What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
332
அத்தியாயம் 124

புயலாய் தொடங்கி, தென்றலாய் வருடி, பங்கேருகமான (தாமரை) கிருத்திகாவை பலமுறை மலர வைத்திருந்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.

தலைக்கு மேல் கரம் பதித்திருந்தவன் மார்பில் துஞ்சிக் கிடந்த கோதையோ, அவன் நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு மென்மையாய் வருடியப்படி நாசியின் தண்டில் பயணித்து கீழிறங்கினாள்.

டாக்டரின் வலது காதிலிருந்தோ உதிரம் சத்தமில்லாது வழிந்திறங்கி ஈரமாக்கியது தலையணையை.

டாக்டரின் மூக்கை செல்லமாய் அழுத்தி பிடித்த மாயோளோ, அதை மெதுவாய் ஆட்டி,

''லோங் ட்ரைவ் எங்கையாவது போலாமா ஔகத்?''

என்று கேட்டாள் திரும்பி அவன் நெஞ்சில் முகம் பதித்து அழகனை ஏறெடுத்தவாறு,

''இப்போவா?!''

என்றவனோ கண்களை மூடியப்படியே எதிர் கேள்வி எழுப்பினான் மனைவியிடத்தில் உடலுக்குள்ளோ கலவரம் நடப்பதை உணர்ந்து.

''ஹ்ம்ம், பசிக்குது வேறே. காலையிலருந்து ஒன்னுமே சாப்பிடலே தெரியுமா?!''

''ஏண்டி?! பாப்பா இருக்குன்னு தெரியும்தானே?''

''எல்லாம் உன்னாலத்தான்! உன் மேலே உள்ளே கோவம்தான்!''

என்ற மங்கையோ மழலையை போலான முக சைகை கொண்டு ஓங்கி அடித்தாள் அவன் நெஞ்சிலேயே.

''அடியே! நானே இப்பவோ அப்பவோன்னு இருக்கேன்! நீ வேறே ஏண்டி?!''

என்று வலியை மறைத்து நக்கலாய் டாக்டர் சிரிக்க,

''இப்படி பேசறதுக்காகவே உன்னே..''

என்ற வல்லபியோ அவன் மீதேறி கடித்து வைத்தாள் ஔகத்தின் இரு கன்னங்களையும்.

கணவனின் தலையை இறுக பற்றுகையில் நசநசத்தது பெண்ணவளின் விரல்கள். இருப்பினும், அது அப்படியே டீலில் விடப்பட்டது டாக்டர் பொஞ்சாதியின் இருகைகளையும் சேர்த்திருக்கி பற்றி அவன் லீலைகளை அவளின் நாபியில் ஆரம்பிக்க.

அடுத்த ரவுண்டுக்கு அடிப்போட்ட புருஷனை கழட்டி விட்ட கீத்துவோ புது துண்டோடு ஓடி போய் நுழைந்தாள் குளியலறைக்குள்.

அவள் குளித்து வருவதற்குள் குருதி கொண்ட தலையணை உறையை தூக்கி சலவை பைக்குள் போட்ட ஔகத், படுக்கையறைக்கு வெளியிலிருந்த ஸ்விமிங் பூல் ஷவர் அறைக்குள் நுழைந்து அவன் குளியலை முடித்து கொண்டான்.

இருவரும் அரைமணி நேரத்தில் கிளம்பி மனையிலிருந்து வெளியேறினர். போகும் வழியிலேயே வஞ்சியவள் விருப்பம் போல் ஆளுக்கொரு ரோட்சைட் பர்கரை வாங்கிக் கொண்டு அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர் ஜோடிகள் இருவரும்.

அடுத்த நாற்பது நிமிடங்களில் ஏதோ ஒரு மலை உச்சியில் கொண்டு போய் காரை நிறுத்தினான் ஔகத்.

கீத்து காரின் ஹூட் மீது சாய்ந்தப்படியும், டாக்டர் அதன் மீது அமர்ந்தப்படியும் பர்கரை உண்டு முடித்தனர்.

''உன்னே இங்க கூட்டிக்கிட்டு வரணும்னு அடிக்கடி யோசிப்பேன் கீத்து.''

என்றவனோ தண்ணீரை நெட்ட,

''ஒரே இடத்துலே மொத்த சிட்டியையும் காமிக்கறேன்னு சொல்லுவல்லே!''

என்றவளோ கணவனை காதலோடு நோக்கி முறுவலிக்க,

''நேத்து நீ சொல்லும் போதே எனக்கு தெரியும். எதுவுமே மறந்திருக்காதுன்னு!''

என்றவனோ இழுத்தவளை கால்களுக்கு நடுவில் அரஸ்ட் செய்ய,

''கீத்து, கீத்து, இல்லல்லே! கிருத்தி!''

