இல்லத்தில் ரீசனின் இல்லத்தரசியை தனியே கவனித்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கோதையவள் சொல்ல, கெஞ்சி கதறி காரியத்தை சாதித்துக் கொண்ட குஞ்சரியோ வழியனுப்பி வைத்தாள் ரீசனை பினாங்கிற்கு.

ஆணவனோ நடக்கவிருக்கும் விபரீதம் அறியாது நிம்மதியாய் பயணித்தான் வழக்கை சந்திக்க அவனின் குஞ்சரியை தெரபிஸ்ட் அமராவதியின் கையில் ஒப்படைத்து.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…


முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 68
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top