- Joined
- Jul 10, 2024
- Messages
- 461
அத்தியாயம் 74
காதலின் மறுப்பெயர் விரன், நிழலிகாவின் அகராதியில்.
திறந்திருந்த கதவுக்கு உள்பக்கமாய் நின்றிருந்த நதானியேல் அறைக்கு வெளியிலிருந்த இருவரையும் உறைந்துப்போய் பார்த்தான்.
''இங்க எதுக்கு வந்தோம்?!''
என்ற விரனோ விழிகளால் நெறித்தான் நிழலிகாவை.
''சோரி, ஒரு கிளாஸ் தண்ணீ கிடைக்குமா?''
என்ற கர்ப்பிணியோ மேடு கொண்ட வயிற்றின் மீது கரம் பதித்து வேண்டினாள் நதானியேலின் முகம் பார்த்து, அவனை அங்கிருந்து நூதனமாய் விரட்டும் எண்ணத்தில்.
''கொண்டு வறேன். உள்ளே வாங்க.''
என்றவனோ அங்கிருந்து நகர்ந்தான் நிலவரம் உணர்ந்து.
''Nathaniel needs you!''
(நதானியேலுக்கு நீங்க தேவை!)
என்றவளோ தன்மையாய் சொல்ல,
''என்னே பெரிய தியாக செம்மல்னு நினைப்பா! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு நிழலிகா! வா போகலாம்!''
என்றவனோ மனைவி நிழலிகாவின் மணிக்கட்டினை பற்ற,
''நதானியேல் வைஃப் தற்கொலை முயற்சி பண்ணி இப்போ ஹோஸ்ப்பிட்டல்லே இருக்காங்க!''
என்ற மங்கையோ ஆணவனின் பிடியை அவளின் கரத்திலிருந்து விடுவித்தாள்.
''என்னே?!''
என்ற விரனோ அதிர்ச்சிக் கொண்டான் தலையும் புரியாது வாலும் புரியாது.
''நான் ஹோஸ்ப்பிட்டல் போறேன். நீங்க இங்க இருங்க, நதானியேல் கூட.''
என்ற மாதங்கியோ குட்டி குஞ்சனை கடந்து போக,
''நானும் வறேன். சேர்ந்து போவோம்.''
''இல்லே, நான் அஜய் கூட போறேன். நீங்க வர வேண்டாம்.''
என்றவளோ அழுத்தமாய் சொல்லி அடிகளை முன்னோக்கினாள்.
''அஜயா?!''
என்ற விரனின் நெற்றியோ புருவங்களை சுருக்கியது முதல் முறை பொஞ்சாதியின் வாய் வேறொருவன் பெயரை உதிர்க்க.
''சரனுக்கு பதில் நம்ப வீட்டுலே வேலை பார்த்தானே அந்த பையன். இங்கதான் இருக்கான் அவன்.''
''பரவாலே, நானும் வறேன். ஹோஸ்ப்பிட்டல் போயிட்டு அப்பறமா இங்க வந்துக்கலாம்!''
''முடியாது விரன்! நீங்க இங்கதான் இருக்கணும்! நதானியேலுக்கு நீங்க தேவை!''
''உனக்கென்னே பைத்தியமாடி! அவன் பொண்டாட்டி சாக கிடந்தா அது அவன் பிரச்சனை! நான் எதுக்கு அவன்கூட இருக்கணும்?''
என்ற வாக்கியத்தில் பல மாதங்கள் கடக்க இன்று கண்டாள் பிரகிருதியவள் பழைய கோபக்கார விரனை.
''ஜஸ்மின் புருஷன் நதானியேல் கூட நீங்க ஒன்னா இருந்ததுதான் பிரச்சனையே!''
என்றவளோ காட்டமாய் சொன்னாள் அவனுக்கு நிலையை வேறெப்படி புரிய வைப்பதென்று தெரியாமல்.
கொஞ்சங்கொஞ்சமாய் தாழ்ந்தது விரனின் தலை. குற்ற உணர்ச்சிக் கொண்டான் ஆணவன்.
அதற்கு மேலும் அங்கு நிற்க அவனால் முடியவில்லை. உணர்வுகளின் எல்லை மீரை இன்றைக்கு ஒரு உயிரையே மாய்க்கும் அளவுக்கு போகுமென்று அவன் நினைக்கவில்லை.
ரொம்பவே அதிர்ந்து பயந்துவிட்டான். விரனின் சிந்தையோ எங்கே சின்ன டிக்கியும் அப்படி ஏதாவது செய்திடுவாளோ என்ற கலக்கம் உள்ளூர ஈரக்குலையை கிடுகிடுக்க வைத்தது.
வியர்த்து விறுவிறுக்க நடையில் வேகங்கொண்டான் விரன்.
''நதானியேலுக்கு தேவை ஆறுதலான ரெண்டு வார்த்தை! நம்பிக்கையான தோள் வருடல்! கதறலே கேட்கறதுக்கான ரெண்டு காதுகள்! படுத்து அழ ஒரு மடி!''
என்றவளோ போகின்றவனின் முதுகை வெறித்தப்படி சொல்லி தொடர்ந்தாள்.
''ரெண்டு உடல்கள் உறவு கொள்றது மட்டுமே பைசெக்ஸுவல் இல்லே, உணர்வுகளை பகிர்ந்துக்கறதும்தான்!''
வல்லபியின் வார்த்தைகள் விரனின் வேகமான நடையை மெதுவாக்கியது.
ஆணவன் குழப்பமான முகத்தோடு திரும்ப, அவன் பின்னாடி நின்றிருந்தாள் நிழலிகா.
கணவனின் வதனத்தை இமைக்காது நோக்கியவளோ அவனை பதுமையாய் சுற்ற வைத்தாள் நெஞ்சில் கரம் பதித்து பின்னோக்கியவாறே.
''புரிஞ்சிக்க முடியுமான்னு தெரியலே.''
என்றவளோ அவிரனின் தலையை இறுக்கமாய் பற்றியப்படி தொடர்ந்தாள்.
''ஆனா, முயற்சி பண்றேன்.''
சொன்னவள் விரனின் தலையை கீழிறக்கி பதித்தாள் ஆணவன் நுதலில் இதழ் முத்தமொன்றை.
சொல்ல முடியா உணர்வில் அவளை படக்கென கட்டிக்கொண்டான் விரன்.
''விலகி இருந்தது காதல்னா, விட்டு கொடுக்கறதும் காதல்தான்.''
என்றவளோ விரனின் அணைப்பிலிருந்து விலகி அவனை அறைக்குள் தள்ளி அடிகளை பின்னோக்க, தடுமாறி அறைக்குள் நுழைந்தவனின் முழங்கை பட்டு கதவோ சாத்திட போக, நதானியேலோ பின்னாலிருந்து கட்டிக்கொண்டான் விரனை.
குட்டி குஞ்சனின் விழிகளிலோ நடைப்பாதையில் நடந்து போகின்றவளின் உருவம் கொஞ்சங்கொஞ்சமாய் மறைய ஆரம்பித்தது அறையின் கதவு முழுசாய் மூடிக்கொள்ள.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 74
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.