என்று புருவங்கள் உயர்த்தி நக்கலாய் பேச்சை ஆரம்பித்தவளோ அதே சுவாரசியம் குறையாது,

''கிருத்தி, கார் ஹூட் மேலே நீ படுத்துக்கிட்டு நிலாவே பார்ப்பே, நான் உன்னே பார்ப்பேன். என் கையோ உன் கையே இறுக்கமா புடிச்சிக்கும். நீ அப்படியே தூங்கிடுவியா, நான் சத்தமில்லாமே திரும்பி உன் நெத்தியிலே ஒரு கிஸ் பண்ணிட்டு உன்னையே பார்த்துக்கிட்டு இருப்பேன்! விடியரே வரைக்கும்!''

என்றவளோ சொல்லி முடித்து சிரிப்பாய் சிரிக்க, ஔகத்திற்கோ நாணத்தில் முகம் சிவந்து போனது.

ஒரு காலத்தில் அவன் கீத்துவோடு போனில் கதைத்த விடயங்களை குடும்பினி அவள் இன்றைக்கும் மறவாது பேசி காட்டிட ஔக்கத்திற்கு உள்ளுக்குள் ஆனந்தமே.

வெட்கங் கொண்ட டாக்டரோ உதடுகளை மடக்கிக்கொண்டு கீத்து ஒப்புவித்த வசனங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் பார்வைகளை ஆங்காங்கே ஓட விட்டான்.

''எங்கே இப்போ கொடு பார்க்கலாம் அந்த ஒரே ஒரு நெத்தி முத்தம்!''

என்ற கோற்றொடியோ புருஷனை வம்பிழுத்து சிரிக்க,

''ஒன்னு என்னடி ஒன்னு! ஓராயிரம் கொடுக்கறேன்!''

என்ற ஔகத்தோ அவனிடத்தில் சிக்கிடாது, அங்கும் இங்கும் சிரசை ஆட்டிய கீத்துவின் தலையை இறுக்கமாய் பற்றி பிடித்து அவளின் நுதலில் அழுத்தமான முத்தமொன்றை பதித்தான்.

''போதுமா?!''

என்ற டாக்டரோ உச்சியில் குங்குமம் வைத்து அழகு சிலையாய் காட்சியளிக்கும் ஆயந்தியவளை இமைக்காது ரசிக்க,

''ஓராயிரம் சொன்னே?! மிச்சம் எங்கப்பா?!''

என்றவளோ முன்னோக்கி சாய்ந்தவாக்கில் புருஷனை ஒற்றை புருவம் தூக்கி கிண்டலடிக்க,

''வெச்சு வெச்சு கொடுக்கறேண்டி பொண்டாட்டி!''

என்றவனோ அவள் கன்னத்தை விரல்களால் பிடித்தாட்டி சிரித்தான்.

"அதெல்லாம் முடியாது! சொன்னா சொன்னபடி நடந்துக்கணும்! இப்போவே மிச்சமிருக்கறே தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஒன்பது முத்தத்தையும் கொடு! ஹ்ம்ம்! சீக்கிரம்!"

என்றவளோ காரின் ஹூட்டை தண்ணீர் போத்தலால் அடிக்க சிறு பிள்ளையைப் போல்,

"அந்த தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஒன்பதையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒன்னு கொடுக்கவா?!"

என்றவனோ அவன் கால் பிடியைத் தளர்த்தி காரின் ஹூட்டிலிருந்து கீழிறங்கினான்.

"என்னடா டயலாக் பேசிட்டு அப்படியே எஸ்கேப் ஆக பார்க்கறியா?!"

என்றவளின் நக்கலுக்கு இல்லையென்று தலையாட்டியவனோ கீத்துவைத் தூக்கி ஹூட் மீது அமர்த்தினான்.

"டேய் காஜி மன்னா, என்னடா பண்ண போறே?! படுக்கப் போட்டு அந்த தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஒன்பது முத்தத்தையும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் கொடுக்க போறியா?!"

என்றவளோ டாக்டரின் முன் நெற்றி கேசத்தை விரல்களால் கோதி கிறக்கமான தொனி கொள்ள, உதடு மடக்கிய மென் புன்னகையோடு இல்லையென்று தலையாட்டிய ஔகத்தோ, மணவாட்டியவளை நெருங்க, அவனின் மந்தகாச பார்வைகளில் விழிகளை மெதுவாய் மூடினாள் ரதியவள்.

டாக்டரோ இதழோரம் முறுவல் கொண்டு கீத்துவின் வயிற்றின் முன் குனிந்து பதித்தான் அழுத்தமான நேசமிகு முத்தமொன்றை.

அதை உணர்ந்த நொடி சிரித்த முகமாய் மலர்ந்த பேடுவோ, கைகளை அகல விரித்து கண்ணசைத்தாள் அவனை கட்டிக்கொள்ள அழைத்து,

''போதுமா இந்த முத்தம்?!''

என்றவனோ பொஞ்சாதியை மென்மையாய் அணைத்து, அவளை அப்படியே இறுக்கி பிடித்தப்படி திரும்பி, காரின் ஹூட் மீதமர்ந்தான்.

''ஔகத், பேபி வந்த பிறகும் நீ என்னே இப்படியே லவ் பண்ணுவல்லே?!''

என்றவளோ அவன் கழுத்தைக் கட்டுக்கொண்டு செல்லமாய் கேட்க,

''அதான் உன்னே லவ் பண்ணே படாஸ் இருக்கானே?!''

என்றவனோ சிரிக்க,

''ஆஹ்! இப்போ இப்படி சொல்லு! அப்பறம் அவன் நான் இல்லன்னும் சொல்லு!''

என்றவளோ அவனை கைகளால் செல்லமாய் அடிக்க,

''இப்பவும் அதைத்தான் சொல்றேன்! அவன் நானில்லை!''

என்றவனோ புனையிழையின் கைகளை அவன் கைகளால் மென்மையாய் பற்றிக்கொண்டு முன்னும் பின்னும் அசைக்க,

''அப்போ நீ யாரு?! கேடியா?!''

என்றவளோ அவன் நெற்றி முட்ட,

''ஹுஹும்!''

என்று தலையை ஆட்டியவனோ,

''அப்போ கேடிக்கெல்லாம் கேடியா?!''

என்று மீண்டும் அவன் நுதலில் அவள் நிடலம் கொண்டு இடிக்க,

''ஹுஹும்!''

என்ற ஔகத்தோ இப்போதும் இல்லையென்றே தலையாட்டினான் குறுஞ்சிரிப்போடு.

''அப்போ யாருதான்டா நீ?! சொல்லுங்க?! சொல்லுங்க?! சொல்லுங்க?! ஜாப்பான்லே என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?!''

என்றவளோ ஔகத்தின் டி - ஷர்டை பிடித்து உலுக்க, சிரிக்க முடியாது சிரித்து,

''ஹான், அறுபத்தி நான்கு ஆய கலைகள் எப்படி எக்ஸ்பெர்ட் ஆகறதுன்னு கத்துக்கிட்டு இருந்தேன்!''

என்றவனோ கீத்துவின் நெஞ்சில் இதழ் கோலங்கள் கொள்ள முனைய, கூச்சத்தில் கோலாட்டம் கொண்டவளோ அவனிடமிருந்து தப்பித்து ஓடி போனாள் பாறையின் நுனி நோக்கி.

''கீத்து, பார்த்து!''

என்ற ஔகத்தும் அவளை பின்னோக்கி அடிகள் வைத்தவாறு பாக்கெட்டுக்குள் கைகள் கொண்டப்படி ஒட்டு மொத்த கோலாலும்பூரையும் ஒரே இடத்தில் நின்று ரசிக்க, அவன் முழங்கையை பற்றிக் கொண்ட கீத்துவோ செல்லமாய் வைத்தாள் குட்டி முத்தமொன்று அவன் தோளில்.

காற்றோ ஜில்லென்று வீசத் தொடங்கியது, மழைக்கான அறிகுறியாய். ஔகத்தோ நெஞ்சுக்கு குறுக்கே கைகளைக் கட்டியப்படி கீத்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்களை சொல்லிடலாமா என்ற யோசனையில் மூழ்கியிருந்தான்.

கீத்துவோ தலையை ஔகத்தின் தோளில் சாய்த்தப்படி,

''இப்போதான் மனசே லைட்டா இருக்கு ஔகத்.''

என்றிட, அவளைத் திரும்பி பார்த்தான் டாக்டர். கர்பிணியிடம் இப்போதைக்கு எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லதென தோன்றியது அவனுக்கு.

''ஐ லவ் யூ ஔகத்!''

என்ற நேரிழையோ அவன் முகத்தை இருக்கரங்களால் பற்றி அவனிதழ் நெருங்கினாள் நயனங்கள் மூடியப்படி.

கீத்துவின் வதனத்தைக் காதோர குழலோடு சேர்த்து இறுக்கிய ஔகத்தோ அவள் உதடுகளை அவனதாக்கிக் கொண்டான்.

ஆளனின் அதரங்கள் மீட்டிய முத்த இசையில் தொப்பையாய் நனைந்தது நங்கையின் முற்புதர் காணா ரோஜா வானம்.

ஔகத்தின் புஜங்களை அழுத்திய கீத்துவின் தேனெவெடுத்த தேகமோ கிளர்ச்சியில் அவன் மீறல்களை வேண்ட, டாக்டரோ முன்னெச்சிரிக்கையாய் இதழ்களை பிரித்துக் கொண்டான்.

உதடுகள் விலகிக்கொண்டாலும், ஒட்டி நின்ற காதல் ஜோடிகளின் கதகதப்பு இன்னும் அடங்கவில்லை. இருவரின் கரங்களும் பின்னி பிணைய,

''அது எப்படி கீத்து, நான் இல்லன்னு சொன்னாலும், நீ ஆமான்னு சொல்றே?! எப்படி?!''

என்ற ஔகத்தோ இதுநாள் வரை மனசுக்குள் உறுத்திய வியப்பான சந்தேகத்தை வாய் திறந்து கேட்டான் கீத்துவிடத்தில்.

இமைகள் திறக்கா இளம்பிடியாளோ, உடல் குலுங்க சின்னதாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்.

ஔகத் சுற்றி வளைத்து என்ன கேட்க வருகிறான் என்பதை அறியாத மக்கல்ல போலீஸ்காரியவள்.

மெல்லிய புன்னகையின் ஊடே ஊடையவள், கணவனின் செவி நெருங்க, மாரியோ குறுக்கிட்டு இருவரையும் காரை நோக்கி ஓட வைத்தது.

''நல்லவேளை நனையலே!''

என்றவனோ அப்போதுதான் கவனித்தான், கீத்து ட்ரைவர் சீட்டிலும் அவன் அதற்கு பக்கத்து இருக்கையிலும் இருப்பதை.

''இந்த பேய் மழையிலே எங்கிருந்து வீட்டுக்கு போறது?!''

என்ற கீத்துவோ உச்சுக் கொட்டிட,

''ஆமா! ஆமா! இது நிக்கறே வரைக்கும் இங்கதான்!''

என்றவனோ நக்கலாய் சிரித்து, சீட்டியை கொஞ்சமாய் பின்னோக்கி சாய்த்தான்.

''ஏசி ஆப் பண்ணிடவா ஔகத்? ரொம்ப குளிருது!''

என்றவளோ தோள்களை தேய்த்தாள், கைகளால் உடலை கட்டிக்கொண்டு.

''இங்க வா.''

என்றவனோ பொஞ்சாதியை முறுவலிப்போடு கண்ணசைத்து அழைக்க, சில்மிஷ புன்னகைக் கொண்ட பூமகளோ வேண்டாமென்று தலையாட்டினாள்.

''அட, வாடி!''

என்றவனோ இழுத்தவளை மடியில் கிடத்திக் கொள்ள, அழகனின் நெஞ்சில் சாய்த்துக் கொண்ட கீத்துவோ,

''ஔகத் நீ என்ன எவ்ளோ லவ் பண்றே?!''

என்றுக் கேட்டாள் கார் ஜன்னலில் இதயமொன்றை விரல்களால் வரைந்தப்படி.

''படாசே கேளு!''

என்ற டாக்டரோ மந்தகாச புன்னகையோடு விழிகள் மயூர வர்ணங்கள் கொள்ள, காதல் துணைவியின் கந்தரத்தில் புதைந்து இதழால் முத்தெடுத்திட ஆரம்பித்தான் பேரழகனவன்.

''ஔகத்!''

என்ற சேயிழையின் வாயோ வெறும் காற்றை மட்டும் வெளிக்கொணர, அழகனின் கரங்களோ வேலியற்ற பந்தியைப் பந்தாடிட ஆரம்பித்தது.

''Every woman knows that not every guy is a master of the Cloverleaf Tongue!''

என்ற ஏந்திழையின் விரல்களோ ஜன்னலில் வரைந்த இதயத்தை நாசமாக்க, ஔகத்தின் நாவோ தாரத்தின் பின்முதுகில் ஹார்ட் ஷேப்பை வரைய ஆரம்பித்தது.

டாக்டர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன வீட்டாளோ, இப்போதும் நம்பினாள் படாஸ் மற்றும் ஔகத் இருவரும் ஒருவனே என்று.

அவள் சொன்ன ரகசியம் அதைத்தான் உணர்த்தியது.

க்ளோவர்லீஃப் நாக்கு (Cloverleaf Tongue) என்பது குளோவர் இலையின் (cloverleaf) வடிவத்தைப் போல் நாக்கை மடக்கும் அரிய திறனின் பெயராகும்.

மூன்று அல்லது நான்காக நாக்கை உருட்டியும் மடக்கியும் செயல்படுத்தப்படும் இத்திறன் ஒன்றும் பெரிய வியாதியெல்லாம் ஒன்றுமில்லை. இதற்கு எவ்வித சிகிச்சையும் கூட தேவையில்லை.

இருப்பினும், இத்திறனால் சரிவர வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் போனாலோ அல்லது உண்ணுகையில் அசௌகரியமாக உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவரை சந்திப்பது சிறப்பாகும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதிசயமான இத்திறன் மரபணுவிலிருக்கும் ஆதிக்கமான அலீலின் (dominant allele) மூலம் உருவாகுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எவராலும் அவ்வளவு சுலபத்தில் கையாள முடியா இத்திறனின் வேடிக்கையான இன்பத்தை மானசீகமாக உணர்ந்தாள் கிருத்தி, காதலன் படாஸோடான வாய்வழி கூடலில்.

அதையே ஔகத்திடமும் உணர்ந்தாள் போலீஸ்காரியவள், மழையில் நனைந்து டாக்டரின் வீட்டில் தஞ்சம் கொண்ட அந்நாளின் முயங்களில்.

அசாத்தியங்கள் கொண்ட இருவர் ஒரே நேரத்தில் கீத்துவை நெருங்கியது எதிர்பாரா சம்பவமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், சமமான திறன் கொண்ட இருவரும் ஒரே மாதிரியாக இணையை திருப்தி படுத்துவது என்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியா விடயமே.

சர்வ நிச்சயமாய் ஆணுக்கு ஆண் கலவி செயல்கள் மாறுப்படும். அதுப்போலத்தான், கீத்துவின் கணவனும் காதலனான படாஸும்.

இருந்தப்போதும், முகிரத்தின் மிக முக்கியமான நா விளையாட்டில் ஆண்கள் இருவரும் மறந்து விட்டனர், அவர்களோடு கூடி களித்த கள்ளி சாமானியவள் அல்ல, காவல்காரியென்று.

இதைக் கொண்டுதான், கீத்து அவ்வளவு உறுதியாய் நம்பினாள் புருஷனும் படாஸும் வெவ்வேறு இல்லையென்று.

வனிதையவள் சொல்லிய கூற்றில் இதழோரம் சிறு புன்னகைக் கொண்டவன் வேறேதும் பெரிதாய் ரியாக்ஷன் காட்டிக்கொள்ளவில்லை, ஆக்ஷனில் பிஸியாகிப் போனதால்.

மழை அடங்குவதற்கும் காருக்குள் தம்பதிகளின் அட்டகாசம் ஒரு முடிவுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

விடிய போகும் இருட்டிய காலையில் ஜோடிகளின் காரோ கேடியின் மாளிகையை நோக்கி பறந்தது.

ஆசை பாரியாள் கேட்க, மறுக்காது அழைத்து போனான் கணவனவன் காந்தாரியின் மனம் கோணாது நடந்துக் கொள்ள முடிவெடுத்திருந்ததினால்.

பிரிவு கொடுத்த தாபத்தை அளவில்லாமல் தீர்த்திட முனைந்தனர் டாக்டரும் போலீஸ்காரியும்.

சொல்லாமல் இதுநாள் வரைக்கும் உள்ளுக்குள் புழுங்கிய அத்தனையையும் சொல்ல வேண்டியவனிடம் கொட்டி தீர்த்த நிம்மதியில் இனி வரும் காலங்களை சுகமாக களித்திட கீத்துவும், வாழ்வோ சாவோ முடிந்தளவு முட்டுக்கொடுத்து, பின் விதிப்படி எதுவாகினும் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஔகத் இருந்தான்.

பஞ்சணையோ இரண்டாவது பெட்சீட் கொண்டாலும், கர்ப்பமான வதுகைக்கோ நாணமும் துளிர்க்கவில்லை, உடலும் சோர்ந்திடவில்லை.

முதுகுடைந்தவன் கணக்காய் ஆயாசத்தில் டாக்டர் மல்லாக்க கிடக்க, உறக்கம் எட்டிப் பார்த்த நேத்திரங்களைத் தேய்த்த தெரிவையோ, ஒருக்களித்து படுத்துக் கொண்டாள் சுவரை வெறித்தப்படி.

திட்டிகளுக்கு முதுகை காண்பித்த பொஞ்சாதியை பின்னாலிருந்து கட்டிக்கொண்ட ஔகத்தோ,

''ஐ லவ் யூ கீத்து!''

என்றான் அவளின் காது மடலை கடித்தவாறு.

''ஔகத், இதே மாதிரி இனி எப்போதுமே இருப்பியா?!''

என்ற பொண்டாட்டியை அவளின் நெஞ்சு கொண்ட போர்வையோடு மேலும் இறுக்கிய டாக்டரோ,

''எப்போதுமே அப்படித்தானே இருக்கேன்.''

என்றான் சில்மிஷமாய் சிரித்து வேறு அர்த்தத்தில்.

''காஜி மன்னா!''

என்றவளோ அவன் புறங்கையில் ஒரு திருகு வைத்து,

''நான் இதை சொல்லலடா புருஷா! பழையப்படி நீ எப்படி என்கிட்ட ஜாலியா சிரிச்சுக்கிட்டு, என்னே வம்பு பண்ணிக்கிட்டே இருப்பியோ அப்படி!''

என்றவளோ குரலில் சோகத்தைத் தாங்க,

''அதான், படாஸ் இருக்கானே!''

என்ற ஔகத்தோ வேண்டுமென்றே கிண்டல் கொண்டான்.

''அவன் கிடக்கறான்! இப்போ எதுக்கு அவன் பேச்சு!''

என்றவளோ விடுக்கென்று ஔகத் புறம் திரும்ப, சட்டென ரத்தங்கொண்ட சட்டையைத் தூக்கி கடாசிய ஔகத்தோ அவளை நெருங்கி நெற்றியில் முட்டினான்.

மூக்கிலிருந்து செம்புனல் வழிய அதை நாச்சியவளுக்கு தெரியாமல் துடைத்த டாக்டரோ, தம்பிராட்டியவள் ஆளனின் நிலையைக் காணும் முன்னரே நிலவரத்தை கலவரமாக்கிடாமல் பார்த்துக் கொண்டான்.

படாஸ்தான் ஔகத் என்று நம்பியிருந்த கீத்துவோ, புருஷனை போலவே அவனோடு சேர்ந்து படாஸை கிண்டலடித்தாள்.

ஆனால், கிருத்திகாவின் வார்த்தையில் மெய்யாலுமே சிதறி போனது என்னவோ ஜன்னலோரம் நின்றிருந்த படாஸின் இதயம்தான்.

காதலியைத் தூக்கி போக வந்திருந்தவன் ஜன்னல் கம்பிகளை இறுக பற்ற அதுவோ பொசுங்கியது அவன் உள்ளங்கை கொண்ட அனலில்.

கலங்கிய விழிகள் நீரை எப்போது படியளப்பது என்று காத்துக் கிடக்க, உருக்குலைந்து நின்றவனோ அங்கிருந்து கிளம்பிட முடிவெடுத்தான்.

''ப்ரோமிஸ் பண்ணு ஔகத்! நீ இப்படியேதான் இருப்பே, மாற மாட்டான்னு!''

என்றவளோ அவன் முன் கையை நீட்ட,

''என்னடி இது சின்னபுள்ளத்தனமா?!''

''அதெல்லாம் எனக்கு தெரியாது! உன்னே நம்ப முடியாது! இப்போ இப்படித்தான் இருப்பே! அப்பறம் நாளைக்கு காலையிலே பார்த்தா முருங்க மரம் ஏறுன வேதாளம் மாதிரி நீ யாரோ நான் யாரோங்கற ரேஞ்சுல சுத்துவே!''

என்ற சுரிகுழலோ சீரியஸ் தொனிக்கொண்டு எழுந்தமர,

''ரெண்டாவது ரவுண்டு போலாமா கீத்து?!''

என்றவனோ அம்பகங்களை சிமிட்டி கண்ணடித்தான்.

''டேய்! நான் என்னே பேசறேன் நீ என்னே கேட்கறே?!''

என்ற வல்வியளோ புருஷனின் தொடையை திருக,

''எனக்கு ரொம்ப டைம் இல்லமா!''

என்றவனோ கலங்கிய விலோசனங்களோடு அவன் தொடையைத் திருவியவளின் விரல்களை பதமாய் பற்றி, கையால் உரசி, இழுத்து இதழில் பதித்து எச்சில் படா முத்தமொன்றை வைத்தான்.

''இப்படி பேசாதே ஔகத்! பிளீஸ்! உனக்கு ஒன்னும் இல்லே! நீ நல்லாருக்கே!''

என்றவளோ அவனை நெருங்கி அழகனின் வதனத்தை கையிலேந்தினாள்.

என்னதான் சுரஜேஷ் போக இருந்தவனின் உயிரை மீட்டு வந்திருந்தாலும், அதுவெல்லாம் ஏனென்று அறியாத பெண்டுவோ, முடிந்து போன விபரீதங்கள் திரும்பவும் தலைதூக்கிடுமா என்று அச்சங்கொள்ளாமல் இல்லை.

அதே வேளையில், அதைப்பற்றி ஔகத்திடம் ஒரு வார்த்தைக் கூட இன்றளவும் கீத்து கேட்டிடவில்லை.

சுரஜேஷ் சொல்லிடுவான் என்று நம்பி, அவனும் கையை விரிக்க அதோடு இவ்விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவள்தான். திரும்பவும் அதைப் பற்றி யோசித்திடக்கூட இல்லை.

ஆனால், இப்போதோ டாக்டர் ஏதேதோ பேச, கர்ப்பவதியின் உள்ளமோ ரோதனைக் கொண்டது.

''பையனோ, பொண்ணோ..''

என்ற ஔகத்தோ வார்த்தைகளை அப்படியே நிறுத்தி, கீத்துவின் முன் சரிந்திருந்த குழலை செவியோரம் சொருகினான்.

''நீ எதுவும் பேச வேண்டாம் ஔகத்! உனக்கு ஒன்னும் இல்லே!''

என்ற அகம்பாவ கள்ளியோ கணவனின் வாயை அவளின் இருக்கரங்களையும் கொண்டு மூடிட,

''நான் போனாலும், படாஸ் இருப்பான் கீத்து! எப்போதுமே! உனக்காக!''

என்ற டாக்டரோ குருதி வழிந்த செவியோடு சொல்ல,

''எனக்கு படாஸ் வேண்டாம்!''

என்ற அலரோ ஔகத்தை எக்கி அணைத்துக் கொண்டு கதறினாள்.

சில வேளைகளில் படாஸ் என்றால் மதங்கொண்ட யானையாகி போகும் ஔகத், பல வேளைகளில் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமலே இருந்திருக்கிறான்.

ஆனால், இருவரும் ஒன்றென்றால் ஏன் ஆணவன் இப்படியானதொரு வார்த்தையை இப்போது சொல்லிட வேண்டுமென்று குழப்பமே கொண்டாள் மங்கையவள்.

கிருத்திகா என்பவள் படாஸின் காதலி என்று மார்தட்டி பெருமை பேசிய ரேவ்வோ கிளம்ப நினைத்து, பின் போகாமல் அங்கேயே நின்றான், அணங்கவள் மனதால் ஒருக்காலும் படாஸ் வேண்டாமென்று சொல்லியிருக்க மாட்டாள் என்று நம்பி.

ஆனால், மதங்கியவளின் பேச்சுகளோ தொடர்ந்து டாக்டருக்கே சாதகமாக ஒலிக்க, ஒருமுறையேனும் படாஸ்தான் என் உயிரென்று உரைத்திட மாட்டாளா காதலியவள் என்று ஏங்கி காத்திருந்தான் ரேவ், ஜோடிகளின் தாம்பத்தியத்திற்கு சாட்சியாகாது ஜன்னல் கம்பிகளில் முதுகொட்டி நின்ற வாக்கில்.

''படாஸ் என்னே விட உன்னே நல்லா பார்த்துப்பான் கீத்து!''

''எனக்கு அவன் வேண்டாம்! வேண்டாம் ஔகத்! படாஸ் வேணாம்!''

என்றவளோ மூக்குச்சளி ஒழுக ஒப்பரிக் கொண்டாள், கட்டிக்கொண்ட புருஷன் இயங்க அவனோடு சேர்ந்து இயங்கிய வண்ணம்.

நித்தமும் படாஸ், படாஸ் என்று பித்து பிடித்தவள் போல் சுற்றி வந்த கீத்துவின் வாய் இன்று படாஸ் வேண்டாமென்று சொல்ல, அதை ஏற்றுக்கொள்ள முடியாது நரக வேதனைக் கொண்டான் படாஸ்.

முதலில் ஈனசுரம் கேட்டு கூசிப்போயிருந்த அறையோ இப்போது இயமானியின் ஓலத்தில் வருத்தங்கொண்டன.

''என்ன மாதிரி படாஸ் உன்ன கஷ்டப்படுத்த மாட்டான் கீத்து! என்ன விட உன்னே ரொம்ப சந்தோஷமா வெச்சுப்பான்! குறிப்பா, மெத்தையிலே!''

என்றவனோ முகிழ்நகையோடு சொன்னான் மல்லாக்க கிடந்தவளை சக்கையாய் பிழிந்தப்படி.

ஜன்னலுக்கு வெளியே குத்த வைத்திருந்த படாஸோ, முதல் முறை உள்ளம் குறுகுறுக்க உணர்ந்தான் டாக்டரின் வார்த்தைகளில்.

கணவனின் வார்த்தைகள் குத்தீட்டியாய் நெஞ்சை கிழிக்க, அழுகை கடலில் குளித்தப்படி முகத்தை உள்ளங்கைகளால் மூடிக்கொண்ட பனிமலரோ, எதுவும் பேசாது தொடர்ந்து கண்ணீரை மட்டுமே பரிசாக்கினாள் டாக்டருக்கு முனகல்களுக்கு கூட விடுப்பு விட்டு.

''படாஸ், நீ சொன்னா கேட்பான் கீத்து! எதுவா இருந்தாலும்! கிருத்தி சொன்னா மட்டும்!''

என்ற ஔகத்தோ மூச்சிரைப்போடு சொல்லி, ஆரணங்கின் வதனத்திலிருந்து அவளின் கரங்களை விலக்கிட,

''எனக்கு படாஸ் வேணாம்! வேணாம்! வேணாம்!''

என்று ஆக்ரோஷமாய் அலறிய கிருத்தியோ, உச்சம் தொட புருஷனின் புஜங்களை அழுத்தி பற்றினாள்.

மூச்சு வாங்க சனிகை அவளையே ஔகத் காதலோடு பார்க்க, பேரழகனின் செவிலிருந்தும் நாசியிலிருந்தும் வழிந்த அரத்தமோ சொட்டு சொட்டாய் துளிர்த்தது துடியிடையின் மீது.

''படாஸ் வேணாம்!''

என்ற ஒளியிழையோ மிழிகளை மெதுவாய் மூடினாள், கண்ணோரம் கண்ணீர் வழிந்திறங்க.

டாக்டரோ சட்டென போர்வையால் புண்ணீர் (ரத்தம்) துளிகளைத் துடைதெடுத்தான் ஒண்டொடியின் மேனியிலிருந்து.

''படாஸ் வேணாம்!''

என்ற கிருத்தியோ நிறுத்தாது அனத்தினாள்.

கபாலமோ மயக்கம் கொள்ள, நறுதுதல் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட ஔகத்தோ சுந்தரியவள் காதில் மெதுவாய் சொன்னான், படாஸ் முதல் கொலையில் மொய்குழல் அவளுக்காக எழுதி அனுப்பிய காதல் கவியை.

''நேர்த்தியின் இதத்தில்

நின்னுருவம் படைத்தானோ!

பிரகாசத்தின் ஒளியில்

நின் தோல் நெய்தானோ!

நிகாரத்தின் (பனி) துளியில்

மச்சம் பொதித்தானோ!

அசுரக்குல நெடியெடுத்து

நின் திமிர் திரித்தானோ!

நளினத்தின் நயத்தில்

நின் வெட்கம் உதிர்த்தானோ!

வகதியின் (காற்று) வருடலில்

குழல் தொடுத்தானோ!

திராபத்தின் (வானம்) கனமெடுத்து

எடை கொடுத்தானோ!

பொன்னிழையின் பளபளப்பில்

உன்னங்கம் குடைந்தானோ!

விண்மீனின் கூர்முனையில்

புரூரம் (புருவம்) தீட்டினானோ!

புணரியின் (கடல்) ஆழமாய்

தாரகம் (கண்) நிறைத்தானோ!

சுழலின் வீரியத்தை

நின் பார்வைகள் பதித்தானோ!

அமைதியின் இருப்பில்

உன் நாசி வடித்தானே!

துலவத்தின் (பஞ்சு) மென்மையில்

பொசு பொசு கன்னமிழைத்தானோ!

கொங்கின் (தேன்) ருசியெடுத்து

கந்தரம் கொடுத்தானோ!

மேகப்புள்ளின் (வானம்பாடி பறவை) இசையில்

குரல் வார்த்தானோ!

நிலத்தின் ஈரமெடுத்து

கரங்கள் புனைந்தானோ!

குன்றின் நிமிர்வுகளில்

நின் மார் செய்தானோ!

சஞ்சலத்தின் (மின்னல்) கீற்றெடுத்து

நின்னிடை மொழிந்தானோ!

பிரந்தாகாரத்தின் (அதிசயம்) மர்மத்தில்

நின் பீளல் (பெண்மை) உருவாக்கினானோ!

புடகினியின் (தாமரைக்கொத்து) சாந்தத்தில்

பின்னழகு அடைத்தானோ!

சுருட்டின் புகையெடுத்து

உன் கால்கள் உழைத்தானோ!

ஆபகையின் (ஆறு) நெளிவெடுத்து

நின் வளைவுகள் வரைந்தானோ!

தகையின் (அன்பு) பௌத்திரமாய் (புனிதம்)

காதல் கொட்டினானோ!

கிருத்தியின் பொருத்தம்

அவள் விருப்பம் என்றானோ!''

என்ற கவிதையை, ஔகத் முழுதாய் ஒப்புவிக்க, இமைகள் மூடியப்படி அவன் அணைப்பில் கட்டுண்டிருந்த கிருத்தியே ஆழ்ந்த நித்திரைக்கு போனாள்.

கொலையில் படாஸ் எழுதியிருந்த கவியும் கனவில் ஔகத் ஒப்புவித்த வரிகளும் ஒன்றாய் இருக்க, இதற்கு மேலும் எப்படி அவளால் ஔகத்தான் பெண்ணவளின் மனம் கவர்ந்த படாஸ் என்று சொல்லிடாமல் இருக்க முடியும்.

ஜன்னலுக்கு வெளியில் நின்றிருந்த படாஸோ, அதற்கு மேலும் அங்கு இருக்க மனமில்லாது ஒரே பாய்ச்சலில் தரையில் அஃறிணையான உருவங்கொண்டு அங்கிருந்து ஓடினான் வெறிபிடித்தவன் போல் கர்ஜித்து.

டாக்டர்தான் தான் விரும்பிய படாஸ் என்று கீத்து அசைக்க முடியா நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், கண்ட கனவென்னவோ அவளை ரொம்பவே பாதித்திருந்தது.

அதனால், குற்றங்கள் புரியும் படாஸ் வேண்டாமென்றும், சாமானியனாய் வாழ்வை அவளோடு வாழும் ஔகத்தே போதுமென்றும் எண்ணினாள்.

அதே சமயம் டாக்டர் இப்போதும் படாஸ் வேறு, அவன் வேறென்ற மாதிரியே பேச, அதற்கு மூலக்காரணமே அவள்தான் என்றுணர்ந்த கீத்துவோ, அவன் போக்கிலேயே போய் படாஸ் வேண்டாமென்று ஆணித்தரமாக சொன்னாள்.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 124
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top